தொடர்ந்து கேவலப்படும் பொய்யன் கூட்டம்

Sunday, February 27, 2011 9:32 PM Posted by பொய்யன் டிஜே

அவதூறு பரப்புவதையே பிழைப்பாகவும் அவமானப் படுவதையே அதன் முடிவாகவும் கொண்டிருக்கும் பொய்யன் கூட்டம் தற்போது புதிதாக கையில் கையில் எடுத்திருக்கும் ஃபித்னா என்ன தெரியுமா? தவ்ஹீத் ஜமாத்தின் வளைகுடா மண்டலத்தின் ஒரு மேலாண்மை குழு உறுப்பினர் பெரியார் இயக்கத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் அவர்கள் வெளியிட்ட மலரில் பெரியாரை பாராட்டி எழுதியும், நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்த பொய்யன் கூட்டம் ஒரு சில வாரங்களாக தங்களது வாந்தி தளத்தில் இப்படி ஒப்பாரி வைத்து வருவதை யாரும் கண்டுக் கொள்ள மாட்டார்கள் என்றாலும்.கொஞ்சம் பொறுமையாக இந்த பொய்யர்களை பேசவிட்டு பார்ப்போமே என்று விட்டு வைத்தோம். மதுரை ஆதீனம் விசயத்தில் இப்படி பேச விட்டு நாம் பொறுமை காத்து பிறகு கொடுத்த பதிலில் மூக்கறுப்பட்ட பொய்யன் குரூப்ஸ் இன்னும் திருந்தவில்லை என்பதை இந்த விஷயத்தில் நிரூபித்திருக்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம். இந்த பொய்யன் குரூப்ஸ் சொல்லும் வளைகுடா மண்டலம் வேறு எதுவும் இல்லை குவைத் மண்டலம் தான்.இவர்கள் குறிப்பிடும் அந்த நபர் குவைத் மண்டல மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.அபுபக்கர் சித்திக் தான்.இந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ‌ ஐந்து மாதங்கள் ஆகப்போகிறது.இப்படி ஒரு சம்பவம் நடந்தது மண்டல நிர்வாகத்தின் கவனத்திற்கு வரும் முன்பே சம்பந்தப் பட்ட மேலாண்மை குழு உறுப்பினர் தானே முன் வந்து இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது. அது என்னை மீறி நடந்தாலும் இது நம் ஜமாத்தின் கொள்கைக்கு அழகல்ல. இதனால் நிர்வாகம் என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் கட்டுப்படுகிறேன் என்றார். மண்டல நிர்வாகம் அவரை மேலாண்மை குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அப்போதே நடவடிக்கை எடுத்தது.அப்படி நடவடிக்கை எடுத்து நீக்கிய‌ பின்புதான் ஜமாஅத் பணிகளில் சாதாரண தொண்டனாக முன்பை விட அதிக ஆர்வம் காட்டுகிறார் என்பது தனி விஷயம்.அவர் என்ன காரணம் சொன்னார் இது எப்படி அவரை மீறி நடந்தது என்ற விளக்கத்தை இங்கு சொல்ல தேவை இல்லை.நடவடிக்கை எடுத்தோமா இல்லையா என்பது தான் விஷயம்.என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறு தான் எனபதில் இந்த ஜமாத்தில் எள்ளளவும் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

அதே நேரத்தில் இந்த பொய்யர்கள் குறிப்பிடும் அதே நிகழ்ச்சியில் சுனாமி திருடர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்ததை மட்டும் இந்த கயவர்கள் கண்டுகொள்ளாதது நமக்கு ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை காரணம் தவ்ஹீதை பின்பற்றுபவர்கள் இப்படி செய்தால் தான் தவறு என இந்த ஐஸ் குச்சி கூட்டமே ஒத்துக் கொள்கிறது.

ஒன்றை மட்டும் இங்கே ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறோம் இந்த ஜமாத்தில் இருப்பவர்கள் என்னை வயலாக இருந்தாலும் சரி, தங்க வயலாக இருந்தாலும் சரி, தவறு செய்தால் தூக்கி எரிந்து விடுவோம் என்பதற்கு இதில் சம்பந்த பட்ட மேலாண்மை குழு உறுப்பினர் மீது எடுத்த நடவடிக்கையே சாட்சி என்பது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ பொய்யன் குரூப்சின் புகையிலை மன்னனுக்கு நன்றாக தெரியும்.

சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொள்பவனுக்கு மாநில பதவி, ஐஸ் குச்சி பொறுக்கிகளுக்கு மண்டல பதவி,புகையிலை பிரியர்களுக்கு ஆசிரியர் பதவி கொடுக்க இது ஒன்னும் பொய்யர்களின் கள்ள டிரஸ்ட்டு அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.இப்படி ஏதையாவது பரப்பி பேருந்து பேர்வழியிடம் பேர் எடுத்து குடும்ப வருமானத்தை அதிக படுத்திக் கொள்ளலாம் என்று இப்படி அல்லாஹ்வின் உதவியால் எங்களிடம் மூக்கறுபடுவதை விட்டு விட்டு தேர்தல் நேரத்தில் சுனாமி திருடர்களுக்கு ஏதாவது ஜால்ரா அடித்தால் பத்து காசு பார்க்கலாம் என்பது உங்கள் புத்திக்கு தகுந்த எங்களின் ஆலோசனை.

1 Response to "தொடர்ந்து கேவலப்படும் பொய்யன் கூட்டம்"

  1. hasan Says:

    ஒரு மனிதனுக்கு குரோதம் வந்து விட்டால் அவன் எதையும் செய்து விடுவான் என்பதற்கு பாக்கர் கூட்டம் பெரிய ஆதாரமாகும். இவர்களை நினைக்கும் போது எனது மனம் ரொம்ப வேதனைப்படுகிறது. இவர்களுக்கு இறைவா! நீயே நியாயத்தை உணர்த்தி விடு!

    இலங்கை
    ஸைனீ

Post a Comment

அதிகம் பார்த்தது..