பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது ஏன்?

Wednesday, May 18, 2011 10:55 PM Posted by பொய்யன் டிஜே

ஏம்பா ரீல் விடுறதுக்கு ஒரு அளவு இல்லையா? இப்படி ஒரேயடியா அள்ளிவிட்டு ஏம்பா மாட்டிக்கிறீக!


உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் பொய் சொல்வதையே பிழைப்பாகக் கொண்டு இருக்கும் பொய்யன் சமாத் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் பதவியேற்பு விழாவை புறக்கணித்ததாக செய்தி போட்டு இருந்தார்கள். நாம் அதற்கான ஆதாரங்களை வெளியிட முடியுமா? என்று கேட்டு இருந்தோம். ஆதாரம் என்றால் அவர்கள் அனுப்பிய் அழைப்பிதழையாவது வெளியிட வேண்டும் எனக் கேட்டு இருந்தோம். உடனே தன் சாயம் வெளுப்பதை உணர்ந்தபொய்யன் சமாத் நைசாக ஜகா வாங்கியதை அனைத்து மக்களும் அறிவார்கள். அவர்கள் இரண்டாவதாக வெளியிட்ட செய்தி.


ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அஇஅதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த வரிசையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போயஸ் தோட்டத்து உதவியாளர் பூங்குன்றன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கரை தொடர்பு கொண்டு அழைப்பிதழை பெற்றுக் கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில், குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த நர மோடி கலந்து கொள்வதால் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்பதை நேரடியாக தெரிவித்து விட்டார் எஸ்.எம். பாக்கர்.

ஆக முந்தைய செய்தியில் அழைப்பிதழ் கிடைத்தும் அதைப் புறக்கணித்தோம் என சொல்லி தன்னை பெரிய கம்பெனியாக காட்டிக் கொண்ட பொய்யன் சமாத் இப்போது மேற்கண்ட செய்தியை போட்டு ஜகா வாங்கியதை மக்கள் அறிந்து கொள்ளட்டும்.

அடுத்து பதவியேற்பு விழாவைப் பொருத்தவரை யாரும் யாருக்கும் போன் போட்டுக் கூப்பிட மாட்டார்கள். நேரிலும் அழைக்க மாட்டார்கள். நீ வந்த வா! வரலைன்னா தொலைஞ்சி போ என்ற ரீதியில் அழைப்பிதழ் மட்டும் அனுப்புவார்கள். அது என்ன காது குத்து விழாவா? கலந்து கொண்டு மொய் செஞ்சிட்டுப் போங்க என்று சொல்வதற்கு. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் கூட அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்பது தான் நியதி. அது தான் நடந்தது. வைகோவிற்கும் கூட அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் நம் பொய்யன் தலைவரிடம் போன் போட்டு கெஞ்சியது போல யாரும் அவரிடம் போன் போட்டு கெஞ்சவில்லை.

ஆனால் பொய்யன் சமாத்து தலைவரிடம் மட்டும் போயஸ் தோட்டத்து உதவியாளர் பூங்குன்றன் போன் போட்டு கெஞ்சினாராம். நீங்கள் கலந்து கொள்ளாவிட்டால் விழாவே நடக்காது, நீங்கள் வந்தே ஆகனும் என அழுகாத குறையாக சொன்னாராம்.இப்படி வேண்டுமானால் நடத்திருக்கலாம். அதாவது விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்புங்கள் என பொய்யன் சமாத் சார்பாக பூங்குன்றனிடம் கேட்டு இருக்கலாம். அதற்கு அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளும் இயக்கத்திற்கு குறைந்தது 24 பேராவது உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாது என சொல்லி இருக்கலாம்.

நேற்று வரைக்கும் அழைப்பிதழ் வந்தது அதைப் புறக்கணித்தோம் என்றார் பொய்யன் சமாத்து தலைவர். இன்றைக்கு அழைப்பிதழ் பெற்றுக்கொள்ளுமாறு போன் போட்டு வலியுறுத்தினார் என்று சொல்கிறார். நாளைக்கு,,... இல்ல விழாவுக்கு கூப்பிடுற மாதிரி கணவு கண்டேன் என சொன்னாலும் சொல்லுவார் போலும்.

கேக்குறவன் கேணப்பயலா இருந்தா KPN பஸ்ல தான் பாக்கரண்ணே கோயில்பட்டிக்கு போனார்னு சொன்னாலும் சொல்லுவீக போலிருக்கு.

ஏன் உனக்கு இந்த வேல?

2 Response to "பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது ஏன்?"

  1. Mohammed Says:

    My dear you are trying to divert the attention by the name of invitation (card). I read their web site news. there is no such word Invitation card. Beware of lies. Regards,

  2. பொய்யன் டிஜே Says:

    அன்புச்சகோதரர் முஹம்மது. இங்கே யாரும் யாரையும் திசை திருப்பும் வேலையைச் செய்யவில்லை. சரி அழைப்பிதழ் பற்றி விட்டு விடுவோம். ஆனால் பதவியேற்பு விழாவிற்கு கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் மூன்றாவது நபர் மூலம் மட்டும் நேரிடையாக கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து விடுவார்கள். அவர்கள் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி,. அவர்களை யாரும் வாங்க சார்! வாங்க சார் என கெஞ்சமாட்டார்கள். வைகோவுக்கும் சரி, கருணாநிதிக்கும் சரி அழைப்பிதழ் அனுப்பப்பட்டது உண்மை. அதே போல மம கட்சிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது உண்மை. ஆனால் அவர்களை யாரும் போன் பண்ணி கூப்பிடவில்லை. ஆனால் இவரை மட்டும் இப்படி போன் பண்ணி கெஞ்சினார்கள் என்று சொல்வது கொஞ்சம் ஓவரா தெரியவில்லை?

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை