சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு - 1

Friday, August 12, 2011 12:15 PM Posted by பொய்யன் டிஜே

நன்றி: ஆன்லைன் பீஜே

சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு- தொடர் -1

நீல வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள் சுனாமி விவகாரம் நடந்த போது நாம் உணர்வில் எழுதியவை. கறுப்பு வண்ணத்தில் உள்ளவை இப்போது எடுத்துக் காட்டுபவவை

தமுமுக இயக்கத்தை நாமும் நாட்டில் உள்ள நன்மக்களும் சுனாமித் திருடர்கள் என்றஅடைமொழி கொடுத்து குறிப்பிட்டு வருகிறோம். இவர்களுக்கு சுனாமி திருடர்கள் என்ற பட்டம்ஏன் கிடைத்தது என்ற விபரம் புதிய தலைமுறைக்கு தெரியாது என்ற நம்பிக்கையில் சுனாமிதொடர்பாக நம்மைப் பார்த்து கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இவர்கள் எழுப்பும் கேள்விகள்புதியவை அல்ல. ஏற்கனவே கேட்கப்பட்டு அப்போதே உணர்வு இதழ் மூலம்பதிலளிக்கப்பட்டவை தான். நம்மை நோக்கி கேள்வி எழுப்புவோரின் முதுகெலும்பை முறிக்கும் பதில்கள் இறுதி தொடரில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்

திருடிக் கொண்டு ஓடுபவன் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுக் கொண்டு திருடனைப்பிடிக்க ஓடுவது போல் சுனாமித் திருடர்களான தமுமுகவினர் தங்களின் திருட்டை மறைக்கப்பார்க்கின்றனர். கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சுனாமித் திருடர்களின் வண்டவாளம்அன்றைக்கே எப்படி தண்டவாளத்தில் ஏறியது என்பதை விளக்க நல்ல சந்தர்ப்பத்தைஏற்படுத்தி தந்த தமுமுக வினருக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.

பின்னணி என்ன?

சுனாமியின் போது தவ்ஹீத் ஜமாஅத் நிதி திரட்டியது போல் தமுமுகவும் நிதி திரட்டியது. அந்தநிதி சம்மந்தமாக தவ்ஹீத் ஜமாஅத் கணக்குக் காட்டவில்லை என்றும் உணர்வில் முன்னுக்குப்பின் முரண் உள்ளது என்றும் குற்றம் சாட்டி நபிவழி தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒருபிரசுரம் அச்சிடப்பட்டு அது தமிழகத்தின் பல ஊர்களின் தமுமுக வினரால் வினியோகம்செய்யப்பட்டது. இது குறித்து உணர்வு வாசகர் ஒருவர் உணர்வு இதழில் கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு நான் அளித்த பதிலில் இருந்து இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

உணர்வு உரிமை 10 : குரல் 12, நவம்பர் 25 - டிசம்பர் 01, 2005. பக்கம் 5. ல் வெளியான அந்தக்கேள்வியும் பதிலும் வருமாறு:

கேள்வி : சுனாமி கணக்கை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு நீங்கள்தெரிவித்துள்ள காரணத்தை அடிப்படையாகக் கொண்டு பினாமி பிரசுரம்வெளியிட்டுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இஸ்மாயில், நேதாஜிநகர், சென்னை.

பதில் : நபிவழி தவ்ஹீத் என்ற பெயரில் தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் இல்லை. இல்லாதஅமைப்பின் பெயரில் இப்பிரசுரத்தை இலட்சக்கணக்கில் தமிழகத்தின் பல ஊர்களில் தமுமுகநிர்வாகிகளே விநியோகம் செய்ததற்கு நேரடி சாட்சியங்கள் உள்ளன.

இருக்கின்ற அமைப்பின் பெயரில் அச்சிடப்பட்ட பிரசுரத்தை இவர்கள் விநியோகம் செய்தால்பிரசுரத்தை இவர்கள் அச்சிடவில்லை விநியோகம் மட்டுமே செய்தனர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் இல்லாத அமைப்பின் பெயரில் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரசுரம்விநியோகிக்கிறார்கள் என்றால் இதை அச்சிட்டவர்களே இவர்கள்தான் என்பது தெளிவாகிறது.எனவே பினாமி பிரசுரம் வெளியிட்ட அவர்களுக்கு எனது பகிரங்க சவாலை பதிலாகவெளியிட்டுள்ளேன். அதை 8 ம் பக்கச் செய்தியில் காண்க. பிரசுரத்தில் எடுத்து வைக்கப்படும்வாதங்கள் எவ்வளவு விஷமத்தனமானவை என்பதைப் பார்ப்போம்.

பகிரங்க அறிவுப்புச் செய்து நிதி திரட்டும் போது அதுபற்றிய தகவலை உடனடியாக வெளியிடும்போது கடைசி நேரத் தடங்கல் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று தான்.

நாம் இணைந்திருந்த காலத்தில் கோவை கலவர நிவாரண நிதி, பழனிபாபா கொல்லப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டோர்களுக்கான நிவாரண நிதி ஆகியவற்றின்பட்டியலை வெளியிட்ட போது இது போல் திருத்தங்களை வெளியிட்டுள்ளோம். மக்களுக்குஉண்மையாகக் கணக்குக் காட்டக் கூடியவர்கள் நிச்சயம் இது போன்ற நிலையைச்சந்திப்பார்கள். இது எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

துபாயில் உள்ள ஒருவர் பத்து நபர்களிடம் திரட்டிய பத்தாயிரம் ரூபாயை அனுப்புகிறார் என்றுவைத்துக் கொள்வோம். இது பற்றிய விபரம் உணர்வு இதழுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்பெயரில் பத்தாயிரம் வெளியிடப்படும். சில நாட்கள் கழித்து அவர் கடிதம் எழுதி பத்தாயிரம்என்னுடைய பணம் அல்ல. பத்துப் பேரிடம் திரட்டிய தொகை, எனவே அவர்களதுபெயர்களையும் வெளியிடவும் என்று அதில் குறிப்பிடுவார்.

இந்தத் தகவல் ஜமாத் மூலம் உணர்வு இதழுக்குத் தெரிவிக்கப்படும். பெரும்பாலும் இந்தவிபரங்கள் சரியாகவே வெளியிடப்பட்டு விடும். ஆனாலும் சில நேரங்களில்கவனமின்மையால் ஏற்கனவே வெளியான பட்டியலின் விரிவாக்கம் என்று வெளியிடுவதற்குப்பதிலாக மீண்டும் பத்தாயிரம் ரூபாயை பத்துப் பேரின் பெயரில் வெளியிட்டு விடுவதுமுண்டு.இப்படி நடந்திருப்பதால் உணர்வில் வெளியான பட்டியலுடன் தலைமையில் உள்ளகணக்குகள் ஒத்துப் போகாமல் ஆகிவிடும்.

இவ்வாறு பிழை ஏற்பட்ட பட்டியலைக் கண்டுபிடித்து சரி செய்கிறோம் என்று கூறுவது எப்படிமோசடியாகும்?

இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பத்தாயிரம் அனுப்புகிறார்கள் என்றால் அந்தப் பெயரில்அந்தத் தொகை வெளியிடப்படும். இந்தந்தக் கிளைகள் மூலம் வழங்கியது என்ற விரிவாக்கப்பட்டியலை தாமதமாக அவர்கள் அனுப்பும் போது அது மற்றொரு தடவை உணர்வில்வெளியாகி விடுவதுண்டு.

இது போன்ற தவறுகள் ஏற்படுவதை நாம் உணர்வில் வெளியிடாமலேயே காலம் கடத்தமுடியும். ஏன் தாமதமாகிறது என்ற சந்தேகத்தை மக்களுக்கு விளக்குவது அவசியம் என்றுநாங்கள் நினைக்கிறோம். எங்களிடம் ஏற்பட்ட பிழையை மறைத்து பொய்யான காரணம்சொல்ல நாம் விரும்பவில்லை. கவனக் குறைவால் ஏற்பட்ட இப்பிழையைத் தான் மோசடிஎன்று பிரசுரம் வெளியிட்டுள்ளனர்.

மக்களுக்குத் தாங்கள் கணக்கு காட்டப் போவதில்லை என்று நினைப்பவர்களுக்கும் சுருட்டிக்கொண்டவர்களுக்கும் இது போன்ற விளக்கம் அளிக்கும் அவசியம் ஏற்படப் போவதில்லை.

கணக்கை முறையாக வெளியிடுபவர்களுக்கு இது போன்ற நிர்பந்தம் ஏற்படும் என்பதைப்புரிந்து கொள்ளுங்கள்.

(எனது பொருளாதார நிலை பற்றியும் பினாமி பிரசுரத்தைப் பரப்பி வருகின்றனர். எனது முதல்பிரசுரம் மக்களைச் சென்றடைந்தவுடன் எனது இரண்டாம் பிரசுரம் விரைவில் வரும்.இவர்களின் முகத்திரை முழுமையாகவே கிழியும். இவர்கள் பரப்பும் மொட்டைப் பிரசுரங்களைஇவர்கள் வெளியிடுவதாகவே எடுத்துக் கொண்டு இவர்களை நேருக்கு நேர் சந்திப்பேன்.இன்ஷா அல்லாஹ்)

இஸ்மாயீல் என்ற சகோதரரரின் கேள்விக்கு உணர்வு உரிமை 10 : குரல் 12, நவம்பர் 25 - டிசம்பர்01, 2005. பக்கம் 5. ல் நான் மேற்கண்டவாறு பதில் அளித்ததுடன் பகிரங்க அறை கூவலுக்கானஅழைப்பையும் அதே இதழில் வெளியிட்டேன். அந்தப் பகிரங்க அழைப்பிலேயே உங்களுக்குஉண்மை பளிச்சென்று தெரிந்து விடும்.

அந்த பகிரங்க அழைப்பு இது தான்

இறைவனின் திருப்பெயரால்...

த.மு.மு.க.வுக்குப் பகிரங்க அறை கூவல்

சுனாமி நிவாரண நிதியைப் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஒரு துண்டுப் பிரசுரத்தைத.மு.மு.கவினர் தமிழகமெங்கும் வினியோகம் செய்து வருகின்றனர்.

தங்கள் இயக்கத்தின் பெயரில் வெளியிடாமல் வழக்கம் போலவே பினாமி பிரசுரமாக அதைப்பரப்பி வருகின்றனர்.

பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதிகளுக்கு வெளிப்படையான கணக்கை வெளியிடும்அவசியத்தை இதன் மூலம் த.மு.மு.கவினர் ஒப்புக் கொண்டதற்கு அவர்களுக்கு நாம் நன்றிசெலுத்துகிறோம்.

அந்த இயக்கத்திலிருந்து தவ்ஹீத் ஜமாஅத் பிரிந்த பின், த.மு.மு.கவும், தவ்ஹீத் ஜமாஅத்தும்பொதுமக்களிடமிருந்து பகிரங்க அறிவிப்பு செய்து, மூன்று தடவை நிதிகளை வசூலித்தன.

1. 2004 ஃபித்ரா

2. சுனாமி நிவாரண நிதி

3. 2005 ஃபித்ரா

1. 2004 ஃபித்ரா

2004 ஆம் வருடம் நோன்புப் பெருநாள் தர்மத்தை (ஃபித்ராவை) தவ்ஹீத் ஜமாஅத்தும்திரட்டியது. தமுமுகவும் திரட்டியது.

இலட்சக்கணக்கில் தவ்ஹீத் ஜமாஅத் திரட்டிய நிதிக்குரிய கணக்கை உடனடியாக உணர்வுஇதழில் வெளியிட்டது.

தமுமுகவும் இலட்சக்கணக்கில் நிதியைத் திரட்டியது. மிகச் சிறிய அளவுக்கு மட்டுமேமக்களுக்கு வழங்கியதால் 13 மாதங்கள் கடந்த பின்பும் இன்று வரை அந்தக் கணக்கை தமுமுகவெளியிடவில்லை.

2. சுனாமி நிவாரண நிதி

சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்காக இலட்சக்கணக்கான ரூபாய்களை தவ்ஹீத் ஜமாஅத்திரட்டியது.

தமுமுகவும் இலட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டியது.

தவ்ஹீத் ஜமாஅத் திரட்டிய நிதியில் 95 சதவிகிதத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்குவழங்கிவிட்டது. எஞ்சியதை விரைவில் வழங்கிவிட்டு கணக்குகளைச் சரி செய்து மிகவிரைவில் உணர்வு இதழில் வெளியிடுவதாக தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க அறிவிப்புச்செய்துள்ளது.

ஆனால் தமுமுக 68 லட்சம் ரூபாய் திரட்டியதாக தனது பத்திரிகையில் வெளியிட்டது. திரட்டிய68 லட்சம் ரூபாயில் 10 சதவிகிதத்தைக் கூட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை வழங்கவில்லை.

68 லட்சம் ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது?

கணக்கு வெளியிடப்படுமா?

எப்போது வெளியிடப்படும்?

என்பது பற்றி தமுமுக மௌனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில் வெட்கமில்லாமல்பினாமி பிரசுரத்தை தமுமுக வினியோகம் செய்து வருகின்றது.

3. 2005 ஃபித்ரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 2005ம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் தர்மத்தை 25லட்சத்திற்கு மேல் திரட்டியது. அனைத்தையும் தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத்வினியோகம் செய்து விட்டது.

இதன் முழுக் கணக்கையும் உணர்வு இதழில் முழுமையாக தவ்ஹீத் ஜமாஅத்வெளியிட்டுவிட்டது.

ஆனால் தமுமுக இது பற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல் படம் (?) காட்டி மக்களை ஏமாற்றமுயற்சிக்கின்றது.

மூன்று கணக்குகளுக்கும் பொதுவிசாரணை

மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தவ்ஹீத் ஜமாஅத்தும் தனது நேர்மையை நிரூபிக்கும்அவசியம் உள்ளது.

மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தமுமுகவும் தனது நேர்மையை நிரூபிக்கும் அவசியம்உள்ளது.

இரண்டு இயக்கங்களுமே பொது விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வது தான் இரண்டுஇயக்கங்களின் நேர்மையை நிரூபிக்க ஏற்ற வழியாகும்.

தமிழகத்தில் மக்களால் ஓரளவு அறியப்பட்ட இயக்கங்கள் சார்பில் தலா இரண்டு அல்லதுமூன்று உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து இரண்டு இயக்கங்களும்அந்தக் குழுவிடம் மேற்கண்ட மூன்று கணக்குகளையும் ஒப்படைத்து பொது விசாரணைக்குமுன்வருவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

தமிழகத்தில்,

1. முஸ்லீம் லீக்.

2. தேசிய லீக்.

3. ஜமாஅத்துல் உலமா சபை

4. ஜமாஅத்தே இஸ்லாமி

5. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்

6. மனித நீதிப் பாசறை

ஆகிய இயக்கங்கள் மக்களால் அறியப்பட்ட இயக்கங்களாக உள்ளன.

இந்த இயக்கங்கள் சார்பில் தலா இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் கொண்டவிசாரணைக் குழுவை றியமித்து, அந்தக் குழுவிடம் மேற்கண்ட மூன்று கணக்குகளையும்இரண்டு இயக்கங்களும் ஒப்படைத்து பொது விசாரணைக்கு முன்வர வேண்டும்.

* அத்துடன் தவ்ஹீத் ஜமாஅத் கணக்குகளை விசாரணைக்குழு விசாரிக்கும் போதுவிசாரணைக் குழுவில் தமுமுக இடம் பெற வேண்டும்.

* தமுமுக கணக்குகளை விசாரணைக்குழு விசாரிக்கும் போது விசாரணைக் குழுவில் தவ்ஹீத்ஜமாஅத் இடம் பெற வேண்டும்.

இந்த இயக்கங்கள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை விட தமுமுகவுக்கே நெருக்கமாகஉள்ளன. சில இயக்கங்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரானவை.

அப்படி இருந்தும் இவர்களைக் கொண்டு அமைக்கப்படும் விசாரணைக்கு

தவ்ஹீத் ஜமாஅத் தன்னை உட்படுத்தத் தயார்!

தமுமுக மாநிலத் தலைமை தயாரா?

2004, 2005 பித்ரா கணக்குகள்,

சுனாமி நிவாரண நிதியின் வரவு செலவு கணக்குகள்

ஆகியவற்றை விசாரணைக்கு உட்படுத்த தமுமுக முன்வர வேண்டும்.

அந்த விசாரணைக் குழுவில் தனது நேர்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றி இன்ஷாஅல்லாஹ் தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்துக் காட்டும். மேலும் மேற்கண்ட மூன்று நிதியிலும்தமுமுக பெருமளவு ஊழல் செய்துள்ளதை நான் நிரூபிப்பேன்.

தமுமுக நல்ல இயக்கம் என்று நம்பி அவர்கள் அனுப்பும் அவதூறுப் பிரசுரங்களைப் பரப்பும்அப்பாவிகளே! விசாரணைக்கு முன்வருமாறு உங்கள் தலைமையை வற்புறுத்துங்கள்!அவர்கள் முன்வந்தால் நீங்கள் அந்த இயக்கத்தில் இருந்ததற்காக நீங்கள் வெட்கப்படும்அளவுக்கு விசாரணையில் தெளிவாகும்.

விசாரணைக்கு உடன்பட மறுத்தால் நீங்கள் இதுவரை இருந்த இயக்கத்தின் இலட்சணத்தைஅப்போதும் நீங்கள் விளங்கலாம்.

இவர்களுக்கு நிதி உதவி செய்பவர்களுக்கு ஒரு வார்த்தை : இவர்கள் விசாரணைக்கு உட்படமறுத்தால் இவர்களுக்கு நிதி உதவி செய்வதால் பாவம் தான் ஏற்படும் என்பதை உணருங்கள்.

விசாரணைக்கு உட்பட மறுத்தால் நமது இந்தப் பிரசுரத்துக்கு எதிராக நீதிமன்றத்தையாவதுஅனுகட்டும்! இவர்களைச் சட்டபூர்வமாக அம்பலப்படுத்த அது ஒரு வாய்ப்பாக அமையும்.

இதுமெட்டைப் பிரசுரம் அல்ல! பி. ஜைனுல் ஆபிதீன் விடுக்கும் நேரடி அறைகூவல்.

இதற்குத் தயார் என்றால் எனது கீழ்க்கண்ட முகவரிக்கு தமுமுக தொடர்பு கொள்ளலாம்.

இவர்களைத் தோலுரித்துக் காட்டும் யுத்தத்தின் துவக்கம் தான் இது!

அன்புடன்

பி.ஜைனுல் ஆபிதீன்,

30, அரண்மனைக்காரன் தெரு,

மண்ணடி, சென்னை - 1,

(உணர்வு உரிமை 10 : குரல் 12, நவம்பர் 25 - டிசம்பர் 01, 2005. பக்கம் 8.)

மேற்கண்டவாறு நான் அறைகூவல் விட்டேன். அழைப்பு விட்டது மட்டுமின்றி நடுவர்களாகப்பரிந்துரைக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை எழுத்துமூலமும் கொடுத்தோம்.

அது பற்றியும் உணர்வு இதழில் நான் எழுதிய விபரத்தில் இருந்து நீங்கள் கூடுதல் தெளிவைப்பெறலாம்.

நான் சவால் விட்டவுடன் அந்த சமாதானக் குழுவை ஏற்றுக் கொள்வதாக தமுமுகவும் ஒப்புக்கொண்டு தனது மக்கள் உரிமை இதழில் எழுதியது. அதன் பின்னர் தான் மேற்படி ஆறுஇயக்கத்தினர் தவ்ஹீத் ஜமாஅத்தையும் தமுமுகவையும் விசாரணைக்காக வருமாறுஅழைப்பு விடுத்தனர்.

அந்த ஆறு இயக்கத்தினரும் தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது அவர்களை இதற்கானஒருங்கிணைப்பாளராக நியமித்தனர்.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பஷீர் அஹ்மது அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும்தமுமுகவுக்கும் பொது விசாரணைக்கு ஒத்துழைப்பு கேட்டு கடிதம் எழுதினார்கள். அந்தக்கடிதமே உங்களுக்கு பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

அந்தக் கடிதம் இது தான்.

இந்தக் கடிதம் வந்த உடன் விசாரணைக்காக அழைக்கப்பட்ட இடத்துக்கு வந்து எல்லாவகையிலும் ஒத்துழைப்பு நல்க சம்மதம் தெரிவித்து தவ்ஹீத் ஜமாஅத் எழுத்து மூலம் பதில்கொடுத்தது.
இந்தப் பொதுவிசாரணை மூலம் தவ்ஹீத் ஜமாஅத் தனது அப்பழுக்கற்ற தன்மையை நிரூபிக்கவும் சுனாமி பணத்தையே தின்ற பாவிகளை இனம் காட்டவும் தயாராக இருந்தது. இந்த நடுவர்களின் அழைப்புக்கு தவ்ஹீத் ஜமாஅத் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தது. அந்தப் பதில் உணர்விலும் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அந்தப் பதில் இது தான்:

இறைவனின் திருப்பெயரால்...

நடுவர்கள் அழைப்பை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றது தமுமுக ஏற்குமா?

அன்பிற்குரிய இஸ்லாமியப் பொது மக்களே! பொதுமக்களின் நிதியில் மோசடி நடந்துள்ளதாஎன்பதை விசாரிக்கும் விசாரணைக் குழு வருகின்ற 10.11.2005 அன்று தவ்ஹீத்ஜமாஅத்தையும் தமுமுகûவுயும் தான் ஏற்பாடு செய்த இடத்துக்கு அழைத்துள்ளது.

நடுவர்களின் அழைப்பை ஏற்று நடுவர்களை மதித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்,அவர்கள் அழைத்த நாளில் அழைத்த இடத்துக்குச் சென்று அவர்கள் கேட்டுக் கொள்ளும்உறுதிமொழிப் பத்திரம் வழங்கவுள்ளனர்.

ஃபித்ரா, சுனாமி நிதி குறித்து அவர்கள் கேட்கும் அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும்வழங்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவுள்ளது.

நடுவர்கள் வரிக்கு வரி கணக்குகளைப் பரிசீலனை செய்ய முழுமையான ஒத்துழைப்பைஅளிக்கவும் தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவுள்ளது.

தமுமுக தனது மேற்கண்ட மூன்று நிதிகளிலும் நேர்மையாக நடந்து கொண்டுள்ளது, உண்மைஎன்றால் நடுவர்களின் அழைப்பை ஏற்று நடுவர்களின் முன் ஆஜராக வேண்டும்.

இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (tntj),

மாநிலத் தலைமையகம்.

(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 - 08, 2005. பக்கம் 3)

ஆனால் நடுவர்களை ஏற்றுக் கொண்டதாக சீன் காட்டிய தமுமுக நடுவர்கள் முன்னால்ஆஜராக மறுத்து விட்டது. தாங்கள் ஒரு மண்டபத்தில் காத்துன் இருப்பதாகவும் அங்கேநடுவர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையுடன் வர வேண்டும் என்று பதில் கொடுத்து பொதுவிசாரணையில் இருந்து ஓட்டம் பிடித்தது.

அது குறித்து தங்கள் பத்திரிகையில் என்னைப் பற்றி தரக்குறைவாக திட்டி தீர்த்தனர். பொதுவிசாரணக்கு தயார் ஆனால் தயாரில்லை என்ற பாணியில் அவ்ர்களின் பதில்அமைந்திருந்தது. இது பற்றி நான் உணர்வு இதழில் வரிக்கு வரி அளித்த பதில் வருமாறு:

இறைவனின் திருப்பெயரால்...

சவாலை ஏற்க மறுக்கும் த.மு.மு.க.

தமுமுக 2004 ஆம் ஆண்டு திரட்டிய ஃபித்ரா கணக்கையும், 2005 ம் ஆண்டு திரட்டிய ஃபித்ராகணக்கையும் வெளியிடவில்லை என்பது ஊரறிந்த உண்மை. அது போல் சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டிய நிதியின் பட்டியலை வெளியிட்ட தமுமுக அதைவிநியோகித்த விபரங்களை வெளியிடவில்லை. இதுவும் நாடறிந்த உண்மை.

பொதுமக்களுக்குச் சேர வேண்டியதைப் பொதுமக்களுக்குச் சேர்த்துவிட வேண்டும் என்றநன்னோக்கில் தான் பி.ஜைனுல் ஆபிதீனாகிய நான் அறைகூவல் விட்டேன்.

நான் சுட்டிக்காட்டிய மூன்று நிதிகளையும் முறையாக விநியோகம் செய்திருந்தால் ஏற்கவேண்டிய விதத்தில் எனது அறைகூவலை தமுமுக ஏற்றிருக்க வேண்டும். ஆனால், தாங்கள்பொது விசாரணைக்குத் தயாரில்லை என்பதை சவாலை ஏற்கிறோம் என்ற தலைப்பில்வெளியிட்டுள்ளனர்.

இப்பிரச்சனையுடன் தொடர்பு இல்லாத பல விஷயங்களைக் குறிப்பிட்டு பிரச்சனையைத்திசை திருப்ப முயன்றுள்ளனர்.

பொது விசாரணைக்குத் தொடர்பு இல்லாத அதைப் பற்றி விளக்குவதற்கு முன் பொதுவிசாரணை பற்றி அவர்கள் கூறியுள்ளதை அலசுவோம்.

பொதுவிசாரணை பற்றி

நமது அறிக்கையில் நாம் விட்ட அறைகூவல் என்ன? இவர்கள் அளித்த பதில் என்ன?என்பதைக் கொஞ்சம் ஈடுபாட்டுடன் கவனிப்பவர்கள் கூட தமுமுகவினர் பொதுவிசாரணைக்குத் தயாராக இல்லை என்பதையும், பொது விசாரணையிலிருந்து பின்வாங்கிஓட்டம் பிடிக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

(தமுமுக நிர்வாகி ஒருவரின் உள்ளக் குமுறல் தனியாக இடம் பெற்றுள்ளது. அதிலிருந்துமக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம்.)

* முஸ்லீம் லீக், தேசிய லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாஅத்துல் உலமா, மனித நீதிப் பாசறை,இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய இயக்கங்கள் சார்பில் தலா இருவர் கொண்டவிசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.

* அந்த விசாரணைக் குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் தங்களின்மூன்று கணக்குகளையும் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். விசாரணைக் குழு இந்தக்கணக்குகள் தொடர்பாக கேட்கும் அனைத்து தகவல்களையும் இரண்டு இயக்கத்தினரும் அந்தக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

இது தான் பொதுவிசாரணை!

மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தமுமுக தலைமை எவ்வித முறைகேடும் செய்யாமல்,எந்த நோக்கத்திற்காக நிதி திரட்டப்பட்டதோ அதற்கே நிதியைச் செலவிட்டிருந்தால் என்னசெய்திருக்க வேண்டும்?

தங்களின் நேர்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் நேர்மையைச்சந்தேகமற நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதி முன்முயற்சி எடுத்திருக்கவேண்டும்.

* ஆனால், இவர்கள் நடுவர்களை மதிக்காமல் அவர்களை இழிவுபடுத்தும் வகையிலானஅறிவிப்பை வெளியிட்டு நடுநிலையாளர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டனர்.

"பொது விசாரணையை நாங்கள் ஏற்கிறோம்; நடுவர் குழுவை அமைக்க நீங்கள்முயற்சியுங்கள்'' என்று கூறினால் அது சரியான பதிலாக இருந்திருக்கும்.

"பொது விசாரணையை நாங்கள் ஏற்கிறோம்; நடுவர் குழுவை அமைக்க நாங்களேமுன்முயற்சி எடுக்கிறோம்'' என்று அவர்கள் பதிலளித்திருந்தால் அதுவும் கூட சரியானபதிலாக அமைந்திருக்கும்.

"பொது விசாரணையை நாங்கள் ஏற்கிறோம்; இருவரும் சேர்ந்து நடுவர் குழுவை அமைக்கமுயற்சிப்போம்'' என்று கூறியிருந்தால் அதுவும் சரியான பதிலாக அமைந்திருக்கும்.

ஆனால், தமுமுக தலைமை தன்னை நடுவராக்கிக் கொண்டு, ஆறு இயக்கங்களையும்தன்னால் விசாரிக்கப்படக் கூடியவர்களாக ஆக்கி அநியாயமான ஓர் அறிவிப்பைவெளியிட்டுள்ளது.

* அதாவது பத்தாம் தேதியன்று ஒரு மண்டபத்தில் தமுமுக நிர்வாகிகள் இருப்பார்களாம்!

* இவர்களைத் தேடிக் கொண்டு நடுவர்களான ஆறு இயக்கங்களின் பிரதிநிதிகள் செல்லவேண்டுமாம்.

* ஆறு இயக்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் இயக்கத்தின் உறுப்பினர் அட்டையைக் கொண்டு வரவேண்டுமாம்!

இப்படி அறிவித்துள்ளனர். இதில் அறைகூவலை ஏற்கும் அம்சம் கடுகளவு கூட இல்லை.

எவரும் தங்களை விசாரிக்க முடியாது என்ற ஆணவப் போக்கு தான் இதில் உள்ளது.

யுத்தத்தின் தொடக்கம்

அடுத்து யுத்தத்தின் தொடக்கம் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு இதற்கு வன்முறைஅர்த்தம் கற்பித்துள்ளனர். நோட்டீஸை வெளியிட்டு இந்த நோட்டீஸ் யுத்தத்தின் துவக்கம்என்று கூறினால் அது போல பிரசுரங்கள் மூலம் யுத்தம் தொடரும் என்று தான் அறிவுடையமக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீதிபதிகளுக்கு ஆணையிடும் பிரதிவாதிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் அந்த மூன்று கணக்குகளில் வாதிகளாகவும்,பிரதிவாதிகளாகவும் உள்ளனர். ஆறு இயக்கங்களும் நீதிபதிகளாகவுள்ளனர்.

இந்தப் பொது விசாரணைக்குத் தயார் என்பதை மட்டும் தான் வாதிகளும், பிரதிவாதிகளும்கூறவேண்டும்.

அதை எப்படி அமைத்துக் கொள்வது?

எந்த இடத்தில் வைத்துக் கொள்வது?

எத்தனை நாளில் விசாரணையை முடிப்பது?

என்பதையெல்லாம் பொது விசாரணைக் குழு தான் முடிவு செய்ய வேண்டும்.

பொது விசாரணைக் குழு எடுக்க வேண்டிய முடிவை இவர்களே எடுத்தால் மானமுள்ள எந்தஇயக்கமாவது இதை ஏற்றுக் கொள்ளுமா? "நமக்கு உத்தரவு போடுபவர்கள் நமதுவிசாரணைக்கு எப்படி ஒத்துழைப்பார்கள்'' என்று நினைக்க மாட்டார்களா?

"அம்மூன்று கணக்குகள் விஷயங்களில் அதில் சம்பந்தப்பட்ட இரண்டு இயக்கங்கள் தான்நம்மைத் தேடி வர வேண்டுமே தவிர நாம் ஏன் இவர்களைத் தேடிச் செல்ல வேண்டும்'' என்றுநினைக்க மாட்டார்களா?

அப்படி நினைத்து நீதிபதிகள் ஒதுங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகவே மேற்கண்டஅறிவிப்பைச் செய்துள்ளதை சிறிதளவு சிந்தனை படைத்தவர்களும் அறிவார்கள்.

அதுமட்டுமின்றி மேற்கண்ட ஆறு இயக்கத்தின் சார்பில் கலந்து கொள்ளும் நீதிபதிகள்குழுவினர், உறுப்பினர் அட்டையோடு இவர்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்றும்குறிப்பிட்டுள்ளனர். இது ஆணவத்தின் உச்சக்கட்டம். மேலும் பின்னங்கால் பிடறியில் படஓட்டம் எடுப்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்.

ஏனெனில் மேற்கண்ட ஆறு இயக்கங்களில் நாமறிந்த வரை இரு இயக்கம் தவிர மற்றஇயக்கங்களில் உறுப்பினர் அட்டை வழங்கும் முறை கிடையாது. இது தமுமுக தலைமைக்கும்நன்றாகத் தெரியும். எனவே, உறுப்பினர் அட்டை இல்லாமல் தான் அவர்கள் வருவார்கள்என்பதும் தமுமுக தலைமைக்குத் தெரியும்.

"நடுவர்களிடம் உறுப்பினர் அட்டை இல்லை என்று தெரிந்திருந்தும் உறுப்பினர் அட்டையுடன்நடுவர்கள் வரவேண்டும் என்று கூறியிருப்பது நடுவர்களை விரட்டியடித்து பிரச்சினைஏற்படுத்தவா? விசாரணைக்கு உட்பட்டு நேர்மையை நிரூபிக்கவா? உறுப்பினர் அட்டைஉள்ளதா?'' என்று குற்றம் சுமத்தப்பட்ட தமுமுகவினர் சோதனை செய்து நடுவர்களைத்திருப்பி அனுப்புவார்கள். இதையே காரணம் காட்டி பொது விசாரணையை எதிர்கொள்ளாமல்தவிர்த்து விடலாம். பழியை மற்றவர்களின் மீது போடலாம் என்று சதி ஆலோசனை செய்துஇவ்வாறு அறிவித்துள்ளனர்.

இவர்களிடம் நேர்மையான கணக்கு இல்லை என்பது விசாரணைக்கு முன்பே உறுதியாகநிரூபணமாகி விட்டது. நடுவர்களை எந்த அளவு அவமானப்படுத்த வேண்டுமோ அந்தஅளவுக்கு அவமானப்படுத்தி விட்டு அவர்களை அழைத்து வா பார்க்கலாம் என்று முண்டாதட்டுவது தான் பொது விசாரணையை ஏற்கும் இலட்சணமா?

நடுவர்கள் தான் நமக்கு நிபந்தனைகள் போட வேண்டுமே தவிர நடுவர்களையே சோதனைநடத்துவோம் என்பது அறை கூவலை ஏற்க மறுத்து ஓட்டம் பிடிப்பது தானே தவிரஅறைகூவலை ஏற்பது அல்ல.

எதை ஏற்க முடியாதோ எதை ஏற்பது நியாமில்லையோ நடுவர்கள் எதை ஏற்க மறுப்பார்களோஅதையே நிபந்தனையாகப் போடுவது ஓடி ஒளியும் தந்திரம் என்பதை யாரும் விளங்கலாம்.

"நீதிபதிகளாகச் செயலாற்றவுள்ள அந்தத் தலைவர்களுக்கு பத்தாம் தேதி வசதிப்படுமா? வேறுஅலுவல்கள் உள்ளனவா? அவர்களுக்கு வசதியான நாள் எது? எந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம்? நாங்களே ஒரு இடத்தைத் தேர்வு செய்யலாமா?'' என்று ஆறு இயக்கங்களின்தலைவர்களிடம் சம்மதம் பெற்று அறிவித்திருந்தால் கூட ஓரளவுக்கு விசாரணைக்குஒத்துழைக்கிறார்கள் என்று கருதிக் கொள்ளலாம்.

"பிரச்சனைக்குரிய மூன்று கணக்குகளையும் நடுவர்களிடம் முழுமையாக ஒப்படைத்துஅவர்களின் சுதந்திரமான விசாரணைக்கு தமுமுக தயாராக இல்லை'' என்பது தான் "சவாலைஏற்கிறோம்" என்ற பிரசுரத்தின் சாரம்சமாகும்.

முஸ்லிம் மீடியா டிரஸ்ட் கணக்கு

முஸ்லிம் மீடியா டிரஸ்ட் கணக்கையும் ஒப்படைக்க வேண்டும் என்று அக்குழுவிடம்முறையிடுவோம் என்று கூறியுள்ளனர். நன்றாக முறையிடட்டும்.

நாம் பிரிந்த பின்னர் தனித்தனியாக திரட்டிய நிதி பற்றிதான் நாம் விசாரணை கோரினோம்.நாம் இணைந்திருந்த போது நடந்தவை பற்றியும் அவர்கள் விசாரணை கோரினால் நாமும்அதுபோல் கோரிக்கை வைப்போம்.

சம்பந்தமில்லாத சங்கதிகள்

* நான் அபுஜஹலை விட மோசமானவன் என்றும், கிரிமினல்களுக்கெல்லாம் கிரிமினல்என்றும் தமுமுகவிலிருந்து பிரிந்தபோது மிரட்டினர்.

* ஊருக்கு ஊர் கர்பலா யுத்தம் நடத்துவேன் என கர்ஜித்தார்.

* தமுமுகவினர் மீது ஜிஹாது (போர்) நடத்துங்கள் என்று ஜும்ஆ உரையில் பகிரங்கமாககூறினார்.

* தமுமுக தலைமைக் கழகத்தில் ரவுடிகளை நுழைத்து தலைமை நிர்வாகிகள் மீது மிகப்பெரியதொரு கொலைவெறித் தாக்குதலை நடத்த முயற்சித்தார்.

* தமுமுகவினருக்கு எதிராக ஏராளமான பொய்களையும், பழிகளையும் அள்ளி வீசினார்.இவரின் சூழ்ச்சிகளையெல்லாம் வல்ல அல்லாஹ் முறியடித்தான்.

இவை நாம் பொது விசாரணைக்கு அழைப்பு விட்டிருக்கும் பிரச்சனையுடன் எந்த வகையிலும்தொடர்பு இல்லாதவை. முற்றிலும் பொய்யான கற்பனை.

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் பற்றியும், உண்மை பேசுவோம் என்ற தலைப்பில் தமுமுகதலைமை வெளியிட்ட குறுந்தகட்டில் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளைப் பற்றியும்பொதுமக்கள் மத்தியில் பகிரங்க விவாதம் செய்யத் தயாரா? என்று ஏராளமான தடவைவற்புறுத்தி விட்டோம். அதை ஏற்க மறுப்பதம் மூலம் இக்குற்றச்சாட்டுகளிலும் அவர்கள்பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாகி விட்டதாலும், அவர்கள் செய்த வன்முறைகள்அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருப்பதாலும் இதை நாம் அலட்சியப்படுத்துகிறோம்.

ஜகாத் பற்றி

அடுத்து ஜகாத் பற்றிய நமது நிலைப்பாட்டைப் பற்றியும் குறிப்பிட்டு மக்களைத் திசை திருப்பமுயன்றுள்ளனர்.

ஜகாத் பற்றிய நமது கருத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் கூறி வருகிறோம். அவர்கள்நம்மோடு இணைந்திருந்த காலகட்டத்தில் அதற்கு எதிராக வாய் திறக்கவில்லை.எதிர்த்ததில்லை. தங்களோடு சேர்ந்திருக்கும் வரை சரியாகத் தெரிந்த ஒரு விஷயம் பிரிந்தபின்னர் தவறாகத் தெரிகிறது என்றால் இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

அந்தப் பிரச்சனை பற்றியும் நட்பு முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்து நாங்கள் கூறுவதுதவறு என்பதை நிரூபித்தால் அதை ஏற்கத் தயார் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். அந்தஅழைப்பு இன்றளவும் உயிருடன் உள்ளதால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும் என்பது தான் அதற்கு நாம் அளிக்கும் பதில்.

15 ரூபாய் மதிப்பில் ஜகாத் நூல்

அடுத்து ஏழு ரூபாய் மதிப்புடைய ஏகத்துவம் இதழில் வெளியான ஜகாத் பற்றிய ஆய்வை 15ரூபாய் மதிப்பில் நூலாக பீ.ஜே வெளியிட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதுவும்எடுத்துக் கொண்ட பிரச்சனையுடன் தொடர்பில்லாதது.

ஏகத்துவம் மாத இதழின் பேப்பர் வேறு! புத்தகத்தின் பேப்பர் வேறு!

இரண்டின் முகப்பு அட்டைகளும் வேறு!

இந்த மாதம் எவ்வளவு விற்பனையாகுமோ அந்த அளவிற்கு மாத்திரம் ஏகத்துவம்அச்சிடப்படும். புத்தகங்கள் ஆண்டுக்கணக்கில் பாதுகாத்து விற்கப்படும். வாடகை, ஊதியம்உள்ளிட்ட செலவுகள் இதற்காக ஆகும் என்பதால் மாத இதழுக்கும், புத்தகங்களுக்கும் விலைவித்தியாசம் இருக்கும். ஆறு ரூபாய்க்குக் கிடைக்கும் குமுதம் இதழ் அதே அளவு பக்கங்களில்புத்தக வடிவம் பெறும் போது 30 ரூபாய்க்கு விற்கப்படுவது இதனால்தான்.

தமுமுகவின் தலைவர் முகஸ்துதி பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார். 96 பக்கங்கள் கொண்டஅந்த நூலில் விலை 25. ஆனால், அதே நீள, அகலத்தில் 280 பக்கங்கள் தவ்ஹீத் ஜமாஅத்வெளியிட்ட இஸ்லாமிய அடிப்படைக் கல்வி என்ற நூலின் விலை 50 ரூபாய் தான்.

கொள்ளை லாபம் வைத்து புத்தக விலை நிர்ணயம் செய்வதில் முதலிடத்தில் இருக்கும்ஜவாஹிருல்லா இப்படி புலம்பியிருப்பது தான் ஆச்சரியம்.

அவர் முகஸ்துதி பற்றி புத்தகம் வெளியிட்டு ஓராண்டுக்குப் பின்தான் இஸ்லாமிய அடிப்படைக்கல்வி வெளியிட்டோம். ஒரு ஆண்டில் காகிதத்தின் விலை அதிகரித்திருந்தும் 280பக்கங்களுக்கு நாம் நிர்ணயித்தது, 50 ரூபாய் தான். அந்தக் கணக்கின்படி அவர் 16 ரூபாய் தான்தனது புத்தகத்துக்கு விலை நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

ஒரு சந்தேகமும் விளக்கமும்

மேலப்பாளையம் பழ்லுல் இலாஹி என்பரை முபாஹலாவுக்கோ, விவாதத்துக்கோ ஒப்பந்தம்செய்ய அழைத்து நீங்கள் தானே மண்டபத்தையும், நாளையும் முடிவு செய்தீர்கள். அதுபோல்தான் இதுவும் என்று சிலர் விவரம் புரியாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கும் நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனைக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.

* அது, பழ்லுல் இலாஹி, ஜைனுல் ஆபிதீன் ஆகிய இருதரப்பு மட்டுமே சம்பந்தப்பட்டவிவகாரம்.

நம் இருவரையும் மூன்றாவது தரப்பு விசாரிக்க வேண்டும் என்பது இப்போதுள்ள நிலை.

அதாவது முடிவு எடுக்கும் அதிகாரம் இரண்டு தரப்புக்கும் இல்லை. நடுவருக்கே உள்ளது என்றநிலையில் இரண்டு தரப்பில் யாரும் முடிவு எடுக்க முடியாது.

நடுவர் நியமிக்கப்படாத விஷயங்களில் சம்பந்தப்பட்ட இருவர் முடிவு எடுக்க அதிகாரம்பெற்றுள்ளனர்.

அந்த நிலையில் கூட ஒருதலைப் பட்சமாக நாளையும், இடத்தையும் அறிவிப்பதற்கு ஏற்றத்தக்க ஏராளமான காரணங்கள் இருக்க வேண்டும். பழ்லுல் இலாஹியைப் பொருத்தவரைஏற்கத்தக்க காரணங்கள் இருந்தன.

நமக்கு எதிராக பழ்லுல் இலாஹி, தொடர்ந்து அவதூறுப் பிரசுரங்களை வெளியிட்டு வந்தார்.அவரை நேரடி விவாதத்துக்கு தொலைபேசி மூலம் துபை சென்ற போது அழைத்தோம். அவர்ஏற்க மறுத்தார். எனவே தான் ஒருதலைப்பட்சமாக நாளையும், இடத்தையும் அறிவித்தோம்.

வேறு சில இயக்கங்களுடன் விவாத ஒப்பந்தம் செய்வதற்கான நாளையும், இடத்தையும் நாமேஅறிவித்துள்ளோம். மேற்கண்ட அந்த இயக்கங்கள் நீங்களே இடத்தையும் நாளையும் முடிவுசெய்யுங்கள் என்று நமது பொறுப்பில் விட்டதன் அடிப்படையில் அவ்வாறு முடிவுசெய்துள்ளோம்.

இடத்தையும், நாளையும் முடிவு செய்யுங்கள் என்று நாம் பொறுப்பு ஒப்படைக்காத நிலையில்,நாமே அழைப்பு விட்டுள்ள நிலையில், நடுவர்கள் முன்னிலையில் வாதிகளாகவும்,பிரதிவாதிகளாகவும் தமுமுக நிற்க வேண்டிய நிலையில் தன்னிச்சையாக நாளையும்,இடத்தையும் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருப்பது பின்வாங்கி ஓடுவதற்கான தந்திரம் தவிரவேறில்லை.

பதிவுத்தபால்

நாம் வெளியிட்ட பகிரங்க அறைகூவலைப் பதிவுத் தபால் மூலம் தமுமுக தலைமையின்அலுவலக முகவரிக்கு அனுப்பினோம். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைக்சீட்டும் நமக்கு கிடைத்துவிட்டது.

ஆனால், தமுமுக தலைமை நமது முகவரிக்கு நேரடியாக தங்கள் நிலைபாட்டைத்தெரிவிக்கும் வகையில் தபால் எதுவும் இன்றுவரை வரவில்லை.

முகவரி இல்லை

நமது பகிரங்க அழைப்பில் கையெழுத்து இல்லை என்றும் துண்டுப் பிரசுரத்தில் அச்சகத்தின்பெயர் இல்லை என்றும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். ஆனால், அவர்களின்அறிக்கையிலும் கையெழுத்து இல்லை. அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்திலும்அச்சகத்தின் பெயர் இல்லை. முரண்பாடுகளின் மொத்த உருவம் தமுமுக என்று நாம் கூறிவருவதற்கு மற்றொரு சான்று இது.

(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 - 08, 2005. பக்கம் 4 மற்றும் 21 )

நாம் பொது விசாரணைக்கு அழைத்தால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் எப்படியெல்லாம் சம்மந்தமில்லாமல் உளறியுள்ளனர் என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

எப்படியும் இந்தப் பொது விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்ற விபரத்தியும் உணர்வு இதழில் நாம் வெளியிட்டோம். அந்த அறிவிப்பு இது தான்:

இறைவனின் திருப்பெயரால்...

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்...

தவ்ஹீத் ஜமாஅத் செய்த முன்முயற்சிகள்

விசாரணைக் குழுவாக இருந்து எங்கள் கணக்குகளைச் சரிபார்த்து சமுதாயத்துக்குஅறிவியுங்கள் என்று முன்வரக் கடமைப்பட்ட தமுமுக பின்வாங்கிக் கொண்டது.
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொது செயலாளர் எஸ்.எம். பாக்கர்
,
மாநிலச்
செயலாளர்கள் கோவை ஜாபர்,
எம்.ஐ.
முஹம்மது முனீர்
ஆகியோர்
கொண்ட குழு
முஸ்லிம்
லீக் பொதுச்செயலாளர் டாக்டர் சையத் சத்தார் அவர்களையும்
,
தேசிய
லீக் தலைவர் கோனிகா எம். பஷீர் அஹமது அவர்களையும்,
ஜமாஅத்தே
இஸ்லாமியின் செயலாளர் நஸீர், துணைத் தலைவர் ரஹீம் மற்றும் சிக்கந்தர்ஆகியோரையும்,
மனித
நீதிப் பாசறையின் தலைவர் குலாம் முஹம்மது அவர்களையும்,
இஸ்லாமிய
விழிப்புணர்வுக் கழகத்தின் சார்பில் அ. முஹம்மது கான் பாகவி அவர்களையும்
சந்தித்தனர்.

ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மதுரையில் இருந்ததால் அவர்களை நேரில் சந்திக்கஇயலவில்லை. கடிதம் மூலம் அழைப்பு விடப்பட்டது. ஏழைகள் சம்பந்தப்பட்ட நிதிவிவாகரத்தில் நீங்கள் தலையிட்டு விசாரித்து நீதி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைவருமே தமுமுக அழைப்பு விடுத்த இடத்துக்கு தாங்கள் வருவதுநியாயமற்றது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். நடுவர்கள் தானே அந்த முடிவைஎடுக்க வேண்டும் எனவும் கூறினார்கள்.

நடுவார்களாகிய நீங்கள் அழைக்கும் நாளில், அழைக்கும் இடத்துக்கு நாங்கள் வருகிறோம்.மூன்று கணக்குகள் பற்றி முழு விபரங்களையும் தருகிறோம். தேவையான எல்லாஒத்துழைப்பையும் வழங்குகிறோம் என்று தெரிவித்தோம்.

அப்படியானால் தாங்கள் அனைவரும் கூடி திங்கட்கிழமை அன்று முடிவைஅறிவிப்பதாகக் கூறினார்கள். அதன்படி அவர்களின் முடிவுகளை எழுத்து மூலம்தெரிவித்துள்ளனர்.

(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 - 08, 2005. பக்கம் 2)

இதுவரை கூறப்பட்ட விபரங்களில் இருந்து தமுமுகவினர் சுனாமிப் பணத்தைச்சுருட்டியுள்ளனர் என்பது உறுதியாகிறது. இதை விட வலிமையான ஆதாரங்களுடன்இவர்களின் சுனாமித்திருட்டு எப்படி நிரூபிக்கப்பட்டது என்பதை அடுத்த தொடரில்தெரிவிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்

0 Response to "சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு - 1"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை