பொய்யன் நின்றவனிடம் சென்றார் பக்ரி படுத்தவரிடம் சென்றார்

Tuesday, October 12, 2010 5:34 AM Posted by பொய்யன் டிஜே

ஹாமித் பக்ரி தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் இணையதளம் வெளியிட்ட கட்டுரை மற்றும் புகைப் படம் தொடர்பாக பொய்யன் கூட்டம் ஒரு ஆய்வுக் (?)கட்டுரையை வெளியிட்டுள்ளது அதற்கான வரிக்கு வரி பதில்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

பிரபல மார்க்க அறிஞரான மவ்லவி. ஹாமித் பக்ரி மன்பஈ அவர்கள்இ தர்காவில் கையேந்துவது போன்ற இரு படங்களை வெளியிட்டுஇ 'எப்படி இருந்த இவர் இப்படி ஆகி விட்டாரே என்று வருத்தப்படுபவர்கள் நேர்வழி பெற இவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! என்று எழுதியுள்ளார்கள்.

இவர்கள் கூறும் செய்தி உண்மையாக இருப்பின்இ இவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வாசகமானஇ 'ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக' என்ற உவமானத்திற்கு பொருத்தமானவர்கள் இவர்களே! ஏனெனில் மவ்லவி. ஹாமித்பக்ரி அவர்கள் இந்த அளவுக்கு அதாவது இவர்களின் வார்த்தையான 'பரிதாப நிலைக்கு' சென்றதற்கு இவர்களே காரணம் என்பதே உண்மை.

நமது பதில் :

சிலருக்கு சாப்பிட்டவுடன் தூக்கம் போகும் சிலருக்கு கொஞ்சம் நடந்தால் தூக்கம் போகும் சிலருக்கு ஒரு டீ குடித்தால் தூக்கம் போகும் இன்னும் சிலருக்கு யாரோடாவது பேசிக்கொண்டிருந்தால் தூக்கம் போகும்.

இந்தக் திருட்டுப் பேர்வழிகளுக்கு ஏதாவது ஒரு பொய்யை அல்லது அவதூரை பி.ஜெ மீதோ அல்லது டி.என்.டி.ஜெ மீதோ சொன்னால் தான் தூக்கம் போகும்.

அந்த வகையில் நேற்று தூங்குவதற்கு முன் சொன்னதுதான் இது.

நக்கீரன் கோபாலின் மருமகன் பாக்கர் அவர்களின் சீடர்களே ! ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறதாம் என்றால் ஒருவனின் நேர்வழிக்காக துஆ செய்யச் சொல்வதை உதாரணம் காட்டியுள்ளீர்கள்.

பிரச்சினை இல்லை இந்த உதாரணத்தை மீண்டும் ஒரு முறை எழுதுங்கள் இதே தான் நாம் உங்களுக்கும் சொல்கிறோம்.

கொள்கை இழந்து iசிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொய்யன் பாக்கரும் அவன் சீடர்களும் நேர்வழி பெற அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

'பரிதாப நிலைக்கு' சென்றதற்கு இவர்களே காரணம் என்பதே உண்மை

நமது பதில் :

எந்தப் பெண் பித்தனாக இருந்தாலும் திருடனாக இருந்தாலும் பொய்யனாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஜமாத்தில் சேர்த்துக் கொண்டு ஜால்ரா அடிப்பதற்கு தவ்ஹீத் ஜமாத் ஒன்றும் பொய்யன் நடத்தும் பொய்யன் டி.ஜெ அல்ல.

இந்த ஜமாத்தில் யார் தவறு செய்தாலும் அதற்கு நடவடிக்கை உண்டு.இது நாம் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை நீங்களே அனுபவித்ததுதான் பாக்கர் மாமா.

அதனால் இந்த ஜமாத்தில் இருந்து கொண்டு எவன் தவறு செய்தாலும் அது பாக்கர் பஸ் மேட்டர் போல் அல்லது வின் டி.வி. சேர் மேட்டர் போல் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அவர் நீக்கப்படுவார்.இதுதான் இதுகாலவரை ஜமாத்தின் சட்டம்.

அது சரி அவர் நீக்கப்படும் போது ஏன் இந்தக் கேள்வியை கேட்கவில்லை?

ஓகோ அப்போ உங்கள் வாதம் எடுபடாது என்று பழைய பல்லவியைப் பாடுவீர்கள் தெரியுமேய்யா…………….

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

அண்ணன் ஜாக்கை உடைத்துக் கொண்டு வந்தபோது அவர் எதிர்பார்த்தது போன்று அறிஞர் படையோஇ தொண்டர் படையோ அவர் பின்னால் வரவில்லை. அண்ணனின் 'ஆலிம் கம்பெனி' உறுப்பினர்கள் சிலரோடு ஹாமித்பக்ரி அவர்களையும் ஜாக்கிலிருந்து கழட்டிக் கொண்டுவந்தார்.

நமது பதில் :

ஜாக்கை விட்டு பி.ஜெ அவர்கள் வரும் போது அவருடன் யார் யார் வந்தார்கள் என்பது உலகறியும் ஒரு பேச்சுக்கு பொய்யன் சொல்வதைப் போல் வைத்துக் கொண்டாலும் அதில் எமக்கு எந்தக் குறையும் ஏற்படப் போவதில்லை.

ஜாக் உருவாக்கப் படுவதற்கு முன் அதைவிட குறைவான கூட்டமே இருந்தது அதற்காக பி.ஜெ சொன்ன ஏகத்துவக் கொள்கை தவறாகவில்லையே?

தவ்ஹீத் ஜமாத்தைப் பொருத்தவரை எத்தனை பேர் வருகிறார்கள் என்பது முக்கியமல்ல எத்தனை பேர் கொள்கையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

ஏனெனில் மவ்லவி ஹாமித்பக்ரி அவர்கள் மார்க்க அறிவிலும் பேச்சாற்றலிலும் அன்றைக்கு அண்ணனை விட சிறந்தவராக இருந்தவர். எனவே அன்றைக்கு விரல்விட்டு என்னும் நிலையில் இருந்ததால்இ தான் தலைமை ஏற்காமல் தவ்ஹீத் பிரச்சார குழுவிற்கு ஹாமித்பக்ரியை தலைவராக்கி அவர் பின்னால் ஒளிந்து கொண்டார் அண்ணன்.

நமது பதில் :

யார் அறிவாளி என்பது முக்கியமல்ல யார் நேர்வழியில் இருக்கிறார் என்பதே முக்கியம்.

ஒரு பேச்சிக்காக பொய்யன் சொல்வதைப் போன்ற காரணத்திற்காகத் தான் பி.ஜெ ஹாமித் பக்ரியைத் தலைவராக ஆக்கினார் என்றே வைத்துக் கொள்வோம் அதில் என்ன நடந்துவிடப் போகிறது?

அன்று அதற்காக ஆக்கினார் என்றால் உமது கருத்துப் படி அதன் பின் ஸைபுல்லா ஹாஜாவைத் தலைவராக ஜமாத் ஏற்றுக் கொண்டதே

இதே காரணம் தானே இருக்கமுடியும்.

ஆனால் நிச்சயம் பொய்யர்கள் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் ஏன் என்றால் ஸைபுல்லாஹ் இன்று வரை அல்ஹம்துலில்லாஹ் மிகத் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் இருக்கிறார் பக்ரியோ பொய்யன் கொள்கையை பங்கு போட்டதைப் போல் பங்கு போட்டுக் கொண்டார்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

மேலாண்மைக் குழுவில் அங்கம் வகித்த காலகட்டத்தில்தான் ஹாமித்பக்ரி அவர்கள் கைது செய்யப்படுகிறார். உடனடியாக வழக்கம் போல அவருக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என முகாரி பாடிவிட்டார் அண்ணன். ஹாமித்பக்ரி தீவிரவாத குழுக்களுடன் ஆலோசனை செய்த ஆதாரப்பூர்வமான தகவல் வந்ததால் நாங்கள் அவரை நீக்கிவிட்டோம் என்று தன்னை பின்பற்றுபவர்களை நம்பவைத்தார். ஆனாலும் ஹாமித்பக்ரி அவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்து ஒருபோதும் நீக்கப்படவிலை என்பதே உண்மை.

நமது பதில் :

ஹாமித் பக்ரி தீவிரவாத குழுக்களுடன் கூட்டம் போட்டார் என்ற ஆதாரப்பூர்வமான தகவல் வந்ததால் அவரை நீக்கிவிட்டோம் தன்னைப் பின்பற்றுபவர்களை பி.ஜெ நம்ப வைத்தார்.என்று பொய்யன் வைக்கும் வாதம் உண்மையெனில் ஏன் அன்றைக்கு பொய்யன் நம்பவேண்டும் அவர் அப்படி செய்யவில்லை ஜமாத் தான் தவறான முடிவெடுத்துள்ளது என்று கூறி பரிசுத்தவான்(?) பாக்கர் அன்றே ஜமாத்தை விட்டுப் போயிருக்களாமே தவறான முடிவெடுத்தது மட்டுமல்லாமல் பி.ஜெ தன்னைப் பின்பற்றச் சொல்கிறார் நான் எப்படி இப்படிப் பட்ட ஜமாத்தில் இருப்பது என்று அன்றைக்கு சொன்னீர்களா?

கேட்டால் அன்றைக்கு நாம் பலம் குறைந்தவர்களாக இருந்தோம் எங்கள் பேச்சு அங்கு எடுபடாது.இது தானே உங்கள் பதில்.(புதுசா ஏதாவது சொல்லுங்கய்யா)

(பி.ஜெ தன்னைப் பின்பற்றச் சொன்னதாக ஒரு ஆதாரம் கூட பொய்யனால் காட்ட முடியாது.பி.ஜெ அப்படி சொல்லவில்லை என்று பொய்யனே ஒத்துக் கொண்ட வீடியோக்கள் உண்டு.உதாரணம் இலங்கை கொழும்பில் பி.ஜெயின் உரைக்கு முன் பாக்கர் பேசியது.)

தொடரும் இன்ஷா அல்லாஹ்…………….

0 Response to "பொய்யன் நின்றவனிடம் சென்றார் பக்ரி படுத்தவரிடம் சென்றார்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை