பீ.ஜெ.க்கு எதிரான அவதூறு

Wednesday, April 21, 2010 4:24 AM Posted by பொய்யன் டிஜே

பீ.ஜெ.க்கு எதிரான அவதூறு

ஆற்காடு டீச்சர் லாட்ஜில் தங்கிய போது பிஜே அவர்கள் போய் பார்த்தார் என்று இப்போது மீண்டும் பரப்புகிறார்கள். பாக்கர் மீது குற்றச்சாட்டை மாநில நிர்வாகம் விசாரணை செய்த போது பாக்கர் இப்படி பரப்பினார். அது பொய் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது அதைத் தான் இப்போது மீண்டும் பரப்புகிறார்கள்.

எனவே இது பற்றி ஆதாரத்துடன் விரிவாக விளக்கப்படுகிறது.

பாக்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சட்டுக்கள் அனைத்தும் அவர் பாக்கர் முன்னிலையிலும் மாநில நிர்வாகிகள் பாக்கரின் சகாக்கள் ஆகியோர் முன்னிலையிலும் நேருக்கு நேர் விசாரித்து நிரூபிக்கப்பட்டவை. இப்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட பாக்கரும் அவருடைய சீடர்களும் அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் பல மாதங்கள் கழித்து இப்போது பீஜே மீது அவதூறு மெயிலை மீண்டும் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.

பாக்கர் ரதி மீனா சொகுசு பேருந்தில் அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்தது குறித்து பாண்டிச்சேரியில் வைத்து விசாரணை நடைபெற்றது. பாண்டிச்சேரியில் இட ஒதுக்கீடு கோரி 2007 பிப்ரவரியில் நாம் நடத்திய பேரணிக்கு அனைத்து நிர்வாகிகளும் வந்ததால் மறு நாள் பாக்கர் விஷயமாக அங்கேயே பேசி முடிவு எடுப்பது என்று தீர்மாநிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடந்தது.

பாக்கர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவர் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அப்போது நீக்கப்பட்டார்.

தன் மீது உள்ள குற்றச்சாட்டுக்கு பதில் இல்லாத போது அப்படியானால் பீஜே மீதும் குற்றச்சாட்டு உள்ளது என்று கடைசியில் கூறினார். இது அவர் வழக்கமாக கையாளும் தந்திரம்

அதாவது கும்பகோனம் பெண்கள் மதரஸாவில் மாதம் ஒரு நாள் பீஜே சிறப்பு வகுப்பு எடுத்து வந்தார். அப்போது மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொடுக்கும் போது மாணவிகளின் கையைப் பிடித்து சொல்லிக் கொடுத்தார் என்பது தான் குற்றச்சாட்டு என்று கூறினார். இதை அங்கே உள்ள ஒரு டீச்சர் தான் என்னிடம் கூறினார் எனவும் அவர் கூறினார்.

இதற்கு உடனே பீஜே பதிலளிக்கும் போது பாக்கர் கூறுவது போல் நடந்திருந்தால் கண்டிப்பாக என் மீதும் நடவடிக்கை எடுக்கத் தான் வேண்டும். நான் தலைவராக இருந்து இதை விசாரிப்பது முறையாகாது. எனவே இதற்காக இப்போதே ஒரு விசாரணைக் குழுவை நியமியுங்கள். அவர்கள் சம்மந்தப்பட்ட அனைவரையும் விசாரித்து அறிக்கை தரட்டும்; அது வரை நான் தலைவர் பணி செய்ய மாட்டேன். பேசி சரிக் கட்டி விட்டார் என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது என்பதற்காக இந்த நிமிடமே என் செல்போனை ஆஃப் செய்து விட்டேன். விசாரணை முடிவு வரும் வரை நான் அலுவலகம் செல்ல மாட்டேன் எனக் கூறினார்.

இதன் பின்னர் மூன்று நிர்வாகிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்கள்.

மதரஸாவில் பீஜே கம்ப்யூட்டர் பாடம் நடத்தும் போதும் மற்ற பாடங்கள் நடத்தும் போதும் அவருடன் உள்ளூர் நிர்வாகிகள் ஒருவரோ இருவரோ இல்லாமல் ஒரு நாளும் பாடம் நடத்தியதில்லை. மேலும் கம்ப்யூட்டர் பாடம் நடத்தும் போது மானிட்டரை மாணவிகள் பார்க்கும் வகையில் பீஜேடின் முதுகுக்குப் பின்னால் தான் நிற்பார்கள். மாணவிகளைத் தொடுவதற்கு வாய்ப்பு கூட இல்லை. அப்படி நடக்கவும் இல்லை என்று மதரஸா நிர்வாகிகள், மாணவிகள், பாக்கர் குறிப்பிட்ட அந்த ஆசிரியை அனைவரும் ஒரே மாதிரியாகக் கூறினார்கள். குற்றச்சாட்டு நூறு சதவிகிதம் பொய் என்று அறிக்கை வந்த பிறகு தான் பீஜே தனது பணியைத் துவக்கினார்.

பாக்கரை விசாரணை செய்த நிர்வாகக் குழுவில் சையித் இப்ராஹீம் சுட்டிக்காட்டினார்.
இதற்கான ஆதாரத்தை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

அது போல் பாக்கர் மீது கடைசியாக வந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் பிரச்சாரம் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பாக்கரும் தொண்டியப்பாவும் கீழக்கரை ஜமீலும் பீஜே மீது அவதூறு சுமத்தினார்கள். அதாவது ஆற்காடு டீச்சரை பீஜே லாட்ஜில் போய் பார்த்தார். இன்னும் இரு பெண்களுடன் பீஜே போனில் பேசிக் கொண்டே இருப்பார் என்றெல்லாம் இவர்கள் பரப்பினார்கள். தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் கூறி பாக்கர் பரப்பினார். அதைத் தான் இப்போது மீன்டும் பரப்புகிறார்கள்.

பாக்கர் மீது நிர்வாகக் குழுவும் மேலாண்மைக் குழுவும் விசாரணை நடத்திய போது பீஜே இதைப் பற்றி விசாரணை கோரினார். எனக்கு எதிராகக் குற்றச் சாட்டு சுமத்தும் பாக்கர் இப்போது அதை என் முன்னிலையில் கூற வேண்டும் எனக் கூறினார். முழு விசாரணைக்கு நான் உட்படத் தயார் எனவும் கூறினார். அப்போது பாக்கர் நான் அவ்வாறு பரப்பவில்லை என்றார்.


மேலும் ஈமெயில் மூலம் கீழக்கரை ஜமீல் இதைப் பரப்பிய போது பொதுச் செயலாளர் பீஜேயிடம் எழுத்து மூலம் விளக்கம் கேட்டார். அதற்கு பிஜே என் மீது குற்றம் சுமத்துபவர்கள் என் முன்னிலையில் ஆதாரத்துடன் சுமத்த முன் வந்தால் நான் எவ்வித விசாரணைக்கும் தயார் என்று எழுத்து மூலம் பதில் கூறினார். ஆனால் ஜமீல் பின் வாங்கி விட்டார்

இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)

பாக்கர், சித்தீக், முனீர் ஆகியோர் முன்னிலையில் இவை அனைத்தும் பொய் என்பதை பீஜே நிரூபித்தார்.

எனவே தான் விசாரணையின் போது பீஜேயே இதை எழுப்பி என் மீது குற்றச்சாட்டு கூறுவதாக இருந்தால் இப்போது என் முன்னால் சொல்லுங்கள் என்று கேட்ட பொது அப்படியெல்லாம் இல்லை என்று பாக்கர் மறுத்து விட்டார். பீ.ஜெ மீது சொல்லப்படுவது அவதூறு எனவும் கூறி விட்டார்.

மேலும் ஆற்காடு டீச்சர் என் குடும்பத்து நண்பர் என்று பீஜே அந்த விசாரணையில் கூறவில்லை. அவருடைய அண்ணன்கள் பஷீர், நவ்ஷாத், முஸ்தாக், அவருடைய தம்பி அஸ்பாக் ஆகியோரும் அவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் எனது நண்பர்கள் என்று தான் பிஜே கூறினார். குடும்ப நண்பர் என்றால் வீட்டில் தங்க வைக்க வேண்டியது தானே என்ற கேள்விக்கு இது பதில்

மேலும் பீஜே வீடு யாரையும் தங்க வைக்கும் அளவுக்கு இடம் தராது. எனவே தான் பிஜே மைத்துனரும் சகலையும் மூன் பப்ளிகேசனில் தங்குகிறார்கள். யாராவ்து இரத்த சம்மந்தம் உள்ள விருந்தினர் வந்தால் வீட்டில் இடப் பற்றாக் குறை காரணமாக வீட்டுக்கு எதிரில் உள்ள லாட்ஜில் தான் தங்க வைப்பார்.

மருத்துவம் பரீட்சை போன்ற பணிகளுக்கு பெண்கள் வந்து ஓரு நாள் தங்கும் நிலை ஏற்பட்டால் லாட்ஜில் தங்க சிபாரிசு செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மஹ்ரமான ஆண் துணையுடன் வரும் பெண்கள் தான் லாட்ஜில் தங்குவதற்கு சிபாரிசு செய்யப்படும். அவர்கள் சொந்தச் செலவில் தான் தங்குவார்கள்.

இது போல் தான் மேற்படி டீச்சரும் அவரது சின்னம்மாவும் அவரது தாயாரும் தாயாரின் கண் மருத்துவம் தொடர்பாக அகர்வால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்து மேலும் ஒரு நாள் தங்கும் நிலை ஏற்பட்ட போது மூவரும் லாட்ஜில் தங்க சிபாரிசு செய்யப்பட்டனர். வந்தனர். அப்போது அவரை நலம் விசாரிக்க பீஜே சென்றார்.

ஒரு பெண் மட்டும் சென்னையின் எந்த விடுதியிலும் தங்க வைக்கப்பட்டதில்லை. அதற்கு விடுதிகளில் அனுமதியும் இல்லை.

பாக்கரை நீக்க பீஜே தான் காரணம் என்பதால் பாக்கர் வகையறாக்களுக்குக் கடும் ஆத்திரம் இருந்தது. அப்படி இருந்தும் நேருக்கு நேர் குற்றச்சாட்டைக் கூறுமாறு கேட்ட போதும் ஏன் சொல்லவில்லை? இது உண்மை என்றால் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறி நிரூபித்திருந்தால் பீஜேயும் பாக்கர் போல் நீக்கப்பட்டிருப்பாரே அந்த வாய்ப்பை ஏன் விட்டு விட்டார்கள்?

அது போல் வெளியூரில் இருந்து வருபவர்கள் உதவி தேடினால் உதவி செய்தல் வழக்கமானது தான். சென்னை தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அலுவலகம் வர உதவி கேட்டால் அலுவலக ஊழியரை அனுப்பி உதவுவது தலைமை அலுவலகத்தில் சாதாரண நிகழ்வாக இருந்தது.

(இப்படி பரப்புவதில் முன்னோடியாக இருப்பவர் அந்த டீச்சருக்கு எம்டி மெஸேஜ் அடிக்கடி அனுப்பியதும், அடிக்கடி மிஸ் கால் கொடுத்ததும் அப்போது தலைமைக்கு செல் போன் ஆதாரத்துடன் புகாராக வந்தது. இது பின்னர் அம்பலப்படுத்தப்படும்)


0 Response to "பீ.ஜெ.க்கு எதிரான அவதூறு"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை