தவறான சிகிச்சைக்கு நட்ட ஈடு பெற தவ்ஹீத் ஜமாஅத் தடையா

Wednesday, April 21, 2010 4:15 AM Posted by பொய்யன் டிஜே

மங்கிஸ் கானின் மடமை 1

பொய்யன் டீஜேயின் செங்கிஸ் கான் எனும் மங்கிஸ் கான் என்பவர் மூன்று சம்பவங்கள் என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாத மீது குற்றச்சாடு எழுப்பியுள்ளார். இவர் ஒரு மூளையற்ற மரமண்டை என்பதை அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி இமயம் டீவி மூலம் நிரூபித்தார்.

இதன் பின்னர் தான் ஒரு மரமண்டை என்பதை மேலும் நிருபிக்கும் வகையில் மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளார்.

முதலாவது சம்பவம்

ஒரு நோயாளி பாதிக்கப்பட்ட போது பொய்யன் டீஜேவினர் பாதிக்கப்பட்டவ்ருக்காக நட்ட இட்டு கேட்டு மருத்துவமனையில் தகராறு செய்தார்களாம். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் வந்து மருத்துவருக்கு ஆதரவாக செயல்பட்டார்களாம். பார்த்தீர்களா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாயப்பணியை? இப்படி மங்கிஸ்கான் கேட்டுள்ளார்.

தவ்ஹீத் ஜமாஅத்திற்கென்று அரசு மற்றும் தனியார் மருத்துவர்களிடையே நல்ல அபிப்பிராயங்கள் உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள ஒரு சிறந்த மருத்துவரான மயில்வாகனன் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீதும் இஸ்லாத்தின் மீதும் நல்ல ஆதரவு வைத்திருப்பவர். இப்போது துணை வேந்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு மாதத்துக்கு முன்பே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினால் தான் இவரிடம் சிகிச்சை பெற முடியும் என்ற போதும் நம் ஜமாஅத் பரிந்துரைக்கும் நோயாளிகளுக்குக் குறைந்த செலவிலும் உடணடியாகவும் மருத்துவம் செய்வது போன்ற உதவிகளைச் செய்து வந்தார்.

அவருக்கு நம் ஜமாஅத் மூலமாக திருக்குர்ஆனையும் பல்வேறு நூல்களையும் குறுந்தகடுகளையும் பீஜே நேரடியாகச் சென்று வழங்கியுள்ளார். இவை யாவும் பொய்யன் இயக்கத்தினருக்கும் நன்கு தெரியும்.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரி தைராய்டு பிரச்சனை இரத்தக் கொதிப்பு நோய் சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு ஆளாகி உடல் மிகவும் பருமனான நிலையில் அந்த மருத்துவரிடம் அனுமதிக்கப்பட்டார்.

அவர் அப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது சிகிச்சை வழங்கியதுடன் அவருக்கு அறிமுகமான சிறப்பு மருத்துவமனையிலும் பரிந்துரை செய்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சை பலனில்லாமல் அப்பெண் கோமா நிலையை அடைந்தார்.

இதையடுத்து அம்மருத்துவர் அப்பெண் வீட்டாரிடம் மருத்துவம் செய்ததற்கான தொகை கேட்டதற்கு அதைத் தர மறுத்தவர்கள் உடனே பொய்யன் டீஜேயை அனுகியுள்ளனர்.

உடனே களமிறங்கிய கட்டப் பஞ்சாயத்து பேர்வழிகள் மருத்துவம் செய்ததற்கான தொகையைக் கேட்கக் கூடாது . மீறிக் கேட்டால் ஆர்ப்பாட்டம் செய்து கேவலப்படுத்தி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

அந்தச் சமயத்தில் அம்மருத்துவர் கட்டப்பஞ்சாயத்து செய்வது தவ்ஹீத் ஜமாஅத்து தான் என்று தவறாக விளங்கிக் கொண்டு மவ்லவி பீ.ஜே அவர்களுக்கு போன் போட அவரும் போனை சைலன்டில் போட்டிருப்பதால் அட்டன்ட் செய்யவில்லை. இதனால் அம்மருத்துவர்- பீ.ஜே அவர்கள் நம்மை தவறாகப் புரிந்து கொண்டாரே ! அதனால் தான் போன் எடுக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இவர்களின் நிர்பந்தத்திற்கினங்கி மருத்துவம் செய்ததற்கு பணம் தரத் தேவையில்லை என்று கூறி விட்டார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட நம் ஜமாஅத் மாநில துணைப் பொதுச் செயலாளர் கலீல் ரசுல் மற்றும் மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்களும் உடனே சம்பவ இடத்திற்குச் சென்று விசாரிக்கையில் மருத்துவர் கூறியதாவது. நான் மருத்துவம் செய்ததற்குப் பணம் கேட்டால் தர மறுக்கிறார்கள். பணம் இல்லையென்று சொல்லியிருந்தால் நான் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டேன். அதற்காக ஆர்ப்பாட்டம் செய்வேன் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கூறுவதாகக் கூறினார். நான் உடனே பிஜே அவர்களுக்கும் போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. அவரும் நம்மைத் தவறாகப் புரிந்து விட்டாரே என்று நினைத்தேன் என்று கூறியவுடன்

நம் நிர்வாகிகள் இந்தக் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்கள் எங்கள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்கள். எனவே இவர்களின் இந்தக் கேவலமான செயலுக்கு எங்களையும் முஸ்லிம் சமுதாயத்தையும் தவறாக நினைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தனா.

இது தான் நடந்த சம்பவம். இச்சம்பவத்திலேயே சமுதாயத்தைக் காப்பவர்கள் யார்? அழிப்பவர்கள் யார்? என்று புரிந்திருக்கும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால் தான் நோயாளி கோமா நிலையை அடைந்தார் என்று தனது வெப்சைட்டில் பரப்புபவர்கள். அந்த நோயாளிக்காக நஷ்ட ஈடை ஏன் பெற்றுத் தரவில்லை?

போலி மருந்துகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அரசிடம் அவர்களால் சித்தரிக்கப்படும் இந்தப் போலி டாக்டரைக் கைது செய்ய ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை?

அது ஏன்?- மருத்துவர் மீது எந்தக் குறையும் இல்லையென்று தானே விட்டு விட்டீர்கள்.

அப்படியென்றால் மருத்துவர் கேட்கும் தொகையை நீங்கள் பொறுப்பேற்றுக் கொடுக்க வேண்டியது தானே?

அதெப்படி முடியும் நன்கொடையாக வரும் காசை ஆட்டையைப் போடும் பக்கா திருடன் பாக்கர் தாதாவை தலைவனாக வைத்துக் கொண்டு எப்படி பணம் தர முடியும்? முடிந்த வரை பறிக்கத்தான் முடியும்.

மேலும் இஸ்லாமிய நம்பிக்கைப் படி மருத்துவர்கள் நோயைக் குணமாக்கும் ஆற்றல் படைத்தவர்கள் அல்ல. மருத்துவம் செய்து விட்டு குணம் கிடைக்கவில்லை என்றால் பணம் தர மாட்டேன் என்று கூறுவதற்கு அனுமதி இல்லை. மனிதன் என்ற முறையில் என்ன தான் சிகிச்சை அளித்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் குணம் கிடைக்கும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

சிகிச்சை செய்த மருத்துவர் தவறான சிகிச்சை செய்தால் தான் அவர் குற்றவாளியாவார். மயில்வாகனன் செய்த சிகிச்சை என்ன? அது எந்த வகையில் தவறான சிகிச்சை என்பதற்கான ஆதாரத்தை பொய்யன் டீஜே வெளியிட வேண்டும்.

அடுத்தடுத்த மடமைகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருக்கும். மங்கிஸ்கானின் பண மோசடியும் அமபலமாகும்

0 Response to "தவறான சிகிச்சைக்கு நட்ட ஈடு பெற தவ்ஹீத் ஜமாஅத் தடையா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை