கோவையில் SDPI போலி போராளிகள்(?) தொடர்ந்து அத்துமீறல்

Wednesday, June 1, 2011 12:17 AM Posted by பொய்யன் டிஜே
நன்றி : கோவை tntj

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணியின் சார்பாக 08.05.2011 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அது சமயம் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.சத்திய பாதையில் லட்சிய பயணத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் மாணவரணியின் கல்வி வழிகாட்டி போஸ்டர்கள் மீது, விடியல் வெள்ளி போஸ்டர்களை SDPI அரசியல் கட்சியினர் ஒட்டினர்.

மேலும் இந்த வாரம் நம் சமுதாய வார இதழான உணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்ட பல்வேறு இடங்களில் தங்களது விடியல் வெள்ளி போஸ்டரை ஒட்டி தொடர்ந்து அத்துமீறி வருகின்றனர் SDPI அரசியல் கட்சியினர்..

நடந்து முடிந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் குறைந்தது 10,000ஓட்டுகள் பெறுவார்கள் என்பது பொது மக்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் அரசியல் கட்சி ஏவிய கூலிப்படையாக செயல்பட்டு TNTJவினர் மீது கோவையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியதன் விளைவாக 40,000 திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஓட்டு உள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் வெறும் 4519 ஓட்டுகள் மட்டுமே SDPI அரசியல் கட்சியினரால் பெற முடிந்தது.

தொடர்ந்து இது போன்ற செயல்களில் SDPI கட்சியினர் ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய காலங்களில் ஒட்டுமொத்தமாக மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதே நிதர்சனம்.
0 Response to "கோவையில் SDPI போலி போராளிகள்(?) தொடர்ந்து அத்துமீறல்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை