வாத்தியாரும், ஹைதரும் போட்டியிட மாட்டார்கள். மாணவர் அணி தரும் பரபரப்புச் செய்தி

Saturday, March 19, 2011 5:49 AM Posted by பொய்யன் டிஜே

வரக்கூடிய தேர்தலில் மமகவின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் தமுமுகவின் மாநிலத் தலைமையில் நடந்தது. இந்தகூட்டத்தில் தமுமுக மற்றும் மமகவின் முக்கியப்பொருப்பாளர்கள் மற்றும் அணியினர் கலந்து கொண்டார்களாம். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமுமுக மற்றும் மமகவின் செயல்பாடுகள் வரும் தேர்தலில் எப்படி இருக்க வேண்டும் என்ற ரீதியில் கலந்துரையாடல் நடந்திருக்கிறது.

இந்தக்கலந்துரையாடலின் போது வரும் தேர்தலில் கழகத்தின் நிரந்தரத் தலைவரையும், நிரந்தர பொதுச்செயலாளரையும் எப்படியாவது எம்எல்ஏ ஆக்கிவிடவேண்டும் என்பதற்காக இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அஇஅதிமுக கூட்டணிக்கு 234 தொகுதிகளிலும் கடுமையாக பாடுபட்டு உழைப்பது என்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட்டதாம்.(பாவம்! இஸ்லாமிய சமுதாயம் 3 வாங்கிக்கொண்டு 300க்கு உழைக்கும் என்ற கேவல நிலையை உருவாக்கி விட்டார்கள் இந்த மமவினர்)

மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் கலந்து கொண்டவர்களின் வாதங்கள் மிகக் கடுமையாக இருந்ததாம். அதாவது நீங்கள் வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு நம் சமுதாயத்திற்கே பெரிய தலைகுணிவை ஏற்படுத்தி விட்டீர்களே என்ற ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்களாம்.(பரவாயில்லை தமுமுக தொண்டர்கள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்) ஆனால் தமுமுகவின் நிரந்தரத் தலைவரும் நிரந்தரப் பொதுச்செயலாளரும் ரோஸ்டர் முறையை எப்படி நியாயப்படுத்தினார்களோ அதே போல சொந்தச்சின்னம் என்ற கருத்தை முன்வைத்து அவர்களைக் கூல் படுத்தினார்களாம்., இதை ஒப்புக்கொண்ட மாணவர் அணியினரும் வழக்கறிஞர் அணியினரும் தமுமுகவின் வெப்சைட்டில் கழகம் 3 சீட்டுக்கள் பெற்றதற்கு ஆதரவாக வந்த வெறும் 7 கருத்துகளை மட்டுமே தான் வெளியிட்டீர்கள், ஆனால் நீங்கள் 3 சீட்டு வாங்கியதற்கு எதிராக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துக்களை ஏன் வெளியிடவில்லை எனக் கேட்டார்களாம். இந்த இடத்தில் விழி பிதுங்கி தலைவரும், பொதுச்செயலாளரும் விழிக்க , நிலைமையை உணர்ந்த தமீம் அன்சாரி ஒருவகையாய் சமாளித்தாராம்.

அதாவது எதிரிகள் (வேற யாரு?) கூட தவறான கருத்துக்களைப் பதிவுசெய்யலாம், பதிவும் செய்கிறார்கள்.,ஆகவே இதை நாங்கள் முறைப்படுத்தினோம் என்றார்களாம். உடனே பதில் தாக்குதல் நடத்திய மாணவர் அணியினர், நம் வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு செய்திக்கும் எவ்வித கருத்துக்களையும் நீங்கள் வெளியிடுவதில்லை, இதைப்பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நீங்கள் ஏன் அறியவில்லை எனக் கேட்டார்களாம். அதையும் பூசி மெழுகிய அன்சாரி, உங்கள் தொகுதியில் வசூல் நிலவரம் எப்படி என்பதை கேட்க, இடைமறித்த மாணவர் அணியினர் எங்களுக்கு தேர்தல் குறித்து இன்னமும் பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்களாம். அனுமதி வழங்கப்பட்டவுடன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாம் கழகக்குழு.

அதாவது வரும் தேர்தலில் மாணவர் அணி சார்பில் ஒருவரும், வழக்கறிஞர் அணி சார்பில் ஒருவரும் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்களாம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமா குழுவினர் ஒரு ரகசிய செய்தியைப் போட்டு உடைத்தார்களாம். அதாவது சென்ற முறை வர்த்தகர் அணியில் தங்க முட்டையிடும் வாத்தாய் இருந்த பள்ளிவாசல் மூடிய ஊர்காரரை கழகம் கண்டுகொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் தான் ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டார். அவரைப் போல இனி யாரும் கழகத்தைவிட்டு கழன்று விடக்கூடாது என்பதற்காக இம்முறை வர்த்தகர் அணிக்கு ஒரு சீட்டு ஒதுக்குவது என கழகம் முடிவெடுத்திருக்கிறது.

எனவே மிச்சமிருப்பது இரண்டு சீட்டு தான் (ஒன்னு உனக்க்க்க்கு, இன்னொன்னு எனக்க்க்க்கு). எனவே இனி வேறு நபர்களுக்கு ஒதுக்குவது சிரமம் என நிரந்தர தலைவர் விளக்க, தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்த மாணவர் அணியினர் முடியவே முடியாது என சொல்லியிருக்கின்றனர். அத்தோடு பேசிய அவர்கள் நீங்களும், பொதுச்செயலாளரும் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் போட்டுயிட்டு விட்டீர்கள். எனவே நீங்கள் திரும்ப சட்டமன்றத்திற்கு போட்டியிடுவது தகுதி குறைவாக இருக்கும். அத்தோடு கழகத்திற்கு வரும் பதவிகளை எல்லாம் நீங்கள் மட்டுமே அனுபவிக்கிறீர்கள், இதனால் தான் உங்களை எதிரிகள் பதவி வெறி பிடித்தவர்கள் என தூற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி ஐநா சபையிலேயே ஆங்கில புலமையாற்றிய நீங்கள் தான் நாடாளுமன்றம் போக மிகத்தகுதியான நபர் (கழகத்தின் நிரந்தரத் தலைவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதாவது நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஊருக்கு ஊர் சென்று மீட்டிங் போட்டார். அதிலே அவர் பேசிய பேச்சுக்கள், " " நாடாளுமன்றத்திற்குச் சென்று நம்முடைய குறைகளை ”Mr.Prime Minister, What about our Reservation?”என்று ஆங்கிலத்திலே கேட்பதற்கு ஆள் இல்லையே! என்று சொன்னாரு.

அப்ப நாம நெனச்சோம், சே! தலைவர் இன்னாமா பீல் பண்ணி கூவுறாருன்னு, அப்பறம் தான தெரிஞ்சது ,அந்த இங்கிலிபீசு பேசுற ஆளுன்னு அவரத்தான் சொன்னாருன்னு) எனவே நீங்கள் தான் நாடாளுமன்றம் செல்லத் தகுதியான நபர். அதுமட்டுமின்றி உங்கள் மற்றும் பொதுச்செயலாளரின் வழிகாட்டுதல் கழகத்திற்கு அவசியம் தேவை. எனவே நீங்கள் வெளியே இருந்து வழிகாட்டினால் தான் எங்களைப் போன்ற இளைஞர்கள் நாளை இந்தக் கழகத்தைக் கட்டிக்காகக் இயலும் எனவும் வலியுறுத்தினார்களாம். இதைக்கேட்டு நிரந்தர தலைவரும், பொதுச்செயலாளரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே அமைதி காக்க ஆடிப்போனதாம் கழகத்தின் சபை.

நீண்ட நேர மௌணத்திற்கு பிறகு இதைப்பற்றி இஷா தொழுகைக்குப் பின் முடிவெடுக்கலாம் என்ற ரீதியில் பெருந்தலைகள் இழுத்துவிட, மாணவர் அணியும், வழக்கறிஞர் அணியும் இஷா தொழுகை வரை காத்திருந்ததாம். ஆனால் இஷா முடிந்தும் ஒரு முடிவை அறிவிக்காமல் காலம் கடந்து செல்லவே கடைசியில் நாளை முடிவு சொல்கிறோம் என கழகத்தினர் இவர்களை அனுப்பிவைத்தார்களாம். இதற்கிடையில் இரவோடு இரவாக மாணவர் அணியைச் சார்ந்த சிறந்த நிர்வாகி பொருள் வரும் பெயர் கொண்டவருக்கு போன் போட்டு, என்னப்பா இப்படி பண்றீங்க, உங்க முடிவை மாத்துங்கப்பா என பொதுச்செயலாளர் பேச, இல்லண்ணே! பசங்க எல்லாம் ரொம்பவே காட்டமாஆஆ இருக்காங்க, நீயூ காலேஜில வேற இப்ப ஏதோ கூட்டம் போடுறாங்களாம், இந்த முடிவை நம்ம மாற்றிக்கொண்டால் நாம் மாணவர் அணியை இழக்க வேண்டி வரும் என சொல்ல, அதிர்ந்து போன கழகத்தின் நிரந்தர தலைவரும், பொதுச்செயலாளரும், வழக்கறிஞர் அணியைத் தொடர்பு கொள்ள அங்கே கடைசிவரை தொடர்பு கிடைக்கவேயில்லையாம்.

ஒரு வகையாய் மறுநாள் காலை 10 மணிக்கே மாணவர் அணியும், வழக்கறிஞர் அணியும் தலைமைக்கு வந்து சேர அவர்களை மசூரா அறையில் அமரவைத்து விட்டு பல‌ மணி நேரங்களுக்குப்பிறகு அவர்களை சந்திக்க ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்களாம். மீண்டும் ஒருமுறை அவர்களிடம், அறிமுகமான முகமாக இருந்தால் நல்ல வாக்குகள் கிடைக்கும் அதனால் தான் கழகத்தின் நிரந்தர தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட விரும்புகிறார்கள் என மமகவின் தலைவர் சால்ஜாப்பு சொல்ல, கடைசிவரை மறுத்தார்களாம் மாணவர் அணியும் வழக்கறிஞர் அணியும். நேரம் நீண்டு கொண்டே செல்ல இறுதியில் நாளை வாருங்கள் பேசிக்கொள்ளலாம், நாங்கள் அம்மாவிடம் சென்று அட்னன்ஸ் போட்டால் தான் எந்தெந்த தொகுதி கிடைக்கும் என்பது தெரியும் என கழகத்தின் நிதவும் நிபொவும் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல், இன்றைக்கே முடிவைச்சொல்லுங்கள் என அடம்பிடிக்க இவர்கள் செயலிழந்து தான் போனார்களாம்.

இறுதியில் இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வரும் தேர்தலில்

3 சீட்டுக்களில் ஒன்றை ஏற்கனவே வர்த்தகர் அணிக்கு வழங்கிவிட்டதால், மீதமிருக்கும் இரண்டையும் மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் அணி என அணிக்கு ஒருவர் வீதம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்களாம் சமாதானக்குழுவினர். மாணவர் அணியில் இடம்பெற்றிருக்கும் ததஜவின் தலைவர் பெயர் கொண்டவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும், வர்த்தகர் அணியில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊர்க்காரரான டிராவல்ஸ்காரருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் செய்தி வருகிறது. டிராவல்ஸ்காரர் இப்போது ஆளுங்கட்சியில் இருந்தாலும் தங்கமுட்டையிடும் வாத்தான அவரை மீண்டும் உள்ளே இழுக்கவே இது செய்யப்படுகிறாம்.

இதைப்பற்றி நம்மிடம் சொல்லி பெருமையடித்த அந்த அப்பாவி மாணவரணிக்காரரிடம் நாம் சொல்லிய பதில் இதுதான்,

வர்த்தகர் அணிக்கு கொடுப்பது உண்மையாக இருக்கும். ஆனா நீங்க வேணுமினா பாருங்க, மிச்சம் ரெண்டுலயும் கழகத்தின் நி.தவும் நி.பொவும் மட்டும் தான் நிப்பாங்க,. பதவிவெறி அவர்களின் கண்களை மறைத்து விட்டது. அவர்கள் மட்டும் தான் எம்.பி ஆகனும், அவர்கள் மட்டும் தான் எம்எல்ஏ ஆகனும். அவர்கள் மட்டும் தான் வக்ஃப் வாரியத்துக்கு தலைவராகனும், அவர்கள் மட்டும் தான் சவூதி அரேபியாவுக்கு தூதர் ஆகனும். அதனால தான் நடந்து முடிந்த பொதுக்குழுவில் எவ்வித நிபந்தனையும் இன்றி இதே மாநில பொருப்பாளர்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டது. செயிச்சா எம்எல்ஏ, தோத்தா பழையபடி காலத்துக்கும் நிரந்தர தலைவர், நிரந்தர பொதுச்செயலாளர். ஏன் இவர்களைத்தவிர தமுமுகவில் வேறு யாருமே இல்லையா? அப்ப மிச்சம் மமகவிலும், தமுமுகவிலும் இருப்பவனெல்லாம் என்ன இழிச்சவாயனா? அவங்க சொன்னாங்களாம் இவங்க கேட்டாங்களாம். வர்த்தகர் அணிக்கு ஒன்னுங்கிறது உண்மையா இருக்கலாம்.மற்றபடி மாணவரணிக்கு ஒன்னு மருத்துவரணிக்கு ஒன்னு வழக்கறிஞர் அணிக்கு ஒன்னு, தொண்டரணிக்கு ஒன்னு, குண்டரணிக்கு ஒன்னுன்னு சொல்வதெல்லாம் சுத்த அல்வா!!! என சொன்னதும் அவர் முகம் வெளிறிப்போய் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தான் நேற்று மமகவுக்கு சேப்பாக்கம், ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமுமுகவின் தலைமை அமைந்திருக்கும் தெருவில் நேற்று கசிந்த தகவல் படி சேப்பாக்கம் தொகுதியில் நிரந்தரப்பொதுச்செயலாளரும், ஆம்பூரில் கழகத்தின் நிரந்தரத்தலைவரும், இராமநாதபுரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல் ஊரைச்சார்ந்த டிராவல்ஸ்காரரும் (அவர் ஆளும்கட்சியை விட்டு விலகி இவர்களிடம் இணைந்தால்), அல்லது அனார்கலியின் கணவர் பெயர் கொண்டவரும் போட்டியிட தீர்மானித்திருக்கிறார்களாம்.

யப்பா! தமுமுகவின் தங்கங்களே! உங்கள் கழகத்தின் நிரந்தர தலைவருக்கும், நிரந்தரப் பொதுச்செயலாளருக்கும் பதவிவெறி இல்லையென்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தீர்களே! இப்ப தெரிகிறதா உங்க கழகத்தின் நிரந்தரவான்களின் யோக்கியதை. அடச்சீ.....மானங்கெட்டவனுங்க...

0 Response to "வாத்தியாரும், ஹைதரும் போட்டியிட மாட்டார்கள். மாணவர் அணி தரும் பரபரப்புச் செய்தி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை