இஸ்லாத்தை கேலிக்கூத்தாக்கிய SDPI மாநாடு

Wednesday, February 23, 2011 12:32 AM Posted by பொய்யன் டிஜே

ஜிகாத் செய்ய வாருங்கள், ஜனநாயகம் என்பது நவீன இணைவைத்தல்,இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதே நம் லட்சியம் என்னும் கோட்பாடுகளை வைத்து அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவைசெய்து மூன்றெழுத்து மாயாஜாலக் கூடாரம் நடத்தி வந்தவர்கள், அந்த மாயாஜாலம் மக்களிடம் எடுபடாமல் போகவே அதை அப்படியே நான்கெழுத்து சர்க்கஸ் கூடாரமாக மாற்றி சந்திக்கு வந்து விட்டார்கள். சர்க்கஸ் கூடாரத்தில் தான் அந்தர் பல்டி அடிப்பார்கள், ஆனால் அதையெல்லாம் விட இவர்கள் அடித்த பல்டி தான் பெரியது. எந்த கொள்கையைக் காட்டி மக்களை மதிமயக்கினார்களோ அந்தக் கொள்கையை அப்படியே குப்புறத்தள்ளி விட்டு இப்போது அதற்கு நேரெதிர் கொள்கைகளோடு(?) களமிறங்கியிருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய புதிய விசயங்களைச் சொல்லி ஏற்கனவே மயக்கத்தில் இருந்த மக்களை மேலும் மயக்கி இருக்கிறார்கள்.வருகின்ற சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு சென்னை மண்டல மாநாட்டை கடந்த 20 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடத்தினார்கள். அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளுக்கும் இவர்கள் நடத்திய இந்த மாநாட்டுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாமல் அதை அப்படியே பின்பற்றியது தான் வியப்புகுரிய விசயம்.

இதற்கு முன்னதாக வினாயகர் சதுர்த்திக்கும், பொங்கலுக்கும்,கிருஸ்துமஸூக்கும் வாழ்த்து பேனர் அடித்து ஊர் முழுவதும் வைத்து ஓரிறைக் கொள்கையை கேலி செய்தார்கள். எங்களுக்கும்குரான்,ஹதீஸுக்கும் சம்பந்தமேயில்லை என தங்கள் வாய்களினாலேயே வாக்குமூலம் கொடுத்தார்கள். அதை நிறுபிக்கும் விதமாக, எங்களுக்கும் இஸ்லாமிய கொள்கைகளுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது இவர்களின் சென்னை மண்டல மாநாடு. அமைப்பின் தேசிய மற்றும் மாநில‌ தலைவர்களுக்கு விதவிதமான பிரம்மாண்டமான கட்அவுட் பேனர்கள் வைப்பதில் இருந்து துவங்கியது அவர்களின் மறுப்புக் கொள்கை அடையாளங்கள். தலைவர்களின் பேச்சுகளுக்கு இடையே பறந்த விசில் சப்தமும், கைத்தட்டல் ஒலிகளும், ஜிந்தாபாத் கோசங்களுமே, அவர்களுக்கும் உத்தமத்தூதர் நபிகளாரின் கொள்கைகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்குஅடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

கைதட்டுதலும் விசிலடித்தலும் அன்றைய ஜாகிலியாக்கள் காலத்தில் வாழ்ந்த மறுப்பாளர்கள் கொள்கை என்பதையும், கைதட்டி இறைவனை அழைப்பது இன்றைய கிருத்தவர்களின் கொள்கை என்பதையும்அப்படியே பின்பற்றி, இவர்கள் எந்த கொள்கை(?)யில் இருக்கிறார்கள் என்பதை மேற்குறிப்பிட்ட நபி மொழி மூலமாக அப்படியே நிறுபித்து விட்டார்கள் இந்த கொள்கை சகோதரர்கள்.

இறைவசனங்களை மறுக்கும் விதமாக இவர்களது செயல் அமைந்திருப்பதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை என்றாலும் அதை நிறுபிக்கும் விதமாகவே அமைந்து விட்டது இந்த மாநாடு.இஸ்லாம் இசையை ஹராமாக்கி இருக்கிறது என்பது சாதாரண பெயர் தாங்கி முஸ்லீம்களுக்கு கூட தெரியும் போது இவர்களின் கொள்கை(?)பாடல்கள் முழுக்க முழுக்க இசைக் கருவிகளின் ஆதிக்கத்துடன் இந்த மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டு இசையை ஆகுமானதாக்கியது தான் இவர்களின் மாநாட்டின் முக்கிய அம்சமே.

இறைவசனங்களை கேலி செய்தும், தூதரின் கொள்கைகளுக்கு மாறு செய்தும் அதிகபட்சம் ஒரு சீட்டாவது பெறுவதற்காக இவர்கள் நடத்திய கூத்துப்பட்டறை மாநாடு நிச்சயமாக இவர்கள் என்ன கொள்கையில் இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தியது.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார்.

அல்குர்ஆன் (33:71)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டுவிட்டார்.

அல்குர்ஆன் (33:36)

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள்அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் (33:66)

அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில் இத்தூதருடன்நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே என்று கூறுவான்.

அல்குர்ஆன் (25:27)

வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள்மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் (64:4)

அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் நஷ்டமடைந்துவிட்டனர். திடீரென அந்நேரம் வரும் போது உலகில் வரம்பு மீறி நடந்து கொண்டதால் எங்களுக்கு கேடு ஏற்பட்டுவிட்டதேஎனக்கூறுவார்கள். தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பது மிகக் கெட்டது.

அல்குர்ஆன் (6:31)

என்ற இந்த அருள்மறை வசனங்கள் இவர்களின் செயல்பாடுகளைத் தான் நினைவு படுத்துகிறது. அதேபோல ஒரு சீட்டுக்காக ஒப்பற்ற ஓரிறைக் கொள்கையையும், தூதர் நபியின் தூய வழிகாட்டுதலையும்புறக்கணித்து தங்களின் இவ்வுலக லாபங்களுக்காக அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை வழிகேட்டின் பக்கமாக திருப்பி அவர்களையும் மாறு செய்யக்கூடியவர்களாக ஆக்கியபெருமையும் இவ்வியக்கத்தின் பொருப்பாளர்களையே சாரும்.

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன் 5:2)

இந்த இறைவசனங்கள் இவர்களுக்கு போதுமானதாக இருந்தாலும்,இவர்களின் மூளைச்சலவையில் சிக்கும் இளைஞர்களுக்கு கீழ்க்கண்ட ஹதீஸ் தேவையானதாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: "நல்ல நண்பனுக்கும், தீய நண்பனுக்கும் உதாரணம், கஸ்தூரியைச் சுமந்திருப்பவனுக்கும், உழையில் ஊதும் கொள்ளனுக்கும் ஒத்ததாகும். அத்தர் வியாபாரி அதனை உனக்கு கொடுக்கலாம், அல்லது நீ அதனை (விலை கொடுத்து) வாங்கலாம்,அல்லது அவனிடமிருந்து அதன் சிறந்த வாசனையை யாவது கண்டுகொள்ளலாம். ஊழையில் ஊதுபவன் உன்னுடைய உடையை எரிக்கலாம், அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை கண்டு கொள்ளலாம்." (புஹாரி)

என்ன சொல்லி என்ன செய்ய! இவர்கள் தான் எங்களுக்கும் குரான் ஹதீஸூக்கும் சம்பந்தம் இல்லை என அறிவித்து விட்டார்களே! அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

மாநாட்டுத் துளிகள்:

* காலையில் மாநாடு என பேனர்களில் இருந்ததால் காலையிலேயேமைதானத்திற்கு சென்று விட்டோம். ஆனால் அங்கு போய் விசாரித்த பிறகுதான் மாநாடு மாலையில் துவங்கும் என தெரியவந்தது. சரி வந்ததுவந்துவிட்டோம் கொஞ்சநேரம் கழித்துச் செல்லலாம் என மைதானத்தின்அருகிலிருந்த கட்டிடத்தில் அமர்ந்தோம். அங்கு ஒரு அறையில் கிருத்தவமக்களால் வழக்கமாக நடத்தப்படும் வாரந்தர ஜெபக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. அதற்கு வெளியே ஒரு வேனில் குழந்தைகளைவைத்துக் கொண்டு ஒரு ஆசிரியை பைபிள் போதனைகளைசொல்லிக்கொண்டு இருந்தார். திடீரென கொள்கை(?) கூட்டத்தின்கும்மாங்குத்து பாடல்களை அங்கு இருந்த அனைத்து பிரம்மாண்டஒலிபெருக்கிகளிலும் அலற விட ஆரம்பித்தார்கள். உடனே ஜெபகூட்டத்தில்இருந்தவர்கள் வெளியே வந்து கொள்கை(?) சகோதர்களிடம், இந்தபாடல்களை கொஞ்ச நேரத்திற்கு நிறுத்தி வையுங்கள், அது எங்களுக்குமிகுந்த தொந்தரவாக இருக்கிறது என முறையிட்டனர்.

ஆனால் அவர்கள் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்வதாகத்தெரியவில்லை. உடனே வேனில் குழந்தைகளுடன் இருந்த ஆசிரியைவெளியே வந்து பாடலை நிறுத்துமாறு அந்தப்பக்கமாக வந்து சென்றுகொண்டிருந்த கொள்கை(?) சகோதரர்களிடம் பல தடவை முறையிட்டார்.எவ்வளவோ கேட்டுக் கொண்டும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகஎவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து பாடல் பயங்கரசப்தத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தது. இதனால் சலிப்படைந்த அந்தஆசிரியை வகுப்பைத் தொடர முடியாமல் வேனின் படிக்கட்டிலேயேஅமர்ந்து விட்டார். கிருஸ்த்துமஸ் வாழ்த்துக்கள் என பேனர் அடித்து ஊர்முழுக்க வைத்தவர்கள், அந்த கிருத்தவ மக்கள் வைத்த நியாயமானகோரிக்கையை கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. கடைசியாக நாம்அந்த ஆசிரியை அருகில் சென்று என்ன நடந்தது என கேட்ட போது, நான்பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் பாடல்களை நிறுத்துவதாகத்தெரியவில்லை, இசை, பாடல்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம்இல்லை என சொல்கிறார்கள் ஆனால் இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்களே எனக்கேட்ட போது நமக்கு சுருக்கென்றது, இதை விட இஸ்லாத்தை யாராலும் கேவலப்படுத்த முடியாத என நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டோம்.

* ஏழைகளின் கட்சி இது SDPI

வருமையை ஒழிக்க வந்த SDP!

என இயக்கத்தின் கொள்கை(?) பாடல்களில் இந்த வரிகள் இடம்பெற்றுஇருந்தன. இந்த வரிகளை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சி அந்த இடத்திலேயே தெளிவாக நிகழ்ந்தது. அங்கு முருக்கு, கடலை,பொறி மற்றும் சுண்டல் என கூடையில் வைத்து விற்பனை செய்வதற்காக வந்திருந்த ஏழை சிறுவியாபாரிகள் மாநாட்டின் உள்ளே சென்று விற்பனை செய்ய அனுமதிக்கப் படவில்லை. கூட்டத்தோடு கலந்து உள்ளே சென்று வியாபாரம் செய்த கூடை வியாபாரிகளை கடும் சொற்களால் அர்ச்சித்து வெளியே அனுப்பினர் கொள்கை(?) கூட்டத்தின் உண்மைத் தொண்டர்கள்.ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் உள்ளே நுழைந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர் அந்த வியாபாரிகள்.. இப்போது மீண்டும் பாடல் வரிகளைப் படியுங்கள்

* சிறு சிறு கூட்டங்களால் பயனில்லை - பறக்கும்

வண்ண வண்ண கொடிகளால் பலனில்லை,

ஒரு குடையின் கீழ் வந்தால் நலமாகும் - நாம் ஒற்றுமை கயிறை

பற்றிப் பிடித்தால் பலமாகும்

இதுவும் கொள்கை(?) கூட்ட மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை(?) பாடல்களில் சிலவரிகள். ஆனால் இவர்களே இந்த வரியை அமுல்படுத்தாமல் ஏன் புதியதாக கட்சி துவக்கினார்கள் என தெரியவில்லை. ஏற்கனவே ஓடாமல் கிடக்கும் பல கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது அந்த வரிசையில் கடைசியாக சமுதாய மானம் காக்க புறப்பட்டு 3 சீட்டுகளைப் பெற்றிருக்கும் மமகவுடன் இணைந்து ஒரு தொகுதியில் போட்டியிடலாம். ஆனால் இவர்கள் தனியாக களம் கானும் காரணத்தை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ததஜ ஒற்றுமையை குலைக்கிறது, ஊரையே பிரிக்கிறது,வாருங்கள் நாமெல்லாம் ஒரு குடையின் கீழ் ஒன்று படுவோம் என ஏற்கனவே இருக்கும் 19 கூட்டத்திற்கு போட்டியாக புதியதாக ஒரு 19கூட்டத்தை உண்டாக்கி தங்கள் ஒற்றுமை பலத்தை நிறுபித்து ததஜவை தடை செய்ய வேண்டும் என போஸ்டர் ஒட்டினார்கள். ஆனால் இந்த ஒற்றுமை வேஷம் கொஞ்ச நாள் கூட நிலைக்கவில்லை. ஆம். அடுத்து வந்த ஹஜ் பெருநாள் தொழுகையை ஆளுக்கு ஒரு விதமாக ஆளுக்கு ஒரு நாளாக கொண்டாடி தங்கள் ஒற்றுமை பலத்தை நிறுபித்தார்கள். இந்த கொள்கை(?) சகோதரர்கள் சவூதியை பின்பற்ற, மற்ற 18 கூட்டமும் தனித்தனியாக தமிழக அரசின் விடுமுறையை பின்பற்ற, ததஜ மட்டும் ரசூலுல்லாஹ்வின் வாய்மொழி அடிப்படையை பின்பற்றியது. இவர்களை அவர்களோ, அவர்களை இவர்களோ விமர்சிக்காமல் இதிலும் ஒன்றினைந்து ததஜவை விமர்சிக்க ஆரம்பித்தார்கள். ஆக இவர்களின் ஒற்றுமை வேஷ‌ம் ததவைத் தாக்குவது என்பதில் மட்டும் தான் என்பது உறுதியாக்கப்பட்டது.

* மாநாட்டில் ஒவ்வொரு தலைவர்களும் பேசும் போது எழுந்த விசில் சப்தமும், கைதட்டல் ஒலிகளும் காதைக் கிழித்தது. இடையிடையே SDPIஜிந்தாபாத், ஜெய் ஹிந்த் என்ற கோசங்களும் எழுந்தன‌. ஒரு கட்டத்தில் மாநில தலைவர் இமாம் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் பேசும் போது எழுந்த கைதட்டலும், விசில் சப்தமும் அடங்குவதற்கு நீண்ட நேரம் ஆகியது. கைதட்டுவதும் விசிலடிப்பதும் நமது கலாச்சாரம் இல்லை என கொஞ்சம் கூட கண்டிக்காமல் அதை அதிகமாகவே ஆமோதித்தார்.

* இமாம் தெஹ்லான் பாகவி அவர்கள் பேசும் போது, மக்களிடம் வாக்குகளையும், அத்தோடு செலவுக்கு காசையும் வாங்க வேண்டும் என தொண்டர்களிடம் கட்டளையிட்டார். ஏற்கனவே பித்ரா காசுகளை வாங்கி ஆட்டையை போட்ட இவர்களுக்கு இப்போது வசூல் செய்ய புதிய வழி கிடைத்து விட்டது என்று தான் நினைக்கத்தோன்றியது.

* மாநில பொதுச்செயலாளர் ரபீக் பேசும் போது, இது சென்னை மண்டல மாநாடு, இங்கே கலந்து கொண்டிருப்பவர்கள் சென்னையைச்சேர்ந்தவர்கள் மட்டுமே என கூறினார். ஆனால் தமிழகத்தின் எல்லா மாவடங்களில் இருந்தும் பஸ்களிலும் வேன்களிலும் மக்கள் வந்திருந்தார்கள் என்பது தான் உண்மை.சென்னையைச் சேர்ந்தவாகனங்களில் மட்டும் பேனர்களைக் கட்டி மற்ற வெளியூர் வாகனங்களில் ஊர் பெயர் குறிப்பிடாமல் வெறும் நம்பர்களை மட்டுமே ஒட்டி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெளியூர் வாகனங்கள்அனைத்தும் மெரினாவில் நிறுத்தப்பட்டிருந்தன. சென்னையில் மட்டுமிருந்தான் மக்கள் வந்திருந்தார்கள் என ரபீக் அவர்கள் பேசியது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதையாக இருந்தது.இப்படிதமிழகம் முழுக்க இருந்து தொண்டர்கள் அணிவகுத்து வந்த போதும் மாநாட்டுத்திடல் பாதியளவு கூட நிரம்பாதது தான் வருத்தத்திற்குரியது.

* மேலும் ரபீக் அவர்கள் பேசும் போது இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் பேனர் கட் அவுட் வைக்கும் போது எங்கள் தலைவர்களில் யார் பெயரையுமோ, படத்தையுமோ போட மாட்டார்கள். யார் பேனர் வைக்கிறார்களோ அவர்கள் படத்தை மட்டும் தான் போட்டுக் கொள்வார்கள் என மேடையில் முழங்கினார். ஆனால் மாநாடு நடந்த பகுதியைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த கட் அவுட்களில் முழுக்க முழுக்க தலைவர்களின் படங்கள் தான் இடம்பெற்று இருந்ததை அவர் எப்படி கவனிக்க மறந்தார் என்பது தான் நமக்குத் தெரியவில்லை.

* ரபீக் அவர்கள் பேசும் போது இந்தக் கூட்டத்திலே எங்காவது ஒரு சிகிரெட் துண்டைப்பார்க்க முடியுமா எனக் கேட்டார். ஆனால் மாநாட்டின் ஒரு பகுதியில் மக்கள் வரிசையாக நின்று "தம்"போட்டுக்கொண்டிருந்ததைக் கொள்கை சகோதரர்கள் அவருக்கு ஏன்தெரிவிக்கவில்லை என்பது தெரியவில்லை.

* நிகழ்ச்சியின் உட்சபட்ச காமெடியாக, ஊரான் வீட்டுப்பிள்ளைக்கு யாரோ பெயர் வைத்த கதையாக‌ கிருத்தவ மிசனுக்கு சொந்தமான YMCA - (Young Men's Christian Association) திடலுக்கு, இவர்கள் காயிதேமில்லத் திடல் என பெயர்வைத்தது தான் பெரிய நகைப்புக்குள்ளாக்கியது. அந்த திடலை இவர்கள் வாடகைக்கு எடுத்தார்களா அல்லது விலைக்கு வாங்கிவிட்டார்களா என்பது தெரியவில்லை. நல்லவேளை இந்த விசயம் அந்த திடல்காரர்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!!!

மாநாட்டு "புகை"படங்கள் :

புண்பட்ட நெஞ்சமடா SDPIயே தஞ்சமடா!சேர் டிக்கெட்ட ஃபுல் பண்ணா தர டிக்கெட்டு காலியாகுது, தர டிக்கெட்ட ஃபுல் பண்ணா சேர் டிக்கெட்டு காலியாகுது. என்ன செய்ய?
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்,

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?????

கஷ்டப்பட்டு பஸ்புடிச்சி மாநாடுக்கு கூட்டிக்கிட்டு வந்து அணிவகுத்து வாங்கன்னு கூப்பிட்டா வந்ததுல பாதிபேர் அண்ணா சமாதிய பாக்கப் போயிட்டா இது தான் கதி. வெளக்கு வச்ச பிறகும் யாரையுமே காணோம். பெருமைக்கு எரும ஓட்டுனா இப்டித்தான்
YMCA மைதானத்துக்கு காயிதேமில்லத் திடல்னு பெயர் வச்சது அந்த திடல்காரங்களுக்கு தெரியுமா?

0 Response to "இஸ்லாத்தை கேலிக்கூத்தாக்கிய SDPI மாநாடு"

Post a Comment

அதிகம் பார்த்தது..