தமுமுக வின் தடுமாற்றம் தரங்கெட்ட இழிநிலை

Tuesday, October 12, 2010 5:44 AM Posted by பொய்யன் டிஜே
தமுமுக வின் தடுமாற்றம் தரங்கெட்ட இழிநிலை

சகோதரர் முகவை அப்பாஸ் அவர்களுக்கு கீழக்கரை நசீருதீன் எழுதுவது.

“யாரையும் உசுப்பேற்றும் நோக்கம் எமக்கு இல்லை. ஒரு தலைவரின் பெயரால் வெளியான அறிக்கையில் ஒன்றில் தீர்ப்பை ஆதரிக்கும் வாசகம் உள்ளது. மற்றொன்றில் அந்த வாசகம் இல்லை. இதில் எது உண்மை என்பதை அறியவே நாம் எழுதினோம். சம்மந்தப்பட்ட அமைப்பினருக்கு இதுபற்றி விளக்கமளிக்கும் கடமை உள்ளது எனபதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவும். என்று எழுதி இருந்தீர்கள்.

தாங்கள் 01.10.2010 தேதி வெளிவந்த தினத்தந்தி நாளேட்டில் 12ம் பக்கத்தில் உள்ள விஷயத்தை கவனித்து இருந்தால்! இந்த சந்தேகம் வந்து இருக்க வாய்ப்பில்லை. அதுவும் மதுரை பதிப்பை பார்க்கவில்லை என்பது தெரிய வருகின்றது. சென்னை பதிப்பில் வந்ததா? என்பது எனக்கு தெரியாது அப்படி பார்க்க வில்லை என்றால்! நெட்டில் பார்த்துக் கொள்ளலாம்..

மேலும் எது எப்படி வெளிவந்தாலும் கருத்தை பத்திரிகைகளுக்கு பகிர்ந்து கொடுத்தது உண்மை. இது ஓருபுறம் இருக்க "பாம்புக்கு தலையையும்" மீனுக்கு வாலையும்" கட்டியது போல் இவர்களின் நிர்வாகக் குழுவில் எடுத்த முடிவும் இருக்கிறது. இதில் என்ன சொல்லுகிறார்கள் என்றால்!

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விவகாரம்! - தமுமுக நிர்வாக குழு கூடியது!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாக குழு அவரசகூட்டம் அக்டோபர் 1-ம் தேதி இன்று மாலை சென்னையில் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிஃபாயி தலைமை நிர்வாககுழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ஸமது துணை பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1. பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்ட நடைமுறைகளை ஏளனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று தமுமுக தலைமை நிர்வாக குழு கருதுகின்றது விடுதலைப்பெற்ற இந்தியாவில் வழங்கப்பட்ட மிக மோசமான கட்டப்பஞ்சாயத் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. ஒரு தரப்பு மக்களின் மத நம்பிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு 450 ஆண்டு காலம் முஸ்லிம்கள் வழிப்பாடு நடத்திய இடம் பள்ளிவாசல் இல்லை என்றும் அது ராமர் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பது நடைமுறைச் சட்டங்களுக்கு முரணாக புராணங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். லக்னோ பெஞ்சின் இந்த நடைமுறையைப் பின்பற்றி இனி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினால் இனி நாட்டில் எவரும் தமது உரிமைகளை தக்க வைக்க இயலாது. எனவே உத்திரப்பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எடுத்துள்ள முடிவை தலைமை நிர்வாக குழு வரவேற்கிறது.
இப்படி நிவாக குழுவில் முடிவு செய்கிறார்கள்.

நாம் கேட்பது என்னவென்றால்! பத்திரிக்கைக்கு ஒரு செய்தியும் நிர்வாக குழுவில் ஒரு செய்தியும் கொடுத்து மக்களை குழப்புகிறார்களா?.

பத்திரிக்கைக்கு ஒரு கருத்தை தெளிவுபடுத்தினால்! அதையே நிர்வாகத்திலும் முறையிட்டு மேற்சொன்ன விசயங்களை அறிவு சார்ந்து முடிவு எடுக்கவேண்டும்.

இவர்கள் (TMMK) தினத் தந்திக்கு கொடுத்த பேட்டியின் விபரம்:

அயோத்தி வழக்கில் தீர்ப்பு : இந்து - முஸ்லிம் அமைப்புகள் கருத்து. என்ற தலையங்கத்தில் பார்க்கவும்.

“தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் பள்ளிவாசலை கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாபர் மஸ்ஜித் நிலம் எங்களுக்கு சொந்த மானது என்று சுன்னத் ஜமாஅத் வக்பு வாரியத்தின் மனு மூன்று நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 1949க்கு பிறகு முஸ்லிம்கள் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்திற்கு அருகே நெருங்க முடியாது என்ற நிலை இருந்தது. இப்போது அதில் முஸ்லிம்களுக்கு பங்கு இருக்கிறது என்ற தீர்ப்பு கூறப் பட்டுள்ளதில் இருந்து அந்த இடம் முஸ்லிம் களுக்கும் சொந்தமானது என்று தெளிவாகிறது. இதுவே நீதியின் முதல் படிதான். எனவே நாங்கள் ஏற்க்கனவே கூறியபடி இப்போதைக்கு இத்தீர்ப்பை ஏற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். என்று தந்திக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டி உண்மையா? அல்லது இட்டுக்கட்டி போட்டதா?.

இது உண்மையானால்! மேலே நிர்வாக குழுவில் ஏன்? அப்படி சொல்லியிருக்கிறார்கள்?. அப்பிடியென்றால்! முரண்பட்ட கருத்து இரண்டுவிதமாக பதிவு செய்கிறார்கள். முகவை அப்பாஸ் அவர்கள் சிந்திக்கவேண்டும். அதைவிட்டு விட்டு "எது உண்மை என்று இணையதளத்தில்" நீங்களாகவே அறிக்கைவிட்டு தங்களின் புத்தி சாலித்தனத்தை(!) காட்ட எழுத்திற்கு முக்கியத்தனம் கொடுக்காமல் கருத்திற்கு முக்கியத்தனம் கொடுங்கள்.

குறிப்பாக குழுமத்தில் தங்கள் செய்தி இடம் பெற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் போடலாம் என்ற சிந்தனையை தூக்கி வீசுங்கள்.

குறிப்பு: குழும மாடரேட்டர்கள் இப்படி முகவை அப்பாஸ் போன்றவர்கள் தரும் ஆதாரம் இல்லாத செய்தியை போடவேண்டாம் என்பது என் கருத்து.

S.L.நசீருதீன் கீழக்கரை

0 Response to "தமுமுக வின் தடுமாற்றம் தரங்கெட்ட இழிநிலை"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை