பீஜேக்காக உடனே போராட்டம் பாபர் மஸ்ஜிதுக்கு தாமதமான போராட்டம்

Sunday, November 7, 2010 5:23 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யனின் மற்றொரு முட்டாள் தனம்


பீஜேக்காக உடனே போராட்டம் நடத்தக் கூடியவர்கள் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்த போராட்டத்தை தாமதமாக அறிவிப்பது ஏன் என்று பொய்யன் பாக்கர் வழக்கம் போல் மூளையற்ற கேள்வியைக் கேட்டுள்ளான்.


நக்கீரன் வெளியிட்ட அபத்தமான பேட்டி பீஜே சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. அது தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தப்பட்டது என்பதை முன்னரே தெளிவுபடுத்தி விட்டோம். பீஜே தீவிரவாதிகளை உருவாக்குகிறார் என்பது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தீவிரவாதிகள் என்ற கருத்தில் உள்ளது தான்.


பீஜே சம்மந்தப்பட்ட விஷயமானாலும், தவ்ஹீத் ஜமாஅத் பற்றிய விஷயமானாலும் அதற்காக போராட்டம் நடத்துவது என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டுமே கலந்து கொள்வார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாதவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் பாபர் மஸ்ஜித் பிரச்சனைக்கான போராட்டங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாதவர்களும் பங்கேற்று வலிமையாக நடத்தப்பட வேண்டிய போராட்டம்.


தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தப்பட்ட போர்ராட்டங்களை உடனே அறிவித்தால் ஒரு குறுஞ்செய்தி மூலம் மக்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். எனவே அதற்கு அதிக அவகாசம் தேவை இல்லை. ஆனால் மற்றவர்களையும் திரட்டி நடத்தப்படும் போராட்டம் என்றால் அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு உரிய அவாகாசம் எடுக்க வேண்டும். மக்களை அழைத்து வருவதற்கான வாகன ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கும் போதுமான அவகாசம் வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தவ்ஹீத் ஜமாஅத் ஜனவாரியில் போராட்டம் அறிவித்துள்ளது.


நான் தான் முதலில் போராட்டம் நடத்தினேன் என்று காட்டுவதற்காக அவசரக் குடுக்கையாட்டம் போராட்டம் அறிவித்து 19 முஸ்லிம் இயக்கம் 4 காபிர் இயக்கம் ஆக் 23 இயக்கம் சேர்ந்து இயக்கத்துக்கு 30 பேர் என்று கூட்டம் கூட்டி கேவலபடுத்தும் வேலையை தவ்ஹீத் ஜமாஅத் செய்யாது. தமிழகம் முழுவதும் திரட்டி 23 இயக்கம் சேர்ந்து வெறும் 600 பேர் தான் கூடம் என்றால் முஸ்லிம்களை தீர்ப்பு பாதிக்கவில்லை என்று ஆகாதா? தன் சுய நலனுக்ககாக பொய்யன் சமுதாயத்தின் உணர்வைக் குறைத்து காட்டியது போல் தவ்ஹீத் ஜமாஅத் செய்யாது.


ஒட்டு மொத்த முஸ்லிம்களே இத்தீர்ப்பை எதிர்க்கிறார்கள் என்று காட்டும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் இருக்க வேண்டும். என்று சமுதாய நலனை முன்னிறுத்தியதாக தவ்ஹீத் ஜமாஅத் முடிவு அமைந்துள்ளது. பொய்யனைப் போல் கூறு கெட்ட குறுமதியாளர்களைக் கொண்ட இயக்கம் அல்ல.

0 Response to "பீஜேக்காக உடனே போராட்டம் பாபர் மஸ்ஜிதுக்கு தாமதமான போராட்டம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை