தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி ஜாக் வசூல் மோசடி அம்பலம்

Thursday, June 9, 2011 4:41 AM Posted by பொய்யன் டிஜே

தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி ஜாக் வசூல் மோசடி அம்பலம்

கிழியும் மோசடிக் கும்பல் ஜாக்கின் முகமூடி

பரிசுத்தவான்களின் பரிதாப நிலை பாரீர்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் என்ற ஊரில் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைச் சொல்லி பரிசுத்தவான்களான ஜாக் அமைப்பினர் தங்களை தவ்ஹீத் ஜமாஅத் என காட்டிக்கொண்டு மீட்டர் போட முயன்றதாகவும் , அவர்கள் கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்டத்தலைவர் ராமச்சந்திர ராமவன்னி அவர்கள், கிளையில் ஒப்படைப்பதை விட மாவட்டத் தலைமையிடம் ஒப்படைப்பதே சிறந்தது என நினைத்து இராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் சைபுல்லாவைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நாங்களோ, எங்கள் கிளையில் உள்ள யாருமோ இங்கல்ல , தமிழகம் முழுவதும் எங்கேயும் யாரிடமும் மானங்கெட்டு காசு கேட்க மாட்டோம் என சொல்லியிருக்கிறார்.

உடனே அவர், உங்கள் பாம்பன் கிளையில் கட்டிக்கொண்டு இருக்கும் பள்ளிவாசலுக்குத் தான் காசு கேட்டார்கள் எனச் சொல்ல சூடு பிடித்து சாயம் வெளுத்து டர்ராகியது ஜாக்கின் முகமூடி..

ஜாக் பாம்பன் கிளைக்கு ஓட்டுக் கேட்கப் போன காங்கிரஸ்காரர்களிடம் “தவ்ஹீத் பள்ளிக்கு” கட்டிடத்துக்கு காசு தாருங்கள் என கேட்டிருக்கிறார்கள். தவ்ஹீத் என்றதும் சரி இது தவ்ஹீத் ஜமாத் பள்ளி என நினைத்த ராமவன்னி சரி நான் கொண்டு வந்து தருகிறேன் என சொல்லிய பிறகு தான் மேற்கண்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. காசு கேட்ட விசயத்தில் “ஹபிபுல்லா” என்பவர் தான் கதாநாயகன் என்று தெரிய வந்தது. ஆனால் இந்த செய்தியைப் பிரசுரம் செய்த உணர்வு பத்திரிகை, ஹபிபுல்லாவின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என முடிவு செய்து பொதுவாக செய்தி வெளியிட்டது. இதனால் கொதித்தெழுந்த ஜாக்கினர் கோயமுத்தூரிலும், திருச்சியிலும் வெளியிட்ட நோட்டீஸில் இதை நிருபிக்க முடியுமா எனக் கேட்க, அதன் பிறகு தான் ஹபிபுல்லாவின் பெயர் சீனுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் அதன் பிறகும் அசராத இந்த அயோக்கியர்கள், தாங்கள் செய்த தவறை மறைக்க நாங்கள் காசே கேட்கவில்லை. யாரிடமும் காசு கேட்கும் ஈன புத்தியும் எங்களுக்கு இல்லை. நாங்கள் பரிசுத்தவான்கள் என ஊருக்கு ஊர் நோட்டீஸ் விட்டனர் ஜாக்கினர். அதுமட்டுமின்றி ராமவன்னியைச் சந்தித்த ஒரு குழு அவரிடம் ஹபிபுல்லா என்பவரோ, ஜாக் அமைப்போ காசு கேட்கவில்லை என எழுதி வாங்கி வந்து விட்டனர்.

இந்தச் செய்தியை மறுத்து ஜாக்கினர் உலகம் முழுவதும் நாங்கள் தான் யோக்கியன் என்று நோட்டீஸ் அடித்து பரப்பியது.

ஆனால் டிஎன்டிஜேவினர், தங்களிடம ஆதாரங்கள் இருந்தும் ஜாக் சம்பந்தமாக எந்தவித பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தனர். நாமும் அமைதியாக இருந்து விட்டோம். இந்த நிலையில் தான் கீழ்க்கண்ட நோட்டீஸ்கள் உலகம் முழுவதும் அச்சிட்டு பரப்பப்படுவது நம் கவனத்துக்கு வந்தது.

இனி டிஎன்டிஜேவினரை நம்பி பிரயோஜனம் இல்லை. நாமே இவர்களுக்கு பதில் கொடுத்தால் தான் இவர்களின் விசப்பல்லைப் பிடுங்க முடியும் என இதோ நாம் சேகரித்த ஆதாரங்களை உங்களிடம் அள்ளிப் போடுகிறோம்.

ராமவன்னியிடம் அவர்கள் வாங்கிய கடித்ததில் சில முரண்பாடுகள் இருப்பது நமக்குத் தெரியவந்தது. அதாவது என்னிடம் ஹபிபுல்லா என்பவரோ, ஜாக் அமைப்பினரோ யாருமோ காசு கேட்கவில்லை என துவங்கும் கடிதம் கடைசியாக, நான் தவ்ஹீத் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொண்டேன் என வந்து முடியும்.

அந்தக் கடிதம் இதோ:

யாருமே காசு கேட்கவில்லை, பிறகு ஏன் இவர் தவ்ஹீத் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆக இதற்குள் ஏதோ சதி இருக்கிறது என்பதை உணர்ந்து இதை சரியான முறையில் விசாரிக்க முடிவு செய்த நம் செய்தியாளர்கள் குழு பல வகையில் இதை அலசி ஆராய்ந்து பலவிதமான ஆதாரங்களைத் திரட்டியது.

முதலில் ராமவன்னியைப் பொருத்தவரை அவர் பாம்பனில் சேர்மனாக (சேர்மனோ அல்லது கவுன்சிலரோ தெரியவில்லை) இருக்கிறார். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலை எதிர் நோக்கி இருக்கிறார். எனவே அவர் யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது மிகத் தெளிவாகியது ( ராமவன்னியுடன் பேசிய ஆடியோவைக் கேட்கவும்)

அடுத்து சில நபர்கள் தன்னை பாம்பன் ஜாக் தலைவர் கலிபுல்லா தலைமையில் சந்தித்து கடிதம் கேட்டதாக சொல்லியிருக்கிறார் ராமவன்னி. அதற்கு மறுமுனையில் பேசியவர் உங்களுக்கு ஹபிபுல்லா என்பவரைத் தெரியுமா எனக் கேட்கிறார். இவர் எனக்கு ஹபிபுல்லா என்பவரைத் தெரியாது. ஆனால் அங்கு வந்தவர்கள் ஒரு நபரைக் காட்டி இவர் தான் ஹபிபுல்லா, எனவே இவர் காசு கேட்கவில்லை என எழுதித்தாருங்கள் என கேட்க அதேபோல இவரும் எழுதித் தந்து இருக்கிறார்.( ராமவன்னியுடன் பேசிய ஆடியோ கேட்கவும்)

காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்டத்தலைவர் ராமவன்னியுடன் பேசிய ஆடியோ:


அதாவது இன்னும் உதாரணமாக சொல்ல வேண்டுமானால்,

பிஜே ஒருவரிடம் காசு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். காசு கேட்டவருக்கு பிஜேவையும் யார் என்று தெரியாது, பிஜேவின் பெயரும் தெரியாது. ஆனால் அங்கிருந்தவர்கள் விசாரிக்கும் போது பிஜே தான் காசு கேட்டார் என்று சொல்கிறார்கள். இதனால் கொதித்தெழுந்த சிலர் ஒரு அடையாளம் தெரியாத நபரை, இவர் தான் பிஜே எனக் காட்டுவதற்காக அவரிடம் அழைத்துக் கொண்டு சென்று, நல்லா பாருங்க! இவர் தான் பிஜே, இவரா உங்ககிட்ட காசு கேட்டார் என கேட்கிறார்கள். அதற்கு முன் இவரை யார் என்றே தெரியாத அந்த நபர், ஓ! இவர் தான் பிஜேயா, இவரை நான் பார்த்ததும் இல்லை, இவர் என்னிடம் காசு கேட்கவும் இல்லை என சொல்கிறார். இதை அப்படியே எழுதித்தாருங்கள் எனக் கேட்க, அதுபோலவே அவருக்கு எழுதிக் கொடுக்கிறார்கள். இப்படித்தான் நடந்தது ஹபிபுல்லா என்பவர் காசு கேட்கவில்லை என ராமவன்னி எழுதிய கடிதத்தில் இடம்பெற்ற செய்தியின் சாராம்சம்.

அதெல்லாம் சரி! தவ்ஹீத் என்ற வார்த்தையை நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்று அவர்களின் கடிதத்தில் வந்த கருத்துப் பிழையின் உள் அர்த்தம் ஆயிரம் கதை சொல்கிறது. அதாவது இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றால் பிறகு ஏன் அவர் தவ்ஹீத் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும்?

அடுத்து, தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ராமவன்னி எழுதியிருக்கும் கடிதத்தில் யாருமே காசு கேட்கவில்லை. ஆனால் பள்ளிவாசல் கட்ட காசு கேட்டது உண்மை என்று சொல்கிறார். இதுவும் ஒன்றுக்கொண்று முரண். அப்படியானால் காசு கேட்ட்து யார்? வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆனா வாராது என்ற கதை தான்.

தவ்ஹீத் ஜமாத்துக்கு ராமவன்னி எழுதிய கடிதம்:

ஆக இதிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு தான் ராமவன்னி முழுமையாக வாய் திறக்க மறுக்கிறார் என்பதை.

சரி! இனி அவர்களே மாட்டிக்கொண்ட விவகாரங்களுக்கு வரலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி நாங்கள் காசு கேட்கவில்லை, அந்த அவசியமும் இல்லை. நாங்கள் காசு கேட்டது எங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தான். அதாவது நாங்களும் தவ்ஹீத் ஜமாத்தான் என்று சொல்லாமல் சொல்லி , உணர்வு அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் “தவ்ஹீத் ஜமாத் ஜாக்” என்று இதற்காகவே புது லட்டர்பேடு அடித்து உணர்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அந்தக் கடிதம் இதோ:

ஆக இதுவும் அவர்கள் தப்பித்துக் கொள்ளும் ஒரு வழிதான். உணர்வு செய்தியாளரிடம் தொலைபேசியில் பேசிய கலிபுல்லா, “ஏன் நீங்கள் மட்டும் தான் தவ்ஹீத் ஜமாத்தா? நாங்களும் தவ்ஹீத் ஜமாத் தான் என்ற பாணியில் பேசியிருக்கிறார். ஆக இவர்கள் மீட்டர் போட்ட செய்தியை மறைக்க ஆயிரம் கதையை அவிழ்த்து விட வேண்டியாதாய் இருக்கிறது ஜாக் அமைப்பினருக்கு.

இதைவிடக்கொடுமை தவ்ஹீத் ஜமாத் பெயரைச் சொல்லி வசூல் மோசடி செய்து விட்டு, பாருங்கள் நாங்கள் யோக்கியர்கள், அவர்கள் தான் அயோக்கியர்கள் என்ற பாணியில் ஊரெல்லாம் நோட்டீஸ் பரப்பி வரும் இந்த யோக்கிய சிகாமனிகளின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுகிறார், பாம்பன் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர். அவர் தான் அசன் அலியை ஓட்டுக்கேட்க அழைத்துச் சென்றவர். வெறும் 2 லட்ச ரூபாய் கொடுத்தால் எங்கள் பகுதி ஓட்டுக்களை அப்படியே வாரித்தருகிறேன் என்று சொன்னதை ஆடியோவில் கேட்கலாம்.

உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் என்ன நடந்தது என்பதை விளக்குகிறார்கள்:

காசு கேட்டு மாட்டிக்கொண்ட ஜாக்’ஸ் அமைப்பினர் உளறிக்கொட்டி வெளியிட்டுள்ள நோட்டீஸ்களுக்கு பதிலடி....

 • மேலப்பாளையம், திருச்சி, கடையநல்லூர் பள்ளிகள் TNTJ பெயர் சொல்லி வசூல் செய்யபட்டதாக ஆதாரம் இருக்கிறதா என கேட்கும் முட்டாள்களே! அன்றைக்கு TNTJ என்ற அமைப்பே கிடையாது என்பது உங்களுக்கும் தெரியும் தானே! ஜாக் பெயரைச் சொல்லித் தான் அப்போது வசூல் செய்யப்பட்டது. அதில் உறுப்பினர்களாக இருந்த அதிகமான நபர்கள் ஜாக் என்ற மோசடி அமைப்பை வெறுத்த காரணத்தால் அது ததஜ உறுப்பினர்களிடம் இருக்கிறது. இதிலே ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. காரணம் அன்றைக்கு ஜாக் பெயரைச் சொல்லி ஜாக் தான் வசூல் செய்தது. சுன்னத் ஜமாத் பெயரைச் சொல்லி வசூல் செய்தால் தான் அதைப்பற்றிக் கேட்க வேண்டும்.
 • பசுலுல் இலாஹியை வேட்பாளராக அறிவித்த நேரமும், கோட்டாறு இமாம் அரசியலை ஹராம் என்று சொல்லிய நேரமும் சம காலங்கள் என்பதால் தான் அதைக் கொண்டுவர அவசியம் ஏற்பட்டது. பசுலுல் இலாஹியை வேட்பாளராக நிறுத்த ஆர்பாட்டம் நடத்தியதாக நீங்கள் இட்டுக்கட்டிய(?) செய்தியை உங்களால் நிறுபிக்க முடியுமா என இத்தனை காலமும் கேட்டு வந்த இந்த கேடுகெட்ட ஜாக்கினர் இப்போது அதை அந்தர்பல்டியாக மாற்றி கரணம் போடுவதை நாம் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
 • கோவை அய்யூப் பீட்டர் அல்போன்சை ஆதரித்து பிரச்சாரம் செய்ததற்கான நோட்டீஸை மட்டும் வெளியிட்டீர்கள்,,அவர் பேசியதை வெளியிட வேண்டாமா என்ற முட்டாள் தனமானவாதத்தை வைக்கிறார்கள். ஆக இவர்கள் அய்யூப் பேசியதை மறுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
 • மனநோயை விட பதவி வெறி கொடியது என்று உணர்வில் கடிதம் எழுதியதால் தாங்களை மனநோயாளி என்று ஒத்துக் கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு மனநோயாளி தன்னை மனநோயாளி என ஒப்புக்கொள்ள மாட்டான். அதேபோல ஒரு திருடன் தன்னை திருடன் என ஒப்புக்கொள்ள மாட்டான். உதாரணம் ஜாக். ஆனால் ஒரு வாசகர் எழுதிய மனநோயை விட பதவி வெறி கொடியது என்ற விவகாரத்தை ஒப்புக்கொண்டு எழுதும் போது, அது கருத்தை எதிர்கொள்வதாக அமையுமே தவிர மனநோயை ஒப்புக்கொண்டதாக அமையாது என இந்த கள்ள அமைப்புத் திருடர்களுக்கு நாம் சொல்லிக்கொள்கிறோம்.
 • மலுக்கு முதலியை இப்போது யார் என்றே தெரியாதவர் போல கேட்கிறார்கள். பிறகு நாம் இதோ போட்டோ போட்டு நிறுபிக்கிறோம். மலுக்கு முதலி ஜாக் வகையறா என்பதற்கான ஆதாரத்தையும் இதோடு வெளியிடுகிறோம். இதன் பின்னர் நோட்டீஸ் அடிக்கும் இந்த பைத்தியக்காரர்கள் மலுக்கு முதலியை நாங்களும் கண்டித்தோம் என்பார்கள். இப்படித்தான் பசுலுல் இலாஹியை ஆதரித்ததாக ஒரு பிட் நோட்டீஸ் காட்ட முடியுமா எனக் கேட்டார்கள்.
 • பிஜே இறைமறுப்புக் கொள்கையில் கொஞ்ச காலம் இருந்த்தாக நீங்கள் சொல்லும் காலம் அவர் ஜாக் அமைப்பில் இருந்த காலம் என்பது தான் சரி. அப்போது நீங்களும் அவரோடு சேர்ந்து காபிராக இருந்தீர்கள் என சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
 • பிஜே தொழுவதை ஏதாவது ஒரு பள்ளியில் பார்த்ததுண்டா என கேட்கும் இந்த உத்தமர்கள், தமிழகம் அல்லது இந்தியா முழுவதும் இருக்கும் பள்ளியில் ஒரே நேரத்தில் எல்லாரும் பார்க்கும் வகையில் பிஜே தொழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் போலும். அப்படி ஒரே நேரத்தில் எல்லா பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் தொழுதால் மட்டும் தான் எல்லார் கண்களிலும் படமுடியும். ஆனால் அது பிஜேவாலும் முடியாது, யாராலும் முடியாது.
 • தவ்ஹீத் ஜமாத் பெட்டி வாங்கியதாக எழுதியிருக்கும் இவர்கள் தான் அந்தப் பெட்டியை வாங்கிக் கொடுத்தார்களா? 2 லட்சம் ரூபாய் கொடுங்கள் எங்கள் பகுதி வாக்குகளை வாங்கித் தருகிறேன் என்று கேட்ட பாம்பன் ஜாக் வகையறாக்களுக்கும், தவ்ஹீத் பள்ளிக்கு காசு தாருங்கள் என கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கேட்ட பாம்பன் ஜாக் அமைப்பின் கிளையே இப்படி என்றால் மாநில தலைமை எப்படி இருக்கும்?

ஆனால் ஜாக் அமைப்பினர் கேட்டு தவறிப் போய் தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கு வந்தக் காசைக் கூட வாங்கிக் கொள்ளாமல் அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, எங்கள் அமைப்பில் கிளை முதல் மாநிலம் வரை என யாரிடமும் காசு கேட்க மாட்டோம், யாரிடமும் விலை போக மாட்டோம் என ராமவன்னியிடம் தெளிவாக எடுத்துச் சொல்லிய தவ்ஹீத் ஜமாஅத் எங்கே? மானங்கெட்டு மற்ற அமைப்பின் பெயர் சொல்லி காசு கேட்ட ஜாக் எங்கே? ராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாத் நினைத்திருந்தால் சத்தமில்லாமல் அந்தக் காசை வாங்கி பதுக்கியிருக்கலாம். ஆனால் இறையச்சம் உள்ளவர்கள் இந்த அமைப்பில் உள்ளவர்கள் என்பதை இதன் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டிவிட்டார்கள் இராமநாதபுரம் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்.

 • ததஜ LTTE மாதிரி செயல்படுகிறதாம். அவர்களுக்கெதிரான அமைப்பு இருப்பதை விரும்பவில்லையாம். சரி இது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் கேள்வி அதுவல்ல. புலிகளை ஆதரிக்கும் சீமான் ஆதரித்த ஜவாஹிருல்லாவை இவர்கள் ஆதரித்தார்களா இல்லையா என்பது தான். அதற்கு இன்னும் பதிலைக் கானோம்.
 • பிஜே எழுதிய தர்ஜூமா விளக்கமா? குழப்பமா என தெளிவாகவே விவாதத்தில் சொல்லியிருக்கிறார் பிஜே. மதுரை பாதிரியார் ஜெபமணி குரானில் முரண்படும் வசன எண்கள் குறித்து கேலி செய்த போது பிஜே குர்ஆன் அன்றைக்கு நடப்பில் இல்லை. அன்றைக்கு இருந்த குரான்கள் அதற்கு பதில் சொல்வதாக அமையவில்லை. பிஜே குர்ஆன் தர்ஜூமா தவிர்த்து வேறு எந்த தர்ஜூமா இந்த கேள்விக்கு விளக்கமாக இருந்து விடைதரும் என்று ஜாக்கினர் சொன்னால் மிக நன்றாக இருக்கும். அதற்கு விடை சொல்லி விட்டு பிஜே தர்ஜூமா பற்றி பேசலாம் ஜாக்கினர்
 • சஹாபாக்களை இழிவுபடுத்துகிறாராம் பிஜே. ரசூலுல்லாஹ் இறந்த பிறகு சஹாபாக்களிடையே பதவிப்போட்டி வந்த்ததா இல்லையா? இல்லை என்றால் அதை இவர்கள் நிறுபிக்க வேண்டும். அதேபோல சகாபாக்கள் இருபிரிவுகளாக மாறி அன்னை ஆயிஷா தலைமையில் நடந்த ஒட்டகப்போர் எதைக் குறிக்கிறது என இவர்கள் விளக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கவ்ஸர் தடாகத்தில் தடுக்கப்படும் தன் தோழர்கள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன கருத்தை இவர்கள் மறுக்கிறார்களா அல்லது ஏற்றுக் கொள்கிறார்களா?
 • உணர்வு செய்தி சம்பந்தமாக பாம்பன் கிளைத் தலைவர் கலிபுல்லாவுக்கு 10/05/2011 பதிவுத் தபால் அனுப்பப்பட்டதே! அதற்கு இன்று வரை எந்த விதமான பதிலும் இல்லையே! அதையெல்லாம் இந்த யோக்கிய சீலர்கள் கேட்டுத் தெளிவு செய்யாமல் ஊருக்கு ஊர் நோட்டீஸ் போட்டு தங்களை உத்தமர்களாக காட்டிக் கொள்ள இவர்கள் நினைத்ததும் இப்போது கிழிந்து போனது. இவர்களை ரகசியக் கூட்டங்கள் போடுவதைப் போன்று ரகசியமாக இந்த நோட்டீஸைப் பரப்பலாம் என அனுப்பிய காப்பிகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்து இவர்களின் முகத்திரையை மேலும் கிழித்தது தான் நிஜம்.

ரசூல் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று,

அவன் பேசினால் பொய்யே பேசுவான். அவன் வாக்களித்தால் அதனை மீறி விடுவான். அவனிடம் அமானிதங்கள் வழங்கப்பட்டால் அதனை நிறைவேற்ற மாட்டான். அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று அழைத்துக்கொண்டாலும் சரியே.

அறிவிப்பாளர்: அபு ஹூரைரா (ரலி)

புஹாரி, முஸ்லிம்

உங்களிடம் நான்கு தகுதிகள் காணப்பட்டால் நீங்கள் உங்கள் வாழ்வில் எதனையும் தவறவிட்டுவிட்டேனே என கவலைப்படத்தேவையில்லை. அத்தகுதிகளாவன: அமானிதத்தை பாதுகாத்தல், உண்மையை பாதுகாத்தல், நற்பண்புகளை பேணல், நேர்மையான, தூய்மையான உணவை உட்கொள்ளல்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

புஹாரி, அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

எவரொருவரிடம் நம்பகத்தன்மை இல்லையோ, அவரிடம் சத்தியம் அல்லது தீன் இல்லை. எவனொருவன் தனது வாக்குறுதியை அல்லது தான் செய்த சத்தியத்தினை நிறைவேற்ற இல்லையோ அவரிடம் தீன் இல்லை.

-அஹ்மத்


நடந்த ஒரு உண்மையை மறைக்க ஒரு பொய், அந்த பொய்யை மறைக்க ஆயிரம் பொய்., இவர்கள் தான் யோக்கியர்கள் என ஒரு ஹக்கை மறைப்பதற்காக ஊர் தோறும் நோட்டீஸ்கள், ஈ மெயில் மற்றும் இஸ்லாமிய மெயில் குழுமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இ மெயில்கள் என ஏகப்பட்ட பித்னாக்கள். இப்போது இதைப் படிக்கும் பொதுமக்கள் இதை எவ்வளவு பரப்ப முடியுமோ அவ்வளவு பரப்புங்கள் . ஜாக் என்ற பிராடு இயக்கத்தில் இருக்கும் நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள்.

0 Response to "தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி ஜாக் வசூல் மோசடி அம்பலம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை