சாயம் வெளுக்கும் மமக‌

Wednesday, March 23, 2011 6:40 AM Posted by பொய்யன் டிஜே
கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்க ஆரம்பித்து விட்டது மமகவின் சாயம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக‌ அரசியலில் இறங்கமாட்டோம் என தமுமுக வழி களம் கண்டவர்கள் இன்றைக்கு சைத்தானின் ஆசையில் மதிமயங்கி எப்படியாவது ஒரு பதவியைப் பிடித்து விடவேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் பூசியிருந்த இஸ்லாமிய சாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே எஸ்டிபிஐ அமைப்பு தங்களுக்கு கொள்கை குத்துப்பாடல்களை அமைத்து பீப்பி ஊதி ஊர்வலம் வருவதைப் போல இவர்களும் தங்களுக்கென ஒரு கொள்கைப்பாடல்களை வடிவமைத்து கொஞ்சமாக தங்களின் முகத்திரையை விளக்கினார்கள்.

கலைஞரிடம் 2 சீட்டு வாங்குவதற்காக அவருக்கு நன்றி அறிவிப்பு என்ற பெயரில் பாராட்டு விழா நடத்தி அவருக்கு சோப்பு போட்டு வக்ஃப் வாரியத்தையும் வளைத்துக்கொண்டு அம்மா தான் இஸ்லாமியர்களின் துரோகி, மோடியின் தோழி என பேட்டி கொடுத்து வந்தவர்கள் கடைசியாக 2 சீட்டு கொடுக்காமல் கலைஞரால் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டு நிர்கதியாக நின்ற போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம் கலைஞரின் இஸ்லாமிய துரோகங்கள்.

பின்னர் அம்மா செய்த துரோகங்கள் எல்லாம் மறந்து போய் இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார் அம்மா. அன்றைக்கு சமுதாயக் காவலராக இருந்த கலைஞர் இன்றைக்கு சமுதாய துரோகி ஆகிவிட்டார். கலைஞர் தான் கைது செய்தார், கலைஞரின் துரோக வரலாறு என ஏகப்பட்ட செய்திகளை தங்களின் அதிகாரப்பூர்வ தளத்திலும், பத்திரிகையிலும் இப்போது போட்டு கிழிகிழி என கிழிக்கிறார்கள். கலைஞர் செய்ததாக இவர்கள் சொல்லும் துரோகம் அனைத்தும் இவர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி பாராட்டு விழா நடத்தி பல்லைக்காட்டியதற்கு முன்பே, கலைஞர் தான் சமுதாயக் காவலர் என ஊர் ஊராய் போஸ்டர் ஒட்டி பேனர் வைப்பதற்கு முன்பே நடந்த நிகழ்ச்சிகள் தானே! அதெல்லாம் அப்போது எப்படி மறந்து போனது? இரண்டு சீட்டு தரவில்லை என்றதும் இஸ்லாமிய இன காவலர் என உங்களால் அடையாளம் காணப்பட்ட கலைஞர் இப்போது துரோகியாகிவிட்டார். துரோகியாகக் காட்டப்பட்ட அம்மா இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார்.

இப்படியே இவர்களின் பச்சை அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து இன்றைக்கு முழுமையான அரசியல்வாதிகளாக ஆகிவிட்டார்கள். இவர்கள் தேர்தல் செலவுகளைச் செய்வதற்கு அப்பாவி மக்களிடம் கட்டாய வசூல் செய்ய உத்தரவிட்ட இந்த கட்டப்பஞ்சாயத்துக் கழகம் இப்போது நிர்ணயித்து இருக்கும் தொகை ஒரு கிளைக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய். இதை கழகத்தின் நிரந்தரத்தலைவரே நிதி தாரீர் என்ற பெயரில் அவரின் கழக அப்பாவித்தொண்டர்களுக்கு பகிரங்கமாக தெரிவித்து விட்டார். பாவம் இவர்கள்! பத்தாயிரத்துக்கு குறையாமல் நிதி சேகரிக்க சாதாரண கிராமப்புற கிளைகள் என்ன செய்வார்கள்?.

இந்த இடியைத் தாங்கிய மமகவின் அப்பாவித்தொண்டர்களின் இதயங்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக இன்றைக்கு வந்து விழுந்து மமக தலைவர்களின் சாயத்தை முழுமையாக நீக்கிய செயல். அது அவர்கள் தளத்தில் வெளியிட்டுள்ள தலைவர்களின் ஆளுயர பிரம்மாண்ட போஸ்கள். இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை. அப்பாவி மமகவினரே! அவர்கள் போட்டோக்களை வெளியிட்டு உங்களை பிரம்மாண்ட பேனர் வைக்குமாறு பணித்திருக்கிறார்கள். இதோ இவர்கள் தங்களுடைய முழு கட் அவுட்களை வைக்க, சொல்லாமல் சொல்லி வந்துள்ள புகைப்படங்களை அப்படியே கட் அவுட்டாக வைக்காமல் நாமும் கொஞ்சம் அதிலே வசனம் கலந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்ற சிந்தனையின் விளைவு தான் கீழ்கண்ட வசனப்படங்கள். அப்பாவி மமக தொண்டர்கள் இதையும் கட் அவுட் வைக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.


0 Response to "சாயம் வெளுக்கும் மமக‌"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை