டாய்லெட் பேப்பரால் முகம் துடைக்கும் மானம் கெட்டவர்கள்

Thursday, March 31, 2011 10:50 PM Posted by பொய்யன் டிஜே

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைத்த ஜெயலாலிதாவை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்தது. ஆனால் அப்போது திமுக வின் சிறுபான்மைப் பிரிவாக இருந்த மமகட்சியினர் அதாவது தமுமுகவினர், ஜெயலலிதா அமைத்த ஆணையத்தை வேஸ்ட் பேப்பர் ஆணயம் என்றும், அது டாய்லட் பேப்பர் தான் என்றும் மிகவும் மட்ட ரகமாக விமர்சனம் செய்தனர். மேலும், இந்த டாய்லட் பேப்பர் மலம் கழித்துவிட்டு துடைத்துப் போடத்தான் உதவும் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

அப்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் அதற்கென்று ஆணையம் அமைக்கப்பட்டு அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம்கள் மத்தியில் விளக்கி பெருவாரியான முஸ்லிம் வாக்குகளை அதிமுகவின் பக்கம் திருப்பி அதிமுகவை ஒரு பலமான எதிரணியாக சட்டமன்றத்தில் அமர வைத்தது.

அப்போது ஜெயலலிதா அமைத்த அந்த ஆணயத்தை டாய்லட் பேப்பர் என்று கூறியவர்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக்காக அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா என்ன செய்துள்ளார் என்று ராஜ் டிவி சார்பில் அதன் செய்தியாளர் நிஜந்தன் கேட்கப்பட்ட கேள்விக்கு மமகட்சியின் ஒருங்கினைப்பாளர் அளித்த பதில் இவர்கள் மானம் கெட்டும், மதிகெட்டும் எந்த அளவிற்கு முச்சந்தியில் நிற்கின்றார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.

ஆம்! முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக்காக அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா என்ன செய்துள்ளார் என்றால், அந்த அம்மையார் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக முதன் முதலில் ஆணையம் அமைத்தவர் என்று சொல்லி தங்கள் கேவலத் தனத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு மலம் கழித்துவிட்டு துடைத்துப் போடத்தான் உதவும் இந்தப் பேப்பர் என்று எந்த டாய்லட் பேப்பரைப் பற்றி குறை கூறினார்களோ அதே டாய்ல்ட் பேப்பர் தான் தற்போது 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு முகம் துடைக்க பயன்பட்டுக் கொண்டிருக்கிறதென்றால் இவர்களின் நாற்றமெடுத்த கதையை நாம் யாரிடம் சொல்வது?

தாங்கள் வாங்கிய மூனு சீட்டுக்காக தங்கள் மானத்தை மட்டுமல்ல யாருடைய மானத்தையும் அடகு வைக்க தயங்க மாட்டார்கள் என்பதனை மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர் மானம் கெட்ட மக்கள் கட்சியினர்.

0 Response to "டாய்லெட் பேப்பரால் முகம் துடைக்கும் மானம் கெட்டவர்கள்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை