குணங்குடி ஹனீபா குறித்து பொய்யன் டீஜேயின் கேள்வி

Monday, June 7, 2010 6:25 AM Posted by பொய்யன் டிஜே

குணங்குடி ஹனீபா குறித்து பொய்யன் டீஜேயின் கேள்வி

சிறையிலிருக்கும் வரைக்கும் குனங்குடி ஹனிபாவை பற்றி பேசியும் எழுதியும் வந்தவர். அவர் வெளியே வந்ததும் கண்டுகொள்ளவே இல்லை ! ஏன் தெரியுமா ? தமுமுக தலைவர்களோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன்னை தமுமுகவில் இணைத்துகொண்டவதும். எஸ்.எம். பாக்கருக்கு அளித்த பேட்டியில் தன் இளைய மகன் ஜாபரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைத்து விட்டதும் தான் காரணம் நிலைமை இப்படியே போனால் தீவுத்திடலில் நடப்பது சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் மாநாடாகத் தான் இருக்கும்.

என்று பொய்யன் டீஜே கண்டுபிடித்துக் கூறியுள்ளது. குணங்குடி ஹனீபா தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையைச் சேர்ந்தவர் என்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் அவருக்காக குரல் கொடுக்கவில்லை. பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதாலும் சட்ட நீதி அவருக்கு மறுக்கப்பட்டது என்ற காரனத்துக்காகவும் தான் குரல் கொடுத்தோம். அவர் வெளியே வந்தவுடன் அந்தக் கடமை முடிந்து விட்டது. அவர் வெளியே வந்த பின் யாரெல்லாம் அவரைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் அவரை பயன்படுத்திக் கொள்வார்கள். தவ்ஹீத் ஜமாஅத அவரைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் அவரது கொள்கை கோட்பாடு பற்றி தெரிந்து அது தவ்ஹீத் ஜமாஅத் கொள்கைக்கு உகந்ததாக இருந்தால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. இதை யாரும் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இது உலகமே அறிந்த் விஷயம் தான்.

தங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை தவ்ஹீத் ஜ்மாஅத் அங்கீகரிப்பதில்லை என்பதைத் தான் பொய்யன் டீஜேயும் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பிடிக்காதவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதை தவ்ஹீத் ஜ்மாஅத் பெருமையுடன் ஒப்புக் கொண்டதே தவிர மறுத்ததில்லை.

அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை பொய்யன் கண்டு பிடித்துச் சொல்கிறார்.

தவ்ஹீத் கொள்கை தான் தமுமுக வளர்சிக்கு முட்டுக்கட்டை என்று தமுமுக கூறியது. அதை இன்று வரை திரும்பப்பெறவில்லை. அதன் காரணமாகத் தான் பிரிவினை ஏற்பட்டது. தவ்ஹீதைப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்ட தமுமுகவுடன் ஒருவர் சேர்ந்து கொண்டால் அவரை தவ்ஹீத் ஜமாஅத் பயன்படுத்தாது. ஒருவரது கொள்கையை வைத்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் எந்த முடிவையும் எடுக்கும்.

அது போல் கேவலமான செயலுக்காக நீக்கப்பட்ட ஒருவருடன், இஸ்லாத்தை இஷ்டம் போல் வளைத்து மடத்தனமான பத்வாக்களால் வழிகெட்க்க முயலும் பாக்கரை நல்ல தலைவர் என்று கூறும் ஒருவரை தவ்ஹீத் ஜமாஅத் பயன்படுத்தாது.

பாக்கரையெல்லாம் தலைவர் என்று ஏற்றுக் கொள்வது ஹனீபாவின் தனிப்பட்ட உரிமை. அவருக்கு விருப்பமான முடிவை அவர் எடுப்பது பற்றி நமக்கு கவலையில்லை. அது போல் அவருக்காக தவ்ஹீத் ஜமாஅத் தன் கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது.

பாலியல் குற்றச் சாட்டு நிர்ரூபிக்கப்பட்ட பண மோசடி நிரூபிக்கப்பட்ட ஒருவரை வெறுப்பது போல் அவருடன் சேர்ந்து அவருக்கு முட்டுஇ கொடுப்பவர்களையும் வெறுப்பது நல்ல காரியம் தான்.

முனீர், சித்தீக், தொண்டியப்பா உள்ளிட்டவர்க்ள் வெறுக்கப்பட என்ன காரணமோ அதே காரணம் யாரிடம் இருந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை இது தான்.

இதை நன்றாக நாட்டு மக்களிடம் பொய்யன் டீஜே பரப்பிக் கொள்ளட்டும். எங்களுக்கு இந்த நிலை பாட்டில் மட்டற்ற மகிழ்ச்சிதான்

0 Response to "குணங்குடி ஹனீபா குறித்து பொய்யன் டீஜேயின் கேள்வி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை