முஸ்லீம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? தமுமுகவின் அவசர வீடியோ!!! தமுமுக தலைவர் அவசர அறிக்கை

Monday, April 11, 2011 10:09 PM Posted by பொய்யன் டிஜே


தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் நலன்களைக் காக்கும் நல்லாட்சி அமைய வேண்டும்!! தமுமுக தலைவர் அறிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பின்வருமாறு அறிக்கை விடுத்துள்ளார்:

மதமாற்றத் தடைச் சட்டம், சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, குஜராத் இனப்படுகொலையில் உச்சநீதிமன்றத்தினால் கடுமையாக கண்டிக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு பாராட்டு போன்ற செயற்பாடுகளின் மூலம் ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சி ஒரு பினாமி பா.ஜ.க. ஆட்சியாகவே அமைந்தது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து வாக்களித்துள்ளார்கள். இதுபோல் தனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகளை மீறுவதில் சாதனை படைத்த ஜெயலலிதா ஆட்சிக்கு மக்கள் தகுந்த தண்டனையை வழங்கியுள்ளார்கள்.

கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதில் தான் ஜெயலலிதா வல்லவர் என்பதை தெளிவாக உணர்ந்துள்ளார்கள். இதனால்தான் திமுக தேர்தல் அறிக்கையை காப்பி யடித்து அவர் செய்த அறிவிப்புகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்பதை இந்த தீர்ப்பு தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது.
பலதரப்பட்ட மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திமுகவின் தேர்தல் அறிக்கை, அதிமுக கூட் டணிக் கட்சிகளைப் போல் வசை பாடாமல் மக்கள் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு திமுக கூட்டணித் தலைவர்கள் செய்த பிரச்சாரம் போன்றவை மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்று இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அளித்த வாக்குறுதி தமிழகம் முழுவதும் தன்னலமின்றி கூட்டணி வேட்பாளர்களுக்கு உயிரைக் கொடுத்து உழைக்கும் உத்வேகத்தை த.மு.மு.க. தொண்டர்களுக்கு அளித்தது. தேர்தல் முடிவு வெளிவரும் முன்பும், முடிவுகள் வெளிவந்த பின்பும், வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தனக்குள்ள ஆர்வத்தை கலைஞர் வலியுறுத்தியுள்ளது எங்களுக்கு புதுதெம்பை அளிக்கின்றது.

தமிழகத்தில் கலைஞர் தலைமையில் அமைய உள்ள ஆட்சி சிறுபான்மை மக்கள் உட்பட தமிழக அனைத்து மக்களின் நலன்களைக் காக்கும் ஆட்சியாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


0 Response to "முஸ்லீம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? தமுமுகவின் அவசர வீடியோ!!! தமுமுக தலைவர் அவசர அறிக்கை"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை