INTJ (இந்திய தவ்ஹீது ஜமாஅத்) ஒரு விமர்சன பொய்.

Tuesday, October 12, 2010 5:54 AM Posted by பொய்யன் டிஜே

ஒரு காலத்தில் பத்திரிக்கைகள் பிரபலம் அடைவதற்கு, பல பிரபலமானவர்கள் செய்யும் தவறுகளையோ அல்லது அவர்களின் நடத்தைகளின் விதங்களையோ, குறைகளையோ கண்காணித்து, இல்லாத சில விசயங்களை ஒன்று அல்லது இரண்டு சேர்த்து விடுவது பத்திரிக்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி. அப்படி விமர்சனம் செய்து, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் சில பொய்ளை பரப்பி, பெயர் பெறுவது அனைவரும் தெரிந்த விஷயம். அந்த அடிப்படையில் மக்களிடம் பிரபலமான பத்திரிக்கைகளும் நமது நாட்டில் அதிகம் உள்ள உலா வந்து கொண்டு இருக்கிறது.

இந்த மாதிரியான பத்திரிகை ஒரு காலத்தில் சந்தன வீரப்பனை வைத்து விளம்பரப் படுத்தியதோடு மட்டுமல்லாமல், பத்திரிகையின் வியாபாரத்தை பெருக்கியதோடு மேலும் பிரபலம் அடைந்தது. அதன் பின்பு, பிரேமானந்த சாமியார், சங்கராச்சாரியார், இன்று நித்தியானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதா என்று தன் பத்திரிகை புகழை உயர்த்திக் கொண்டு இருக்கிறது. இது படிக்க வேடிக்கையாக இருந்தாலும், பத்திரிகையாளர்களுக்கு இது வாடிக்கையாகி விட்டது, மட்டும்மின்றி, வாழ்வதற்கு பொருளாதார நிலையையும் கூட்டி விட்டது.
இப்படி பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்யும் ஒரு விளம்பர தாகத்தை, ஒரு தனிக்குடித்தன குடும்ப ஜமாஅத் எனப்படும் INTJ (இந்திய தவ்ஹீது ஜமாஅத்) அந்த விளம்பர வேலையை கையில் எடுத்து மக்களிடம் பிரபலம் அடைய பார்க்க இருக்கிறது. அப்படியாவது, மார்க்க விசயங்களை சொல்லி, தவ்ஹீது கொள்கைகளை பரப்பி பிரபலம் அடைந்தாலாவது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு, சாத்தான் வேதம் ஓதுவது போல் இந்த (INTJ) குடும்ப ஜமாஅத் தலைவரின் விமர்சனம் அறிவு பூர்வமானதாக இல்லை.
இவர்களின் இந்த போலி விளம்பரத்திற்கு இன்று கிடைத்து இருக்கும் தீனி! எது தெரியுமா?பெரியார் தாசன் எனும் அப்துல்லா அவர்களைப் பற்றி. அவரை கண் காணிப்பதாக வந்த தகவல். இந்த தகவல்களை வைத்து, எ.ஆர். ரஹ்மானை கண் காணித்து மேடையேற்ற முடியுமா? நான்கு பெண்கள் இஸ்லாத்தை தழுவினார் களே! அவர்களை எலாம் கண்காணித்து தான் இஸ்லாத்தில் இஸ்லாத்தில் சேர்த்தீர்களா? என்றெல்லாம் குருட்டு கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கேள்வி என்னமோ சரி தானோ என்று சிலர் நினைக்கலாம். அப்படி நினைத்தால்! அது முற்றிலும் தவறு. சரிதான் எனப்படும் மற்றவருக்கு! கண்காணிப்பென்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளவேண்டும். அதேசமயம்! இந்த பொய்யன் டி.ஜே தலைவர் புரிந்த விதம் தவறு. (இந்த தலைவர் எப்பொழுதுமே கொஞ்சம் அவசரக்காரர்தான்.) இருந்துட்டு போகட்டும்.
முதலில், இவர்கள் ஒன்றை தெரிந்து பேச வேண்டும். தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் கொள்கை மற்றும் கோட்பாடு என்னவென்று தெரிய வேண்டும். இது அவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் அவர், வேண்டும் என்றே குதர்க்கமாக ஏதோ அப்துல்லாவை (பெரியார் தாசனை) அவரை பின் தொடர்ந்து தவ்ஹீது ஜமாத்து ஆட்கள் கண்காணிப்பது போல் விமர்சித்து எழுதி இருக்கிறார். அந்த அடிப்படையில் கண்காணிக்கவில்லை என்பதை இந்த தலைவர் தெரிந்து கொள்ளவேண்டும். இவர் உரத்த குரலில் கத்தி பேசினால் மட்டும் போதாது, சொல்லி இருக்கும் வார்த்தைக்கு பொருள் தெரிய வேண்டும்.
கண்காணிப்பதில் எத்தனையோ வகை இருக்கிறது. உதாரணத்திற்கு: அன்று நீங்கள் தவ்ஹீதில் இருக்கும் போது உங்களை கண்காணிக்கும் விதத்தில் கண்காணித்து இருந்தால்! இன்று நீங்கள் சாதாரணமாக வெளி ஏற்றப்பட்டு இருக்க மாட்டீர்கள்! அன்றைக்கே உங்களை கழுத்தைப் பிடித்து வெளியேற்றி இருப்பார்கள். இது ஒருவகை கண் காணிப்பு. விவாதம் நடக்கும் பொது காணாமல் போனீர்களே! அப்பொழுது ஜமாத்து ஆட்கள் இவரை பின் தொடர்ந்து இருந்தால்! அது ஒரு வகை கண்காணிப்பு, கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வெளியில் நாடகம் போடும் வேடதாரிகளை விமர்சனம் செய்கிறோமே! அது ஒரு வகை கண்காணிப்பு. ஜாகீர் நாயக் தவ்ஹீது பேசிக்கொண்டு மதஹபுகளையும் ஆதரிக்கிறாரே! அவரையும், அவர் குறைகளையும் மார்க்க அடிப்படையில் தவறு என்று கூறி மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லுகிறோமே! இதுவும் ஒருவகை கண்காணிப்பு. இப்படி கண்காணிப்பில் பல விதம் இருக்கிறது.
நீங்கள் ஒரே ஒரு கண்காணிப்பை மட்டும் தூக்கிப் பிடித்து எதோ அனைவரையும் "கண்காணிப்பது தான் இவர்களின் நிலைபாடா?" என்று இன்று பெரிய ஆராச்சியான கேள்வியை கேட்டு விட்டார்கள். நீங்கள் சொல்லிய கண்காணிப்பாக அன்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கண்காணித்து சொன்னதால் தான் உங்களின் குறை பாடுகள் தெரிய வந்தது. இல்லை என்றால்! என்னைப் போன்ற பலர் உங்களிடம் இன்னும் எத்தனையோ லட்சம் பணத்தை பள்ளிக்காக கொடுத்து ஏமாந்து போய் இருக்க வேண்டிய நிலை வந்து இருக்கும். அல்லாஹ் காப்பாற்றி விட்டான். அதனால்! இந்த கண்காணிப்பு என்பது வேறு.
அப்துல்லாஹ் எனும் பெரியார் தாசனை கண்காணிப்பது என்றால்! அவர் அல்லாஹ்வை வணங்குகிறாரா? பள்ளி சென்று தொழுகை செய்கிறாரா? ஓதுகிறாரா? என்ற கண்காணிப்பு அல்ல, அதை அல்லாஹ் தான் அறிவான். தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் சொல்லியிருக்கும் கண்காணிப்பின் நிலைபாடு என்னவென்றால்! தொலை நோக்கப் பார்வையான கண்காணிப்பு.
அன்று பெரியார் தாசன் எனும் அப்துல்லாஹ், முன்பு அவர் நாத்திக கொள்கையிலும் மக்கள் மத்தியிலும் இருந்த ஒரு பிரபலமான நபர், அது மட்டுமல்லாது அவர் ஒரு பேராசிரியர், ஒரு நடிகர், இப்படி மக்களிடம் பிரபலம் அடைந்தவர்.
இவர் இஸ்லாத்ததை ஏற்று இருப்பதில் அனைவரும் பங்கெடுத்து சந்தோசப்பட வேண்டிய விஷயம். அதே சமயம் தவ்ஹீது என்னும் ஒரு இறைக்கொள்கையை ஏற்று அதன் அடிப்படையில் தன் சொற்பொழிவுகளை நிகழ்த்திக் காட்டுகிறாரா? அல்லது தவ்ஹீது கொள்கை இல்லாதவர்களோடு இணைந்து "எல்லாம் இஸ்லாம் தான்” என்ற அடிப்படையில் இவர் போக்கு இருக்கிறதா? என்று அவரின் இஸ்லாத்தின் கொள்கை சம்மந்தப்பட்ட விசயங்களை யாருவேண்டு மானாலும் கண்காணிக்கலாம்.
அதே சமயம் தவ்ஹீது ஜமாஅத் கொஞ்சம் கூடுதலாக கண்காணிப்பது ஏன் என்றால்! இவரை மேடையில் ஏற்றுவதாக இருந்தால்! தவ்ஹீது கொள்கையில் இருக்க வேண்டும். அதுவும் சரி இதுவும் சரி என்பது தவ்ஹீதின் நிலைபாடல்ல என்பதை இந்த பொய்யன் ஜமாத்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
மேலும், என்னையோ மற்றவர்களையோ எடுத்தவுடன் மேடையேற்ற முடியாது. கொள்கை ரீதியாக அவரோ, நானோ உறுதியாக இருந்தாலும் குரான் மற்றும் ஹதீஸ்சை ஓரளவு கற்று இருந்து மக்கள் மத்தில் வார்த்தை தடுமாறாமல் பேசக் கூடிய வகையில் இருந்தாலும் தான் ஒருவர் மேடையில் பேச தகுதியானவராவார். அந்த அடிப்படையில், பெரியார் தாசன் எனும் அப்துல்லா அவர்கள் இன்று இஸ்லாத்தை ஏற்று இருந்தாலும்! அவர் எந்த கொள்கையை கடை பிடிக்கிறார் என்பதை செவி மடுத்து கண்காணிப்பதில் தவறில்லை. அவர் தவ்ஹீதை மட்டும் உண்மையாக நம்பி இஸ்லாத்தில் நுழைந்து இருந்தார்களே யானால்! நிச்சயமாக தவ்ஹீது ஜமாஅத் மேடை ஏற்ற தயங்காது மற்றும் கண்ணியப் படுத்தவும் தவறாது.
ஆனால் அது இன்றோ நாளையோ உடனேயோ தெரிய முடியாது. சில நாட்கள் ஆகலாம், சில வாரங்கள் ஆகலாம், சில மாதங்கள் ஆகலாம். அப்படி சொல்லிக் கொண்டு தான் தவ்ஹீது ஜமாஅத் கண்ணியமான மான முறையில் கண்கானிக்கிறதே தவிர, உங்கள் குட்டுப் பார்வையில் பின் தொடர்ந்து கண்காணிப்பது அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
(JUST SMAAL TIPS FOR YOU AND YOUR JAMAATH POSTING MEMBERS.) முதலில் உங்களை நீங்களே சுயபரி சோதனை செய்து கண்காணிக்கவும்.

0 Response to "INTJ (இந்திய தவ்ஹீது ஜமாஅத்) ஒரு விமர்சன பொய்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை