அப்துல் முஹைமீனுக்கு ஆயிரம் நன்றிகள்

Monday, August 8, 2011 5:05 AM Posted by பொய்யன் டிஜே

கேள்வி: சுனாமி கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக பொய்யன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

-முகமது கனி, அம்மனிசத்திரம்

அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் இதற்கு கீழ்க்கண்டவாறு விளக்கம் எழுதியுள்ளார்.

சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.

அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.

விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.

அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.

கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம்.

சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட ததஜ பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்

இப்படியாக நீண்டுக் கொண்டே போகிறது கள்ளக் கணக்கு. இவர்களை நம்பி நிதி அனுப்பிய சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா? தர்கா விழாவுக்கென வழங்கப்பட்ட தொகையை செலவழித்தது வீண் விரையம் என்றால், சுனாமிக் காசில் மஞ்சக்குளித்த இவர்களின் செயல் வீன்விரையம் மட்டுமன்றி, நம்பிக்கை துரோகமும் அல்லவா? விவேக் ஓபராய் எனும் நடிகர் தனது சொந்தப் பணத்தில் ஒரு சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தையே தத்தெடுக்க, இவர்களோ அந்த சுனாமிக் காசிற்கு ஸ்வாகா கணக்கு காட்டினார்கள். இப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்களை குறை கூறுவது வேடிக்கையல்லவா?

-அப்துல் முஹைமீன்.

முதலில் ஒன்று நமக்குப் புரியவே இல்லை. காரணம் ஆண்மை புகழ் அப்துல் முஹைமீன் அவர்கள் பொய்யன் ஜமாத்தில் இருந்து கொண்டே அவர்களுக்கு வெடிவைக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார் என்று தெளிவாகிறது. அதாவது அப்துல் முஹைமீன் ததஜவின் உளவாளியாக இருப்பாரோ என செங்கிஸ்கான் சந்தேகிக்கும் அளவிற்கு இருக்கிறது அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்களுடை எழுத்துக்கள்.

நம் ஆண்மை புகழ் அப்துல்முஹைமீன் அவர்கள் ஒவ்வொன்றாகக் கேட்கிறார். அதிலே அவர் கேட்பது முக்கியமானவைகளை முதலில் எடுத்துக் கொள்வோம்.

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.

முதலில் ஒன்றை இங்கே தெரியப்படுத்திக் கொள்வோம். சுனாமி நேரத்தில் பீஜே, தொண்டியப்பா ஆகியோர் துபாயில் இருந்தார்கள்,. சுனாமியின் ஏ டூ இசட் வரவுகளை செலவுகளை அண்ணன் பாக்கர் அவர்கள் தான் கையிலே வைத்திருந்தார். அதுமட்டுமின்றி மேலே சொன்ன சுமந்து சென்ற கேமிரா, எடிட்டிங், விண்டிவி சுனாமி நிதி அனுப்புங்கள் என அனைத்தையும் மீடியா வேல்டு சார்பாக அண்ணன் பாக்கர் காக்கா தான் மேற்கொண்டார்கள் என்பது உலகுக்கே தெரிந்த செய்தி.

அவர் சுனாமி பணத்தை எடுத்துக் கொண்டு கணக்கு எழுதி வைப்பார். அதாவது அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் பாணியில் சொன்னால் “கள்ளக் கணக்கு”. ஆனால் பாக்கர் மீது இருந்த நம்பிக்கையில் அன்றைக்கு அதை ததஜ ஏற்றுக் கொண்டது. ஆனால் அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் சொல்லித்தான் நமக்கே தெரிகிறது அண்ணன் பாக்கர் அவர்கள் கள்ளக் கணக்கு எழுதி அதிலே ஊழல் செய்திருக்கிறார் என்று. அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனுக்கு கோடான கோடி நன்றி.

அதுமட்டுமின்றி அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் அதில் நடந்த ஊழலுக்கான விளக்கத்தையும் மீடியா வேல்டு ஓனர் அண்ணன் பாக்கர் அவர்களிடம் கேட்டு நமக்குத் தெளிவுபடுத்தினால் மிக நன்றாக இருக்கும்.

அண்ணன் பாக்கர் செய்த மஹா ஊழல்களை அப்பட்டமாக வெளிப்படுத்திய அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி.

அதுமட்டுமின்றி அவரிடம் இது சம்பந்தமாக கணக்கு கேட்கும் நீங்கள் அத்தோடு சுனாமி பணத்தில் 10 லட்சம் ரூபாயை கையாடல் செய்து அதைத் தணிக்கைக் குழு கண்டுபிடித்து அவரின் சட்டையைப் பிடித்து வாங்கி அந்தச் செய்தி உணர்வு பத்திரிகையிலும் வெளியானதே அதுசம்பந்தமாகவும் அண்ணன் பாக்கரிடம் அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.

ஆக அன்றைக்கு ததஜவின் சுனாமி கல்லாப்பெட்டி அண்ணன் பாக்கர் அவர்களிடம் தான் இருந்தது. எனவே அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் எல்லா விவரங்களையும்,. அதாவது உணர்வுக்கு ஏன் 2 லட்சம், டீ சர்ட் தொப்பிக்கு ஏன் 20 ஆயிரம், கடலே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு ஏன் 60 ஆயிரம் என எல்லா விவரங்களையும் அண்ணன் பாக்கர் அவர்களே அன்றைக்கு தன் கைப்பட எழுதிய கணக்குகளில் இருந்தே அதற்கான விளக்கத்தை அவரிடமே பெற்று நமக்குச் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது தான் நமது ஆசை.

சரி போவுது. நாம இப்ப பிரிஞ்சிட்டதால கணக்கு விவரங்களை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம்.

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.

இந்த விவகாரங்களை அண்ணன் பாக்கர் அவர்களின் மீடியா வேல்டு நேரடியாக களமிறங்கி கவனித்ததாலும், அதற்கான கணக்கு வழக்குகளை அண்ணன் பாக்கர் அவர்களே அதற்கு ஓனராக இருந்ததாலும், அதுமட்டுமின்றி சுனாமி கணக்கு வழக்குகளை அவரே பார்த்தாலும் மேற்கண்டவைகளுக்கு அண்ணன் பாக்கர் அவர்கள் விளக்கம் தரவேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அடுத்து

சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம்.சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட ததஜ பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்

இந்த கணக்கு வழக்குகளையும் அண்னன் பாக்கர் அவர்கள் தான் பார்த்தார்கள் என்றாலும் போனாபோவுது என்று இதற்கான விளக்கத்தை நாமே கொடுப்போம். சுனாமி திருடர்கள் யார்? என்ற மாபெரும் தொடர் வர இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் அந்தத் தொடரில் சுனாமித் திருடர்களின் முகமூடியைக் கிழிக்கும் போது இது சம்பந்தமாகவும் விளக்குவோம்.

அதற்கு முன்னதாக அன்புச்சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் மேற்படி விசயங்களுக்கு உடனடியாக பதில் பெற்றுத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

உண்மையை வெளிப்படுத்தி பொய்யன் கூட்டத்தின் அயோக்கியத்தனத்தை உரித்துக் காட்டி உலகுக்கு வெளிப்படுத்திய அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

0 Response to "அப்துல் முஹைமீனுக்கு ஆயிரம் நன்றிகள்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை