தீவிரவாதிகள் யார் ? பொய்யனுக்கு பதில்.

Wednesday, December 8, 2010 5:19 AM Posted by பொய்யன் டிஜே
கடந்த அக்டோபர் மாதம் தீவிரவாதிகள் யார் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உணர்வு இதழில் வெளியிடப் பட்டிருந்தது.

அந்தக் கட்டுரையில் இடம் பெற்ற ஒரு பாராவுக்கு மாத்திரம் பொய்யர்கள் பதில் என்ற பெயரில் ஒன்றை எழுதியுள்ளார்கள்.

அதற்கான நமது மறுப்பை இங்கு தருகிறோம்.

அதாவது இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதின் மூலமாக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தீவிரவாதத்தை எதிர்த்து குரல் எழுப்பக் கூடிய ஒருவராக சகோதரர் பி.ஜெ இருப்பது அனைவரும் அறிந்ததே!

ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் லக்பிம் நிவ்ஸ் என்ற ஆங்கில நாளேடு இலங்கை தவ்ஹீத் வாதிகள் அனைவரும் தீவிரவாதிகள் என்று ஒரு கட்டுரையை வெளியிட்டது.

உணர்வில் வெளியிடப் பட்ட கட்டுரையைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

அந்தக் கட்டுரைக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மூலமாக ஒரு மறுப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு அது உடனடியாக அதே பத்திரிக்கையில் அடுத்த வாரமே வெளியிடப்பட்டது.

அந்தக் கட்டுரையில் ஒரு பேராவில் சகோதரர் பி.ஜெ அவர்கள் தீவிரவாதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருவதால் இஸ்லாமிய அமைப்புக்கள் என்று சொல்பவர்களே இவரை எதிர்க்க ஆரம்பித்ததால் பி.ஜெ யுடைய பாதுகாப்பு தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.

என்று எழுதப் பட்டுள்ளதை எடுத்துக் காட்டி இவர்கள் இஸ்லாமிய அமைப்புகளை இப்படி எழுதுவதால் இது காட்டிக் கொடுப்பதாக ஆகாதா? என்று ஓர் அற்புதமான(?)கேள்வியைக் கேட்டுள்ளார்கள்.

குற்றமற்றவனை குற்றவாளி என்று யாராவது சொன்னால் அதுதான் தவறு காட்டிக் கொடுத்தல் என்று வந்துவிட்டாலே அது தவறு செய்தவனைத்தான் குறிக்கும்.

தவறே செய்யாதவனை யாரும் காட்டிக் கொடுக்க முடியாது.

தீவிரவாதத்திற்கு தொடர்பில்லாதவர்களை காட்டிக் கொடுக்க முடியாது.ஆனால் தீவிரவாதத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்களைப் பற்றிய செய்தி நமக்குத் தெரிந்தால் அதனை போலிஸில் தெரியப் படுத்தி நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தை தடுக்க முற்படுபவன் தான் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியும்.

இஸ்லாமிய அமைப்புகள் என்று பெயர் வைத்தால் மாத்திரம் இஸ்லாமிய அமைப்பாக மாற முடியாது.

அண்ணியப் பெண்ணோடு ஆசை கொஞ்சல்களோடு ஆபாசம் பொங்க பஸ் பயணம் போனவர்கள் எல்லாம் தங்களை இஸ்லாமிய அமைப்பென்று சொல்லிக் கொண்டால் உண்மை முஸ்லீம்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா?

சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை எல்லாம் முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று எவனாவது சொல்வானா?

கிருஷ்னசாமியும் தேவனாதனும் வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்வார்கள்.

வோட்டுக் கேட்பதற்காக மடாதிபதியிடம் ஆசி பெரும் டாக்டர்(?)களையெல்லாம் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் என்று எவனாவது ஏற்றுக் கொள்வானா?

தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து தங்கள் அமைப்பின் தலைவருக்கு சல்யூட் அடித்து இணை வைத்தலை தங்கள் அடிப்படை கொள்கையாக கொண்டு ஜனநாயகம் கூடாது என்று வாதிபவர்களையெல்லாம் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று யாராவது சொல்வார்களா?

சங்கராச்சாரியாரின காலில் விழுந்து அவனிடம் ஆசி பெற்றவர்களையெல்லாம் இஸ்லாமிய அமைப்பின் பட்டியலில் யாராவது சேர்ப்பார்களா?

இப்படி யாரெல்லாம் இஸ்லாமிய அமைப்புகள் என்று பொய்யன் நம்புகிறானோ அவர்கள் அனைவரின் நிலையும் இப்படித்தானே இருக்கிறது.

அத்துடன் இந்துத் தீவிரவாதிகளை தீவிரவாதிகள் அல்ல என்று சொல்லாமல் சொல்ல வருகிறார்கள் என்றும் எழுதியுள்ளார்கள்.

இந்துத் தீவிரவாதம் கிருத்தவத் தீவிரவாதம் யூதத் தீவிரவாதம் என்று எந்தத் தீவிரவாதமாக இருந்தாலும் அத்தனைத் தீவிரவாதத்தையும் எதிர்த்து தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவிலேயே பிரச்சாரம் செய்யும் முதன்மை அமைப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்துக்கள் தீவிரவாதம் செய்தால் மாத்திரம் எதிர்க்க வேண்டும் என்றும் முஸ்லிம் பெயர் தாங்கி மூலை சலவை செய்யப் பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டால் அதனை எதிர்க்கக் கூடாது என்றும் இரட்டை நிலையை ஒரு காலத்திலும் தவ்ஹீத் ஜமாத் எடுத்ததுதம் இல்லை எடுக்கப் போவதும் இல்லை.

உங்கம்மா மட்டும் தான் அம்மா அடுத்தவன் அம்மா என்றால் சும்மாவா?

எவன் தவறு செய்தாலும் தயங்காமல் எதிர்ப்பதே தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை என்பதை பொய்யர்களுக்கு மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

0 Response to "தீவிரவாதிகள் யார் ? பொய்யனுக்கு பதில்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை