இணையதளங்கள் ஒப்பீடு அலசல் பற்றிய விமர்சனம்- வயிற்றெரி்ச்சலில் வந்தவை!

Tuesday, October 12, 2010 5:56 AM Posted by பொய்யன் டிஜே

இணையதளங்கள் ஒப்பீடு அலசல் பற்றிய விமர்சனம்- வயிற்றெரி்ச்சலில் வந்தவை!

Wednesday, August 25, 2010 5:04 AM Posted by பொய்யன் டிஜே

இறைவனது கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் பெற்றுள்ள அதீத வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள இயலாத சிலர் தனது வயிற்றெரிச்சலை வாந்தி எடுத்துள்ளனர்.

எதற்காக இந்த ஒப்பீடு வெளியிடப்பட்டது என்பதை சிறதும் யோசிக்காமல் கேலிக் கூத்தான கேள்விகளை எழுப்புகின்றனர்.

பெருமையக்கிறார் தம்பட்டம் அடிக்கிறார் இழிவு படுத்துகிறார்

இவ்வாறு எழுதியதின் மூலம் பெருமையடிக்கின்றார் தம்பட்டம் அடிக்கின்றார் பிறரை இழிவுபடுத்துகின்றார் என்றெல்லாம் கூறி தங்களின் வயிற்றெரிச்சலை வாரி இறைத்துள்ளனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை செய்தியை தான் நாம் இணையதளத்தில் முதலில் வெளியிட்டோம்.

இதை படித்தது விட்டு 'உங்கள் இணையதளத்தை குறைவான நபர்கள் தான் பார்கின்றார்களா ஏனெனில் காசிமியின் இணையதளத்தை தினமும் 600 விசிட்ஸ் தான் வருகின்றது என்று சிலரும்' காசிமியின் இணையதளத்தின் தர வரிசையும் உங்களது இணையளத்தின் தர வரிசையும் ஒன்றா உங்களது இணையதளத்தை பார்க்கின்ற அளவிற்கு அவரது இணையளத்தையும் பார்கின்றார்களா என்ற கேள்விகளை சிலர் எழுப்பினர்


இதற்கு பின்னர் தான் இந்த கேள்விகளுக்கு பதிலாகவே இந்த ஒப்பீட்டை எழுதப்பட்டு 'அவ்வாறு அல்ல உண்மை நிலவரம் இது தான்' என்பதை சுயமாக சொல்லாமல் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டது.

இது அந்த ஒப்பீட்டின் ஆரம்பத்திலேயே கூறப்பட்டுள்ளது

ஆதாரங்களுடன் ஒரு கேள்விக்கு பதில் சொல்வது எப்படி பெருமையடிப்பதாக தம்மட்டம் அடிப்பதாக இழிவுபடுத்துவதாக அமையும்.

ஊதாரமணாக 'அப்துர் ரஹ்மான என்பவரை பார்த்து உங்க பையனும் அப்துல்லாஹ்வோட பைனும் ஸ்கூல ஒரே ரேங்காமே ஊர்ல பேசுக்குறாங்க அப்படின்னு ஒருத்த கேட்டா அதுக்கு அப்துர் ரஹ்மான் இல்லை என் மகன் தான் முதல் ரேங்க் இந்தா பாருங்க ப்ராக்ரஸ் ரீபோர்ட்' அப்படின்னு எடுத்து காட்னா இத யாராச்சும் பெருமையடிப்பது என்ற என்னுவார்களா அல்லது இழிவுபடுத்துவது என்று நினைப்பார்களா?

தன் மகனைப் பற்றி தவறான தகவல் பரவுகின்றது அதை பற்றி தம்மிடம் கேள்வி கேட்கப்படுகின்றது அதற்கு தந்தை என்ற அடிப்படையில் அவர் விளக்கம் அளிகின்றார் என்று தான் அனைவரும் விளங்குவார்கள்.

மாறாக இவர் பெருமையடிக்கின்றார் தம்பட்டம் அடிக்கின்றார் இழிவு படுத்துகின்றார் என்று யாரேனும் கூறினால் வயிற்றெரிச்சலில் உழருகிறார் என்று தான் அறிவுள்ள அனைவரும் கூறுவர்

அது போலத் தான் ஒப்பீடு தொடர்பான கேள்விக்கு பதிலாக எழுதிய ஒப்பீட்டை விமர்சனம் செய்பவர்களின் விமர்சனமும் அமைந்துள்ளது.

அதில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்களில் தவறு இருந்தால் அதை சுட்டிகாட்டி விமர்சனம் செய்வதில் அர்த்தமுள்ளது. அவ்வாறு ஏதும் இல்லை என்பதால் தான் இவ்வாரேல்லாம் உழர ஆரம்பித்துள்ளனர்.


இஸ்லாயமி செய்திகள் வருவதற்கு தடையாக உள்ளீர்கள்

தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்த மாறியான செய்தி பத்திரிக்கைகளில் வருவதற்கு தடையாக உள்ளனர் என்ற கருத்திலும் சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

முற்றிலும் இது பொய்யாகும் இதுவும் வயிற்றெரிச்சலில் வந்தவையே..

இது போன்ற செய்தி வெளிடப்போவதாக கூறி நிருபர் தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொள்ளும் போது அவருக்கு நேரம் ஒதுக்கி அவர் கேட்ட எல்லா தகவல்களும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

செய்தி வெளியான பிறகு அதை இரு இணையதளங்களில் வெளியிடப்பட்டது.

உண்மைக்கு மாற்றமாக இது போன்று வயிற்றெரிச்சலில் கேட்கப்படும் கேள்விகள் தான் இது போன்ற செய்திகள் வருவற்கு தடையாக அமையுமே தவிர தவ்ஹீத் ஜமாஅத் அல்ல.

மேலும் தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 4 or 5 ஆண்டுகளாக ரமளான் உரையை நேரடி ஒளிபரப்பு செய்வதால் தான் இது போன்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றது என்பதை இவர்கள் மறந்து விட்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இன்னும் சில வயிற்றெரிச்சல்கள்

ஆன்லைன் பிஜே கட்டுரையில்

இரண்டு இணைய தளங்களாக இல்லாமல் ஒரே இணைய தளமாக நம்முடைய இணைய தளம்
இருந்திருந்தால் நம்முடைய இணைய இணைய தளம் உலக இணைய தளங்களில்
எழுபத்தி ஐந்தாயிரமாவது இடத்தில் இருக்கும்.

விமர்சனம் 1

இரு தளங்களிலும் வரும் ஒவ்வொரு வருகையாளரும் வெவ்வேறானவர்களாக இருந்தால் மட்டுமே, இப்போதைய அலெக்ஸா ரேட்டிங்கை விட அதிகமாகக் கிடைப்பதற்குச் சாத்தியம். ஆனால்...! ஹ்ம், மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை எப்போது தான் உணரப்போகிறார்களோ!


மக்கள் நன்றாகத்தான் சிந்திக்கின்றார்கள் பாவம் இவரது இந்த சிந்தனையில் (கண்டுபிடிப்பில்) தான் கோலாறு உள்ளது.

ஒரு தளத்தின் மதிப்பீடு (ரேங்க்) என்பது தளத்திற்கு வருகின்ற நபர்களை வைத்து மட்டும் கணக்கிடப்படுவது இல்லை. அந்த தளத்திற்கு உள்ள பேஜ்வீவ் என்று சொல்லப்படும் 'அந்த தளத்தில் இடம் பெற்றுள்ள பக்கங்ளில் (செய்திகளில்)எவ்வளவு பக்கங்கள் (செய்திகள்) மொத்ததில் பார்க்கப்படுகின்றது' என்பதை வைத்தும் தான் கணக்கிடப்படும்.

இந்த அளவுகோலின் அடிப்படையிலேயே சர்வதேச அளவில் ஒரு இணையதளத்திற்கு மதீப்பீடு அளிக்கப்படுகின்றது. இந்த அளவுகோல் இணையதள வல்லூனர்கள் அனைவரும் அறிந்ததே (இவருக்கு ஏன் தெரியாமல் போனது என்று தெரியவில்லை).

எனவே ஆன்லைன் பி.ஜே டிஎன்டிஜே இணையதளத்தின் பேஜ்வீவ் வெவ்வேறானது அதாவது இரண்டிலும் இடம் பெற்றிருக்கும் செய்திகள் வெவ்வேறானது. எனவே இரண்டு இணையதளத்தின் பேஜ்வீவ் யும் ஒன்று சேர்த்தால் சர்வதேச அளவில் நமது இணையதளத்தின் மதீப்பீடு கூடும் என்ற அடிப்படையில் ஆன்லைன்பிஜேயில் அது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆன்னலைன் பி.ஜேயில் எழுதப்பட்டுள்ளதில் சர்வதேச அளவில் இணையதள மதீப்பீடு அளவுகோலின் படி எந்த தவறும் இல்லை.

மேலும் இரண்டு இணையதளத்திற்கும் ஒரே விசிடர் தான் வருகின்றார்கள் என்ற மாயையும் அவர் இதன் மூலம் ஏற்படுத்தியிருக்கின்றார். இதுவும் பொய்யாகும். இரண்டு இணையதளத்திற்கு தனித் தனி விசிடர்களும் உள்ளனர்.

அதனால் தான் ஆன்லைன்பிஜே யில் வெளியிட்டுள்ள செய்தி பற்றி தெரியாமல் டிஎன்டிஜே இணையதளத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றது

அதே போன்று டிஎன்டிஜே இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி பற்றி தெரியாமல் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றது.

இவர் எப்பபொழுது ஆன்லைன்பிஜே மற்றும் டிஎன்டிஜே இணையதள நேயர்கள் அனைவரிடமும் பேட்டி கண்டார் என்று தெரியவில்லை?


விமர்சனம் 2

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர்களே கீழ்க்கண்ட வாசகம் நபி (ஸல் ) அவர்களின் கட்டளைக்கு எதிராக இருப்பதை
கவனிக்கவேண்டும்.


இரண்டு இணைய தளங்களாக இல்லாமல் ஒரே இணைய தளமாக நம்முடைய இணைய தளம்
இருந்திருந்தால் நம்முடைய இணைய இணைய தளம் உலக இணைய தளங்களில்
எழுபத்தி ஐந்தாயிரமாவது இடத்தில் இருக்கும்.


பலமான இறைநம்பிக்கையாளர்இ பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும்
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார் . ஆயினும்இ அனைவரிடமும் நன்மை உள்ளது .
உனக்கு பயனளிப்பதையே நீ ஆசைப்படு . இறைவனிடம் உதவி தேடு . நீ தளர்ந்துவிடாதே . உனக்கு
ஏதேனும் துன்பம் ஏற்படும்போதுஇ நான் (இப்படி) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!' என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.
மாறாகஇ 'அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்' என்று சொல். ஏனெனில்இ ('இப்படி செய்திருந்தால் நன்றாயிருந்துக்குமே' என்பதைச் சுட்டும்) 'லவ்' எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் எண்: 5178

ஆகவே சம்பந்தப்பட்ட சகோதரர்கள் தங்களுடைய தவறைத் திருத்தி தவ்பா செய்ய வேண்டும்


தவ்ஹீத் ஜமாஅத்தை எப்படியாவது குறைசொல்ல வேண்டும் என்பற்கு ரூம் போட்டு யோசிப்பார்கள் போலும்.. இவரது இந்த ஒப்பீட்டை பார்த்தால் மார்க்க அறிவு பெற்ற சின்ன குழந்தையும் கூட சிரிக்கும்.

மேற்குறிப்பிட்ட ஹதீஸில் தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) 'துன்பம் ஏற்பட்டால் அதையே நினைத்து கவலைப்படாமல் இறைவன் நாடியதான் நடந்துள்ளது அப்டி இப்படி என்று மனதைப் போட்டு குழப்பாமல் அவன் நாடியதுதான் நடந்துருக்கு என நினையுங்கள்' என்ற கருத்தில் கூறி துன்பத்தில் ஆட்பட்டவனுக்கு விதியை பற்றி குறிப்பிட்டு அவன் மன நிம்மதி அடைய மனோ தத்துவ ரீதியிலான ஒரு மருந்தை கூறியுள்ளார்கள்.

நமது கட்டுரையில் 'எனக்கு கஷ்டம் வந்துடுச்சு எனக்கு கோடி ரூபாய் நஷ்டமாயிடுச்சு இப்டி பன்னி இருந்தா நஷ்டம் ஆகாம இருந்துக்குமே' என்று எங்க சொல்லி இருக்கின்றோம்? 'நாம் பாதிக்கப்பட்டதாக' எங்கு குறிப்பிட்டுள்ளோம்? கண்டிப்பாக ஆன்லைன்பிஜேவில் எழுதப்பட்டுள்ளதில் இந்த மாறி வாசகத்தை இவர் காட்ட வேண்டும். இல்லையென்றால் இவர் தான் அல்லாஹ்விடம் தவ்பா செய்ய வேண்டியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் நமது இணையதளத்தைப் பற்றி ஆதாரங்களோடு சிறப்பித்து தான் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

தனித்தனியாக உள்ளதை ஒன்று சேர்த்தால் அதன் மதிப்பு இன்னும் கூடும் என்று கூறுவதில் மார்க்க அடிப்படையில் என்ன தவறு உள்ளது, உம்: தனித்தனியாக ஐந்து கிடைலோ எடையுள்ள 2 பொருளை ஒன்றாக சேர்த்தால் அதன் எடை அதிகரிக்கும் என்று கூறுவதை யாரேனும் மார்க்க அடிப்படையில் பாவம் என்று அதிலும் தவ்பா செய்யும் அளவிற்கு பாவம் என்று கூறுவார்களா?

இவரது ஒப்பீட்டின் மடமையை புரிவதற்கு இன்னுமொரு உதாரணம்:

2 யும் 2 யும் கூட்டியதால 4 வந்துள்ளது 4 யும் 4 யும் கூட்டினால் 8 வந்திருக்கும் என்று ஒருவர் கூறினால் இதை யாரேனும் 'இவர் பாவம் செய்து விட்டார் இவர் தவ்பா செய்ய வேண்டும்' என்று கூறுவார்களா?

இப்படி இவரது மடமையை விளக்க எத்தனையோ உதாரணம் கூறலாம்.

நாமும் நான்கு பேருக்கு மத்தியில ஏதாச்சும் சொல்லனும் என்பதற்காக சம்பந்தம்மில்லாம் ஒப்பிட்டு அதிலும் ரொம்ப மிகைப்படுத்தும் விதமாக தவ்பா செய்யுமாறு அறிவுரை எல்லாம் கூறியுள்ளார். இவரது இந்த மார்க்க அறிவை மேலும் விமர்சிக்காமல் இறைவன் இவரது மார்க்க அறிவை மேலும் அதிகப்படுத்து பிறார்த்திக்கின்றேன்.

0 Response to "இணையதளங்கள் ஒப்பீடு அலசல் பற்றிய விமர்சனம்- வயிற்றெரி்ச்சலில் வந்தவை!"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை