வரிந்து கட்டிய வார இதழ்….வாக்களிக்காத வாத்தியார்…

Sunday, April 24, 2011 11:07 PM Posted by பொய்யன் டிஜே

புரட்சி நடிகர் எம்ஜிஆருக்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும் வாத்தியார் என அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா . தன்னை வாத்தியார் என்று அழைப்பதையே அவரும் விரும்புகிறார். அதன் காரணமாகத்தான் இந்த தேர்தலுக்கு அம்மா!! அம்மா!! என தலைப்பிட்டு அடித்த அத்தனை நோட்டீஸ்களிலும் எம்ஜிஆருக்குப் பக்கத்தில் தன் படத்தை இடம்பெறச் செய்தார் இந்த வாத்தியார்

தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பலதலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதியிருக்கும் இந்த பேராசிரியரின் மனதில் புகுந்த பதவி ஆசை அவர் அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தைக் கூட தூக்கி குப்பையில் வீசியெறியும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது. சரி மார்க்கத்தைத் தான் தூக்கி எறிந்து விட்டார்கள். ஜனநாயகக் கடமையாவது சரிவர ஆற்றினார்களா என்றால் அதுவும் கிடையாது.

தமுமுக அதிகாரபூர்வ இதழில் சென்ற வாரம் ஒரு செய்தி இடம்பெற்று இருந்தது. அதிலே ஓட்டுப் போடத பிரதமர், ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? என முதல் பக்கத்தில் ஒரு செய்தியைப் போட்டு இருந்தார்கள். அசாம் சட்டபேரவைத் தேர்தலில் பிரதமர் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யவில்லை, ஜனநாயகக் கடமையை ஆற்றவில்லை, ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என ஒரு சூடான செய்தியைப் போட்டு பிரதமர் வாக்களிக்காத விசயத்தை வரிந்து கட்டிக் கொண்டு தங்களின் பத்திரிக்கை சுதந்திரத்தை நிலை நாட்டியுள்ளனர். பாராட்ட வேண்டிய விசயம் தான்.

ஆனால் பிரதமர் வாக்களிக்காத விசயத்தை இப்படி போட்டு அலசும் இந்த கழகத்தினர் தங்களின் தலைவர் வாத்தியார் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை யாரிடம் சென்று கேட்கலாம் என்பது தெரியாமல் இப்போது விழிபிதுங்கி முழித்துக்கொண்டு இருக்கின்றனர். வாத்தியார் அவர்களின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஆகும். பிறகு வாணியம்பாடி கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்த வாத்தியார் அவர்கள், தமுமுகவின் நிரந்தரத் தலைவர் ஆன பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தார். பல வருடங்களாக சென்னை சூளைமேட்டில் குடியிருக்கும் பேராசியர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்காளாராக இருக்கிறார்.

ஆனால் ஊருக்கு உபதேசம் செய்யும் அவர்களின் பத்திரிகை செய்தியைப் படித்த பிறகும் கூட வாத்தியாருக்கு வாக்களிக்க மனம் வரவில்லை. அவர் தேர்தல் நாளன்று முழுக்க முழுக்க இராமநாதபுரம் தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக வலம் வந்தாரே தவிர தன் வாக்கைச் செலுத்தி தன்னுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லை. அவருக்கு இருப்பதெல்லாம் நாம் எப்படியாவது வெற்றியட்டைந்து விட மாட்டோமா? நமக்கு தெளிவாக ஓட்டு விழுகிறதா என்பது மட்டுமே ஆகும்.

இந்திய ஜனநாயகம் கடந்து வந்த பாதையில் ஒரு ஓட்டு கூட வெற்றி தோல்வியை தீர்மாணித்திருக்கிறது. 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில் .தி.முக, பா.., .தி.மு. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது. வெறும் 13 மாதங்கள் நீடித்த இந்த அரசு, .தி.மு. தனது ஆதரவை வாபஸ் பெற்ற காரணத்தால் அதன் மெஜாரிட்டியை நிருபிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. கடைசியில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

ஆக ஒரு ஓட்டு என்பது சாதாரண விசயமல்ல! அதுமட்டுமின்றி ஒரே ஒரு ஓட்டினால் வாஜ்பாய் அரசையே கவிழ்த்த அம்மா அவர்களின் கூட்டணியில் இருந்து கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என அழைத்து, சின்னச்சின்ன பிட் நோட்டீஸ்களில் கூட அம்மா தாயே என புகழ்ந்து தள்ளி வாக்குகேட்ட இந்த வாத்தியார் தன்னுடைய வாக்கை செலுத்தவில்லை எனபது வேடிக்கை என்றாலும், இவரே வாக்களிக்காத போது பிரதமர் வாக்களிக்கவில்லை, ஊருக்குத் தான் உபதேசமா? என தங்களின் அதிகாரபூர்வ வார இதழில் கேள்விகேட்டு எழுதுவதும் கொடுமையிலும் கொடுமை.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரான முஹம்மது அலி ஜின்னாவை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் வளர்மதி அவர்களுக்கு தன்னுடைய வாக்கினை வாத்தியார் அவர்கள் செலுத்தவில்லை.

ஒருவேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வளர்மதி அவரை எதிர்த்துப் போட்டியிடும் முஹம்மது அலி ஜின்னாவை விட ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுவிட்டார் என வைத்துக்கொள்வோம்! அதற்கு காரணம் யார்? எல்லாம் தெரிந்த சிறந்த ஜனநாயகவாதியான வாத்தியார் அவர்கள் தான். அதைப்போன்று வளர்மதி தோல்வியடைந்து திமுக 118 இடங்களையும், அதிமுக 117 இடங்களையும் பிடித்து அதிமுக ஆட்சியமைக்க முடியாமல் போனால் அதற்கு காரணம் யார்? அதற்கும் காரணம் பேராசிரியர் தான். இதெல்லாம் வளர்மதி காதுக்கு எட்டினால் வாத்தியாரின் கதி என்னவாகும் என்பது அவர்களின் தொண்டர்களிடையே பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. காரணம் வளர்மதியைப் பற்றி அதிமுககாரர்களுக்கு மட்ட்டுமின்றி பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும். வளர்மதியை சித்தரித்து சில சினிமாக்களும் கூட வந்துள்ளன. இயக்கத்தின் தலைவரே வாக்களிக்காத போது அவர்களின் தொண்டர்கள் பலரும் நாமும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று இருந்து விட்டதாகவும் மக்கள் மத்தியில் செய்திகள் உலா வருகின்றன.

அம்மா செல்லும் ஒவ்வொரு இடங்களுக்கும் முன்கூட்டியே திட்டமிட்டு 3 அல்லது 4 பேர்களை நியமித்து அவர்கள் கையில் மமகவின் பிரம்மாண்ட கொடிகளைக் கொடுத்து அம்மா இந்தப்பக்கம் பார்க்கும் போது நல்ல வேகமாக ஆட்டுங்கள் என்று உத்தரவு பிரப்பித்தால் மட்டும் போதாது. ஜனநாயகத்துக்கு ஆற்றும் கடமை, கூட்டணி கட்சிக்கு ஆற்றும் கடமை என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்கவும் வந்திருக்க வேண்டும். ஒருவேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் மமகவின் வேட்பாளர் நின்றிருந்தால் அவருக்கு வாக்களிக்க வராமல் ராமநாதபுரம் தொகுதியிலேயே சுற்றிக்கொண்டிந்திருப்பாரா ஜவாஹிருல்லா? நிற்பது கூட்டணி வேட்பாளர் தானே! அதுவும் வளர்மதி தானே! அவர் ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என் வேலை மட்டும் நடந்தால் போதும் என தான் போட்டியிட்ட தொகுதியில் மட்டுமே முழுகவனம் செலுத்திய வாத்தியாரை யார் கேள்வி கேட்பது?

கருணாநிதி, ஜெயலலிதா, முக.ஸ்டாலின், விஜயகாந்த் போன்ற அனைத்து பிரபல வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிட்ட தொகுதியை விட்டு விட்டு வந்து தங்களின் சொந்த தொகுதியிலே வாக்களித்தனர். காரணம் அவர்கள் ஆற்ற வேண்டிய ஜனநாயக கடமை மற்றும் தங்களின் கூட்டணிக்கு செய்ய வேண்டிய பொறுப்பு என தங்களின் கடமையை ஆற்ற, வாத்தியார் மட்டும் தன் சொந்த வேலை நடந்தால் போதும் என அவர் போட்டியிடும் தொகுதியிலேயே கூடாரம் அடித்து தங்கிவிட்டு பிரதமர் வாக்களிக்கவில்லை, ஜனாதிபதி வாக்களிக்கவில்லை என விதவிதமாக தங்களின் பத்திரிகையில் கட்டம் கட்டி எழுதுகிறார்கள். இவர்களை நினைத்தால் ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது.

ஒரு ஊரில் ஒரு பெரிய ஹசரத் இருந்தாராம். ஒரு நாள் வெள்ளிக்கிழமை ஜூம்மா பயானுக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டு கோழி அவர் வீட்டு பின்பக்கம் மேய்வதைக் கண்டு அதை அப்படியே கூடை போட்டு கவுத்தி தன் மனைவியிடம் இதை இன்னிக்கு சால்னா வைத்து விடு என சொல்லிவிட்டு பயானுக்குச் சென்றுவிட்டாராம். கோழிக்கறிக்கு மசாலா வாங்குவதற்காக கடைக்குச் சென்ற ஹசரத்தின் மனைவிக்கு ஹசரத் பயான் செய்வது தெளிவாகக் கேட்டதாம். “அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே என மிக காரசாரமாக முழங்கினாராம் ஹசரத். ஹசரத்தின் பயானைக் கேட்டு நேராக வீட்டுக்கு வந்த மனைவி, மூடிக்கிடந்த கோழியை வேகமாக திறந்து விட்டுவிட்டாராம். ஜூம்மாவுக்கு பிறகு கோழிச்சால்னா சாப்பிட ஆசை ஆசையாக வீட்டுக்கு வந்த ஹசரத் தன் மனைவியிடம் சாப்பாடு வை என கேட்க, நடந்த விசயங்களையெல்லாம் மனைவி சொல்ல, அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஹசரத் அழாத குறையாக சொன்னாராம்., அடிப்பாவி அத உனக்காடி சொன்னேன்? ஊருக்குலடி சொன்னேன்” . இதைப் போலத்தான் தன் தலைவர் வாக்களிக்காத விசயத்தைக் கண்டுகொள்ளாமல், பிரதமர் வாக்களிக்களிக்கைவில்லை, ஊருக்குத் தான் உபதேசமா? என கேட்பவர்களின் நிலையும்.

நன்றி: உணர்வு வார இதழ்

0 Response to "வரிந்து கட்டிய வார இதழ்….வாக்களிக்காத வாத்தியார்…"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை