எஸ்.எல்.டி.ஜெ யை கைப்பற்ற டி.என்.டி.ஜெ சதி செய்ததா

Saturday, September 18, 2010 6:00 AM Posted by பொய்யன் டிஜே
எஸ்.எல்.டி.ஜெ யை கைப்பற்ற டி.என்.டி.ஜெ சதி செய்ததா? ஐ.என்.டி.ஜெ என்ற பொய்யன் டி.ஜெயின் புழுகள்களுக்கான தெளிவான பதில்.
RASMIN M.I.Sc (India)

தூய்மையான ஒரு ஜமாத்தை விட்டு வெளியேற்ற பட்ட ஒரு கும்பல் ஐ.என்.டி.ஜெ என்ற பெயரில் ஒரு ஜமாத்தை ஆரம்பித்து நாங்கள் தூய்மையானவர்கள்,நாங்கள் தப்பு செய்யாதவர்கள் நாங்கள் நல்லவர்கள்,வல்லவர்கள் என்றெல்லாம் மக்கள் மத்தியில் சொல்லி நல்ல பெயர் எடுக்க நினைத்தார்கள்.ஆனால் அது முடியாமல் போனது.

மக்கள் மன்றில் மீண்டும் மீண்டும் தாங்கள் கேடு கெட்டவர்கள் என்பதை அவர்களே அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் வடி கட்டிய அயோக்கியர்கள் தான் என்பதை அல்லாஹ்வும் அடிக்கடி வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டேயிருக்கிறான்.அல்ஹம்து லில்லாஹ்.
ஒரு ஜமாத்தினால் குற்றம் சாட்டப் பட்டு பகிரங்கமாக நிரூபிக்கப் பட்டு ஜமாத்தின் அடிப்படை உருப்பினர் என்ற அந்தஸ்தில் இருந்து கூட வெளியேற்றப் பட்ட பாக்கர் வகையராக்கள் சேர்ந்து ஜமாத் என்ற பெயரில் ஒன்றை உருவாக்கினார்கள்.

எந்த டி.என்.டி.ஜெ யிலிருந்து கொண்டு மற்ற இயக்கங்களை விமர்சித்தார்களோ அந்த இயக்கம் எல்லாம் டி.என்.டி.ஜெ இவர்களை வெளியேற்றியவுடன் இவர்களுக்கு சிறந்த இயக்கங்களாக மாறிவிட்டது.பாவம் இந்த இவர்களின் நிலைக்குத்தான் மருத்துவத் துறையில் கோமா என்று சொல்வார்கள்.கோமா ஒருவர் இருவருக்கு ஒரு நேரத்தில் வரும் என்று கேள்விப் பட்டிருக்கிறோம் இப்படி ஒரு கூட்டத்திற்கே ஏற்பட்டதை இப்போதுதான் நாம் பார்கிறோம்.

இவர்கள் பற்றி மேலும் தெளிவாக அறிய http://onlinepj.com/vimarsanangal/bakkar_vimarsanam/ என்ற லிங்கை பார்வையிடவும்.

இப்போது இவர்களின் புழுகளைப் பற்றி ஆராய்வோம்.

அதாவது இவர்களின் பெய்யன் டி.ஜெ சார்பாக நடத்தப் படும் இணையத்தளத்தில் ஒரு செய்தி வெளியிடப் பட்டுள்ளதை ஒரு சகோதரர் நமக்கு சுட்டிக்காட்டியிருந்தார். அதன் உண்மைத் தன்மை என்னவென்பதை வரிக்கு வரி ஆராய்வோம்.

புழுகர்களின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட தகவல் (சிகப்பு கலரில் உள்ளது.)

S.L.T.Jயை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

டிஎன்டிஜேயை இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைக்கும் முயற்சிகள் திரை மறைவில் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் (S.L.T.J) எந்த ஒரு வெளிநாட்டு இயக்கத்தின் கிளையாகவும் இயங்க போவதில்லை என்று இன்று (04.06.2010) நடைபெற்ற ஜும்ஆவில் எஸ்.எல்.டி.ஜெயின் நிர்வாகம் அறிவித்து விட்டது. அவ்வறிப்பை அதன் மேலாண்மை குழு உறுப்பினர் ஸித்தீக் முறைப்படி அறிவித்தார்.

மாஷா அல்லாஹ் இதன் மூலம் T.N.T.J (P.J) யினால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் மற்றும் அதன் தலைமையகம் இயங்கும் 3 மாடி கட்டிடத்தை கைப்பற்ற எடுத்த கபட முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

-அஹ்மது ஃபஸ்லி மற்றும் ஸராஃபுதீன், இலங்கை.

புழுகல் இலக்கம் 01

டிஎன்டிஜேயை இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைக்கும் முயற்சிகள் திரை மறைவில் மேற் கொள்ளப்பட்டது.

பதில் இலக்கம் 01

இலங்கையில் எஸ்.எல்.டி.ஜெ என்ற பெயரில் கடந்த 2005ம் ஆண்டு பி.ஜெ இலங்கை சென்ற போது ஒரு ஜமாத் ஸ்தாபிக்கப் பட்டு சில காலம் வரை கிட்டத்தட்ட 3 வருடங்கள் இந்த அமைப்பதான் இலங்கையில் டி.என்.டி.ஜெயின் அங்கீகரிக்கப் பட்ட கிளையாகவும் இயங்கியது ஆனால் அதன்பின்னர் அங்கு ஏற்பட்ட மார்க்க மற்றும் சில நிர்வாக பிரச்சினையின் காரணத்தினால் எஸ்.எல்.டி.ஜெக்கும் டி.என்.டி.ஜெக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இனிமேல் டி.என்.டி.ஜெயின் அங்கீகரிக்கப் பட்ட அமைப்பாக எஸ்.எல்.டி.ஜெ இயங்காது என்றும் கூறி கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பதாக அறிவிக்கப் பட்டு டி.என்.டி.ஜெ இலங்கைக் கிளை என்ற ஒன்று புதிதாக அங்கு அமைக்கப் பட்டதும் அனைவரும் அறிந்த பகிரங்கமான விஷயங்கள்.

ஆனால் அதன் பின்னர் இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு வருகை தந்த எஸ்.எல்.டி.ஜெயின் நிர்வாகிகள் மீண்டும் தாம் டி.என்.டி.ஜெயுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அதனை மிக விரைவில் அறிவிப்பதாகவும் கூறிச்சென்றனர்.அந்தப் பேச்சுவார்தை வீடியோவாகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஆனால் இந்தப் பொய்யர்கள் இந்தப் பேச்சுவார்தைகள் எல்லாம் திரை மறைவில் நடந்தாக கதை அளக்கிறார்கள்.

எஸ்.எஸ்.டி.ஜெ நிர்வாகிகள் டி.என்.டி.ஜெ நிர்வாகிகளை சந்திக்க வருவதற்கு அனுமதி கேட்டு டி.என்.டி.ஜெக்கு எழுதிய கடிதம் இதோ.
இவ்வளவு தெளிவாக நடந்த பேச்சுவார்த்தைகளை திரை மறைவு என்று சொல்கிறீர்களே!

திரை மறைவில் நடப்பதற்கு இது என்ன கோயம்மேட்டில் இருந்து கோவில்பட்டி வரை போன மேட்டரா பகிரங்கப் பேச்சுவார்த்தையப்பா.

புழுகல் இலக்கம் 02

(S.L.T.J) எந்த ஒரு வெளிநாட்டு இயக்கத்தின் கிளையாகவும் இயங்க போவதில்லை என்று இன்று (04.06.2010) நடைபெற்ற ஜும்ஆவில் எஸ்.எல்.டி.ஜெயின் நிர்வாகம் அறிவித்து விட்டது. அவ்வறிப்பை அதன் மேலாண்மை குழு உறுப்பினர் ஸித்தீக் முறைப்படி அறிவித்தார்.

பதில் இலக்கம் 02

(S.L.T.J) எந்தவொரு வெளிநாட்டு இயக்கத்துடன் சேர்ந்து இயங்காது என்ற ஒரு தகவலை ஜூம்மா மேடையில் வைத்து ஸித்தீக் என்பவர் அறிவித்தது உண்மைதான்.

ஆனால் அந்த அறிவிப்பை அவர் ஜமாத்தின் அனுமதியோடு அறிவிப்புச் செய்யாமல் தன்னிச்சையாகவே செய்தார்.

இவர் அந்த அறிவிப்பை செய்தவுடன் (S.L.T.J) நிர்வாகம் அவரை அழைத்து இது தொடர்பாக நாங்கள் சொல்லாத ஒரு கருத்தை நீங்கள் எப்படி முன்வைப்பீர்கள் என்று கேட்டார்கள்.அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய ஸித்தீக் அவர்கள் கோபப்பட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

அவர் செய்த அறிவிப்பு நிர்வாகம் சொன்னவைகள் அல்ல என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் என்னவென்றால் எந்த அமைப்பு டி.என்.டி.ஜெவுடன் இணையாது என்று அவர் சொன்னாரோ அந்த அமைப்பில் இன்று அவர் இல்லை.அந்த அமைப்பின் நிர்வாகத்திலோ வேறு எந்த பொருப்பிலும் கூட அவர் இன்று இல்லை.முறைப்படி அறிவித்தவர் ஏன் அறிவித்து மூன்று நாளுடன் ஜமாத்தை விட்டு வெளியேற்றப் பட்டார்?

அத்துடன் எஸ்.எல்.டி.ஜெ என்ற அமைப்பே அந்த நான்கு மாடிக்கட்டிடத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

அதற்குறிய காரணத்தையும் அவர்களே நோட்டீஸ் மூலம் மக்கள் மத்தியில் அறிவிப்பும் செய்துள்ளார்கள்.

அந்த நோட்டிஸில் குறிப்பிட்டிருந்த தகவல்களையும் இங்கே பதிவு செய்கிறோம்.

459 மல்லிகாராம ஜங்ஷன் கட்டிடத்தில் இருந்து எஸ்.எல்.டி.ஜெ என்ற அமைப்பு ஏன் வெளியேறியது?

இடத்தை விட்டு வெளியேறுவதற்கான சில முக்கிய காரணங்கள் சுருக்கமாக தருகிறோம் வீடியோ மூலமாக விரிவாக இந்தத் தகவல்கள் மக்களுக்கு தெரிவிக்கப் படும் இன்ஷர்அல்லாஹ்.

1. பொது மக்களின் பணத்தின் மூலம் கட்டப் பட்ட பள்ளியை பொதுச் சொத்தாக்காமல் குடும்பச் சொத்தாக்க சகோதரர் வஸ்னியின் குடும்பத்தார் முயன்றமை.

2. பள்ளியை ஜமாத் பெயரில் எழுதுவதின் மூலம் பொதுச் சொத்தாக்குவதாக பல முறை வாக்குறிதி தந்த சகோதரர் வஸ்னியின் குடும்பம் அந்த வாக்குறிதிக்கு மோசடி செய்தமை.

3. பொது மக்கள் அனைவருக்கும் உரிய பள்ளியை ட்ரஸ்ட் என்ற பெயரில் குறிப்பிட்ட சிலரின் பெயரில் எழுதியமை.

4. இரண்டு முறை ஜெயிலுக்கு சென்றவரை தலைமைப் பெருப்பில் இருந்து நீக்கியதின் பின்னரும் ஆயுல் கால தலைவராக இருப்பதற்கு விரும்பியமை.

5. குர்ஆன் சுன்னாவுடன் மூன்றாவது ஆதாரமாக ஸலபி கொள்கையை புகுத்த முயன்றமை.

6. இருமுறை சிறை சென்றததை ஜமாத் சுட்டிக்காட்டியபோது யுசுப் நபி சிறை சென்ற குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டி தான் செய்த செயலுடன் யுசுப் நபியை சமப்படுத்தி தலைவராக இருக்க முயற்சித்தமை.

7. தனக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உரிமையும் உள்ளதாக கூறி மூன்று வருடங்கள் செயற்பட இருந்த நி;ர்வாகக்குழுவை தன்னிச்சையாக களைத்து நிர்வாகிகளை அராஜக முறையில் வெளியேற்ற முயுற்சித்தமை.

8. 459 இலக்க பள்ளியில் விரசமான விபசார வார்த்தைகளை பேசிய மௌலவியை மீண்டும் பள்ளியினுல் கொண்டுவர முயற்சித்தமை.

9. இப்படிப் பட்ட மார்க்க விரோத செயல்களை சுட்டிக்காட்டிய நிர்வாகிகளை பற்றி மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பறப்ப முயன்றமை.

இன்ஷர் அல்லாஹ் மிக விரைவில் எஸ்.எல்.டி.ஜெயின் புதிய தலைமைகம்; அறிவிக்கப் படும்.

இதுதான் எஸ்.எல்.டி.ஜெ நிர்வாகம் வெளியிட்ட விபரம்.

புழுகல் இலக்கம் 03

இதன் மூலம் TNTJ (PJ) யினால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் மற்றும் அதன் தலைமையகம் இயங்கும் 04 மாடி கட்டிடத்தை கைப்பற்ற எடுத்த கபட முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது.

பதில் இலக்கம் 03

டி.என்.டி.ஜெ 04 மாடிக் கட்டிடத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்ததாக இவர்களின் அடுத்த புழுகல் அமைந்துள்ளது.

அதாவது எஸ்.எல்.டி.ஜெ என்ற அமைப்பு இயங்கிய அந்த நான்கு மாடிக்கட்டிடம் எஸ்.எல்.டி.ஜெயின் பெயரைப் பயண்படுத்தி மக்களிடம் வசூலித்த பணத்தின் மூலம் கட்டப் பட்டது.அந்தக் கட்டிடத்தை டி.என்.டி.ஜெயின் பெயரில் எழுதித் தரும்படி கூறி யாரும் அதனை கைப்பற்ற முனையவில்லை.

மாறாக அந்த இடம் எந்த அமைப்பின் பெயரை பயன்படுத்தி கட்டப் பட்டதோ அந்த அமைப்பிற்கு எழுதித் தருமாறுதான் கேட்கப்பட்டது.

ஆனால் இதை அறியாத இந்த ஜன்மங்கள் அந்த இடத்தை கைப்பற்ற டி.என்.டி.ஜெ முயன்றதாக கூறுகிறார்கள்.

எஸ்.எல்.டி.ஜெயின் நிர்வாகிகள் டி.என்.டி.ஜெ நிர்வாகத்தை வந்து சந்தித்த நேரத்திலும் சகோதரர் பி.ஜெ அவர்கள் அந்தக் கட்டிடம் எஸ்.எல்.டி.ஜெ மூலம் பொது மக்களிடம் வசூலிக்கப் பட்ட பணத்தைக் கொண்டு கட்டியெலுப்பப் பட்டுள்ளது.ஆனால் இதுவரை அது ஒரு தனி மனிதனின் (சகோதரர் நஸ்ரி என்பவரின் பெயரில் உள்ளது இவர் சகோதரர் வஸ்னி நிஸாரின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்)பெயரில் தான் உள்ளது.பொதுச் சொத்து பொதுமக்களுக்காக பாடுபடும் ஒரு அமைப்பின் பெயரில்தான் இருக்க வேண்டுமே ஒழிய தனி மனிதனின் பெயரில் இருக்கக் கூடாது.அதனால் அந்த இடத்தை எந்த ஜமாத்தின் பெயரைச் சொல்லி கட்டினீர்களோ அந்த எஸ்.எல்.டி.ஜெயின் பெயரில் எழுதி வாங்குங்கள் என்று கூறினார்.

பொது மக்களின் பணத்தின் மூலம் கட்டப்பட்ட கட்டிடதத்தை பாதுகாக்க நினைப்பதும், பொது மக்கள் பணத்தை திருட நினைப்பவனிடமிருந்து அதனை காப்பாற்ற நினைப்பதும் உங்கள் பொய்யன் டி.ஜெ மொழியில் கைப்பற்ற எடுக்கப் படும் கபட முயற்சி அப்படித்தானே.

சரிதான் உங்கள் ஜமாத் தலைவர் செய்த பண மோசடிகளை டி.என்.டி.ஜெ நேருக்கு நேர் வைத்து நிரூபித்;ததன் பின்பும் நாங்களும்,எங்கள் தலைவரும் இன்று பிறந்த பாலகர்கள் என்று கூவிய உங்களின் பாசை அப்படித்தானே இருக்கும்.

பொது மக்களின் பணத்தை அபகரிப்பதும்,அபகரிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் தான் உங்கள் பிறவி குணமாயிற்றே அதை நாம் எப்படி திருத்த முடியும்?

தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான் (13:11)

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

0 Response to "எஸ்.எல்.டி.ஜெ யை கைப்பற்ற டி.என்.டி.ஜெ சதி செய்ததா"

Post a Comment

அதிகம் பார்த்தது..