இரட்டைப் புலிகள்

Tuesday, June 7, 2011 4:52 AM Posted by பொய்யன் டிஜே
இரட்டைப் புலிகள் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ புலி மார்க் சீயக்காய் விளம்பரம் என நினைத்து விடக்கூடாது. மாறாக இது சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி நகரில் நடந்த அண்ணன் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் அமைக்கும் கோஷ்டிகள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு புலிகளாக மாறிய இரண்டு பெயர் தாங்கிகளைப் பற்றிய செய்திகளாகும்.

ஒருவர் ஓட்டுக்காக பிலியாக மாறியவர், மற்றவர் டிவிக்காக பிலியாக மாறியவர். ஒருவர் தன்னை கரும்புலித் தலைவர் என்றும், மற்றொருவர் தன்னை செம்புலித் தலைவர் என்றும் பறைசாற்றுகின்றனர். இவர்கள் பிலிகளாக மாறியதன் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்பில் இஸ்லாமியர்களும்(?) அங்கம் வகிக்கிறார்கள் என உலகுக்கே உரைத்து விட்டார்கள்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு புலிகளின் ஆதரவாளர்கள் சென்னை தி நகரில் ஒரு கூட்டம் போட்டு மேற்படி இரண்டு புலிகளின் பெயர்களையும் இணைத்து போஸ்டர் அடித்திருந்தார்கள். தமிழீழம் அமைக்க வராவிட்டால், நீ தலைவனுக்குத் தம்பியுமல்ல, தமிழ்த்தாய்க்கு மகனுமல்ல என வாசகங்களைக் கொண்ட அந்த போஸ்டரை நாம் வெளிப்படுத்திய பிறகும் கூட அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் இந்த செம்பிலியும் கரும்பிலியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றியிருக்கிறார்கள்.

சரி போனா போவுது, அந்த செய்திய அப்படியே ரகசியமா போட்டு மறைச்சிட்டு போறத விட்டு விட்டு அந்தக் கூட்டத்தில் இவர்கள் தமிழீழம் குறித்து பேசிய பேச்சுக்களை சமுதாய பொய்யன் ரிப்போர்டிலும் போட்டு இவர்கள் உண்மையான பிலிகள் என்பதை நிறுபித்துவிட்டார்கள்.

அந்தச் செய்தியை வெளியிட்ட உணர்வு வார இதழை கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் பொய்யன் தனது ரிப்போர்டில். அதாவது ததஜவினர் ராஜபக்‌ஷவின் ஏஜண்டுகளாம். இஸ்லாமியர்களைக் கருவருத்த பிரபாகரனின் ஏஜண்டாய் இருப்பதை விட ராஜபக்‌ஷவின் ஏஜண்டாய் இருப்பது அவ்வளவு ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஆனால் ததஜவைப் பொருத்தவரை எவனுடைய ஏஜண்டும் கிடையாது.

ராஜபக்‌ஷ தமிழ்மக்களின் மீது ஏவிய அடக்குமுறைகளை ததஜ கண்டிக்காமல் இல்லை. அதே நேரம் பிரபாகரனுக்கும் அதே கேட்டகிரி தான் வழங்கியுள்ளது ததஜ.

முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தார் பிரபாகரன் என உணர்வில் வந்த செய்திக்கு ஆதாரம் காட்டமுடியுமா எனக் கேட்டு தன்னை முழுமையான பிலி என்று வெளிப்படுத்தி விட்டார் பொய்யன். பிரபாகரன் முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததற்கு ஆதாரம் இல்லையாம். இதை நாம் மக்களிடமே விட்டு விடலாம். அல்லது பிரபாகரன் கொஞ்சூண்டு முஸ்லிம்களைத் தான் கொன்றார், அதுவும் சும்ம்ம்மா வெளையாட்டுக்குச் செய்தார் என பொய்யன் நிறுபிக்கட்டும்.

அதான் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த செயலுக்கு பிரபாகரன் மன்னிப்பு கேட்டு விட்டாரே! இன்னும் அதை ஏன் கிளறி…, அதாவது அவர்கள் எழுதியுள்ள வாசகம், “ஆறிய புண்ணைக் கீறிக் கீறி ஏன் நக்கிப் பார்க்கிறீர்கள்என்பதாகும். இதன் மூலம் தாங்கள் முழு பிலியாக மாறிவிட்டதை மக்களிடத்திலே பறை சாற்றுகிறார் பொய்யன். இப்போ உதாரணமாக குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொண்டு குவித்த நர மாமிச மோடி நாளைக்கே மன்னிப்புக் கேட்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வேளை நர மாமிச மோடியின் இயக்கத்திலே பொய்யன் சேர்ந்து விட்டார் என வைத்துக் கொள்வோம். அப்போது நாம் குஜராத் சம்பந்தமாக ஏதாவது எழுதினால் பொய்யன் இதைப்போலத்தான் கேட்பார். அவர் ஆயிரக்கணக்கிலே முஸ்லிம்களை கொன்று குவித்ததற்கு ஆதாரம் இருக்கிறதா உங்களிடம்? ஏன் பழைய புண்ணை கீறி நக்கிப் பார்க்கிறீர்கள் என்று நிச்சயம் கேட்பார். காரணம் பிரபாகரன் விசயத்திலே ஆதாரம் கேட்கும் பொய்யன் நாளைக்கே இப்படி மாறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் தங்களை பிலிகள் என்று சொல்வது என்ன நியாயம் என பொய்யன் கேட்கிறார். அதாவது இலங்கைத் தமிழ் மக்களை ஆதரிப்பதிலே இரண்டு வகை உண்டு. ஒன்று அவர்களின் அமைதியான வாழ்க்கைக்காக குரல் கொடுப்பது. இது ததஜ உள்ளிட்ட அதிகமான அமைப்புகள் செய்து வருகின்றன. இன்னொன்று தனித் தமிழ் ஈழம் அமைப்பது.

தமிழ் ஈழம் என்பது பிரபாகரன் கைப்பற்றியிருந்த இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஆகும். இலங்கை என்ற சிறிய நாட்டின் தலைநகரம் கொழும்பு ஆகும். பிரபாகரன் கையகப்படுத்தி வைத்திருந்த இலங்கையின் ஒரு பகுதியான தமிழ் ஈழம் என்ற நாட்டின் தலைநகர் திரிகோணமலை ஆகும். அதனால் தான் தங்களை Liberation Tigers of Tamil Eelam (LTTE) என சொல்லிக் கொண்டார்கள் புலிகள். தமிழ் ஈழத்திற்கென்று தனி போலீஸ், தனி ராணுவம், தனி பாஸ்போர்ட் என அனைத்துமே உண்டு. ஆனால் இலங்கை என்ற சிறிய நாட்டினை ஆக்கிரமித்து வைத்திருந்ததால் தான் புலிகளுடன் காலம் காலமாக மீட்புப் போரை நடத்தியது இலங்கை ராணுவம்.

இதன் மூலம் தமிழ் மக்கள் வேறு, தமிழ் ஈழம் என்பது வேறு என்பதை நாம் தெளிவாக உணரமுடியும். ஆக தமிழீழம் அமைக்கப் பாடு படுவோம் என்று சொல்பவர்கள் புலிகளாக இல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்? பொய்யனும், வாத்தியாரும் 100% பிலிகள் தான் என்பதை நிறுபிக்க இதை விட ஆதாரம் தேவையில்லை.

அடுத்து முள்ளிவாய்க்காலின் இறுதிப்போரின் போது மக்களை வெளியேற விடாமல் தங்களுக்கு அரணாக புலிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற செய்தியும் உணர்வு இதழில் வெளி வந்தது. இதனால் பொங்கியெழுந்த பொய்யன் பிலி, பாருங்கள் இவர்கள் ராஜபக்‌ஷ சொன்னதை அப்படியே சொல்கிறார்கள். இவர்கள் ராஜபக்‌ஷவின் ஏஜண்டுகள் என்பது இதன் மூலம் நிறுபனமாகிறது என சீறியெழுந்தார்கள். மேற்கண்ட முள்ளிவாய்க்கால் செய்தியை ராஜபக்‌ஷ மட்டுமா சொன்னார்?

புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த தமிழ் மக்கள், டான் தமிழ் ஒளி தொலைக்காட்சிக்கும், ரூபவாஹினி தொலைக்காட்சிக்கும் அழுகையும் கண்ணீருமாக அளித்த பேட்டிகள் தான் இது. ஆனால் இது தவறான செய்தி என்று வண்மையாகக் கண்டித்து தன்னை பிலியாக மாற்றிக் கொண்ட பொய்யன் கோசமிடுகிறார்.


கூடுதல் ஆதாராமான செய்தி இதோ:

முஸ்லிம் சமுதாயத்தில் பிறந்து சினிமாகாரராக மாறிவிட்ட இயக்குனர் அமீர் ஒருமுறை பீஜேவையும் பொய்யரையும் பார்க்க வந்தார். இந்த சந்திப்பு பொய்யரின் தக்வா ஹஜ் வியாபார நிறுவனத்தில் நடந்திருக்கிறது. அமீருடன் தமிழ் எம்பி சிவாஜி லிங்கமும் கலந்து கொண்டார். அந்த சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் எப்படியெல்லாம் முஸ்லிம்களை கருவறுத்தார்கள் என்பதை ஆதாரத்துடன் பீஜேயும் பொய்யரும் விளக்கியிருக்கிறார்கள். இனிமேல் புலிகள் ஆதரவு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அமீரிடம் பொய்யர் கோரிக்கையும்ம் வைத்திருக்கிறார். இது உணர்வு இதழிலும் விரிவாக வந்துள்ளது. இது நடந்த போது பீஜேயும் பொய்யரும் நிர்வாகத்தில் இல்லை. பொய்யர் மீது பாலியல் நடவடிக்கையும் எடுக்கப்படாத நேரம். இப்படி பேசிய பொய்யன் கூட்டம் இப்போது அதற்காக ஆதாரம் கேட்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

ஆக முஸ்லிம்கள் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்த புதிய பிலித்தலைவர்களின் செயல்பாடுகளை உணர்ந்து கொண்டு இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த செய்தி:

* இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கிளையில் ஜாக் அமைப்பினர் அசன் அலியிடம் 2 லட்ச ரூபாய் கேட்ட கேவலம்

* காசு கேட்டவர்கள் ததஜவினர் என தவறாகப் புரிந்து கொண்ட ராமவன்னி

* விசாரணையில் மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக்

* நாங்கள் உத்தமர்கள் என ஊருக்கு ஊர் ஜாக் அமைப்பினர் அடித்த நோட்டீஸ் பிரதிகள்

* ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்கள்

* ஆதாரங்கள் இருந்து அமைதி காக்கும் ததஜவினருக்கு கண்டனம்

* ராமவன்னி ஜாக் அமைப்பினருக்கு எழுதிக் கொடுத்த கடிதத்தின் உண்மை நிலை என்ன?

* ராமவன்னி மற்றும் பாம்பன் காங்கிரஸ் பிரமுகர் தரும் ஆடியோ வாக்குமூலங்கள்

* பள்ளி கட்ட காசு கேட்டிருந்தனர் என ராமவன்னி உணர்வு இதழுக்கு எழுதிய கடிதம்

* அவர்களின் செய்தியை வெளியிட்டு சந்தோசப்பட்ட பொய்யன் கூட்டம்

இன்னும் வரிக்கு வரி ஆதாரங்களுடன் அள்ளிப்போட்டு ஜாக்கின் கேவலப்பட்டு காசு கேட்ட இழி செயலை அம்பலப்படுத்தும் செய்தி... அடுத்து வருவது...

2 Response to "இரட்டைப் புலிகள்"

 1. Niyas Says:

  பயங்கர வாதி பிரபாகரனும்,அவனது இயக்கமும் யாழ்பானம் தொட்டு பொத்துவில் வரையான
  (பயங்கர வாதிகளால் தமிழ் ஈழம் என்று வர்ணிக்க பட்ட பகுதி) முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி படுமோசமான முறையில் நான்கு கால் புலி அதன் பசிக்காக எப்படி எல்லாம் ஒரு விலங்கை இறையாக்குமோ அதை விடவும் மோசமாக வெட்டி குதறி அவர்களின் புலி பாசிசத்தை காண்பித்தார்கள்.
  கப்பம் கொடுக்காவிட்டால் பிளாஸ்டிக் பையை உருக்கி காதுகளுக்குள் ஊற்றி காது கேலாமல் இருக்கும் எத்தனையோபேர் எங்கள் நாட்டில்இன்னமும் இருக்கிறார்கள். அது மட்டுமா அவர்களது பாசிச வெறி முஸ்லிம் கற்பினியின் தாயின் வயிற்றிலிருந்த குழந்தையை வயிற்றை வெட்டி எடுத்து அந்த குழைந்தையை தூக்கி பனை மரத்தில் அடித்து கொன்றார்களே அதெல்லாம் எப்படித்தான் எங்களால் மறக்க முடியும்.
  இவர்களால் எத்தனை பள்ளி வாசல்களுக்குள் குண்டு வைத்தும்,அறி வாளால் வெட்டியும் முஸ்லிம் சிறுவர்களும்,பெரியோர்களும் கொல்லப்பட்டார்கள் என்பது எங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்கு தெரியும்.

  நான் வெளி நாட்டில் பனி புரிய வரும் போது தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரரும் இந்து சகோதரரும் என்னிடம் கேட்டார்
  'நீங்கள் தமிழா?" என்று அதற்க்கு நான் சொன்னேன் இல்லை நான் முஸ்லிம் என்று அதற்க்கு அவர்கள் மீண்டும் என்னிடம் கேட்டார்கள்
  "உங்கள் தாய் மொழி தமிழ் தானே அப்போ எ முஸ்லிம் எங்கிரிங்க? தமிழ் என்று சொல்ல வேண்டியது தானே" என்று.
  தமிழ் நாட்டி உள்ள இந்துகளும்,முஸ்லிம்களும் தங்களை தமிழர்கள் என்று அடையாள படுத்தி கொள்வதை கண்டு நான் பூரிப்படைந்தேன். அப்படிதான் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களும் விரும்புகிறார்கள். ஆனால் பயங்கரவாதி புலிகள் தமிழை தங்கள் மொழி என்றும் முஸ்லிம்களின் மொழி அரபுதான் என்றும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் உயிரோடு இருக்கவே கூடாது என்றும் இலங்கை முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள்.
  இவர்களின் இப்படிபட்ட கேவலமான கருத்துக்கு அப்போதிருந்த இலங்கை முஸ்லிம்களின்குரல் தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களின் உயிர்களை காவு கொள்ள மாட்டோம் என்று புலிகள் உத்தரவாதம் அளித்தால் முஸ்லிம்கள் தங்கள் தமிழ் பேசும் நாக்குகளை அறுத்து வீசவும் தயங்க மாட்டார்கள் என்று கூறி இருந்தார். அப்படி பட்ட கேவலமான புலிகளுக்கு தமிழ் நாட்டு தொப்பில் கொடி உறவுகள் குரல் கொடுப்பது எங்களை போன்றோருக்கு வேதனையாக இருந்தாலும் எங்களுக்கும் குரல் கொடுக்க சில சகோதர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.

  நியாஸ்,
  இலங்கை.

 2. Ibnu Halima Says:

  காசுக்கு பீ தின்னும் கேவலமான குணத்தை உடையவர்கள் ஜவாஹிருல்லாஹ் அண்ட் பாக்கர். இந்த கேவலமான ஜந்துக்களை முஸ்லிம் சமூகம் உணர்ந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை