பாக்கர் கொடுக்கும் ”அமர்வு” அல்வா!

Wednesday, April 21, 2010 4:25 AM Posted by பொய்யன் டிஜே

சிலைதிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலை திறப்பின் போது ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு,

முஸ்லிம் சமுதாயம் கொந்தளித்துப்போய் காரித்துப்ப ஆரம்பித்தவுடன் கையில் உள்ளது சிலை திறக்கும் ரிமோட் அல்லசிறுவர்கள் ஓடிப்பிடித்து விளையாட வைத்திருக்கும் வாக்கி டாக்கி என்று புருடா விட்டு பார்த்தார்கள். மக்கள் நம்பவில்லை. கேட்கிறவன் கேனப்பயலாக இருந்தால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுகின்றது என்று சொன்னாலும் சொல்வீர்கள் போல என்ற ரீதியில் மக்கள் கேள்விகேட்க ஆரம்பித்தவுடன் தங்களது பக்திமுத்திய பொய்யன் பக்தர்களை தக்க வைக்க வேண்டும் என்ற நப்பாசையில் அவர்களுக்கு பாக்கர் தரப்பிலிருந்து அடுத்துக் கிண்டித்தந்த அல்வா தான்

அது வேறு இதுவேறுஎன்று சொல்லும் இரண்டாம் அமர்வு நாடக அலவா!

சிலை திறந்தது முதல் அமர்வாம்!

பொய்யர்கள் கலந்து கொண்டது இரண்டாம் அமர்வாம்!

மார்க்கம் அறியாத மரமண்டைகள் தான் நீங்கள் சொல்வது உண்மை என்று நம்பிவிட்டுப்போவார்கள்! மார்க்கம் அறிந்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொய்யன் தரப்பு பதில் சொல்லக்கடமைப்பட்டுள்ளது.

கேள்வி:

1.ஒரு விருந்து வைக்கப்படுகின்றது. அந்த விருந்தில் முதல் அமர்வில் உயர்தர மது வகைகளும், மாது வகைகளும் பரிமாரப்படுகின்றன.

இரண்டாவது அமர்வில் ஹலாலான பிரியாணி பரிமாரப்படுகின்றது. மது மற்றும் மாது பார்ட்டி மாலை 5.30மணிக்கு, பிரியாணி பார்ட்டி 6.30மணிக்கு நடைபெறுகின்றது.

விருந்துக்கு அழைக்கக்கூடிய அழைப்பே மது மற்றும் மாது மற்றும் பிரியாணி பரிமாரக்கூடிய விருந்து என்று அழைத்துள்ளார்கள். இந்தவிருந்தில் போய் ஒரு கொள்கைவாதி கல்ந்துகொள்வானா?

2.நான் செல்லும் போது பலான சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன. நான் சென்றுவாக்கி.. டாக்கி.. பிடித்து போஸ்கொடுத்தது போல.. சாராய பாட்டில் பிடித்துத்தான் போஸ் கொடுத்தேன் என்று ஒருவன் உளறினால் அது சரியா?

3.விருந்து என்று அழைக்கும் போது அது அன்று நடைபெறும் அனைத்தையும் உள்ளடக்குமா? அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லையா?

4.வரதட்சணை வாங்கும் திருமணத்திற்கு ஒருவர் செல்கின்றார், ஏனய்யா! திருமணத்திற்கு சென்றீர் என்று ஒரு கொள்கைப்பிடிப்புள்ள கொள்கைவாதி கேட்கின்றான். அதற்கு அந்த கொள்ளைவியாதியோ, “நான் செல்லும் திருமண நிகழ்ச்சியின் போது என் கண்ணுக்கு முன்னால் வரதட்சணை எதுவும் வாங்கப்படவில்லை. நான் செல்லும் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் முதல் அமர்விலேயே வரதட்சணையை வாங்கி விட்டார்கள். நான் இரண்டாம் அமர்வுக்கு பிரியாணி தின்னத்தான் போகின்றேன்என்று, பாக்கர் சிலை திறக்கப்போனது போல அமர்வு அல்வா கொடுத்து கொள்கைப்பிடிப்பை வெளிப்படுத்தினால் ஒப்புக்கொள்ளலாமா?

5.இனிமேல், இந்த பொய்யன் டீஜே வின் கொள்கை குன்றுகள் எல்லாம் இப்படித்தான் முடிவெடுக்கப்போகிறார்கள?

6.அல்லாஹ்வின் வேத வசனங்கள் கேலிக்குரியதாக ஆக்கப்படும் சபைகளில் நீர் அமராதீர்! அவ்வாறு அமர்வீரேயானால் நீரும் அவர்களைப்போன்றுதான் என்று அல்லாஹ் கூறுகின்றானே! சிலை திறப்பு என்ற பெயரில் மாநாடு நடத்தும் இடத்தில் உமக்கென்னய்யா வேலை? என்று மூளையுள்ளவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் என்ன?

7.வரதட்சணை திருமணத்தில் போய் பிரியாணி தின்பவன் எல்லாருமே இனிமேல் பாக்கர் சொன்ன சால்ஜாப்பு பதிலை தாராளமாக சொல்லிக்கொள்ளலாம்! வரதட்சணை வாங்கிய முதல் அமர்வுக்கு நாங்கள் செல்லவில்லை. பிரியாணி தின்னும் இரண்டாம் அமர்வுக்கு பிரியாணி தின்னத்தான் சென்றேன் என்று அமர்வு அல்வா கொடுத்தால் என்ன செய்வது?

8.நான் பிரியாணி திண்டதை பார்க்காதே! பிரியாணி திண்டுகொண்டே என்ன சொன்னேன் என்பதைப்பார்! வரதட்சணை திருமணத்தில் கலந்து கொண்டு வரதட்சணை வாங்கக்கூடாது என்று மாப்பிள்ளையிடமே சொல்லிவிட்டேனே! என்று இனிமேல் உங்கள் கொள்கை குன்றுகள் வீரவசனம் பேசினால் என்ன பதில் சொல்ல?

ஒருபொய்யை மறைக்க ஒன்போது(9) பொய்யா?

-கலிலூர் ரஹ்மான் கேள்வி

0 Response to "பாக்கர் கொடுக்கும் ”அமர்வு” அல்வா!"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை