ஏன் இந்த அவசரம்? பேரம் படிந்து விட்டதோ?

Monday, March 14, 2011 9:32 PM Posted by பொய்யன் டிஜே

அண்னன் ஜமாத்தில் பொதுக்குழுவிலும் தேர்தல் நிலைபாடு எடுக்கப்படவில்லை, அதேபோல செயற்குழுவிலும் தேர்தல் நிலைபாடு எடுக்கப்படவில்லை. ஏன் இன்னமும் பேரம் படியவில்லையோ? எனக் கேள்வி கேட்டிருக்கும் நம்மீது நம்மை விட அதிக அக்கறை கொண்டு பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு திரியும் அன்புக்கண்மணிகளுக்கு நாம் இங்கே விளக்கம் கொடுக்க வேண்டியது இருக்கிறது. அந்த வேலையற்ற வீணர்களுக்குத் தான் வேலையே இல்லை. என்னேரமும் ஓசி இன்டர்நெட்டில் உக்கார்ந்து கொண்டு வின்டிவியில் அடித்த காசை தலைவன் வாரி இறைக்க அதைப்பெற்றுக்கொண்டு வசைபாடுவதையே முழு நேரத்தொழிலாகக் கொண்டு திரியும் இவர்களுக்கு நாம் எக்ஸ்ட்ரா டைம் போட்டுத்தான் இதை சொல்லித்தொலைக்க வேண்டியிருகிறது.

பெட்டி,அல்லது 3 சீட்டு வேண்டும் என்று யாரிடமாவது ததஜ கேட்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்துக்கும், செங்கொட்டையனுக்கும் தூது மேல் தூது விட்டு , அண்ணே! நம்ம அப்பாயின்மெண்ட கொஞ்சம் அம்மாகிட்ட ஞாபகப்படுத்துங்க என சொல்லி சொல்லியே 3 மாசம் தவமாய்த் தவமிருந்து கடைசியில் பல்பொடி விளம்பரத்துக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை....

அல்லது ஒரு மேடை போட்டு ஒரு அமைப்பை மானங்கெட்டவர்களே! வெக்கங்கெட்டவர்களே! சமுதாயத்தை அடகுவைத்து 3 சீட்டு வாங்கியவர்களே! எங்களையும் கூட்டிக்கிட்டு போனா நாங்க என்ன ஒரு சீட்டா கேட்டுறுவோம்! நீங்க திருவல்லிக்கேணியில திமுக ஆட்களால குமுறக்குமுற அடிவாங்குன போது அதுக்கு சப்போர்ட் பண்ண நாங்க வேணும், ஆனா நாங்க நடத்துன உயர் நீதிமன்ற முற்றுகையில் கலந்து கொள்ள உங்கள் இயக்கத்தில் ஒரு பிரதிநிதி கூட இல்லையா?நீங்களெல்லாம் சமுதாய மானம் காப்பவர்களா என காய்ச்சி எடுத்து விட்டு கடைசியில் அவர்கள் உங்களை நல்லா "கவனிக்கிறோம்" என சொன்னதும் வாத்தியாரை உக்கார வச்சி போட்டோ எடுத்துக்கிட்டு, ஹிஹிஹிஹி நாங்க அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணந்தம்பிகதேன்.. என் அல்டாப்பு விடுவதாய் இருந்தாலும் பேரம் படிந்திருக்கும் என சொல்லலாமா.

ஆனால் சமுதாயத்திற்கு யார் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருகிறாரோ அவருக்குத்தான் வாக்கு என காலந்தாழ்த்தி கலந்தாலோசிப்பதன் பெயர் தான் உங்கள் பாணியில் ததஜ‌ மேல் சுமத்தப்படும் பேரத்தின் அர்த்தம். இப்ப நாங்க ஒன்னு கேக்குறோம்.

அது ஏனப்பா தெருவுக்கு ஒரு பேச்சு பேசிக்கிட்டு அலையிறீக! தம்புச்செட்டி தெருவுல கூட்டம் போடும் போது ஒரு பேச்சு, லிங்கிச்செட்டி தெருவில் ஒரு பேச்சு, அங்கப்ப நாயக்கன் தெருவில் ஒருபேச்சு என தெருவுகு ஒன்னா! ஜமாத்தில தான் கொள்கையும் இல்ல, பைலாவும் இல்ல. அட்லீஸ்ட் பேச்சிலையாவது சுத்தம் இருக்கனும்ல. மார்ச் 30 ஆம் தேதி தானப்பா பொதுக்குழுன்னு சொன்னீக, அப்றம் வாத்தியாரு சந்திச்சிட்டு போன பெறகு திடீர்னு ஏனப்பா மார்ச் 15 க்கு மாத்துனீக! உங்க பாசையில் சொல்லனும்னா பேரம் ‍படிஞ்சிருச்சோ! உங்களத்தான் யாருமே சீண்டலையே! வாத்தியாரு மாதிரி இத்துப்போன ஆளுக தான் நீங்க அவிகள என்னத்த திட்டினாலும் ஈன்னு பல்லக்காட்டிக்கிட்டே வந்து ஆதரவு கேப்பாக!

அதெல்லாம் சரி! பொதுக்குழு விசயத்துக்கு வரலாம். ஏன் திடீர்னு 15 நாள் முன்ன தள்ளுனீயன்னு நீங்க தான் சொல்லனும். தமிழகத்தில் ஒன்னு திமுக ஆட்சிக்கு வரும் இல்லாட்டி அதிமுக ஆட்சிக்கு வரும். அதனால தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் சமுதாயப்பணியாற்றி களைத்துப்போன சமுதாயத்தின் சிறந்த தலைவர் நீங்க இடஒதுக்கீடு கேட்டு அம்மாவுக்கும் மட்டும் கடிதம் எழுதியது என்ன காரணம்? கலைஞருக்கு ஏன் எழுதவில்லை? ஆக உங்கள் நிலைபாடு அன்றைக்கே உறுதியாகிவிட்ட நிலையில் பின்ன என்னத்துக்கு பொதுக்குழு?

சரி போனா போவுது. அதான் பேரம் படிஞ்சிருச்சில்ல. இருந்தாலும் பொதுக்குழுவில் என்ன மாதிரி தீர்மாணம் போடலாம் என்பதற்கு சில மாதிரிகள்

* நம் சமுதாயம் மானம் காக்கப் புறப்பட்டுப் போய் மானமிழந்து வெறும் 3சீட்டுக்கு பல்லைக்காட்டி பல்பொடி விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த கழகத்தின் நிரந்தரத் தலைவரை, பாஜக காரன் கூட சொல்லத்தயங்கும் மண்ணைக்கவ்வ வைப்போம் என்ற கோசத்தை வைத்த அண்ணன் ஜமாத்தை இந்தப் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

* என்னதான் 3 சீட்டுக்கு மானமிழந்தாலும், நாம் மேடை போட்டு இவர்களை படுகேவலப்படுத்தினாலும் அதையெல்லாம் மறந்து எங்களை எப்படியாவது கரையேத்துங்க, நானும் பொதுச்செயலாளரும் ஜெயிச்சிட்டா போதும் என்ற ரீதியில் நம்மிடத்துக்கே நேரிலே வந்து குமுறிக்குமுறி அழுத வாத்தியார் மீது இர‌க்கம் காட்டும் விதமாக வருகின்ற தேர்தலில் அவர்களுக்காக சூறாவளி சுழல் பிரச்சாரம் செய்ய நமது பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது

* கள்ள பைலா வைத்து காலத்தை ஓட்டியதை கையும் களவுமாக கண்டுபிடித்த கூட்டத்தை நம் ஜமாத் கண்டிக்கிறது. அதே நேரம் நம் இயக்கத்துக்கு இன்று வரை ஒரு பைலா இல்லையே என்பதை கருத்தில் கொண்டு விரைவிலேயே 10 பேர் கொண்ட குழு அமைத்து ஒரு பைலாவை தயார் செய்து பைலா பற்றி கேட்டு தொந்தரவு செய்பவர்கள் முகத்தில் கரியை பூசுவது என இந்த பொதுக்குழு முடிவுசெய்கிறது

* கொஞ்சம் கூட சிந்தனை திறனும், அறிவும் இல்லாதவர்களெல்லாம் நம் ஜமாத்தின் முக்கிய பொருப்புகளில் வீற்றிருப்பதைக் கண்டு இந்த பொதுக்குழு கவலை கொள்கிறது. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு அதற்கென தனி ஆசிரியரை இல்லை இல்லை நம் சகோதரர்கள் வேண்டுகோளுக்கிணங்க பெண் ஆசிரியையை நியமிக்க இந்த பொதுக்குழு பரிந்துரை செய்கிறது

* பைலா இல்லாத காரணத்தால் இப்போது இருக்கும் மாநில நிர்வாகிகளே காலத்துக்கும் நீடிப்பார்கள் என இப்பொதுக்குழு தீர்மாணிக்கிறது.

* குவைத் எண்ணெய் வயல் விவகாரத்தில் அண்ணன் ஜமாத் இவ்வளவு தெளிவாக பதில் கொடுத்தும் அதையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இன்னும் பதில் தரவில்லை இன்னும் பதில் தரவில்லை என ஒரு முழு பைத்தியத்திற்கு ஈடாக கூக்குரலிட்டு நாம் சொல்வது தான் சரி என மக்களை நம்ப வைக்க விடிய விடிய தூக்கம் விட்டு யோசித்து ஏதாவது ஒன்றை உளறிவைத்து வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டு கதவிடுக்கில் மாட்டிய எலி போல தவிக்கும் அப்துல் முஹைமீனை இந்தப் பொதுக்குழு பாராட்டுகிறது. அவர் விரைவில் குணமடைய இந்த பொதுக்குழு பிரார்த்திக்கிறது

0 Response to "ஏன் இந்த அவசரம்? பேரம் படிந்து விட்டதோ?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை