தமிழ் தெரியாத தருதலைகள்.

Wednesday, December 8, 2010 5:18 AM Posted by பொய்யன் டிஜே
பொய்யன் கூட்டத்தின் பொய் தளத்தில் உணர்வு இதழ் வெளியிட்ட ஒரு கட்டுரையின் ஒரு பேரா தொடர்பாக விமர்சனம் செய்திருந்தனர்.

அந்த விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் போது சகோதரர் பி.ஜெ அவர்கள் தீவிரவாதத்தை எதிர்த்துப் பேசி வருவதால் அவருக்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்தே அச்சுறுத்தல் இருப்பதும் அதன் காரணமாக தற்போது ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பதில் என்ற பேரில் அப்படியானால் இந்து அமைப்புகளிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் உங்களுக்கு இல்லையா? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தனர் அதற்கெல்லாம் சேர்த்து நாம் நேற்றே தெளிவான விளக்கம் கொடுத்திருந்தோம்.

அதைத் தொடர்ந்து மீண்டும் வேதாலம் முருங்கை மரம் ஏறியுள்ளது.

அதாவது குறிப்பிட்ட மறுப்புக் கட்டுரையில் இஸ்லாமிய அமைப்புகள் என்று தற்போது சொல்லிக் கொள்பவர்களின் நிலையைப் பற்றி நாம் விளக்கியிருந்ததை புரிய முடியாத தமிழ் தெரியாத தருதலைகள் அந்தக் கட்டுரையில் சிலை திறப்பு விழா மடாதிபதியிடம் ஆசி பஸ் பயணம் போன்றவற்ரை நாம் பட்டியலிட்டதை தீவிரவாதத்திற்கு ஆதாரமாக கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.

வாசகர்கள் நமது குறிப்பிட்ட கட்டுரையை மீண்டும் படித்துப் பார்த்தால் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்தக் கட்டுரையைப் படிக்க இங்கு க்லிக் செய்யவும்.

அத்துடன் இஸ்லாமிய(?) அமைப்புகளிடமிருந்து சகோதரர் பி.ஜெ அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப் பட்டிருப்பதும் அதனால் அவருக்கு ஆயுதம் தாங்கிய போலிஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டிருப்பதும்.நாடே அறிந்த ஒன்றாகும்.

ஆனால் முழுப் பூசனிக் காயை பிரியானியில் மறைக்க நினைக்கும் இந்தப் பொய்யன் கூட்டம் அப்படி எந்த ஒரு அமைப்பாலும் பி.ஜெ க்கு அச்சுறுத்தல் இல்லை என்று சொல்ல முற்படுகிறது.

உளவுத் துறைக்குத் தெரியாதது பொய்யனுக்கு தெரிந்து விட்டது போலும்.

சகோதரர் பி.ஜெ அவர்கள் சிறைவாசிகள் தொடர்பாகவும் கோவை குண்டு வெடிப்பு தொடர்பாகவும் அல் உம்மா அமைப்பு தொடர்பாகவும் தனது அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருந்த செய்தியை பார்த்துவிட்டு குமுதம் ரிப்போட்டர் பத்திரிக்கை சகோதரர் பி.ஜெ மற்றும் பொய்யாசிரியர் ஜவாஹிருல்லாஹ் பொய்யன் பாக்கர் உள்ளிட்டவர்களிடம் ஒரு பேட்டியை எடுத்து வெளியிட்டது.

அந்தப் பேட்டி முழுக்க முழுக்க சகோதரர் பி.ஜெயின் இணையதளத்தில் வெளியிடப் பட்ட தகவல் பற்றியது.

குமுதம் ரிப்போட்டர் பேட்டியைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்

தனது இணைய தள தகவலில் சகோதரர் பி.ஜெ அவர்கள் தமுமுக தொடர்பாகவும் பொய்யாசிரியர் தொடர்பாகவும் பொய்யன் பாக்கர் தொடர்பாகவும் பல தகவல்களை தெரிவித்திருந்தார்.

ஆனால் குமுதம் ரிப்போட்டர் பத்திரிக்கை இது தொடர்பாக பொய்யாசிரியர் பொய்யன் பாக்கர் போன்றவர்களிடம் கேட்டதற்கு எந்த ஒரு பதிலையும் தராமல் திருவிடைச் சேரி சம்பவம் தொடர்பாக பேட்டியை திசை திருப்பியிருந்தனர்.

தமுமுக பொய்யன் ஜமாத் போன்றவற்றைப் பற்றி பி.ஜெ சொன்ன எந்தத் தகவல்களையும் ரிப்போட்டர் பத்திரிக்கையில் அவர்கள் மறுக்காததின் மூலம் பி.ஜெ சொன்னவைகள் அனைத்தும் உண்மை தான் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுவிட்டது.அல்ஹம்து லில்லாஹ்.

இஸ்லாமிய(?) அமைப்புகள் மூலம் சகோதரர் பி.ஜெக்கு கொலை அச்சுறுத்தல் உள்ளதை உளவுத் துறை உறுதி செய்து பாதுகாப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக இன்னும் பல தகவல்களுக்கு இங்கு க்லிக் செய்யவும்

0 Response to "தமிழ் தெரியாத தருதலைகள்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை