மமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஒரு சிறப்பு பார்வை

Sunday, March 20, 2011 11:09 PM Posted by பொய்யன் டிஜே

கலைஞரை விட்டு வெளியேறி தனித்து நின்று ஜெயா டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அம்மா துதிப்பாடல் பாடியது முதல் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மூன்று சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு பல்லைக்காட்டியது வரை மமகட்சியின் மானங்கெட்டத்தனத்தைப்பார்த்து ஊரே சிரிக்கிறது. பச்சை அரசியல்வாதிகளைக் கூட வென்று விட்டார்கள் இவர்கள். கலைஞர் தான் நம் சமூக காவலர் என நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தியது முதல் (கோவையில் இருந்து தனி ரயிலே வந்தது தனிக்கதை) அதைக் காட்டி கலைஞரிடம் பேரம் பேசி, ஜெயலலிதா மோடியின் தோழி, அராஜகக்காரி என அள்ளிவிட்டு கலைஞரிடம் நற்சான்றிதழ் பெற முயற்சித்து வக்ப் போர்டை வாங்கி கொண்டை வைத்த சிவப்புக் காரில் சுற்றிவந்து ஒரு சீட்டுத்தான் தருவோம் என கலைஞர் சொல்ல, முடியாது முடியாது அப்பறம் அந்த ஒரு சீட்டுல யார் போட்டியிடுவது என எங்களுக்குள் சண்டை வந்து விடும், எனவே இரண்டு சீட்டாவது தாருங்கள் என கெஞ்சிக் கூத்தாடி கலைஞர் இவர்களை கழுத்தைப்பிடித்து தள்ளி கதவைச்சாத்தியது வரை,

இன்றைக்கு அம்மாவிடம் சரணாகதி அடைந்தது முதல் அம்மான்னா சும்மா இல்லடா, கலைஞர் தான் கைது செய்தார், கலைஞரின் துரோக வரலாற்றுத் தொடர் என கலைஞரைக் கஞ்சி காய்ச்சுவது வரை

மக்கள் இவர்களின் ஈனச்செயல்களை உன்னிப்பாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு சீட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற ரீதியில் அனைத்துக்கும் தயாராய் களமிறங்கிவிட்டார்கள்.

3 சீட்டு பெற்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும்? ஏம்பா! மமக தொண்டர்களில் யாருக்கு போட்டியிட விருப்பம் இருந்தாலும் மணு செய்யலாம் என அறிவித்திருக்க வேண்டும். ஆனால் செய்தார்களா? செய்யவில்லை. என்ன காரணம்? மமகவில் அல்லது தமுமுகவில் இவர்களை விட்டால் ஆளே இல்லையா?

தமிழிலே ஒரு பழமொழி இருக்கிறது.

கல்யாண வீடாக இருந்தால் நான் தான் மாப்பிள்ளையா இருப்பேன்,

எழ‌வு வீடா இருந்தா நான் தான் பொணமா இருப்பேன்.,

எங்க போனாலும் மாலையும் மரியாதையும் எனக்குத்தான்

இந்தப் பழ்மொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ! கழகத்தின் நிரந்தரத்தலைவருக்கும் நிரந்தரப் பொதுச்செயலாளருக்கும் நன்றாகப் பொருந்தும். தலைவர் பதவியா? எனக்குத்தான், வக்ப் வாரிய பதவியா? எனக்குத்தான், சவூதி அரேபிய தூதர் பதவியா? அதுவும் எனக்குத்தான். எம்பி பதவியா அதுவும் நான் தான். கக்கூஸ் திறப்பு விழாவா? அதுக்கும் நான் தான்

என தான் தான் என ஆடி ஓடி திரிந்து பதவிவெறி பிடித்து அலையும் இவர்களை என்னவென்று சொல்ல? இவர்கள் தேர்தலில் போட்டியிட்டு பவுசு காரில் பவனி வருவதற்கு சாதாரண ஆட்டோ ஓட்டும் என் சகோதரன் ஏன் அவன் வேலையை விட்டு உழைக்க வேண்டும்? இவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கும் கட் அவுட் வைப்பதற்கும் சுண்டல் விற்கும் என் சகோதரன் ஏன தன் 5 நாள் உழைப்பைத் தரவேண்டும்? இவர்களை அரியாசனம் ஏற்றுவதற்கு அடுப்பங்கரையில் இருந்து இடியாப்பம் சுட்டு விற்கும் என் சகோதரி ஏன் இவர்களுக்கு காசு தரவேண்டும்? இவர்களுக்கு தேவைப்பட்டால் காசே இல்லாமல் பிரச்சாரம் ஊர் ஊராய் பஸ்ஸில் போய் செய்யுங்கள். அல்லது ஜவாஹிருல்லாவும், ஹைதரும் தங்களின் பூர்வீகச்சொத்துக்களை விற்று விட்டு இவர்களுக்கு போஸ்டர் அடிக்க காசு கொடுங்கள். இவர்கள் குதிரை ஓட்டுவதற்கு கடிவாளம் வாங்கிக்கொடுக்க வக்கில்லாத சமுதாயத்திடம் எங்களுக்கு குதிரையே உங்கள் காசில் இருந்து வாங்கித்தாருங்கள், அதிலே ஏறி நாங்க எப்படி ஓடுறோம்னு மட்டும் பாருங்க, கிளைக்கு 10 ஆயிரம் ரூபா கண்டிசனா வந்துடனும் என கட்டளை போடும் இந்த கர்மவீரர்களை வெற்றியடையச் செய்ய நாம் ஏன் உழைக்க வேண்டும்?

மமகவில் யாருமே வேட்பாளர்கள் இல்லையா? இவர்களை விட்டால் மமகவில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா? பயந்தாங்கொள்ளிகளா? கோழைகளா? இவர்களை ஏனப்பா எல்லாவற்றிற்கும் முன்னிறுத்துகிறீர்கள். எல்லாவற்றிற்கும் முன் நிற்க வேண்டும் என ஆசைப்படும் நிரந்தர தலைவரும், நிரந்தர பொதுச்செயலாளரும் திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸில் அப்பாவி மமக தொண்டர்கள் குமுறக்குமுற அடிவாங்கிய போது அந்த தகவல் உடனடியாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போதும் நிரந்தரத்தர பொதுச்செயலாளர் தன் பாதையையே மாற்றிக்கொண்டு தாம்பரம் பக்கம் தாவிச்சென்றாரா இல்லையா? கலாட்டா நடக்கும் இடத்திலே தகவல் கொடுத்தும் கழகத்தின் பொதுச்செயலாளர் கடைசிவரை அந்தப்பக்கமே தலைவைத்துப் படுக்காமல் அந்தி சாயும் நேரத்துல ஆஸ்பத்திரிக்கி போய் ஆறுதல் சொன்னாரா இல்லையா? எல்லாவற்றிலும் முன் நிற்போம் என சொல்லக்கூடியவர்கள் அடிவாங்குவதில் மட்டும் பின் நிற்க காரணம் என்ன? பாவம் அப்பாவி தமுமுக தொண்டர்கள்.

சரி விசயத்திற்கு வரலாம். என்னவோ 1200 பேர் தேர்தலில் போட்டியிட மணுச்செய்த மாதிரி இன்னும் கொஞ்ச நேரத்தில் மாமா கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடப்போவுதாம். மொத்தம் இருப்பது 3 சீட்டு , அதுல போட்டியிட 2 பேருன்னு உலகுக்கே விசயம் தெரிந்து இருக்கும் போது என்னத்தய்யா புதுசா வேட்பாளர் பட்டியலை விடப்போறீக? அந்த மூனாவது நபர் யாருன்னு வேணுமினா காத்திருக்கலாம். மற்றபடி உண்மையிலேயே 1200 பேர் தேர்தலில் மமக சார்பில் போட்டியிட விண்ணப்பம் செய்திருந்தாலும் அவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்போம் என சொல்லி 1200 பேர் பெயரையும் சீட்டில் எழுதி ஒரு அண்டாவில் போட்டு குலுக்கி அதிலிருந்து 3 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். அதிலும் இந்த இரண்டு பேர் இருப்பார்கள். அய்யா! மமக தமுமுக தொண்டர்களே! கொஞ்சமாவது சிந்திங்கப்பா! உங்கள் உழைப்பைச் சுரண்டி இவர்கள் ஏறி நிற்க முயற்சிக்கிறார்கள். உஷார் ஆகுங்கள்

மமக செய்த சமுதாய நன்மைகளும், வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்த லட்சனமும் குறித்த விரிவான அலசல் மிக விரைவில்

பரிசுக்கேள்வி:

மமகவினர் மீது கொலைவெறி தாக்குதல், ஹைதர் அலி உள்ளிட்டவர்கள் கள்ள ஓட்டுப்போடுபவர்களை அடையாளம் காட்டிய போது ஹைதர் அலி உள்ளிட்ட கழகத்தொண்டர்கள் மீது திமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் என்பது அன்றைய தட்ஸ்தமிழின் செய்தி. அடையாளம் காட்டும் போது நின்ற ஹைதர் அலி, அடிவாங்கும் போது எங்கே சென்றார்? அங்கு நின்ற அப்பாவி தொண்டர்கள் எல்லாம் ரத்தம் சொட்டச்சொட்ட அடிவாங்கிய போது ஹைதர் அலி மட்டும் ஒரு சிறு கீற‌ல் கூட இல்லாமல் தப்பியது எப்படி?

இந்தக் கேள்விகளுக்கு சரியான விடையளிப்பவர்களுக்கு மமகவுக்கு பாண்டிச்சேரியில் ஒதுக்கப்பட்ட ஒரு சீட்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்,


அடிவாங்கி ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் நலம் விசாரிக்க சென்ற ஹைதர் அவர்கள் ஒருவரிடம் சென்று, அடிவாங்கும் போது என் பேர சொன்னீங்களா? என் பேர சொன்னா விட்டு இருப்பாங்கள்ல! என்று கேட்டாராம், அதற்கு டென்சனான அவர், அட ஏங்க! உங்கப்பேர சொன்ன பெறகு தான் அடியே பலமா விழுந்துச்சின்னாராம்.

1 Response to "மமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஒரு சிறப்பு பார்வை"

  1. ibrahim Says:

    Eyethere ali உங்களுக்கு சீட் இல்லையா?வக்ப் வாரியமா? ஜவாகிற் உங்களை ஏமாத்திட்டார்.ஜெயித்துவிட்டால் ஜெயாகிட்ட உங்களால் நெருங்க முடியாது. ஏற்கனவே பதர் ஸைத்க்கு சீட் கொடுக்காததால் அவருக்கு வக்ப் தலைவர் போஸ்ட் என்று அம்மா கூறியிருக்கிரராம்

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை