அப்துல்லாவுக்கு அநீதியா

Thursday, July 15, 2010 6:10 AM Posted by பொய்யன் டிஜே
அப்துல்லாவுக்கு அநீதியா
பெரியார் அப்துல்லா குறித்து பீஜே தனது இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அறிவும் நாணயமும் உள்ள மக்கள் இதில் எதைக் கவனிக்க வேண்டுமோ அதைத் தான் கவனிக்க வேண்டும்.
பீஜேக்கும் அப்துல்லாவுக்கும் இடையில் உள்ள இந்தப் பிரச்சனையில் யார் அநீதி இழைத்தவர்? யார் இழைக்கப்பட்ட அநீதிக்கு பதில் கொடுத்தவர் என்பதை மட்டும் தான் பார்க்க வேண்டும்.
பெரியார் அப்துல்லாஹ் மீது பீஜேக்கு ஆரம்பத்தில் எந்த அபிப்பிரயமும் இருக்கவில்லை.அவரை மேடையில் ஏற்றுவது என்றால் அவரது கொள்கை கோட்பாடுகள் பற்றி அறீந்து கொணட் பின்பு தான் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றும் என்று குறினார். பின்னர் அப்துல்லாஹ் ரியாத் டிஎண்டிஜே நிர்வாகிகளிடம் நானும் தவ்ஹீத் வாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டதும் இதைப் பற்றி பீஜேயிட்ம சொல்லுங்கள் என்றும் கூறினார். தவ்ஹீத் வாதி என்று அடையாளப்படுத்தியதும் அவரை பீஜே தேடிச் சென்று சந்தித்தார். அதன் பின் அவரைப் பற்றி எந்த இடத்திலும் குறைவாகச் சொல்லவில்லை.
இதன் பின் அவரது பேட்டியை அவரது ஒப்புதலுடன் பீஜே வெளியிட்டார்.
இதன் பின்னர் பெரியார் அப்துல்லா அவர்கள் அவருக்குத் தெரிந்த தாவா பணியை செய்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர் கொடுத்த பேட்டியை மறுத்து இன்னொரு பேட்டி கொடுக்கும் போது பீஜே இதனால் பாதிக்கப்படுகிறாரா? இல்லையா? நாடறிந்த ஒரு பிரச்சாரகரைப் பொய்யராகச் சித்தரித்தால் அது அநீதி இல்லையா? ஒருவர் சொல்லாத ஒன்றை பீஜே சுயமாக் வெளியிட்டு விட்டார் என்றால் இது எவ்வளவு பெரிய பழி?
ஒருவர் இஸ்லாத்துக்கு வந்தவர் என்பதற்காக இஸ்லாத்தில் உள்ளவர்கள் மீது அவதூறு கூறலாமா? பீஜே பொய்யர் என்று ஒருவர் ஒரு மீடியாவில் பரப்பும் போது நான் பொய்யர் இல்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு உண்டா இல்லையா?
பெரியார் அப்துல்லா இஸ்லாத்துக்கு வந்தவர் என்பதால் பீஜே தன் மீது பொய்யர் பட்டத்தைச் சுமந்து கொள்ள வேண்டுமா?
எனவே தான் பெரியார் அப்துல்லா பொய் சொல்கிறார். அவர் கூறாததை கற்பனையாகக் கூறவில்லை என்று கூறும் அவசியம் பீஜேக்கு ஏற்பட்டது. பொது மேடைகளில் பொய் சொல்லும் அவரது சுபாவம் காரணமாக நமக்கு அளித்த பேட்டி குறித்தும் பொய்யைப் பரப்புகிறார் என்று அடையாள்ம காட்டும் அவசியம் இருக்கத்தான் செய்கிறது.
திருக்குர் ஆன் 4:148 வசனம் இந்த அனுமதியை வழங்குகிறது,
அநீதி இழைக்கப்பட்டவர் கடுமையாகக் கூட விமர்சிக்கலாம் என்று அல்லாஹ் அனுமதித்துள்ளதைக் காணலாம்.

இதில் பீஜேயையும் பார்க்கக் கூடது. பெரியார் அப்துல்லாவையும் பார்க்கக் கூடாது. யார் அநீதி இழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.
மேலும் அவர் புகை பிடித்ததை பீஜே விமர்சிக்கவில்லை. இது போன்ற தவறுகள் எல்லா மனிதரிடமும் இருக்கும். அந்தப் பழக்கம் அவரிடம் இருந்தால் அது பற்றி எதையும் பேசாமல் இருக்கலாமே? பொது மேடையில் அல்லாஹ்வுக்காக அதை விட்டு விட்டேன் என்று கூறுவது ஏன்? இது தான் பீஜே கேட்ட கேள்வி. அவர் புகை பிடிப்பது பற்றி கேள்வி கேட்கப்படவில்லை.
ஏன் பொது மேடையில் பொய்யைக் கூற வேண்டும். இதனால் அவரது சொல்லுக்கு உரிய மதிப்பு குறைந்து விடும் என்பத்ற்காக சொல்லப்பட்டது.

இதற்கு எதிராக எழுதுவதாக எண்ணிக் கொண்டு பீஜே புகை பிடிக்கவில்லையா என்று சிலர் கேட்கின்றனர். இது பெரிய கண்டு பிடிப்பு அல்ல. புகை பிடிப்பது தவறு என்று பீஜே நிகழ்த்திய பல உரைகளீல் நானும் புகை பிடித்தவன் தான். விட முடியாது என்று நினைத்தவன் தான். ஆனால் ஒரே மூச்சில் விட்டுவிட உறுதி பூண்டால் விட்டுவிடலாம் என்று அவரே கூறியுள்ளார். புகை பிடித்துக் கொண்டிருந்த காலத்தில் அல்லாஹ்வுக்காக புகைபழக்கத்தை நான் விட்டு விட்டேன் என்று பீஜே பொய் கூறி இருந்தால் அதை எடுத்துக் காட்டலாம்.
பிரச்சனை புகைபிடித்தல் பற்றியது அல்ல. அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி பொய்யான தகவலை மக்கள் மத்தியில் ஏன் சொல்ல வேண்டும் என்பது தான்.

பீஜே கடந்த காலத்தில் புகை பிடித்தார் என்பதுடன் இன்னும் பல குற்றச் சாட்டுக்கள் பீஜே மீது பரப்பப்படுகிறது. அந்தக் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது. குற்றச்சாட்டைப் பரப்புவோர் அதை நிரூபிக்க வேண்டும் என்று பீஜே கூறுகிறார்.
பீஜேயுடன் இன்னும் சிலர் குறித்தும் போகிற போக்கில் சில குற்றச் சாட்டுக்கள் கூறப்படுகிறது.
அது உண்மையாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? யார் யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்த தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆதாரத்துடன் தவ்ஹீத் ஜமாஅதுகு எழுதி அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அது பற்றி பரப்ப வேண்டும்.
யார் மீது குற்றம் சொல்கிறார்கள்? அதற்கான ஆதாரம் என்ன என்பதையெல்லாம் தலைமைக்க்கு அனுப்பி இப்போதும் கேள்வி கேட்கலாம். தவ்ஹீத் ஜமாஅத் ஆதாரத்துடன் சொல்லப்படும் எந்தக் குற்ற சாட்டையும் அலட்சியப்படுத்தாது.

இதற்கிடயே வழிப்போக்கர்களாகி போன சில பொய்யன் டீஜேயினர் ந்மது விமர்சனத்துக்குப் பின் வாய மூடிக் க்ண்டு வேறு புணைப் பெயர்களில் புளுக ஆரம்பித்துள்ளனர். எந்தப் பெயரில் ஒளிந்து கொண்டு புளுகினாலும் அது பொய்யனின் ஆட்கள் என்தால் அதை ஏவி விடும் பாக்கர் பற்றிய விமர்சனம் தொடரததான்தான் செய்யும்.
தவ்ஹீத் ஜ்மாஅத்தைப் பொறுத்ட்வரை ஆளுகுத் தக்கவாறு நிலை பாடு எடுக்காது. கருணாநிதி இஸ்லாத்தை ஏற்று தவ்ஹீத் ஜமாஅத் மீது அவதுறு பரப்பினாலும் அதற்கு பதில் கொடுக்கத் தான் செய்யும். அது தான் இஸ்லாம் கற்றுத்தரும். இஸ்லாத்துக்கு வந்த கருணாநிதி மன்ம் கோனக்கூடாது என்பதற்காக அவருக்கு மட்டும் அவதூறு கூறுவதை ஹலாலாக்க முடியாது.

0 Response to "அப்துல்லாவுக்கு அநீதியா"

Post a Comment

அதிகம் பார்த்தது..