மீண்டும் பத்து கேள்விகள்_1

Monday, May 10, 2010 3:51 AM Posted by பொய்யன் டிஜே

மீண்டும் பத்து கேள்விகள்_1

கேள்வி 1

பாக்கர் மீது குற்றம் சாட்டியவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்

  • குற்றத்தை சுமத்தியவர்கள் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் ! குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் குற்றத்தை நிரூபிக்காமல் வெளியேற்றிவிட்டு நீங்கள் தான் நிருபித்து களங்கத்தை துடைக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டபட்டவர்கள் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தானே பொடா சட்டத்தை எதிர்த்தோம்.

பாக்கர் மீது குற்றம் சாட்டி நீக்கி விட்டு குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கச் சொல்வது என்ன நியாயம்? என்று கேள்வி கேட்கப்படுகிறது. குற்றத்தைச் சுமத்தியவர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்பது சரியான கேள்விதான். ஆனால் நிரூபிக்காமல் நீக்கியதாக கூறுவது தான் வடி கட்டிய பொய்.

பாக்கர் மீது பாலியல், பண மோசடி அனைத்தும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டன.

நிரூபணம் 1

நிரூபணம் 2

நிரூபணம் 3

நிரூபணம் 4

நிரூபணம் 5

நிரூபணம் 6

நிரூபணம் 7

நிரூபணம்8

நிரூபணம் 9


அவர் வாயாலே ஒப்புக் கொள்ளபப்ட்டன. அவரது இன்றைய பொதுச் செயலாளர் சித்தீக் மூலம் அனைத்தும் உண்மை என்று விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.

பண மோசடியும் நிரூபிக்கப்பட்டது. பாக்கரின் வாக்கு மூலத்தினாலும் மேலும் நிரூபணமானது.

குற்றத்தை நிரூபிப்பதற்காக விவாதத்துக்கு அழைக்கவில்லை. கொஞ்சம் மூளை உள்ளவனும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அது நிரூபிக்கப்பட்டது.

பொய்யான குற்றச் சாட்டு சுமத்தி ஜமாஅத் வெளியேற்றியதா? நிரூபித்து விட்டு வெளியேற்றியதா என்பதற்குத் தான் விவாத அழைப்பு விட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு கேள்வியாக முடிவுக்கு கொண்டு வருவோம். பாக்கர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதா? இல்லையா? என்பத்ற்கு ஆதாரமாக நாம் வெளியிட்ட இந்தச் செய்திகள் மூலம் பாக்கரின் குற்றம் நிரூபணமாகவில்லை என்று இவர்கள் நிரூபித்த பின்னர் அடுத்த கேள்விக்குப் பதில் வரும். பதில் வராவிட்டால் பாக்கர் மீது என்னென்ன குற்றங்கள் எப்படி நிரூபணமானது என்பதை அக்குவேறு ஆணி வேறாக அலசி நிரூபிக்கப்படது என்பதை நிரூபித்துக் காட்டி விட்டு அடுத்த கேள்விக்குப் போவோம்.

பாக்கருக்கு ஒரு ஆலோசனையையும் கூறிக் கொள்கிறோம். மங்கோலியர்களை உளற விட்டு இன்னும் உங்களை அசிங்கப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் அது உங்களூக்கு பயனுள்ளதாக இருக்கும்.

0 Response to "மீண்டும் பத்து கேள்விகள்_1"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை