இந்தியா டுடே பேட்டியும் தருதலைகளின் ஏக்கமும். அனுதாபிக்கும் உருப்பினருக்கும் வித்தியாசம் தெரியாத பொய்யர்கள்.

Sunday, November 7, 2010 5:21 AM Posted by பொய்யன் டிஜே
இந்த வார இந்தியா டுடே இதழில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உயர்நிலைக் குழு உருப்பினர் சகோதரர் பி.ஜெ அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது அனைவரும் அறிந்ததே !

இந்தியா டுடே பி.ஜெ யின் பேட்டியை பார்க்க இங்கு க்லிக் செய்யவும்

குறிப்பிட்ட அந்தப் பேட்டியில் திருவிடைச் சேரி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சகோதரர் பி.ஜெயிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை சில சில்லரைகள் விமர்சித்துள்ளார்கள்.

முதலில் இந்தியா டுடே யின் கேள்வியையும் அதற்குறிய சகோதரர் பி.ஜெயின் பதிலையும் பார்த்துவிட்டு சில்லரைகளின் விமர்சனத்திற்கு செல்வோம்.

இந்தியா டுடே :

திருவிடைச் சேரியில் தவ்ஹீத் உருப்பினர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டார்கள்.இது தவ்ஹீதை சகிப்புத் தன்மையற்ற வன்முறை இயக்கம் என முத்திரை குத்தக் காரணமாகிறதே?

பி.ஜெ யின் பதில் :

தவ்ஹீத் வன்முறையையும் தீவிரவாதத்தையும் ஒரு போதும் ஆதரித்ததில்லை.எங்கள் அமைப்பு அனுதாபிக்கும் உள்ளுர் ஜமாத்தார்களுக்கும் நடந்த மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.எங்கள் இயக்க அனுதாபி கடுமையாக தாக்கப்பட்டதால் அவரது மைத்துனர் சில ரவ்டிகளுடன் வந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.அந்த நபருக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இதுதான் சகோதரர் பி.ஜெ அவர்கள் திருவிடைச் சேரி விஷயமாக இந்தியா டுடேக்கு கொடுத்த பதில்.

அவதூரு பரப்புவதற்காகவே உருவாக்கப் பட்ட ஒரு சில்லரைக் கூட்டம் இதனையும் ஒரு பெரிய பில்டப் கொடுத்து பரப்புகிறது.

அதாவது இதுவரை காலமும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றார்கள்.ஆனால் இந்தியா டுடே பேட்டியில் குறிப்பிட்ட நபர் தவ்ஹீத் ஜமாத்தின் அனுதாபி என்று பி.ஜெ பேட்டி கொடுத்துள்ளார்.

ஆக திருவிடைச் சேரி சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் தொடர்பிருக்கிறது என்பதற்கு பி.ஜெ சொன்ன அனுதாபி என்ற வார்த்தை தான் ஆதாரமாம்.

கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் ஜமாத் நடத்த வந்தால் இதுதான் நிலைமை.

அனுதாபி என்பதற்கும் உருப்பினர் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.

திருவிடைச் சேரி சம்பவம் தொடர்பா ஜமாத் அன்றே வெளியிட்ட வீடியா பதிலைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்

தவ்ஹீத் ஜமாத் அன்றும் சொன்னது இன்றும் சொல்கிறது கொலை செய்த நபருக்கும் ஜமாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.அவர் ஜமாத்தின் உருப்பினரோ அல்லது ஜமாத்தின் செயல்பாடுகளில் பங்கெடுப்பவரோ இல்லை.

அவர் யாருக்காக துப்பாக்கி எடுத்துக் கொண்டு வந்தாரோ அந்த குத்புதீன் என்பவரும் ஜமாத்தின் உருப்பினரோ ஜமாத்தின் செயல்பாடுகளில் பங்கெடுப்பவரோ அல்ல மாறாக குத்புதீன் என்பவர் ஜமாத்தின் அனுதாபிகளில் ஒருவர்.

ஜமாத்தின் உருப்பினர் என்றால் ஜமாத் அவருக்கு உருப்பினர் அட்டை கொடுத்திருக்க வேண்டும்.அல்லது அவர் ஜமாத்தின் செயல்பாடுகளில் பங்கெடுப்பவர் என்பதற்கான ஆதாரம் வேண்டும்.

இவை ஏதுமற்ற ஆனால் ஜமாத்தின் மீது அனுதாபியாக இருக்கக் கூடியவர்தான் இந்த குத்புதீன்.

தமிழ் பேசும் மக்களில் கோடிக்கணக்கான மக்கள் இந்த ஜமாத்தின் அனுதாபிகளாக உள்ளனர்.

உள்நாட்டில் உள்ளார்கள் வெளிநாடுகளில் உள்ளார்கள்.

இப்படி அனுதாபிகளாக இந்த ஜமாத் சரியாக செயல்படுகிறது என்று நம்மை ஆதரிப்பதால் அவர்கள் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஜமாத் பொருப்பாகாது.

ஜமாத்தின் உருப்பினராக அல்லது பொருப்பாளராக இருப்பவராக இருந்தால் அவருடைய செயல்பாடு தொடர்பாக ஜமாத்திடம் கேள்வியை முன்வைத்தால் அது ஏற்புடைய அறிவுப்பூர்வமான பதிலாக இருக்கும்.

ஆக இப்போதும் சொல்கிறோம் குத்புதீன் என்பவர் ஜமாத்தின் அனுதாபிதானே தவிர ஜமாத்தின் உருப்பினரோ ஜமாத்தின் செயல்பாடுகளில் பங்கெடுப்பவரோ அல்ல அவர் அன்றைய தினம் தொழுகைக்காக நமது பள்ளிக்கு வந்த நேரம் அவரை அந்த ஊர் ஜமாத்தார் தாக்கியதற்காக அவருடைய மைத்துனர் ஹாஜி முகம்மது வந்து இரண்டு பேரை சுட்டுக் கொண்டார்.

சகோதரர் பி.ஜெயின் குறிப்பிட்ட பேட்டியிலேயே அதனை தெளிவாக தெரிவித்துள்ளார்.

எங்கள் அமைப்பு அனுதாபிக்கும் உள்ளுர் ஜமாத்தார்களுக்கும் நடந்த மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.எங்கள் இயக்க அனுதாபி கடுமையாக தாக்கப்பட்டதால் அவரது மைத்துனர் சில ரவ்டிகளுடன் வந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.அந்த நபருக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஒரு சாதாரண கருத்தைக் கூட விளங்க முடியாத புன்னாக்குகள் தான் இவர்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இந்தியா டுடே யின் பேட்டி இவர்களின் காதில் சங்கூதியுள்ளதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

எப்படியாவது தவ்ஹீத் ஜமாத் மீது ஒரு கலங்கத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் இறைவனின் உதவி தவ்ஹீத் ஜமாத்திற்கு என்றும் உண்டு எவரும் இந்த ஜமாத்தை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.

0 Response to "இந்தியா டுடே பேட்டியும் தருதலைகளின் ஏக்கமும். அனுதாபிக்கும் உருப்பினருக்கும் வித்தியாசம் தெரியாத பொய்யர்கள்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை