ஐம்பதாயிரம் ரூபா குற்றச் சாட்டு உண்மையா? பொய்யா? சிந்தித்து உண்மையை உணர்த்த கால அவகாசம் எடுத்தார்களா?.

Tuesday, October 12, 2010 5:45 AM Posted by பொய்யன் டிஜே
ஐம்பதாயிரம் ரூபா குற்றச் சாட்டு உண்மையா? பொய்யா? சிந்தித்து உண்மையை உணர்த்த கால அவகாசம் எடுத்தார்களா?.

பொய்யர்களை அடையாளம் காட்டிய அடுத்த நிகழ்வு

"கீழே நான் கொடுத்து இருக்கும் செய்தி இந்திய தவ்ஹீது ஜமாஅத் இணையதளத்தில் இருந்து ஒரு சகோதரர் கேட்ட கேள்விகளுக்குஇ அந்த இணையதளத்தில் பதில் போட்டு இருந்தார்கள். அதில் என் சம்மந்தமாக வந்த பதிலுக்கு நான் கொடுக்கும் விளக்கம்.

தங்களின் "போலீஸ் பாதுகாப்புக்காக போடப்பட்ட நாடகமா இது...!!"

என்ற தலைப்பை படித்தேன் அதில் ஷைக் தாவூத் அவர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்றான "கீழக்கரை நசீருதீனோடு விவாதம் செய்ய தயாரா? என்றும் ஒரு கேள்வி கேட்டு இருந்தார். பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பதில் எழுதுகையில் "கொசுருவாக" கீழ்க்காணும் பதிலை சிறு பிள்ளைத்தனமாக எழுதி இருந்தார். இது அவருக்கே அபத்தமாக தெரியவில்லையா?.

"கீழக்கரை நசீருதீன் பணம் சம்பந்தமாக கணக்கு வழக்கு நோட்டுகள் ததஜ தலைமையகத்தில் இருக்கிறது. எடுத்து வாருங்கள். அதில் சரிபார்த்து சொல்கிறோம் என முறையாக கேட்டு விட்டோம். ஆனால் அதை கொடுக்க மறுத்து கள்ள எஸ்.எம்.எஸ் அனுப்பினார் பிஜெ. பதிலுக்கு ஆடிட்டருடன் நாங்கள் வருகிறோம் கணக்கு புத்தகத்தை தர தயாரா என கேட்டதற்கு பதில் இல்லை."

இது தான் அந்த இணையதளத்தில் போடப்பட்ட செய்தி.

ஐந்து வரிகளில் அடங்கிய பதிலா? இது? இது தான் பாக்கர் சொல்லும் பதிலின் வெளிப்பாடா? இது தான் அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் கொடுக்கப்படும் லட்சணமா? இது தான் அவர்கள் கற்ற தவ்ஹீதின் கோட்பாடா? கேள்வி கேட்ட நபரின் கேள்வியில் சுயமாக சிந்தித்து முறையாக புரிந்து கொண்டு தான் அவர் பதில் உரைத்தாரா?. அவர் சொல்லும் பதில் அவருக்கே அருவருக்கத்தக்கதாக தெரியவில்லையா? ஏன்என்றால்! அவரிடம் உள்ள சில முட்டாள் தனமான நிர்வாகத்திறன் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு அவர் பதிலே(?)நடு மண்டையில் அடிக்கிறது.

அட சாதாரண நசீருதீன் என்பவன் ஒரு பெரிய தவ்ஹீதின் இயக்கத்தில் இருந்த அதுவும் ஒரு முக்கிய பொறுப்பை சுமந்து இருந்தவரைப் பற்றி மிகப் பெரிய குற்றச் சாட்டை அதாவது பள்ளிக்கு கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாயை பாக்கர் வாங்கிவிட்டு இல்லை என்று சொல்லுகிறார் என்று குற்றச் சாட்டு வைக்கிறேன். அந்த குற்றச் சாட்டு உண்மையா? பொய்யா? ஏன் அப்படி பாக்கரைப் பற்றி சொல்லவேண்டும் என்று சிந்தித்துஇ உண்மையை உணர்த்த கால அவகாசம் எடுத்தார்களா?.

நான் தங்களிடம் கேட்கும் பொழுது என்னிடம் தொலை பேசியில்இ நீங்கள் அப்படி ஒன்றும் பணம் தரவில்லை சும்மா எனக்கு பணம் தர மாமனா மச்சானா? என்று ஏளனமாக பாக்கர் கேட்டாரே! மறந்து பொய் விட்டதா? சத்தியத்திற்கு வர மாட்டோம்இ சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் சத்தியமா? என்று அவரின் சகாக்களில் ஒருவரான தொண்டியப்பா கேட்டாரே? அது அவருக்கு தெரியாதா? அல்லது தொண்டியப்பா தான் மறந்து இருப்பாரா? அவரின் இன்னொரு "சகா" வான எர்ணா குளத்து பசீர் "அந்த பணத்தை K.E.C.T க்கு கொடுத்து விடுங்கள் மச்சான் நான் காக்காவிடம் (பாக்கரிடம்) சொல்லுகிறேன் என்று கெஞ்சினாரே! இதை பசீர் மறுப்பாரா? இந்த விஷயத்தை மறைப்பதற்கு என்னைப் பற்றி அவதூறு பரப்புனீர்களே! அதை நான் மறப்பேனா? மேலும் இதற்காகவே நான் எர்ணாகுளம் சென்று பசீரிடம் நேரில் கேட்டு விட்டு வந்து பக்காரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டும் வந்து பலமாதம் ஆகிறது அதற்க்கு இன்று வரை பசீர் கேட்டு என்னிடம் சொல்லவும் இல்லை உங்கள் தலைவரும் பேசவும் இல்லை.

இவ்வளவு விசயத்தையும் மறைத்து விட்டு ஒற்றை வரியில் "கணக்கு நோட்டை கேட்டோம் வாங்கி வரவில்லை" என்று சப்பை கட்டு கட்டுகிறார்களே! வெட்கமாக இல்லையா? எப்படி இவர்களுக்கு இவ்வளவு அறிவிலித்தனமாக பதில் சொல்ல முடிகிறது? அதிலும்இ அதையும் அவர்கள் கூட்டம் கொஞ்சம் கூட அறிவு இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறதே?

சரிஇ என்னை அழைத்து அவர்கள் அலுவலகத்தில் வைத்து கணக்கு நோட்டை வாங்கிவா? என்று சொல்லுகிறார்களே! சிந்தனை உள்ளவன் சொல்லக்கூடிய சொல்லா இது? அதிலும் ஒரு நிர்வாகத்தில் ஒரு பொறுப்பில் இருந்தவருமான இவர் சொல்லும் விதம் சிறு பிள்ளைத்தனமாக இல்லையா?.

ஒரு நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை சாதாரண நசீருதீன் அதுவும் உறுப்பினர் கூட இல்லாத நசீருதீன் என்பவன் கேட்டால்! ஒரு நிவாகம் அப்படியே கணக்கு நோட்டை தூக்கி தருவார்களா? யாரும் தேடி பார்த்துதான் சொல்லுவார்கள். சிந்திக்க வேண்டாமா? ஒரு சாதாரண கடை வைத்து இருப்பவன் கூட தர முடியாததை ஒரு நிர்வாகத்திடம் வாங்கிவா என்றால்! என்ன அர்த்தம். "மலடியைப் பிடித்து பிள்ளை பெறு" என்பது போல்தான் இதுவும்.

சரி ஒரு வாதத்திற்கு "கணக்கு நோட்டை இவர்கள் வாங்கிவா பார்த்து சொல்லுகிறோம்" என்று சொல்லுகிறாரே! அப்படி என்றால்! என்னிடம் ஐம்பதாயிரம் வாங்கியது உண்மை என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

எப்படி? பாக்கர் அவர்கள் என்னிடம் பணம் வாங்கி இருக்கிறார்! அந்த பணத்தை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தில் கொடுத்தேன் அதில் உங்கள் கணக்கு இருக்கும் என்பது தான் இவரின் வாதம்இ அதுதான் அர்த்தமும் கூட .

நான் கேட்கிறேன்: இந்த வாதம் விவாதம் எல்லாவற்றையும் பக்கர் தவ்ஹீது ஜமாத்தில் கேட்டுக் கொள்ளட்டும். எனக்கு அது தேவையில்லை. எனக்கு நான் உங்களிடம் பள்ளிக்காக பணம் தந்தேனா? இல்லையா? என்பது தான் என் கேள்வியாக இருந்தது. அந்த கேள்விக்கு நான் பணம் தந்தது உண்மை என்பதை இன்று அவரின் இணையதளத்தின் மூலம் அல்லாஹ்வே நிருபித்துக் காட்டி விட்டான். அல்ஹம்து லில்லாஹ்.

இன்றும் இன்னும் மறுத்தாரேயானால்! அவரின் சகாவான முக்கிய நபரின் உறவினர் இது சம்மந்தமாக அந்த முக்கிய உறவினரை (பெயரை) சேர்க்க வேண்டாம் என்று புலம்பிய தொலை பேசி உரையாடலை நான் வெளியிட தயங்க மாட்டேன் என்பதையும் கூறிக் கொள்கிறேன். அத்தோடு என்னைப் பற்றிய உங்களின் INTJல் இன்றைய நிர்வாகத்தில் முக்கிய பங்கெடுத்த நபரின் விமர்சனம்இ மற்றும் அசிங்கமாக ஆபாச வார்த்தையினால் என்னையும் பி ஜே வையும் வசை பாடிய விதம் இவை அனைத்தையும் வெளியிடுவேன்.

S.L.நசீருதீன் கீழக்கரை

0 Response to "ஐம்பதாயிரம் ரூபா குற்றச் சாட்டு உண்மையா? பொய்யா? சிந்தித்து உண்மையை உணர்த்த கால அவகாசம் எடுத்தார்களா?."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை