சைபுல்லா ஹாஜாவின் ரகசிய சீடி வெளியிடப்பட்டது

Friday, September 16, 2011 11:36 PM Posted by பொய்யன் டிஜே

ஆமை வேக அண்ணன் ஜமாத்:

ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் அவரது குற்றங்களை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் எடுத்து வைப்பதிலும் எப்போதுமே ஆமை வேக நிலையைத் தான் அண்ணன் ஜமாத் மேற்கொள்ளும். அதனால் தான் குற்றம் செய்து ததஜவில் இருந்துத தூக்கி வீசப்படும் குற்றவாளிகள் எல்லாம் அவசர அவசரமாக தங்களை நியாயப்படுத்தி மக்கள் மத்தியிலே அவர்களை நியாயவான்கள் போல சித்தரித்துக் கொண்டு, இவர்கள் எங்களை அநியாயமாக நீக்கிவிட்டார்கள் என கதையைக் கட்டிவிடுவார்கள்.

அவர்கள் எல்லா பித்னாவையும் கிளைப்பிய பிறகு அதற்கு தெள்ளத் தெளிவான விளக்கம் அளித்து மக்களுக்கு தெளிவு படுத்துவதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் தனது கொள்கையாகக் கொண்டுள்ளது.

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் அயோக்கியர்கள்:

இந்த இடைப்பட்ட காலத்தில் குற்றவாளிகள் எல்லாம் தங்களை நியாவான்களாகக் காட்டிக் கொண்டு வலம் வருவதை நம்மால் காண முடிகின்றது. இந்த விசயத்தில் தமுமுகவின் பிரிவு முதல் பொய்யன் வகையறாக்களை வெளியேற்றியது வரை எந்த விசயத்தையும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் அவர்களின் மானத்தைக் காக்கிறோம் என்ற பெயரில் பொய்யர்களின் பிரச்சாரத்தால் ஃபித்னாவுக்கு உள்ளாக்கப்பட்டது தவ்ஹீத் ஜமாத்.

வசூல் மன்னன் சைபுல்லாஹ் ஹாஜா:

அதைப்போலத் தான் சைபுல்லாஹ் ஹாஜா விவகாரத்திலும் மீண்டும் அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தவ்ஹீத் ஜமாத்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரையும் பணிகளையும் மக்களிடம் சொல்லி கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் பணத்தை மக்களிடம் வசூல் செய்து அதில் வாங்கப்பட்ட நிலத்தை தனக்கு வேண்டிய தனிநபர் பெயரில் பதிவு செய்துவிட்டு, நாங்கள் முபாரக் கமிட்டி பெயரில் தான் வசூல் செய்தோம் என முழுப்பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலையைச் செய்த சைபுல்லாஹ் ஹாஜா மீது நடவடிக்கை எடுத்து விட்டு வேலை முடிந்தது என உக்கார்ந்து விட்டது அண்ணன் ஜமாத்.

சைடு கேப்பை பயன்படுத்திய சைபுல்லாஹ்:

வழக்கம் போல இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சைபுல்லாஹ் ஹாஜா தன்னை நல்லவர் போல மக்களிடம் காட்டிக் கொண்டு பெரிய விளக்கமே வெளியிட்டார். அதைப் பார்க்கும் மக்களுக்கு என்ன தோன்றும்? ஆகா இவர் மீது அநியாயமாக நடவடிக்கை எடுத்து நீக்கி விட்டார்களே என்று தான் நினைக்கத் தோன்றும். என்றைக்கு ஒருவரைத் தூக்கி வெளியே எறிகிறார்களோ அத்தோடு அவர் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களையும் மக்கள் மன்றத்தில் வைத்து விட்டால் அவர்கள் அத்தோடு மவுனமாகி விடுவார்கள்., ஆனால் அவர்கள் விசயத்தில் இதுபோல கருணையோடு நடந்து கொள்வதால் தான் பல அயோக்கியர்களும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொண்டு இன்றைக்கு தைரியமாக நடந்து வருகிறார்கள்.

அதுபோலத் தான் கடையநல்லூர் பொதுக்குழு சீடியை இந்திய அயோக்கியர்கள் ஜமாத் டிரஸ்டுக்கு அனுப்பி வைத்தார் சைபுல்லாஹ். கடையல்லூர் கசமுசா என்ற பெயரில் அதை வெளியிட்டது இந்திய அயோக்கியர்கள் ஜமாத் டிரஸ்ட். ஆனால் அதைப் பார்த்த மக்கள் எல்லாம் என்ன சொன்னார்கள் தெரியுமா? பீஜே சொல்றது தான் சரியா இருக்கு என்றார்கள். ஆனால் பொம்பளப் பொருக்கிகள் நிறைந்திருக்கும் இதஜடியினர் இதை வைத்து ஏதோ அண்ணன் ஜமாத்தை இழிவுபடுத்தியதாக நினைத்து ததஜவுக்கு இலவச விளம்பரத்தைத் தேடித் தந்து விட்டார்கள்.

ரகசிய வீடியோ:

இப்போது என்ன விசயம் என்றால், சைபுல்லாஹ் ஹாஜாவை தலைமையகத்தில் அழைத்து உங்கள் நிலைபாடு என்ன என்று கேட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை சைபுல்லாஹ் ஹாஜா வகையறாக்கள் இப்போது வெளியிட்டு விட்டு, பார்த்தீர்களா நம் ஹசரத்தை, எவ்வளவு அழகாக மக்களுக்காக போராடுகிறார் என்றும், இது தான் இறுதியாக ஹசரத் அவர்கள் பீஜேவிடம் பேசியது என்றும் கதையை அவிழ்த்து விட்டு மீண்டும் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதாக தகவல்.

இது சம்பந்தமாக அந்த டிவிடியை அன்றைக்கே நாம் அண்ணன் ஜமாத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவரிடம் கேட்டோம். ஆனால் அவர் அதைத் தர மறுத்து விட்டார். இப்போது சைபுல்லாஹ் ஹாஜா வெளியிட்டு விட்டதால் பல மக்களும் வெளிநாடுகளில் இருந்து இந்த வீடியோவை வெளியிடுமாறு கேட்டுள்ளதால் தான் அண்ணன் ஜமாத் இப்போது தான் இதை வெளியிடுகிறது.

ஆம் இது வரை சைபுல்லா சம்மந்தமான ஒரு சிடியை தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடாமல் இருந்து இப்போது வெளியிட்டதன் பின்னணியை முதலில் அறிந்து கொள்வோம்.

சின்னப் பையன்கள் விசாரிக்காதீர்:

கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைச் சொல்லி தனி நபர் பெயரில் பதிவு செய்து கொண்ட விவகாரத்தில் கடையநல்லூர் பொதுக்குழுவில் அவர் ஒப்புக் கொண்டபடி நடக்க மறுத்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் அவரை நேரில் விசாரிக்க இருந்த போது பாலக்கரை ட்ரஸ்ட் நசீர் எனபவருடன் உம்ரா சென்று விட்டார், அவர் உம்ராவில் இருந்து வந்த தகவல் கிடைத்ததும் அவரை விசாரணைக்கு வருமாறு மாநில பொருளாளர் அன்வர் பாஷா வழியாக அழைப்பு விடுக்கப்பட்டது..

கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இந்த விசாரணைக்கு சைபுல்லா ஹசரத்தை அழைத்த போது, என்ன சின்னப் பையன்கள் யாரும் (ரஹ்மத்துல்லா, சையது இப்ராஹீம், யூசுப் போன்றவர்கள்) விசாரிக்கக் கூடாது. என்னை சீனியர்கள் தான் விசாரிக்க வேண்டும் என்று சொன்னார். சின்னப்பையன்கள் விசாரிப்பதாக இருந்தால் நான் விசாரணைக்கு வர மாட்டேன் என்று அன்வர் பாஷாவிடம் அவர் சொன்னார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை வயதிற்கு வேலையே இல்லை. 30 வருடமாக இந்தக் கொள்கையில் இருந்து வருபவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு பதவியேற்ற தகுதியானவருக்கு கட்டுப்பட வேண்டும் என்பது தான் ததஜவின் விதி. அதுபோல, நான் 10 வருசமா இருக்கிறேன், எனக்கு பதவியே தரல, ஆனால் நேற்று வந்தவருக்கு பதவி தந்திட்டீங்க என்று சொல்வதும் இங்கே ஏற்றுக் கொள்ளப்படாது. இங்கே பொறுப்புக்குத் தான் மதிப்பே தவிர ஆளுக்கு மதிப்பு கிடையாது.

ஆனாலும் பல தடவை மாநிலப் பொறுப்பில் இருந்த சைபுல்லா ஹாஜா கொஞ்சமும் தலைக்கணம் குறையாமல் என்னை எப்படி சின்னப் பையன் விசாரிக்கலாம் என்று வீராப்பு பேசினார்.

இரக்கப்பட்ட அன்வர் பாய்:

அப்படியானால் அவரை விசாரிக்கத் தேவை இல்லை என்று பீஜே கூறினார். இவரை விட சீனியரானவர்கள் கூட சின்னப் பையன்களால் விசாரிக்கப்பட்டுள்ளனர். சின்னப் பையன்களாக இருந்தாலும் அவர்களை நாம் தேர்வு செய்து விட்டால் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும் எனக்கூறி விசாரிக்காமல் நாம் உரிய நடவடிக்கை எடுப்போம். என்று பீஜே கூறினர். ஆனால் அன்வர்பாஷா மிகவும் இரக்கப்பட்டு அவர் சங்டப்படாமல் நான், பீஜே, அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி ஆகியோர் மட்டும் விசாரிப்போம் என்று பிடிவாதம் பிடித்து சம்மதிக்க வைத்தார்.

பீஜேவுடன் சீனியராக இருக்கும் அன்வர் பாஷாவும், அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸியும் வரவழைக்கப்பட்டு விசாரனையில் அமர வைக்கப்பட்டார்கள்.

உள்ளே வரும் சைபுல்லாஹ் ஹாஜா வீடியோ கேமிராவைப் பார்த்ததும் மிரண்டு போகிறார். வீடியோ கேமிராமேனை முதலில் வெளியே போகச் சொல்லுங்கள். வீடியோவை அகற்றினால் பேசலாம் என்று பம்முகிறார். இதிலிருந்தே தெரிகிறது இவர் உண்மையைச் சொல்ல பயப்படுகிறார் என்று. தான் செய்த அயோக்கியத்தனம் உலகுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் வீடியோ முன்னால் எதையும் சொல்லத் தயங்குகிறார். அதன் பின்னர் எனக்கும் ஒரு காப்பி வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பேசத் துவங்குகிறார்.

ஒருவனிடத்தில் உண்மை இருந்தால் அவன் ஏன் பயப்பட வேண்டும் பம்ம வேண்டும்? இதிலிருந்தே தெரிகிறது சைபுல்லாஹ் ஹசரத்திடம் உள்ள ஹமாம் (நேர்மை).

பீஜே கேட்கிறார் என்னங்க முடிவு என்று?

நாங்கள் முபாரக் ஜமாத்தின் தலைவர் சேக் உதுமான் சாஹிபு பெயரில் தான் எழுதுவோம் என்று சொல்கிறார்.

கடையநல்லூர் கிளைக்கு எழுதி அதை மக்களுக்கு பொதுச் சொத்து ஆக்குங்க என்று சொல்கிறார் பீஜே.

ஆனால் அதெல்லாம் முடியாது. தனிநபர் பெயரில் தான் எழுதுவேன் என்று மீண்டும் சொல்கிறார்.

இப்படியே வாதம் நீளும் போது என்னை அழைக்காமல் எப்படி புதியதாக 4 கிளைகள் எப்படி உண்டாக்கலாம் என்று கேட்கிறார் சைபுல்லா. அதற்கு பதில் அளிக்கும் பீஜே நீங்கள் சம்பந்தப்படாத பகுதிக்கு உங்களை ஏன் அழைக்க வேண்டும் என்று கேட்கும் பொழுது, அதெப்படி கடையநல்லூரே என் கண்ட்ரோலில் தானே இருக்கு, நீங்க மட்டும் தமிழ்நாட்டை உங்களின் கையில வச்சிக்கிட்டு இல்லையா என அப்பாவித்தனமாக ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

மாநிலத் தலைமை கையில் வைத்திருப்பது என்ன தவறு என்னவென்று என பீஜே கேட்க, நீங்க பொறுப்பில் இல்லாத போதும் தான் கையில் வைத்திருந்தீர்கள் என்று சொல்கிறார் சைபுல்லா.

அதற்கு ஆதாரம் கேட்கிறார் பீஜே,,, அதற்கு ஆதாரம் சொல்லாமல் பேய் முழி முழித்து வார்த்தைகளை மென்று விழுங்குகிறார்.

அவரின்றி ஒரு அனுவும் அசையாது:

இதிலிருந்து நாம் இன்னொரு விசயத்தையும் அறிந்து கொள்ளலாம். அதாவது பீஜே பொறுப்பில் இல்லாவிட்டாலும் அதிகாரத்தை தன் கண்டோரில் தான் வைத்திருப்பார், அவரன்றி ஒரு அனுவும் அசையாது என்று ஊரெல்லாம் சொல்லித் திரிந்த பொம்பள பொருக்கிகள் பொய்யன் அயோக்கியர்களுக்கு இதிலே பதில் இருக்கிறது. அதாவது இதே பீஜே பொறுப்பிலே இல்லாமல் பின்னர் பதவியேற்ற பிறகு, அந்த நிர்வாகத்தில் இருந்து கடைசியாக வெளியேற்றப்படும் ஒருவரால் கூட பீஜே அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தார் என்று நிரூபிக்க முடியவில்லை.

என்னிடம் அந்த விசயத்தைச் சொல்லி செய்யுமாறு நீங்கள் வலியுறுத்தினீர்களே! இதைத்தான் செய்ய வேண்டும் என்று என்னிடம் உத்தரவு போட்டீர்களே என்று பளிச்சென்று ஹசரத்தால் சொல்லிவிட முடியவில்லை.நீங்கள் மூக்கை நுழைப்பீர்களே! அதில் நுழைத்தீர்களே! என்று கூட சைபுல்லாஹ்வால் நிரூபிக்க முடியாமல் பதில் சொல்ல முடியாமல் போய் விட்டார். உள்ளே இருந்தவருக்கே இதை நிரூபிக்க முடியவில்லை. ஆனால் வெளியே இருந்து கொண்டு பீஜேவைப் பற்றி பரப்பும் அயோக்கியப் பொய்யன்களால் எப்படி நிரூபிக்க முடியும்? அவர்கள் அயோக்கியர்கள் என்பதற்கும் அவர்கள் பரப்புபவைகள் பொய்யானவை என்பதற்கும் ஹசரத் சைபுல்லா ஒரு நல்ல உதாரணமாகி விட்டார்.

முபாரக் பள்ளியையும் தவ்ஹீத் ஜமாஅத் பெயர் சொல்லி வசூலித்து வாங்கிய இடத்தையும் எப்படியோ வைத்துக் கொண்டு தொலையுங்கள்., ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரில் உள்ள சொத்துக்களின் ஆவனங்களை தந்து விடுங்கள் என்று பீஜே கேட்கும் போது அது ஆலோசித்து தான் சொல்ல முடியும் என்று கூறுவது அயோக்கியத் தனம் அல்லவா?

அது போல் நீண்ட நாள் நண்பர் என்று பார்க்காமல் ஜமாஅத் நலன் என்று வந்து யாரையும் பார்க்க முடியாது என்று காட்டும் வகையில் எங்களுக்கு உரியதை தர மறுத்தால் அதன் விளைவு கடுமையாக இருக்கும் நேருக்கு நேராக பீஜே சொல்வதையும் இதில் காணலாம்.

அந்த வீடியோ இது தான்


இந்த வீடியோ எடுக்கப்பட்டு கேமரா மேன் போன பிறகு சைபுல்லாவுடம் மேற்படி மூன்று பேர் மட்டும் இருந்த போது அன்வர்பாஷா அவர்கள் சாதாரணமாக ரிகார்ட் இல்லாமல் சைபுல்லாவுக்கு சில அறிவுரை சொன்னார்.

நீங்கள் திட்டவட்டமாக உங்கள் முடிவை தெரிவித்து விட்டீர்கள். ஆனால் இதை அறிவித்து வெளியிட்டால் அதன் பின்னர் உங்களுக்கும் ஜமாஅத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் போய் விடும். ஹாமித் பக்ரி, பாக்கர் போல் கொள்கையிலும் நீர்த்துப் போய் விடும் அபாயம் உள்ளது என்றெல்லாம் சில அறிவுரைகளைக் கூறினார். இதைக் கேட்டு தாரை தாரையாக கண்ணீர் விட்டு சைபுல்லா அழுதார். இந்த சீடியை தூக்கி போட்டு விடுவோம். நீங்கள் போய் உங்கள் சகாக்களுக்கு நல்ல புத்தி சொல்லி தனிநபர் பெயரில் சொத்தை எழுதுவது தவறு என்று புரியவையுங்கள். எத்தனை ஊருக்கு இந்த உபதேசத்தை நீங்கள் செய்தீர்கள் என்று சொல்லி ஒருவாரம் டைம் தருகிறோம். நீங்கள் ஆலோசித்து நல்ல பதில் சொல்லுங்கள். இந்த விசாரணை நடக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று அன்வர் பாஷா கூறியதை பீஜேயும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்சியும் ஏற்றுக் கொண்டனர்.

இதன் பிறகுதான் சைபுல்லா ஊர் சென்று தந்திரமான வாசகங்களைப் பயன்படுத்தி பின்வரும் கடிதத்தை பீஜேவுக்கு எழுதினார்.

ஏப்ரல் மாதம் எழுதப்பட்ட அந்தக் கடிதம் இது தான்:இவர் சொன்ன படி நடக்காமல் சூழ்ச்சியைக் கையாள்கிறார் என்பதால் அந்த சீடியை வெளியிட்டு அவரை நீக்கியதாக அறிவியுங்கள் என்று சக நிர்வாகிகள் பீஜேயை வற்புறுத்தினார்கள். இந்த விசாரணை நடக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று அன்வர்பாஷா கூறி அதை நானும் பிர்தவ்சியும் ஒப்புக் கொண்டு விட்டு அதை மீறுவது முறையல்ல. அதை வெளியிட வேண்டாம் என்று பீஜே மறுத்து விட்டார். எனவே கடையநல்லூர் பொதுக்குழு கூடி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும்.., தலமையில் விசாரித்தது கேன்சல் செய்யப்பட்டதாக வாக்குறுதி கொடுத்து விட்டதால் அதை மறந்து விடுங்கள் என்று பிஜே மறுத்து விட்டார். அவர் எப்போதும் இப்படித்தான். தார்மீக நெறிகள் நல்லவர்களுக்குத் தான். சூழ்ச்சியாளர்களுக்கு அல்ல என்பதை பீஜே எப்போது புரிந்து கொள்ளப் போகிறாரோ? அப்படி புரிந்து கொள்ளாத்தால் தான் இன்றைக்கு அயோக்கியர்கள் எல்லாம் அவர் மீது சேற்றை வாறி இறைக்கிறார்கள்.

பீஜே வெளியிடாமல் நிறுத்தி வைத்த அந்த கேசட் ஒரு பிரதி பீஜேயிடமும் ஒரு பிரதி சைபுல்லாவிடமும் தான் இருந்தன. ஆனால் சைபுல்லலா அதை தற்போது வெளியிட்டுள்ளார். அது அவரது அயோக்கியத்தனத்துக்கு சான்றாக உள்ளது.

0 Response to "சைபுல்லா ஹாஜாவின் ரகசிய சீடி வெளியிடப்பட்டது"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை