தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகம்

Tuesday, March 1, 2011 8:09 PM Posted by பொய்யன் டிஜே

பதவி ஆசையெல்லாம் அறவே கிடையாது, எங்களுக்கு சமுதாய மானமே முக்கியம் என நம் சமுதாயத்தின் மானம் காக்கப்புறப்பட்ட நம் முன்னாள் சகாக்கள் இன்றைக்கு வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு வாய்கிழிய சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசியலில் நமது சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது, எனவே தான் அதை மீட்க களமிறங்கப்போகிறோம் என களமிறங்கியவர்கள் கேவலப்பட்டு நிற்கிறார்கள். காலங்காலமாக முஸ்லீம் லீக் அல்லது இஸ்லாமிய கட்சிகள் வாங்கி வந்த 4 அல்லது 5சீட்டுக்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ண புறப்பட்டிருக்கும் புதிய படை தான் இந்த கழகம். கலைஞரிடம் அவமானப்பட்டு விட்டு இப்போது ஜெயலலிதாவிடம் பல்லைக்காட்டி 3 சீட்டு பெற்றிருக்கும் கழகத்தினர் யாருக்காக உழைக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. சமுதாயத்தை அடகுவைத்து எங்களின் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இவ்வளவு பிரதி நிதித்துவம் போதும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் மமகவினர். அப்படியே 3 இடங்களில் போட்டியிட்டாலும் அது நிச்சயமாக எதிர்கட்சியில் முஸ்லீம்கள் நிறுத்தப்படும் தொகுதியாகத்தான் இருக்குமே தவிர இவர்கள் போய் புதிதாக முஸ்லீம்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தி விடப்போவதில்லை.

தூய தவ்ஹீத் கொள்கை தான் கழகத்தின் வளர்ச்சிக்குத் தடை, எனவே நீங்கள் இருக்கும் வரை நாங்கள் கல்லா கட்டமுடியாது, எனவே உங்கள் ஓரிறைக் கொள்கையை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறிவிடுங்கள் என அன்றைக்கே தன் சுய நலத்திற்காக தவ்ஹீது கொள்கையை கைகழுவிய இந்தக் கூட்டம் இன்றைக்கு சமுதாய மானம் காக்க தேர்தல் நிதி கேட்டு நிற்கிறது. ஒரு நல்ல‌ அமைப்பின் செயல்பாட்டுக்கு நிதி தரலாம், ஏதேனும் பள்ளிவாசல் அமைப்பதற்கு நிதி தரலாம், மக்களுக்கு பயன் தரக்கூடிய காரியங்களுக்கு நிதி தரலாம்,சமுதாய நலன் சார்ந்த போரட்டங்களுக்கு நிதி தரலாம். ஆனால் ஒரு தனி நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிதி தருவதற்கு மக்களுக்கு என்ன வந்தது? மக்களையெல்லாம் கேணயர்களாக்கி மடையர்களாக்குவதை யாரால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்?

நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு உங்களின் பல நாள் லட்சியத்தை அடைவதற்கு நாங்கள் ஏன் நிதி தர வேண்டும்? சாதாரணமாக கேட்டுப்பார்ப்பீர்கள், தராவிட்டால் உங்கள் வழக்கமான கட்டப்பஞ்சாயத்து பாணியில் மிரட்டிக்கேட்பீர்கள். இதெல்லாம் மக்களின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தர பொதுச்செயலாளருக்கும் தேர்தலில் நிற்க ஆசையிருந்தால் உங்கள் சொந்த சொத்துக்களை விற்று அந்த ‍பணத்தில் போட்டியிடுங்கள் . அதை விடுத்து மக்களிடம் வசூல் செய்து அவர்கள் பணத்தில் போட்டிடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்? அதனால் வெற்றியடைந்தால் உங்களுக்குத் தான் லாபம்,தோல்வியடைந்தாலும் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. காரணம் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி இரவு பகலாக உழைத்து உங்கள் வெற்றிக்கு போராடக்கூடியவன் அப்பாவித் தொன்டன் தானே!

உங்கள் அரசியல் நிலையை மக்கள் என்ன அறியாமலா இருக்கிறார்கள்?நீங்கள் எப்படியெல்லாம் அரசியல் செய்வீர்கள் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால்m,உங்களின் செயல்பாட்டினால் வெறுத்துப் போன, உங்களின் அறிவுரையால் அல்லாஹ்வின் ஆலயத்தை மூடுவதற்கு முழுமூச்சாய் பங்காற்றிய அதே ஊரைச்சார்ந்த உங்கள் இயக்கத்தின் முன்னாள் தங்கமுட்டையிடும் வாத்தாய் இருந்தவர், இன்றைக்கு ஆளும் கட்சியில் இருக்கிறாரா இல்லையா?

உங்கள் நிலையை என்ன மக்கள் உணராமலா இருக்கிறார்கள்? நாம் வாழும் தமிழ்நாட்டில் நமக்கு இட ஒதுக்கீடு தர வேண்டுமானால் அது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் நிச்சயமாக முடியும் என தெரிந்தும் நீங்கள் இங்கே கேட்டால் எங்கே கூட்டணிக்கு ஆபத்து வந்து விடுமோ எனக் கருதி உங்களின் போராட்டக் களத்தை டெல்லிக்கு மாற்றினீர்கள். தாம்பரத்திலே நடத்தப்பட்ட ஒரே ஒரு கண்துடைப்பு மாநாட்டைத் தவிர வேறு ஏதேனும் போரட்டம் நடத்தினீர்களா? இல்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் விலைபோகாத, வீரியமான, அரசுக்கு இம்சை தரக்கூடிய போராட்டங்கள் குறிப்பாக சிறை நிரப்பும் போராட்டம் காரணமாக வேறு வழியில்லாமல் ததஜ நிர்வாகிகளை அழைத்து இவர்கள் வகுத்து வைத்திருந்த முறைப்படி 3.5% இட ஒதுக்கீட்டை வழங்கியது தமிழக அரசு. இதை நாங்கள் சொல்லவில்லை. இந்த இயக்கத்தில் இருந்து மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டால் வெளியேற்றப்பட்டு இன்றைக்கு உங்களுக்கு விசிறி வீசிக்கொண்டிருக்கிறாரே! அவர் சொன்னது.

நீங்கள் என்ன செய்தீர்கள்? மனிதனுக்கு நன்றி செய்யாதவன் இறைவனுக்கு நன்றி செய்தவன் ஆக மாட்டான் என பேனரை வைத்து நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞருக்கு துதி பாடி பாராட்டு விழா நடத்தினீர்கள். அதுவும் நீங்கள் சீட்டுப் பொருக்குவதற்காக.

இடஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கிறது என கருணாநிதியே ஒப்புகொண்டும்,அதெல்லாம் இல்லை ரோஸ்டர் முறை தான் சரியானது என சப்பைக்கட்டு கட்டினீர்கள். வக்ப் வாரிய தலைவராக இருக்கும் போது ஆளும் கட்சியினர் மற்றும் சில தனியார்கள் செய்த‌ முறைகேடுகளை கண்டும் காணாமலும் விட்டு விட்டீர்கள். எவ்வளவு வக்பு நில ஆக்கிரமிப்பு, மதுரை வக்ப் கல்லூரி பணி நியமணத்தில் நடந்த கொடுமை இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து விட்டு கடைசியில் கருணாநிதி உங்களை வெளியேற்றியதும், சமுதாய மானம் காக்க உங்களின் வக்ப் தலைவர் பத‌வியை ராஜினாமா செய்தீர்கள், இடஒதுக்கீட்டில் குறைபாடு என்றீர்கள்,தனியாக போட்டியிட்டு ஆளும்கட்சியை மண்ணைக் கவ்வ வைப்பதாக கூறினீர்கள். கடைசியில் மண்ணைக் கவ்வியது யார் என்பது நாடே அறிந்த விசயம்.

இப்போது மறுபடியும் மானம் காக்க அம்மாவுடன் கூட்டணி. 3 சீட்டுக்களைப் பெற்றது ராஜதந்திரம் என சப்பைக்கட்டு கட்டும் தலைவர் அவர்களே! எங்களுக்கு பதவி முக்கியமில்லை, சமுதாய நலன் தான் முக்கியம் என நீங்கள் அன்றைக்கு பேசிய பேச்சுக்கும், அரசியலில் சட்டசபையில் பிரதி நிதித்துவம் பெறுவது தான் முக்கியம் என இன்றைக்கு பேசும் பேச்சுக்கு கொஞ்சம் கூட பொருந்திப் போகவில்லையே! சுய நினைவோடு அல்லது சுயசிந்தனையோடு தான் பேசுகிறீர்களா?

கடைசியாக ஒன்று. நீங்கள் உண்மையிலேயே சமுதாய மானம் காக்க புறப்பட்டது உண்மையானால் நீங்களும், ஜனாப் ஹைதர் அவர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து தமுமுகவில் இருக்கும் எத்தனையோ படித்த துடிப்பு மிக்க இளைஞர்கள் குறிப்பாக வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்களை வரும் தேர்தலில் நிறுத்தி அவர்களுக்கு வெளியே இருந்து வழிகாட்ட‌ உங்களுக்கு திராணியிருக்கிறதா?

பொதுவாக நாடாளுமன்ற‌ தேர்த‌லுக்கு த‌ங்க‌ளை வேட்பாளராக‌ த‌குதியாக்கிக் கொண்டவ‌ர்க‌ள் திரும்ப ச‌ட்ட‌ம‌ன்ற‌த் தேர்த‌லில் போட்டியிட‌ வெட்கப்படுவார்கள் . அதேபோல க‌ழ‌க‌த்தின் த‌லைவ‌ரும்,பொதுச்செய‌லாள‌ரும் ஏற்க‌னவே நாட‌ளும‌ன்ற‌ வேட்பாள‌ர்க‌ளாக‌ த‌குதிய‌டைந்து விட்டார்க‌ள், என‌வே அவ‌ர்க‌ள் இனிமேல் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்தலில் போட்டியிட‌ மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு பதவி ஆசை என்பது துளியும் கிடையாது என‌ க‌ழ‌க‌த்தின் உண்மைத் தொண்‌ட‌ர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அதுமட்டுமின்றி கழகத்தில் தகுதியுடைய நிறைய பேர் வேட்பாளர்களாக காத்திருக்கிறார்கள். எனவே கழகத்தின் தலைவரும், பொதுச்செயலாளரும் அவர்களுக்கு வழிவிட்டு இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய ஆசை அல்ல, உங்களுடைய கழகக் கண்மணிகளின் ஆசை.

காரணம் உங்களுடைய வழிகாட்டுதல் தமுமுகவிற்கு தேவை என அவர்கள் நினைக்கிறார்கள். ஏற்கனவே 3 சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை, தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகமாக மாற்றி விட்டீர்கள் என்ற கோபத்தில் இருக்கிறார்கள் உங்களுடைய தொண்டர்கள். அப்படிப்பட்ட உண்மைத் தொண்டர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தாமல் உங்கள் கழகத்தில் இருக்கும் நல்ல அறிவாளிகள் மற்றும் படிப்பாளிகளை முன்னிறுத்தி நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள். ஆனால் இது நடக்குமா? இதை அமல்படுத்தி உங்களுக்கு பதவி ஆசை இல்லை என நிறுபிக்க முடியுமா? திருச்சியில் இருந்து பல்லவனாக வரும் ரயில் சென்னையிலிருந்து வைகையாக திரும்பிப் போவதைப் போல தவழ்ந்து வந்தால் தமுமுக, மானம் காக்க வந்தால் அது மமக‌ என மக்களை இரட்டைபணி செய்பவர்களாக ஆக்கியிருக்கிறீர்கள்.

வந்து போகும் ரயிலுக்குத் தெரியாது, அது என்ன பெயரில் செயல்படுகிறது என்று. ஆனால் தமுமுகவில் இருக்கும் எத்தனைத் தொண்டர்களுக்கு மமக மீது ‍பற்று இருக்கிறது. பொதுக்குழுவில் கூட அவர்களின் கருத்துக்கு வாய்ப்புத் தராமல் நீங்கள் எழுதிக்கொண்டு வந்த தீர்மானங்களை வாசித்து விட்டு போய் விடுகிறீர்கள். உங்களின் பதவிக்காலம் எவ்வித நிபந்தனையும் இன்றி ஒரு வருட காலம் நீட்டிப்பதற்கு எத்தனை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கைதூக்கினார்கள் என்பதை, தேவைப்பட்டால் பொதுக்குழு வீடியோவை ஒருமுறை முழுமையாகப் பார்த்து தெரிந்து கொள்ளுதல் நலம். இனியாவது உங்களின் தொண்டர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். பாவம் உங்களை நம்பி நிற்கும் அப்பாவித் தொண்டர்கள்.

1 Response to "தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகம்"

 1. Mohamed Says:

  Dear Islam Brothers

  Assalamu Alaikkum

  Kindly co-operative each other in the assemlbly election and prove ourself we are one religion we are are unique muslims kindly avoid the indecent command and try to serve to our community or kindly try to make a DUA TO ALLAH for unity in our future.

  Wassalam.

  Best regards / Mohamed Malik / Bahrain

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை