ஒரு வாசகர் கேட்கிறார்

Wednesday, April 21, 2010 4:25 AM Posted by பொய்யன் டிஜே
எங்கப்பன் குதுருக்குள் இல்லை
INTJ – துணைப் பொதுச்செயலர் (இப்படித்தான் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது) விளக்கம்.
இக்பால் சாப்! உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. பாக்கருக்காக அல்லாஹ்விடம் குற்றவாளியாக வேண்டுமா ?

நாங்கள் கேட்பது எத்தனை மணிக்கு மேடை ஏறினார் என்பதல்ல. அந்த புகைப் படத்தில் இருப்பது பாக்கர் அவர்களா ? அல்லது வேறு யாருமா ? என்பதுதான் இப்போது எழுந்துள்ளஒரே கேள்வி. அதை வெளியிட்ட தினசரிகள் அந்த புகைப் படத்தை எப்படி வெளியிட்டார்கள். அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டியதுதானே.
தேவநாதன் கையில் இருப்பது வாக்கி–டாக்கியா என்பதுதான் இப்போது உள்ள ஒரே கேள்வி. அல்லாஹ்வின் மறுமை தண்டனைக்கு பயந்து உண்மையை சொல்லுங்கள். சும்மா மிரட்டல் எல்லாம் விடுவதை விட்டுவிட்டு அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் எச்சரிக்கை ஐகோர்ட் என்ன சுப்ரிம் கோர்ட் அல்லது சுவிசர்லாந்தில் உள்ள உலக கோர்டுக்கு போனாலும் நிக்காது. காரணம், நாங்கள் சொல்வது போட்டோ. நீங்கள் விளக்குவது நேரம். கோர்ட்டுக்கு போனால் தடய அறிவியல் சோதனை செய்து உண்மையை கண்டுபிடித்து விடுவார்கள். ரொம்ப வசதியா பொச்சு. நீங்கள் தயாரித்து எழுதிக் கொடுத்த செய்தியை பிரசுரித்த அந்த பத்திரிக்கைகள், அவர்கள் வெளியிட்ட ஃபோட்டோவைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?. ஏன் ?
என்ற கேள்வி உங்களுக்கு எழாது .நீங்கள் என்ன சொன்னாலும் நம்பும் ஒருசிலருக்கும் எழாது. ஆனால் உண்மையை அறிந்து கொள்ள நினைக்கும் மறுமைக்கு பயந்த முஸ்லீம் மக்களுக்கு கேள்வி எழத்தான் செய்யும். இனி உங்களைச் சார்ந்தவர்களே சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். (ஜமீல்பாய், அபூபக்கர், இவர்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள்.) இன்னும் ஒரு சிலரைத்தவிர. ஏனெனில் நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய்தான் என்பது உங்களைச் சார்ந்தவர்களுக்கே தெரியும். மீண்டும் சொல்கிறோம். அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் தவறைச் செய்து அல்லாஹ்விடம் குற்றவாளியாகிவிடாதீர்கள்.

- Nata Mai

0 Response to "ஒரு வாசகர் கேட்கிறார்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை