ராயபுரத்தாரே பதில் எங்கே?

Wednesday, April 21, 2010 4:14 AM Posted by பொய்யன் டிஜே

ராயபுரத்தாரே பதில் எங்கே?

பாக்கர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்த வில்லை தீண்டாமை சுவர் இடிக்கத் தான் போனார் என்று பதில் கூறும் ராயபுரம் இக்பால் சாப்!

அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளில் மற்ற எதற்கும் பதில் இல்லையே?

 • பள்ளிவாசல் பணத்தை பாக்கர் மோசடி செய்தார் என்று ஆதாரத்துடன் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?
 • வின் டிவி க்கு பங்கு சேர்த்து பங்குதாரர்களின் பல கோடி ரூபாயை மேசடி செய்தது பாக்கர் வாயாலேயே நிரூபணமானதே அதற்கு என்ன பரிகாரம்?
 • வீரன் அழகு முத்துக் கோன் சிலை திறக்க அல்லது உமது வார்த்தைப்படி திறப்பது போல் போஸ் கொடுத்து சிலைக்கு மரியாதை செய்யலாமா? இதற்கு என்ன பதில்?
 • கிருஷ்னனின் அருளால் தான் மக்கள் வந்தனர் என்று பாக்கரை மேடையில் வைத்து பேசப்பட்டதை ரசித்தாரே அதற்கு பதில் என்ன?
 • மேடையில் கிருஷ்னர் படம் வைத்து அதன் முன்னால் அமர்ந்து பாக்கர் காட்சி தந்தாரே அது சரியா?
 • எங்களுக்கு இட ஒதுக்கீடு தரா விட்டால் எல்லொருடைய இட ஒதுக்கீட்டையும் பறித்து விடு என்று மேடையில் முழங்கப்பட்டதே பாக்கர் அதக் கேட்டுக் கொண்டு இருந்தாரே அதற்கு என்ன பதில்?
 • பொம்பளை மேட்டரில் பல முறை மாட்டி நீக்கப்பட்டவர் எந்தக் கொள்கைக்காகவும் இல்லாமல் தன்னை காத்துக் கொள்ள இயக்கம் நடத்துகிறார் என்ற குற்றச் சாட்டுக்கு என்ன பதில்? உமது கொள்கை தான் என்ன?
 • அன்னியப் பெண்னுடன் மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்று பத்வா கொடுத்தாரே அதற்கு என்ன பதில்?
 • இக்பால், ஜமீல், ஜமால். செஙிஸ்கான், சித்தீக், முனீர், ஆகியோர் தனியாக தங்கள் குடும்பப் பெண்களை மூன்று நாட்கள் பாக்கருடன் அனுப்ப நேர்ந்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?
 • அல்லது தலைவர்களின் வீட்டுப் பெண்களுக்கு இஅதில் விதி விலக்கு உள்ளதா?
 • பொம்பளை மேட்டரிலும் பண மோசடியிலும் நடவடிக்கைக்கு உள்ளானவர்களாகத் தேடி தேடி பொறுப்பு கொடுக்கிறீர்களே அது எப்படி?
 • ஹாமிம் நேருக்கு நேர் விவாதிக்க அழைத்தாரே அதற்கு என்ன பதில்?
 • ஆடல் பாடல் சினிமா கும்பாபிஷேகம், போன்ற மார்க்க முரணான கரியங்களை ஒளி பரப்பும் வின் டிவியில் பாக்கர் டைரக்டராக இருப்பது எப்படி? இதற்கு பத்வா கொடுத்து விட்டீர்களா?
 • பொய் புரட்டு மோசடி, பித்தலாட்டம், பொய்ச் சத்தியம் என அனைத்து தீமைகளின் மொத்த உருவமாக பாக்கர் இருக்கிறார் என்பதை அல்தாபி தக்க ஆதாரங்களுடன் இரண்டு சிடிகள் வெளியிட்டாரே அதில் கூறப்பட்ட எண்ணற்ற குற்றச் சாட்டுகளுக்கு இன்று வரை பதிலைக் காணோமே

இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் நீங்கள் தலை குணிவது உங்களுக்கே தெரியவில்லையா?

ஒரு கேடு கெட்டவன் தரும் சல்லிக் காசுக்காக அவனது அனைத்து ஈனத்தனமான செயல்களுக்காகவும் உங்களுக்கு தலை குணிவு ஏற்படுவதை நீங்கள் உணரவில்லையா?

அல்லாஹ் உணவளிப்பவன். இதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. அற்ப சம்பளத்துக்காக பாக்கரின் மானம் கெட்ட செயலுக்கு முட்டுக் கொடுப்பதற்கு உங்களுக்கு வெட்கம் வரவில்லையா?

எவ்வளவு இழிவும் கேவலமும் ஏற்பட்டாலும் பாக்கர் தான் மானமின்றி கற்பொழுக்கம் பற்றியும் நாணயம் பற்றியும் காட்டுக் கத்தல் கத்தி பேச முடியும் என்றால் உங்களுக்கும் அது தொற்றி விட்டதா?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால் பாக்கருடன் இருங்கள். பதில் இல்லாத நிலையிலும் உங்களால் பாக்கரை தலைவராக ஏற்க முடியும் என்றால் உங்களுக்கும் மானம் இல்லை என்று தான் பொருள்.

தீண்டாமைச் சுவரை இடிக்கத் தான் போனார் என்பது ஓரளவு தான் உண்மை முழு உண்மை என்ன? கோவில் வழிபாடுத்தான் பிரச்சனை. அதை ஒட்டித் தான் சுவர் எழுப்பப்பட்ட்டது. அதை இடித்து கருப்பசாமியை வழிபடுவதைத் தடுக்கவே சுவர் எழுப்பப்பட்டது.

உத்தப்புரம் தலித் மக்களின் குலதெய்வம் கருப்பசாமி. பிள்ளைமாரின் குல தெய்வம் முத்தாலம்மன். தலித்துக்கள் தங்களின் குல தெய்வ திருவிழாவை கொண்டாடும் போது அவர்களது முன்னோர்கள் நட்டு வைத்த அரசமரத்தை மூன்று முறை சுற்றி வந்து கருப்பசாமியைக் கொண்டாடுவது குல மரபு. அரச மரம் இருப்பதோ பிள்ளைமாரின் குல தெய்வக் கோவிலான முத்தாலம்மன் கோவிலின் முன்னால் பத்தடி தூரத்தில். தலித் மக்கள் கருப்பசாமியைக் கும்பிட அரச மரத்தைச் சுற்றிய போதெல்லாம் பிள்ளைமாருக்கு சாமி வந்திருக்கிறது. தலித்துக்கள் அரச மரத்தைச் சுற்றுவதால் முத்தாலம்மனுக்கும் தீட்டு நமக்கும் தீட்டு என்று கொதித்துப் போன பிள்ளைமார் தலித் மக்களை எங்கள் பகுதிக்குள் வரக் கூடாது என தடை விதிக்க தீண்டாமையின் வடிவமாக வெளிப்பட்ட பிள்ளைமாரின் உத்தரவை எதிர்த்து தலித் மக்கள் கிளம்ப இரு பக்கமும் மோதல்கள். இந்த மோதல் 1989 ஆம் ஆண்டு உக்கிரமடைய அரசு நிர்வாகம் - போலீஸ் பிள்ளைமாருக்கு ஆதரவாக இருக்க பெரும்பாலான உத்தப்புரம் தலித் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

பெரும்பாலான தலித்துக்கள் சிறைக்குள் போன ஒரு சூழலில் சுற்றியிருந்த மற்ற ஆதிக்க சாதியினரின் துணையோடு போடப்பட்ட ஒப்பந்தம்தான் மகத்தான உத்தப்புரம் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 23 பேர் கையொப்பம் இட்டுள்ளனர். இருபத்தி மூன்று பேரில் ஒரே ஒருவர்தான் தலித்துக்களின் சார்பில் கையொப்பம் இட்டவர். மீதி 22 பேரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். தலித் மக்களுக்கு இன்று வரை அடிமை சாசனமாகவும் ஆதிக்க சாதிகளுக்கு தங்களின் சாதித் திமிருக்கு சர்ட்டிபிக்கேட்டாகவும் இன்று வரை இருக்கும் இந்த ஒப்பந்தம் சாதி இந்துக்கள், மதுரை மாவட்ட நிர்வாகம், போலீஸ் துணையோடு ஒரு தரப்பாகக் கூட தலித்துக்கள் இல்லாமல் அவர்களின் விருப்பத்தை மீறி போடப்பட்ட ஒப்பந்தம்.

எனவே தீண்டாமைச் சுவர் இடிக்கும் போராட்டம் என்பதன் உணமியான் பொருள் அங்குள்ள அரசமரத்தை வழிபடுவது தான். இதற்குத் தான் பாகக்ர் கிருஷ்னசமியுடன் பஙெடுத்தார்.


இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அணி வகுத்து வரும்.

0 Response to "ராயபுரத்தாரே பதில் எங்கே?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை