மமகவும் வாழைப்பழமும்

Friday, March 4, 2011 1:17 AM Posted by பொய்யன் டிஜே

ம.ம.க வினருக்கு வழைப்பழச் சின்னம் ஞாபகமிருக்கிறதா?

மமக வினர் தற்போது அதிமுக விடத்தில் மூன்று சீட்டுகளை வாங்கிக்கொண்டு கேவலப்பட்டு நிற்கும் வேளையில் தங்களது அந்த கேவலத்தை மறைப்பதற்கு பயங்கரமான பில்டப்புகளை கொடுத்து வருகின்றனர்.

பில்டப் நம்பர்: 1

20 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் அரசியல் அரசியல் அரங்கில் எழுச்சியாம் (?)

மேற்கண்டவாறு தங்களது முதல் பில்டப்பை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

சீட்டுக்காக நாங்கள் எத்தகைய கேவலத்தனத்தையும் அனுபவிக்கத்தயார் என்று இந்த அளவுக்கு கீழ்நிலையில் இறங்கிவிட்டு தற்போது அதிமுக விடத்தில் 3 சீட்டுகளை வாங்கிவிட்டு அது மாபெரும் எழுச்சி என்று கூறுகின்றார்களே! இவர்களுக்கு சென்ற தேர்தலில் வாழைப்பழ சின்னத்தில் கலைஞரை எதிர்த்து போட்டியிட்டாரே அந்த சகோதரரை ஞாபகப்படுத்துகின்றோம்.

இவர்கள் தங்கள் இயக்கம் தமிழகம் முழுக்க கொடிகட்டி பறக்கின்றது(?) என்று கூறிக்கொண்டு 3 சீட்டுகளுக்காக தங்களது மானத்தை அடகுவைத்து நிற்கும் இவ்வேளையில் கடந்த தேர்தலில் காயிதே மில்லத் அவர்களின் பேரன் தாவூத் மியாகான் அதிமுக அணியில் தனிஆளாக இருந்து ஒரு தொகுதியைப்பெற்று தனிச்சின்னத்தில் அதாவது வாழைப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். அப்படியானால், இவ்வளவு பெரிய(?) பேரியக்கமாக இருந்த்து கொண்டு 3தொகுதி பெற்று கேவலப்படுவதே மாபெரும் எழுச்சி என்றால், தனியொரு ஆளாக இருந்து தாவூத் மியாகான் அவர்கள் அதிமுக அணியில் ஒருதொகுதியை பெற்றாரே அது மாபெரும் மகத்தான எழுச்சி என்று ஏன் இவர்கள் சென்ற தேர்தலில் சொல்லவில்லை. தாவூத் மியாகானையும் வாழைப்பழ சின்னத்தையும் மமகட்சியினர் மறந்திருந்தாலும், மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பில்டப் நம்பர் 2:

3தொகுதியை பெற்று மகத்தான எழுச்சி கண்ட மமகவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிகின்றதாம்!

இதுதான் அவர்களது இரண்டாவது பில்டப்.

இந்த அளவிற்கு மானம் கெட்டு கேவலப்பட்டு மரியாதையை விற்றுவிட்டு நிற்கிறீர்களே என சமுதாய மக்கள் இவர்களை காரித்துப்புவது இவர்களுக்கு வாழ்த்துக்களாகவும், பாராட்டுக்களாகவும் தெரிந்தால் நாம் என்ன செய்வது?

பில்டப் 3:

தமிழகத்தில் 3 தொகுதிகளும், பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியையும் அதிமுக எங்களுக்கு ஒதுக்கியுள்ளது.

தங்களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதாக சொல்வதிலும் இவர்கள் எத்தகைய பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்கள் என்பதை நாம் சமுதாய மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்கட்ட கடமைப்பட்டுள்ளோம்.

இவர்கள் தங்களது பத்திரிக்கையில் அதிமுக வுடனான ஒப்பந்தப்பத்திரத்தை வெளியிடவில்லை. வெளியிட்டால் இவர்கள் சொல்லும் பொய்கள் உலகுக்கு அம்பலமாகிவிடும் என்பதால் அதை மறைத்துள்ளனர்.

அந்த ஒப்பந்தப்பத்திரத்தை நாம் வெளியிடுகின்றோம். இவர்கள் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி தங்களுக்கு ஒதுக்குவதாக அதிமுக தலைமை சொன்னது என்று வாயாலேயே தான் வண்டி ஓட்டியுள்ளார்களே தவிர! அந்த ஒப்பந்தப் பத்திரத்தையில் அதைப்பற்றி எந்தவிதமான எழுத்துமானமும் இல்லை. அதிலும் இவர்கள் கேவலப்பட்டுதான் நிற்கிறார்கள். அந்த விஷயத்தையும் மறைத்துவிட்டுத்தான் 3+1 = 4 என்று தாங்களும் மடையர்களாகி தாங்கள் மடையர்களானதை மறைக்க மக்களையும் மடையர்களாக்கப்பார்க்கிறார்கள். சமுதாயம் இந்த துரோகிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்

பரிசுக்கேள்வி:

அதிமுகவுக்கு மமகவுக்கும் ஏற்பட்ட தொகுதி உடன்பாட்டு அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு. இந்த உடன்பாட்டுப் பத்திரத்தில் பாண்டிச்சேரியில் ஒரு சீட் மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற வாசகத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையும், பாண்டிச்சேரியை சுற்றிப்பார்க்க மூன்று நாட்கள் இலவச பயணப்படியும் வழங்கப்படும்.

குறிப்பு: இந்தப் போட்டியில் பொதுமக்கள்,மமகவின் தொண்டர்கள், மமக சார்பாக மானம் காக்க கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பரிசு உடனடியாக வழங்கப்படும்.

0 Response to "மமகவும் வாழைப்பழமும்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை