தீயவர்களை வளர்த்து விட்டதே தவ்ஹீத் ஜமாஅத் தான்

Friday, May 21, 2010 4:03 AM Posted by பொய்யன் டிஜே

தீயவர்களை வளர்த்து விட்டதே தவ்ஹீத் ஜமாஅத் தான்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாக்கர், அபூ ஆஸியா இன்னும் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீக்கப்பட்டு பொய்யன் டீஜேயில் பொறுப்பு அளிக்கப்பட்டவர்கள் குறித்து நாம் விமர்சன்ம் செய்யும் போது வழக்கமாக ஒரு ரெடிமேட் பதிலை பொய்யன் டீஜேவினர் சொல்லி வருகின்றனர்.

அதாவது இது போன்றவர்களை வளர்த்து விட்டவர்களே நீங்கள் தான். உங்கள் ஜமாஅத்தில் மட்டும் தான் இது போன்றவர்கள் அதிகமாக உள்ளனர் என்பது பலபேர் நீக்கப்படுவதில் இருந்து தெரிகிறது எனவும் ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்த விமர்சனத்தின் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையான கடவுள் கொள்கையிலேயே தவறு செய்கிறார்கள்.

வெளிப்படையாக தெரியும்வரை இன்னொரு மனிதனின் அந்தரங்கத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பது ஈமானின் ஒரு பகுதியாகும். நாங்கள் மனிதர்களாக இருப்பதால் எங்களுடன் இருந்தவர்கள் இது போன்ற பாலியல் சேட்டைகளிலும் பண மோசடிகளிலும் ஈடுபடுவார்கள் என்பது எங்களுக்கு முன்னரே தெரியவில்லை. சஹாபாக்கள் காலத்திலேயே முனாபிக்குகள் முஸ்லிம் வேடம் போட்டு சஹாபாக்களால் அதைக் கண்டு பிடிக்க முடியாத நிலை இருந்தது.

எனவே ஈமானைப் பாதிக்கும் இது போன்ற கேள்வியைக் கேட்டு மறுமையைப் பாழாக்கிக் கொள்ளவேண்டாம் என்பதே இதற்கான பதில்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் மட்டும் இது போல் அதிகமானவர்கள் மாட்டுவது ஏன்?

இது கேட்கத் தகுந்த கேள்வி தான்.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்டால் அதற்காக உடனடியாக நீக்கப்படுவார்கள் என்று சட்டவிதியை இந்த இயக்கம் மட்டுமே வகுத்து வைத்துள்ளது.

ஆதாரம் வீடியோ

(வீடியோ சேர்க்கப்படும் இன்ஷா அல்லாஹ்)


மற்ற எந்த இயக்கத்திலும் இது போல் சட்டவிதி எதுவும் வகுக்கப் பட்டதாக நமக்குத் தெரியவில்லை. எல்லா இயக்கங்களிலும் பாக்கர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்விதி இல்லாததால் அவர்களைப் பற்றி வெளிப்படுத்தப் படுவதில்லை.

இது முதலாவது காரணம்.

தமிழகத்தில் உள்ள இயக்கங்களில் தவ்ஹீத் ஜமாஅத் தான் அதிக உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம். தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாதவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் ஒரு இயக்கத்தினர் அல்ல. ஆயிரம் இயக்கங்களில் அவர்கள் உள்ளனர். அல்லது ஒரு இயக்கத்தையும் சேராதவர்களாக உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் மட்டும் தான் இருப்பார்கள். எனவே தான் இது தான் மானிலத்டில் உள்ள இயக்கங்களில் மிக அதிக மக்களைக் கொண்ட ஒரே இயக்கமாக இருக்கிறது.

அதிக மக்கள் கொண்ட இயக்கத்தில் அந்த சதவிகிதத்துக்கு ஏற்ப பாக்கர்களும் இருப்பார்க்ள். ஆயிரம் பேர் உள்ள கூட்டத்தில் ஒரு பாக்கர் இருந்தால் ஒரு லட்சம் பேர் உள்ள இயக்கத்தில் நூறு பாக்கர்கள் இருக்க வேண்டும். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினர், மற்றும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மற்ற இயக்கங்களில் உள்ளவர்களை விட பாக்கர்கள் குறைந்த சதவிகிதத்தில் தான் உள்ளனர்.

தடவு தாட்சான்யமின்றி நடவடிக்கை எடுப்பதால் மக்களுக்கு இது தெரிந்து விடுகிறது.

0 Response to "தீயவர்களை வளர்த்து விட்டதே தவ்ஹீத் ஜமாஅத் தான்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை