மமகவை கொத்துப்புரோட்டா போட்ட பொய்யன் ஜமாத் பொதுக்கூட்டம்

Monday, February 28, 2011 9:38 PM Posted by பொய்யன் டிஜே

இந்த தலைப்பும் இதற்கு முந்தைய தலைப்பும் (மமகவுக்கு பல்லக்கு தூக்கும் மாமா(மாசற்ற(?) மாணிக்கங்கள்)க்கள்) ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தெரியலாம். உண்மையிலேயே இரண்டும் முரண்பட்டது தான். காரணம் கொள்கையிலும் கோட்பாடுகளிலும் முரண்பட்டு இருப்பவர்கள் சொல்லும் செய்திகள் முரண்பட்டுத் தான் இருக்கும். நேற்று முன்தினம் (27‍/02/2011 ஞாயிறு) தம்புச்செட்டித் தெருவில் பொய்யன் ஜமாத் சார்பில் நடந்த சமூக தீமை எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் தான் இந்த முரண்பாடு நடந்தது. சமூகத்தீமை எதிர்ப்பு பொதுக்கூட்டம் என பெயர் வைத்தாலும் அவர்களிடம் வழக்கம்போல் இருக்கும் பிஜே, ததஜ எதிர்ப்பு சாடல் கொஞ்சமும் குறையவில்லை. அவர்கள் வெளியிட்ட பிரச்சார நோட்டீஸ்களில் எல்லாம் மது,சூது,விபச்சாரம்,வட்டி போன்ற தீமைகளை எதிர்த்து பொதுக்கூட்டம் என போடப்பட்டு இருந்தது. ஆனால் இலவச இணைப்பாக வழக்கம் போல அவர்கள் நடத்தும் பிஜே,ததஜ தாக்குதல் தான் அங்கே இடம்பெற்றது.

ஆனால் அதையும் தாண்டி இந்த முறை மமகவை கஞ்சிகாய்ச்சி எடுத்து விட்டார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆக இதிலிருந்து ஒன்றே ஒன்று தெளிவாகப் புரிந்தது. அதாவது அவர்கள் மமகவை காய்ச்சியது உண்மை. ஆனால் ததஜ அவர்களின் செயல்களை தாக்கினால் அந்த இடத்தில் வந்து நின்று அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் உண்மை. அவர்களின் முழுநேரக் கொள்கையான ததஜ எதிர்ப்பு என்பது அவர்களின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. அதாவது ததஜவை யார் எதிர்த்தாலும் அவர்களோடு சேர்ந்து கொள்வது என்ற கொள்கையும், ததஜ யாரை எதிர்த்தாலும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது என்ற கொள்கையும் மட்டும் தான் அவர்களிடம் இருப்பது தெளிவாக தெரிகிறது.

மமகவை எதிர்க்க நீங்கள் யார்? என நேற்று கேட்டவர்கள் இன்றைக்கு அவர்களே எதிர்க்கிறார்கள் என்றால் இவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என தெரியவில்லை. அதற்கு அவர்கள் வைக்கும் வாதமும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. எங்களைக் கேட்காமல் ஏன் ஜெயாவுடன் கூட்டுச்சேர்ந்தீர்கள், உங்களுக்கு கிடைக்கும் 3 சீட்டுகளுக்காக ஏன் சமுதாய மானத்தை அடகுவைத்தீர்கள்? நீங்க 3 சீட்டுல ஜெயிக்கிறதுக்காக மிச்சமுள்ள 231 தொகுதியிலும் எங்க சமுதாயம் உங்களுக்காக உழைக்கனுமா? கொஞ்சம் கூட வெக்கமில்லை? அதுமட்டுமல்லாது சமுதாய மானம் மட்டுமே காக்கப் போகிறோம் என சொல்லிவிட்டு எப்படி 3 சீட்டூக்கு ஒப்புக்கொண்டீர்கள்? எங்களை ஏன் அழைக்கவில்லை? நாங்கள் வந்திருந்தால் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிக பிரதிநிதித்துவம் கிடைத்திருக்குமே! பாக்கரை அழைத்துப் போனால் அவர் உங்களிடம் ஒரு சீட்டா கேட்டுவிடப்போகிறார்? என மானம் காக்கும் மானங்கெட்ட மக்கள் கட்சியை ஒரு பிடி பிடித்து விட்டார்கள்.

இப்படி இவர்கள் கேட்பதற்கும் முந்தைய ஒரு பிளாஸ்பேக் இருக்கிறதாம். அதாவது இவர்கள் உச்சநீதிமன்ற முற்றுகையை நடத்திய போது ,திருமாவளவனே கலந்து கொண்டார். ஆனால் மமக சார்பாக யாரும் கலந்து கொள்ளாத‌து ஏன் என கேட்டார்களாம். அதற்கு அவர்கள் எங்களிடம் கேட்டா போராட்டத்துக்கு தேதி குறித்தீர்கள் என பதில் கொடுத்தார்களாம். அவர்களிடம் கேட்டு தேதி குறிப்பதற்கு இவர்கள் என்ன முகூர்த்தமா நடத்தினார்கள். அல்லது அவர்கள் தான் நாள் குறித்து தரும் வேலையை பார்க்கிறார்களா? என நாம் கேட்கவில்லை, சமூக ஆர்வலர்கள் கேட்பார்கள்.

ஆக பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. ஒற்றுமையை குலைத்து விட்டார்கள், ஊரைப் பிளந்து விட்டார்கள்,வாருங்கள் நாமெல்லாம் ஒன்றுபடலாம் என கூட்டிய 19 கூட்டத்தில் இரண்டு கூட்டத்தின் நிலையே இப்படி குழாயடி சண்டையாக இருந்தால் மற்ற 17 கூட்டமும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? ததஜவை எதிர்ப்பதில் மட்டுமே ஒன்றுபட முடிந்த உங்களுக்கு ஒரு சாதாரண அரசியல் நிலைபாட்டில் கூட ஒன்றுபடமுடியவில்லையே! அப்பறம் ஏம்பா ஒற்றுமை ஒற்றுமைன்னு கூச்சல் போடுகிறீர்கள். மோசக்காரர்கள், அயோக்கியர்கள் எல்லாம் உங்களிடம் தோற்றுவிடுவார்கள். அவர்களை விட கேவலமான கீழ்த்தரமானவர்கள் நீங்கள்.

பாஜககாரன் கூட செய்யாத செயலான மண்ணைக்கவ்வ வைப்போம் என்ற வார்த்தையை பொதுக்குழுவிலே போட்டு விட்டார்கள் என அடுத்த வாதத்தை எடுத்து வைத்தார்கள். இதிலே என்ன தவறு இருக்கிறது என நமக்குத்தெரியவில்லை. அவர்களின் ஆட்சிக்கு முன் உதாரணமாக, கிடைத்த வக்ஃப் வாரியத்தை வைத்துக் கொண்டு என்னென்ன‌ செய்தார்கள் என்பதை மக்கள் என்ன மறந்தா விட்டார்கள்? வக்ஃப் நிலங்களை பலரும் அபகரித்த போது அவர்களைத் தட்டிக்கேட்காமல், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் வைத்த விருந்தில் கலந்து கொணடு விழாவைச் சிறப்பித்தார்களே கழகத்தின் நிரந்த தலைவரும், நிரந்த பொதுச்செயலாளரும்! மதுரை வக்ஃப் கல்லூரி பணி நியமணத்தில் நடந்த முறைகேடுகளைத் தடுத்தால் திமுகவில் சீட்டு கிடைக்காது என மவுனம் காத்தார்களே! ஏகத்துவத்தால் வளர்ந்த தமுமுகக் கொண்டே ஏகத்துவத்தை சாகடிப்போம் என சூளுரைத்தார்களே இதே கழகத்தின் நிரந்தர தலைவரும்,நிரந்தர பொதுச்செயலாளரும்! இவர்களை மண்ணைக் கவ்வ வைக்காமல்அவர்களுக்கு மயிலிறகு சாமரம் வீசச் சொல்கிறீர்களா?

அடுத்து எங்கள் இயக்கத்தை களவாடிவிட்டார்கள்,அதுவும் சமூக தீமை என சொன்னார்கள். அப்படியென்றால் பிராடு பண்ணுவது சமூக தீமை இல்லையா? ஒரு அமைப்பை டிரஸ்டாக பதிவு செய்து விட்டு அதற்கு சங்க பைலாவை வைத்து இயக்கம் நடத்தியது சமூக தீமை இல்லையா? குட்டு உடைந்த உடன் இன்று வரை பைலாவே இல்லாமல் வண்டி ஓட்டுவது சமூக தீமை இல்லையா?

உதாரணமாக ஒருவன ஒரு புறம்போக்கு இடத்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கிறான். இன்னொருவன் அதை விலை கொடுத்து வாங்குகிறான். இப்போது அதை அடைத்து வைத்திருந்தவன் விலைக்கு வாங்கியவனைப் பார்த்து நீ திருடிவிட்டாய் என சொன்னால் அவனைப் பைத்தியக்காரன் என சொல்லாமல் என்ன சொல்லுவதாம்?

தவ்ஹீத் என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான வேலைகளைச் செய்தால் இப்படித்தான் ஆகும். தவ்ஹீத் பெயரை வைத்துக் கொண்டு மதஹபுகளை ஆதரிப்பது மட்டுமா உங்களின் கொள்கை?செங்கிஸ்கானின் உலறல்ஆன்லைன்.காம் இதற்கு ஒரு உதாரணம் இல்லையா? பிஜே/ததஜ தொடர்பான விமர்சனங்களுக்கு நேரிடையாக பதில் கொடுக்க துப்பில்லாமல் ஏகத்துவத்தின் எதிரியாக இருக்கும் இஸ்லாம்கல்வி.காம் தளத்திற்கு இணைப்பு கொடுத்திருப்பது ஏகத்துவ எதிர்ப்பு இல்லையா? தவ்ஹீத் கொள்கைக்கும் அவர்களுக்கும் முரண்பாடுகள் பல இருந்தாலும் உதாரணமாக ஒன்றே ஒன்று, அவர்கள் வருடந்தோரும் ஜகாத் என்கிறார்கள். அப்படியானால் அதை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்று தானே அர்த்தம். அப்பறம் ஏன் உங்களுக்கு தவ்ஹீத் என்ற லேபிள். தனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவனுக்கு ரெண்டு கண் போக வேண்டும் என்ற கொள்கை உடைய போலி ஏகத்துவ லேபிளை ஒட்டிக்கொண்டு உண்மையான ஏகத்துவத்தை அழிக்க நினைத்த உங்களுக்கு வல்ல ரஹ்மான் தந்த பரிசு தான் இது.

நீங்கள் சொல்லாத, நீங்கள் செய்த தீமைகள் நாங்கள் கொஞ்சம் பட்டியலிடலாமா?

SP பட்டினத்தில் பள்ளிவாசலை மூட யார் தூண்டினார்கள்,அதற்கு யாரெல்லாம் திட்டம் வகுத்துத் தந்தார்கள், என்னென்ன மறைமுக வேலைகளில் ஈடுபட்டார்கள் என உங்களுக்கு நன்றாக தெரிந்தும் ததஜவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவர்களோடு கைகோர்த்து செயல்பட்டதும், " RSS காரன் கூட செய்யத்தயங்கும் பள்ளிவாசல் மூடல் வேலையை அண்ணன் செய்தது சரியா?” என உங்களின் இணைய தளத்தில் ஓட்டெடுப்பு நடத்தியது சமூக தீமை இல்லையா?

திருவிடைச்சேரியில் சுட்டவரும், சுடப்பட்டவர்களும் சுன்னத் ஜமாத்தினர் என நன்றாக தெரிந்தும் ததஜவை அழிக்க வேண்டி மேற்படி சகாக்கள் தலைமையில் ஏசி ஹோட்டலில் கூடி கும்மியடித்து ஆளுயர போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியது சமூக தீமை இல்லையா? 19 கூட்டம் ஒன்று சேர்ந்து போஸ்டர் ஒட்டினாலும் மக்கள் உண்மையை விளங்கியவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்ற திருவாரூரில் அப்போதே மாநில மாநாடா என வியக்கும் வண்ணம் நடந்த மாவட்ட‌ மாநாடு ஒரு சாட்சி இல்லையா?

முதலில் உங்களிடம் இருக்கும் சமூக தீமைகளை ஒழித்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வாருங்கள். கடைசியாக ஒன்று நீங்கள் அடித்த பேனர்களில் சமூக தீமை எதிர்ப்பு பொதுக்கூட்டம் என்ற தலைப்பில் விபச்சாரம் என்ற ஒரு தலைப்பும் இருந்ததே! அதைப்பற்றி ஏன் யாருமே பேசவில்லை? என்ன காரணமா இருக்கும்????

0 Response to "மமகவை கொத்துப்புரோட்டா போட்ட பொய்யன் ஜமாத் பொதுக்கூட்டம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..