கடைசி நேரத்தில் வந்து சீன் போட்ட பொய்யன்

Wednesday, March 30, 2011 5:35 AM Posted by பொய்யன் டிஜே

எல்லாம் ஒரு விளம்பரம் தான் என சொல்வார்கள். அதே போல அந்த மாதிரி தான் வந்திருக்கிறது பொய்யன் தளத்தில் பள்ளி மீட்ட செய்தியும்.

சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியில் என்ன நடந்தது என்பதை ததஜ தளத்தில் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அதாவது இந்த சம்பவம் திங்கள் கிழமை லுஹர் தொழுகை நேரம் துவங்கியது முதல் ததஜ சகோதரர்கள் களத்திலே நின்றார்கள். இந்தப் பள்ளி சுன்னத் வல் ஜமாத் முறைப்படி நடந்த தொழுகை நடந்த பள்ளி. எனவே பள்ளி பூட்டப்பட்ட தகவல் அனைத்து ஜமாத்தினருக்கும் தான் போயிருக்கிறது. ஆனால் யாருமே களமிறங்காத போது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு இந்த செய்தியை கொண்டு வந்திருக்கிறார்கள். சமுதாய மானம் காக்க புறப்பட்டு கேவலப்பட்டு நிற்கின்ற தமுமுகவினர் தேர்தல் வேலைகளில் மட்டும் குறியாக இருப்பதால் இதை அவர்கள் துளியும் கண்டுகொள்ளவில்லை.

மற்ற ஜமாஅத்தினருக்கும் தகவல் போய் யாருமே வராத நிலையில் தான் போனா போகுது தவ்ஹீத் ஜமாத்காரனுக்கு சொல்லி விடுங்க என்று தகவல் கொடுத்திருக்கிறார்கள். பள்ளிவாசலுக்கு ஒரு பாதிப்பு என்றதும் உடனடியாக அந்தப் பகுதி பூக்கடை கிளை உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வடசென்னை செயலாளர் ஆலம், தென்சென்னை செயலாளர் கமர்தீன், மாநில செயலாளர் சாதிக் ஆகியோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அடுத்த நிமிடம் அவர்கள் அங்கே களத்தில் ந்ன்றார்கள். அப்போது எங்கே போனார் டிரஸ்ட் சமாத்தின் தலைவர்.

இரவு வரை காவல் இருந்து அதன் பின்னர் 11 மணிக்கு மேல் அவர்கள் பள்ளியை இடிக்க களமிறங்கிய போது எங்கே போனார் பொய்யன் சமாத்தின் தலைவர்? அதெல்லாம் பரவாயில்லை மறுநாள் காலை அந்த இடம் கொந்தளிப்பாக இருந்ததே! அப்போது எங்கே போனார் இந்த சீன் போடும் ராசா! எஸ்டிபியை களத்திற்கு வந்தார்கள் என்பது உண்மை. அதேநேரம் பொய்யன் சமாத்தின் மாவட்டத்தலைவர்களும், தமுமுக சகோதரர்களும் வந்தார்கள் என்பது பச்சைப் பொய்.

அதெல்லாம் இருக்கட்டும் டிரஸ்ட்டு சமாத்தின் தலைவரின் அலுவலகம் ஏறத்தாழ( ஏற்கனவே ஏறத்தாழவுல வாங்கின அடியால ஒரு அரைலூசு ஒழிஞ்சே போயிடுச்சி) 3 கிலோ மீட்டர் இருந்தும் இரண்டு நாட்களாய் அங்கே நடக்கும் பிரச்சனைகள் தெரியாமலா இருந்தது இந்த சமாத்து டிரஸ்ட் தலைவருக்கு. மற்ற "வேலைகளுக்கெல்லாம்" கூடவே செல்லும் சமாத்து டிரஸ்ட் தலைவர் வலது இடது கரங்கள் எங்கே போனார்கள்? ஆமாம். எல்லாம் முடிந்து செவ்வாய்கிழமை லுஹர் தொழுகை நேரத்தில் குண்டர்களை கைது செய்யச்சொல்லி ததஜ மாவட்ட, மாநில‌ நிர்வாகிகளும், SDPI தொண்டர்களும் சாலையிலே தொழுகை நடத்தி காவல்துறையை முற்றுகையிட்ட போது ஜெயா டிவி காரர்களுக்கு திடீரென இஸ்லாமியர்களின் மீது பாசம் பொங்கி அவர்கள் அதை கவரேஜ் செய்த போது அந்த இடத்தில் ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்தது எஸ்டிபிஐ காரரும், வடசென்னை ததஜ செயலாளர் ஆலமும் தான்.

அப்போதெல்லாம் எங்கே போனார் என தெரியவில்லை இந்த டிரஸ்ட் தலைவர். பொதுமக்கள் கும்பலாக கூடி காவல்துறையினரோடு வாக்குவாதம் செய்து கொண்டிருபோது அங்கே வந்த‌ கருப்பு கலர் ஸ்கார்பியோ காரில் தான் சூனா பானா வந்து இறங்கினார். கையில் கேமிரா சகிதமாக இன்னிக்கு வின்டிவிக்கு அரைமணி நேர ஸ்லாட் கிடைத்துவிட்டது என மனதுக்குள் நினைத்து சீன் போட ஆரம்பித்தார். யாரோ கத்துகிறார்கள் என மக்கள் திரும்பிப்பார்க்க உடனே அவரோடு வந்த போட்டோ கிராபர் ஒரு தடவை கிளிக் செய்தார். ஆனால் பாக்கரை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. யாருமே கண்டுகொள்ளாத போது அங்கே ஏற்கனவே சமாதானக்கூட்டம் நடந்து கொண்டிருந்த சேரில் வந்து அமர்ந்தார். இது தான் நடந்தது.

இதைவிடுத்து என்னவோ இவர் தான் இரவு முழுவதும் கால் கடுக்க நின்றது போல கதை விடுகிறார். இவர்கள் கடும் பொய்யர்கள் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்.

“களத்திற்கு வந்து மக்களை கட்டுப்படுத்திய பாக்கருக்கு காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். நீண்ட நாளுக்குப்பின் பாக்கரின் பேச்சுக்கு த.த.ஜ.வினர் உற்சாகமாக தக்பீர் முழக்கம் இட்டதும், அவரோடு கை குலுக்கி ஸலாம் சொன்னதும் நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.

இதெல்லாம் எந்த ஊரில் நடந்தது என்று சொன்னால் விசாரிக்க நன்றாக இருக்கும். வெலாசம்... வெலாசம்...

பள்ளியை மீட்டது யார் என்பதிலே யாருக்கும் பெருமையோ தலைக்கணமோ இல்லை. இருக்கவும் கூடாது. எல்லாப்புகழும் இறைவனுக்கே! ஆனால் கல்யாண‌ வீட்டில் இரவுமுழுவதும் காய்கறி வெட்டி, பாத்திரம் கழுவி, விறகுவைத்து அடுப்பெரித்து அந்தப்புகையோடு கிடந்து செத்து மதியம் சாப்பாடு செய்து முடித்தவுடன், வெள்ளையும் ஜொல்லையுமா ஒருத்தன் வருவான். வந்தவன் சும்மா இருக்க மாட்டான். இரவு பூரா வேலை பார்த்தவர்களே சும்மா நிற்பார்கள். ஆனால் சரியா மதியம் 1 மணிக்கு வரும் இவன் ஆடும் ஆட்டம் தாங்காது. அதை எடுத்து இங்க வை. இதை எடுத்து அங்க வை. சமயல்னா அந்த புளி இருக்கே புளி, அதைக்கரைத்து அதில இஞ்சி பூண்ட போட்டு, அப்றம் கொஞ்சம் நெய்ய ஊத்தி, என்னப்பா சமயக்காரரே! நான் சொன்ன மாதிரி தானே எல்லாம் பண்ணி இருக்கே! என்னப்பா நான் சொல்றது சரிதானே! ஹூம்..சூனா பானா..உன்ன அசசிக்க முடியாதுடா.. கெளம்பு.. கெளம்பு..

உனக்கு ஏன் இந்த வேல?

குறிப்பு: பின்னூட்டம் இடும் பொய்யனின் அடிவருடிகள் அல்லது மாமாகாரர்கள் தங்களின் உண்மையான பெயரில் வந்து பின்னூட்டமிட்டால் வெளியிட நன்றாக இருக்கும். நீங்களே கள்ளத்தனம் செய்து கொண்டு நாங்கள் கள்ளத்தனம் செய்கிறோம் என்றால் உங்களை லூசு என்பார்கள். என்ன மிஸ்டர். செங்கி. ஓகே தானே!

1 Response to "கடைசி நேரத்தில் வந்து சீன் போட்ட பொய்யன்"

  1. AYUB KHAN Says:

    very good. keep it up. very very intresting. i like it ya...

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை