கற்பை விற்றுப் பிழைக்கலாம்..ஈமான் விற்றவர்களின் எஸ்.எம்.எஸ்

Thursday, April 21, 2011 12:45 AM Posted by பொய்யன் டிஜே

தேர்தலுக்கு முன்தினம் மமக போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, இராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் தொகுதியில் சில விசமிகளால் பரவலாக ஒரு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதாவதுமமக போட்டியிடும் தொகுதிகளில் ததஜ வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் கொடுத்து மமகவுக்கு வாக்களிக்காதே என பிரச்சாரம் செய்கிறது. இந்த பிழைப்புக்கு அவர்கள் கற்பை விற்றுப் பிழைக்கலாம்என்ற குறுஞ்செய்தி அனைவரது மொபைல் போன்களிலும் இடம்பிடித்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை சமுதாய நலன் கருதி மட்டுமே ஒருவரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை காலம் காலமாய் கடைப்பிடிக்கிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாரை ஆதரித்தாலும் அவர்கள் முந்தைய காலங்களில் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களை மறைப்பதும் இல்லை. குறைப்பதும் இல்லை. அவர்கள் செய்த துரோகங்களை அவர்களிடமே சுட்டிக் காட்டுவது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனிச் சிறப்பு. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், சேப்பாக்கத்தில் வேட்பாளர் ஜெ.அன்பழகனை வைத்துக் கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் .ராசா செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சுட்டிக் காட்டியது தான்.

அது மட்டுமின்றி யாரையாவது எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டையும் சமுதாய நலன் கருதி மட்டுமே எடுக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். அவர்களுடன் கூடிய சொந்தப் பகையை கருதாமல் அவர்களால் ஏற்படும் சமுதாய துரோகங்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் சென்ற தேர்தலில் மமகவினர் இஸ்லாமிய சமூகத்திற்குச் செய்த துரோகங்களைச் சொல்லி சொல்லி வாக்குக் கேட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். அதுவே போதுமான பிரச்சாரம் ஆகும். அதைவிடுத்து வாக்களார்களுக்கு காசு கொடுத்து ஓட்டுக் கேட்டால், மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் மற்றவர்களைப் போல பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற தரங்கெட்ட அமைப்பு தான் என மக்கள் முத்திரை குத்தி விடுவார்கள். இதற்கு பயந்து கூட இந்த வேலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றைக்குமே செய்யாது. செய்யவும் இல்லை.

ஆனால் ஒரு காலத்தில் கருணாநிதி தான் நம் சமுதாயக் காவலர் அவர் தான் நமக்கு இடஒதுக்கீடு தந்தார் எனவும், ஜெயலலிதா மோடியின் தோழி, பாஜகவின் ஊதுகுழல் என்றும் சொன்னவர்கள் சர்க்கஸில் போடும் அந்தர் பல்டியைப் போல அப்படியே மாறி அம்மா அம்மா என பெற்ற தாயை அழைப்பது போல அழைத்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். பொது மேடைகளிலும், நோட்டீஸ்களிலும் ஜெயலலிதா என்று சொல்லக் கூட திராணியற்றவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி பேச பரப்ப என்ன தகுதி இருக்கிறது?

ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து எதுவும் சொல்லவில்லை என செய்தி பரவிய உடன் பல நடுநிலையாளர்கள் மமக வேட்பாளர்களுக்கு போன் செய்து நீங்கள் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுங்கள் என அழைப்பு விட்டபோதும் கூட அதையெல்லாம் நாங்கள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டோம், சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கிடைத்தால் என்ன கிடைக்கா விட்டால் என்ன? எங்களுக்கு இடஒதுக்கீட்டை அம்மா தந்து விட்டார். அம்மா! அம்மா! அம்மா! என அடம்பிடிக்கும் பிள்ளைகள் போல அல்லாஹ்வை மறந்து அம்மாவுக்கு பாராட்டு பாமாலை பாடிய இவர்களும், பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டு காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்துகொண்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பணம் கொடுத்ததாக பரப்பிய குறுந்தகவல்களை அவர்களின் தொண்டர்களே நம்பவில்லை என்பது தான் உண்மை.

1 சீட்டுக் கலாச்சாரத்தை மீட்டெடுக்க புறப்பட்டு கடைசியில் அரை சீட்டுக்கு ஒப்புக் கொண்டு சமுதாய மானத்தை விற்றவர்கள், எக்காரணம் கொண்டும் எங்களின் சொந்தப் பணத்தை தேர்தலுக்கு செலவு செய்ய மாட்டோம் என மக்களின் காசுகளை வசூல் செய்து அந்தக் காசை வைத்து ஏசி கார்களில் பவனி வந்து, ஏசி ஹோட்டல்களில் ரூம் எடுத்து தங்கி, தன் தொண்டர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விற்றவர்கள், அம்மா இட ஒதுக்கீட்டை அறிவிக்காத போதும் கூட அதிமுக கூட்டணியில் தான் நீடிப்போம் எனக் கூறி சமுதாய முன்னேற்றத்தை விற்றவர்கள், பதவி சுகத்திற்காக மட்டுமே சமுதாய நலனை விற்றவர்கள், தன் தலைவியின் முன்னால் இன்ஷா அல்லாஹ் சொல்ல மனம் வராமல் அதை மென்று முழுங்கி ஈமானை விற்றவர்கள் சொல்கிறார்களாம் கற்பை விற்றுப் பிழைக்கலாம் என்று! மக்களுக்கே தெரியும் கற்பை விற்றுப் பிழைப்பதை விட கேவலமான செயல்படுபவர்கள் யார் என்று?

நன்றி: உணர்வு வார இதழ்

1 Response to "கற்பை விற்றுப் பிழைக்கலாம்..ஈமான் விற்றவர்களின் எஸ்.எம்.எஸ்"

  1. syedmohamed Says:

    தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அரசியலாகட்டும் ஆன்மீகமாகட்டும் எந்த முடிவு எடுத்தாலும் அது மக்கள் நலனை பாது காப்பதாக தான் இருக்கும் அதுமட்டும் அல்ல ஒட்டு மொத்த தவ்ஹீது வாதிகளின் என்னகளை பிரதிபலிக்கும் வகையில்தான் முடிவுகள் அமையும் அதனாலதான் இந்த அமைப்பு செல்வாக்குடன் செயல்படுகிறது இது பிடிக்காத பொறாமையில் வெந்து மடியும் சாக்கடையில் புரளும் பண்டிகூட்டம் ஹராமான வருவாயில் வயிர் வளககும் மடசாம்பிரனிகள் முளைத்து இரண்டு இலை விடுவதற்குள் என்ன ஆட்டம் போடுகிறார்கள் மக்கள் காறி உமிழும் பரிதாபத் குரிய மனம் கெட்டவர்கள் கூட்டம் சேர்ந்தால் கும்மி அடித்தூ விட்டு போகும் கயவர்கள் மக்களிடம் பொய் சொல்லி பணம் வசூல் பண்ணும் திருட்டு களவானிகள் மீது கூடிய விரைவில் இறைவனின் சாபம் இறங்கட்டும் .

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை