தனியார் இடத்தை மீட்டுக் கொடுப்பதற்கு முட்டுக் கட்டை ஏன்

Wednesday, April 21, 2010 4:14 AM Posted by பொய்யன் டிஜே

மங்கிஸ் கான் மடமை 2

சென்னை மண்ணடிஅரண்மனைகாரன் தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் சகோதரருடைய வீட்டை வக்கீல் ஒருவா வாடகையும் வசுல் பண்ணிக் கொண்டு வந்ததாகவும் பின்பு அதை ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகவும் அதை மீட்க பொய்யன் இயக்கத்தினர் தாவா சென்டர் நடத்தப் போவதாகவும் அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் நம் ஜமாஅத்தைப் பற்றி பொய்யன் டீ ஜேவினர் அவதூறு கிளப்புகின்றனர்.

ஆனால் நடந்தது என்ன?

மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் நம் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்தின் எதிரில் உள்ள வீடு குறித்து ஒரு முஸ்லிம் சகோதரருக்கும் வக்கீலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதை மீட்க அந்த சகோதரர் அறியாத்தனமாக பொய்யன் இயக்கத்தினரிடம் புகார் கொடுத்தார். ஜமாஅத்தில் வியாபாரம் குன்றிய நிலையில் இருந்த பாக்கர் வகையராக்களுக்கு தீடீர் ஆஃபர் கிடைத்தது. உடனே கட்டப்பஞ்சாயத்தில் களமிறங்கினர். அதெப்படியென்றால்

நம் தலமைக்கு எதிரில் உள்ள அந்தக் கட்டடத்தில் திடீரென மங்கிஸ் கான் உள்ளிட்ட சிலர் வந்து தவா செண்டர் என்று ஒரு பேனரைக் கட்டினார்கள்.

பேனர் கட்டிய உடன் ஒரு நாளும் இல்லாத வழக்கமாக நமது மர்கஸுக்குத் தொழ வந்தனர். அதாவது நம் ஜமாஅத்தில் தொழுது விட்டு அந்தக் கட்டிடத்தில் நுழைந்தால் இந்த வேலயை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்கிறது எண்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது திட்டம்.

மேலும் தொழுகையில் சந்தித்த நம் சகோதரர்களிடம் நாங்கள் மதரஸா நடத்த வரவில்லை. உங்களுக்கு எதிரில் மதரஸா நடத்தினால் நமக்கிடையே பிரச்சனைகள் வரும் என்பது தெரியும். அந்த இடத்தைக் கைப்பற்றத் தான் இப்படி நாடகமாடுகிறோம் என்று கூறினார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் தான் சம்மந்தப்பட்டவரிடம் பணம் வாங்கிக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்கிறது என்று எதிர் தரப்பும் காவல் துறையையும் நம்ப வைத்தனர். இதற்காகத் தான் நம்து அலுவலகம் வந்து தொழுகை நடத்தியது.

தாவா சென்டா என்று போடு மாட்டப்பட்டவுடன் நம் மக்களிடத்தில் ஒரு குழப்பம் என்னடா இது? மண்ணடியில் எங்குமே இடம் இல்லாதது போலவும் நம் ஜமாஅத் எதிரேத் தான் காலி இடம் இருப்பது போலவும் இவர்கள் தாவா சென்டர் துவங்குகிறார்களே? இவர்கள் அல்லாஹ்வுக்காகவும் மறுமைக்காகவும் மார்க்கப்பிரச்சாரம் செய்ய வில்லையா? போட்டிக்காகத் தான் செய்கிறார்களா? என்று எண்ணத்துவங்கினார். அப்போது தொழுகைக்கு வந்த அந்த பாக்கர் கும்பல் நம் நிர்வாகிகளிடம் கூறுகையில் ..

எதிரே உள்ள இடம் பிரச்சிணையில் உள்ளது அதை மீட்கத் தான் தாவா சென்டர் என்று போட்டுள்ளோம். இரண்டு நாளில் பிரச்சிணை சரியாகி விடும் அதற்குப் பின்பு சென்று விடுவோம் என்று தெரிவித்தனர்.

அப்போது தான் நமக்கு இன்னொரு விஷயம் புலப்பட்டது. ஓ ! இவர்கள் கட்டப் பஞ்சாயத்தையும் கூட நவீன தாவாவாக செய்கிறார்களோ? என்று எண்ணம் ஏற்பட்டது.

பாக்கர் கும்பல் நினைத்தது போலவே நடந்தது. சிறிது நேரத்தில் இந்தப் பிரச்சனையை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்கிறது என்கிற தவறான எண்ணம் ஏற்பட்டு காவல்துறையினரும் வக்கீலும் நம் ஜமாஅத்திடம் அந்த இடம் குறித்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் எப்போதும் நியாயத்தின் அடிப்படையில் தானே போராடுவீர்கள். இப்போது ஏன்? இந்த கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் ? என்று நம் நிர்வாகிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர்.

முஸ்லிம் சமுதாயத்தினர் சட்டத்தை அவமதிப்பவர்கள் என்கிற கெட்ட எண்ணத்தை ஊடுருவச் செய்த இந்த பாக்கர் கும்பலை தோலுரித்துக் காட்டவில்லையானால் அது நம் ஜமாஅத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல. பிற்காலத்தில் நியாயமான அடிப்படையில் போராடினாலும் அதற்கு காவல்துறை மறுத்து நம் சமுதாயத்திற்கு பொதும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்ற சமுதாய அக்கரையுடன் நம் சகோதரர்கள் காவல்நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று பார்த்தால் அங்கும் பொய்யன் இயக்கத்தினர் தனது கட்டப்பஞ்சாயத்தை மீண்டும் துவங்கினர். எப்படியென்றால் நம் சகோதரர்கள் அங்கு சென்றவுடன் பொய்யன் இயக்கத்தினர்

நம் சகோதரர்களை காவல்துறையிடம் சுட்டிக்காட்டி பார்த்தீர்களா? இவர்களெல்லாம் எங்கள் கூட்டத்தினர் ! எங்களுக்காக கூடி வந்துள்ளனர் என்று மார்தட்டி ஆள்சேர்க்கும் பணியைத் தொடங்கினர். சுதாரித்துக் கொண்ட நம் சகோதரர்கள் காவல்துறையிடம் கூறுகையில் இவர்கள் செய்யும் கட்டப்பஞ்சாயத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவர்களின் இச்செயலுக்காக எங்கள் சமுதாயத்தை தவறாக எண்ணிவிடாதீர்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தனர். இது தவிர வேறு எதையும் கூறவில்லை.

உடனே காவல்துறை அதிகாரிகள் பொய்யன் இயக்கத்திடம். இந்த இடம் குறித்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்விஷயத்தில் நீங்கள் ஏதாவது கட்டப்பஞ்சாயத்து செய்தீர்களானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். அன்று ஓடியவர்கள் தான் அந்த முஸ்லிம் சகோதரருக்கு இடத்தை மீட்டுத்தர முன்வரவில்லை.

குறிப்பு: 1

ஆனால் மக்களிடம் அவர்கள் பரப்பியது என்னவென்றால் சம்மந்தப்பட்ட சகோதரர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று காவல்துறையினரை கொண்டு வக்கீல் தரப்பை வௌயேற்றி விட்டார். காவல்துறை வக்கீல் தரப்பை வௌயேற்றிய பின்னர் அந்த சகோதரர் எதற்காக அந்த இடத்தை உங்களிடம் தர வேண்டும். அப்படியென்றால் அந்த இடத்தை மீட்க அந்த சகோதரர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று காவல்துறையினரைக் கொண்டு வக்கீல் தரப்பை வெளியேற்றி விட்டார் என்பது அண்டப் புளுகுதானெ!

குறிப்பு: 2

ஆக்கிரமிப்பு செய்த சட்டக் கல்லூரி மாணவர்களை பொய்யன் இயக்கத்தினர் காவல் துறையிடம் ஒப்படைத்தாக பரப்புகின்றனர். வீட்டை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காவல்துறையில் ஒப்படைத்த பின்பு சம்பந்தப்பட்ட சகோதரரிடம் அந்த வீட்டை ஒப்படைக்காமலும் அல்லது தாவா சென்டர் என்ற பெயரில் நவீன தாவா(?) வை செய்யாமல் ஓடியது ஏன்? அப்படியென்றால் ஆக்கிரமிப்பு செய்த சட்டக்கல்லூரி மாணவர்களை பொய்யன் இயக்கத்தினர் காவல் துறையிடம் ஒப்படைத்தாக கூறியதும் அண்டப்புளுகுதானே?

குறிப்பு:3

மக்ரிப் தொழுகைக்கு நம் ஜமாஅத் அலுவலகத்திற்கு வந்ததாகவும் அப்போது நம் சகோதரர்களுக்கு சலாம் சொன்னதாகவும் பின்பு காவல்துறையில் அவர்கள் பள்ளிவாசலுக்கு வருவது இடைஞ்சல் என்று நம் சகோதரர்கள் கூறியதாக அப்பாவித்தனமாக தலைவன் பாக்கரைப் போன்ற அழகாக அவதூறு பரப்புகின்றனர். என்ன ஒரு சிறிய வித்தியாசம் என்றால் அவர் வாய்க்கு வந்தவாறு அல்லாஹ்வின் மீத சத்தியமாக என்று கூறுவார். இங்கு அதைக்காணோம்.

இவ்வாறாக ஆங்காங்கே தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்துவிட்டு அந்தப் பழியை நம் ஜமாஅத்தின் மீது போட்டுவிட்டு அதில் வருமானத்தில் வயிறு நிரப்ப கிளம்பி விட்டனர்.அந்த சூழ்ச்சி இங்கு எடுபடவில்லை.

0 Response to "தனியார் இடத்தை மீட்டுக் கொடுப்பதற்கு முட்டுக் கட்டை ஏன்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை