அண்ணனுக்கு ஓர் கடிதம்

Monday, October 17, 2011 7:15 AM Posted by பொய்யன் டிஜே

பயிறுகளை விதைக்கும் ஒரு விவசாயி தன் பயிறுகளுக்கு உரம் வைத்து தண்ணீர் பாய்ச்சினால் மட்டும் போதாது. அதன்மீது பூச்சி மருந்தும் தெளித்தால் தான் அந்தப் பயிர் நன்கு வளர முடியும். அதுபோல குழந்தையின் மீது பாசம் காட்டும் பெற்றோர்கள் அதற்கு ஏதாவது வியாதி வரும் போது ஊசி போட வேண்டும். குழந்தைக்கு வலிக்கும் என்று கருதி ஊசி போடாமல் விட்டுவிட்டால் வியாதிகள் தாக்கி அந்தக் குழந்தை இறந்து போகக்கூட வாய்ப்பு இருக்கிறது.

அது போலத்தான் இந்த ஏகத்துவக் கொள்கையும். நீங்களும் உங்களோடு இன்றைக்கு தோள் கொடுக்கும் மற்ற தாயீக்களும் அன்று முதல் இன்று வரை இந்த பிரச்சாரத்தை இறைவனின் மாபெரும் கிருபையால் எப்படியெல்லாம் கொண்டு செல்கின்றீர்கள் என்று நான் அறிவேன்.

அப்படியாக நீண்டு கஷ்டப்பட்டு அமைத்த சாலையில் இன்றைக்கு சொகுசுப் பயணம் செய்யும் அயோக்கியர்கள் உங்களைக் குறைபடுத்தி எழுதுவதைக் கண்டு அவர்களுக்கு நீங்கள் உங்கள் ஆன்லைன்பீஜே வழியாக பதில் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். ஆனால் அவ்வாறு நீங்கள் அவர்களுக்கு பதில் கொடுப்பதால் உங்களின் மற்றைய பணிகளை அடியோடு ஒதுக்கிவிட்டு அதிலேயே முழுக்கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டீர்கள். அவர்களின் நோக்கமும் அதுதான். உங்கள் மீது அவதூறுகளை அள்ளித்தெளித்து அதன்மூலம் உங்களைக் கோபப்படுத்தி பீஜே கெட்டவர் என மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த முயன்றார்கள் அந்தக் கயவர்கள். ஆனால் அவர்களின் திட்டம் பலிக்க்கூடாது என்பதற்காகவும், குர்ஆன் ஹதீஸ்களின் சந்தனம் மணக்கும் ஆன்லைன்பீஜே தளத்தில் இந்த பன்றிகளின் சாக்கடை நாற்றமும் புகுந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் நான் இந்த பொய்யன்டிஜேவை உருவாக்கினேன்.

உங்களுக்கு ஒரு பெரிய சுமை குறைந்தது என்கிற காரணத்தால் தான் நீங்கள் இந்த சமீபத்திய காலம் வரைக்கும் என் எழுத்துக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தீர்கள். சில நேரங்களில் நான் கேட்டதற்கு இணங்க ஈமெயில் வழியாக எனக்கு சில பாயிண்டுகளைத் தந்தீர்கள். உங்களைப் பற்றி எழுதும் அவதூறு விசயங்களுக்கும் உங்கள் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும் உங்கள் கருத்தைக் கேட்டுத் தான் பதிலளிக்க வேண்டும். கற்பனையில் எழுதினால் அது பொய்யாகப் போய்விடும்.

அவர்களின் எழுத்துக்களில் நீங்கள் கோபப்படும் போது, பீஜே என்பவர் கடுமையான கோபக்காரர், எழுத்தில் நாகரீகம் காட்டாதவர் என்று மக்களிடம் காட்டுவதற்காக அவர்கள் உங்கள் மீது ஏவ இருந்த அஸ்திரத்தை உங்கள் மீது விழாமல் அதை நான் தடுத்தேன். ஆனால் உங்களை எந்த நிலையில் மக்களிடம் காட்ட நினைத்தார்களோ அந்த நிலையில் இப்போது என்னைக் காட்டி விட்டார்கள். எழுத்தில் நாகரீகம் இல்லை, ஆபாசம் என்றெல்லாம் இந்த தளத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் காரணமா அல்லது அந்த அயோக்கியர்கள் காரணமா என்பதை நம் மக்களில் சிலரும் சிந்திக்க மறுக்கின்றனார்கள்.

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னால் செங்கிஸ்கான் சம்பந்தமாக நான் வெளியிட்ட ஒரு கடிதத்தில் உண்மைத் தன்மை இல்லை என அதை நீங்கள் நீக்கச் சொன்னீர்கள். ஆனால் அது என் பார்வையில் அது சரியானதாகத் தோன்றியதால் அதை நான் நீக்க முடியாது என்று மறுத்தேன். நம் ஜமாத்தின் கிளையில் நிர்வாகியாக இருக்கும் செங்கிஸ்கானின் அண்ணனும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகளும் கேட்டுக்கொண்டதால் அதை நீக்கச்சொன்னீர்கள். இந்தக் குற்றச்சாட்டை வைத்த செங்கியின் அண்ணனிடம் இது சம்பந்தமாகப் பேசி செங்கியை நிறுத்தச் சொல்லியிருந்தால் இன்றைக்கு என் எழுத்துக்கள் விமர்சிக்கப்பட்டிருக்காது. அதை நீங்கள் அன்றைக்கு செய்யாமல் காலம் தாழ்த்தியதால் தான் அவர்கள் என்னைச் சீண்டி சீண்டி இவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

முகவை அப்பாஸ் என்பவன் நம் ஜமாத்திற்கு வரும் பெண்களை வளைத்து அவர்களின் போன் நம்பர்களை டிரேஸ் செய்து அவர்களோடு சல்லாபித்தான் என்பதை அவனே வாக்குமூலமாக ஒப்புக் கொண்டிருக்கின்றான். ஆனால் இன்றைக்கு அந்த அயோக்கியன் உங்களைப் பற்றி சம்பந்தமில்லாமல் பைத்தியக்காரத் தனமாக உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றான்.

நீங்கள் இந்த தவ்ஹீத் கொள்கையில் பிறக்கவில்லை. நீங்கள் மவ்லீது ஓதியிருக்கிறீர்கள், கத்தம் ஓதியிருக்கிறீர்கள், பாத்திகா ஓதியிருக்கிறீர்கள். சாவு வீட்டில் காசுக்காக குர்ஆன் ஓதியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைக்கு அதெல்லாம் தவறு என்று சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்கிறீர்கள். ஆனால் இந்த அயோக்கியன் முகவை அப்பாஸ் “பீஜே அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் எழுதி மக்களை திசை திருப்பும் காரியத்தைச் செய்து வருகின்றான். இதை புதிதாகப் பார்க்கும் மக்கள் ஏன் இப்படி பீஜே மாற்றி மாற்றி பேசுகிறார் என்று கூட நினைப்பார்கள்.

இது சம்பந்தமாக நான் பதில் கொடுக்கும் போது அந்த முகவை அப்பாஸ் பாக்கரின் காதலியிடம் இரவெல்லாம் பேசிய வசனங்களை தன் நண்பர்களிடம் சொல்லியதையும் உங்களுக்கே கடிதம் எழுதியதையும் வைத்துத் தான் எழுதினோம். இது தவறு என்றால் முகவை அப்பாஸ் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும்.

அடுத்து சுனாமி கணக்கு.. சுனாமி கணக்கை எழுதியது பாக்கர் தான். ஆனால் இன்றைக்கு அப்துல் முஹைமீன் என்ற அயோக்கியனை ஏவி இந்த ஜமாஅத்தில் ஊழல் நடந்ததைப் போல ஒரு தோரணையை உண்டாக்கப் பார்க்கிறான். அது சம்பந்தமாக நான் பதில் கொடுத்தால் அதில் என்ன தவறு இருக்கிறது?

அடுத்து பித்ரா கணக்கு.. பித்ரா பணத்தை லட்ச லட்சமாக வசூல் செய்த பொய்யர்கள் கூட்டம் அந்தக் கணக்கை மக்கள் மத்தியில் காட்டாமல் தவ்ஹீத் ஜமாத் கணக்கில் அது நொட்டை இது நொல்லை என சொல்லி மக்களை திசை திருப்பும் வேலையைச் செய்து வருகிறார்கள். இது சம்பந்தமாக நான் பதில் கொடுத்தேன். அது தவறா?

இதுமட்டுமில்லாமல் நாளொரு மேனியும் பொளுதொரு வண்ணமும் ஏதாவது பித்னாவை அள்ளித் தெளித்து வரும் இவர்களுக்கு நான் எவ்வளவோ விசயங்களை ஆதாரப்பூர்வமாக வைக்கிறேன். ஆனால் அவர்கள் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் வேறு விசயங்களை வைத்து பித்னா செய்து வருகின்றார்கள். அப்படியானால் எனக்கு கோபம் வருவதில் என்ன தவறு? அதுதான் அவர்களின் நோக்கமும்.

இந்த தளத்தில் சில வார்த்தைகள் தடிக்கத் துவங்கியவுடன் உங்களுக்கு மெயில் அனுப்பியவர்கள், புகார் செய்தவர்கள் ஒருபுறம் இருக்க.., அதற்காக துடியாய் துடித்து அறிக்கை விடுகிறீர்கள் நீங்கள்.

நம் சகோதரர்கள் ஒருமித்து இதை மூடச்சொன்னால் நான் மூடி விட தயாராக இருக்கிறேன்..

ஆனால் அவர்கள் எழுதும் செய்தியைப் பார்த்து பீஜே அப்படி செய்தது உண்மையா? பீஜே ஏன் இப்படி மாற்றி மாற்றி அன்றைக்கு ஒன்று இன்றைக்கு ஒன்று சொல்கிறாரே? இதற்கென்ன விளக்கம்? என ஏகப்பட்ட சகோதரர்கள் எனக்கு மெயில் அனுப்பியும், உங்களுக்கும் பல பேர் போன் மூலமாகவும் விளக்கம் கேட்கிறார்களே! அதுபோன்ற சகோதரர்களுக்கு இனிமேல் நீங்கள் விளக்கம் அளித்துக் கொள்கிறீர்களா?

அதுதானே அவர்களுடைய நோக்கமும். உங்களின் தாவா பணிகளைக் கெடுத்து அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியே உங்களின் காலத்தை வீணாக்க வேண்டும் என்பது தான் அவர்களின் முழு எண்ணமும். அதனால் தான் இன்றைக்கு பொய்யன் டீஜே தளத்தை ஒரு தவறான தளமாக திட்டமிட்டே சித்தரித்து விட்டார்கள்.

இப்போதும் கூட பாருங்கள் முத்துப்பேட்டை ரஹ்மத் டிரஸ்டினர் நபிகள் நாயகத்துக்கு கார்ட்டூன் வெளியிட்டுக்கும் இழிசெயலைக் கண்டிக்கத் துப்பு இல்லாமல், ததஜ நடத்திய ஆர்ப்பாட்டை கொச்சைப் படுத்தும் விதமாக ஒரு செய்தி வெளியிட்டிருப்பதைப் பாருங்கள்.

நான் செய்தது குற்றம் என்று ரஹ்மத் டிரஸ்டின் உரிமையாளர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். ஆனால் தன் சுயநலத்திற்காக ததஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என அயோக்கியத்தனமாக ஒரு செய்தியை வெளிடிட்டுள்ளதை மக்களே நீங்கள் பாருங்கள்.

நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை வெளியிட்ட முஸ்தபா, அவர் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்ட பிறகும் ததஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்களா? கிட்டத்தட்ட அந்த சம்பவம் நடந்து 2 மாதம் ஆனபிறகும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற என்னக் காரணம் தெரியுமா? அந்த முஸ்தபா நம் சகோதரர்களிடமும் மன்னிப்புக் கடிதத்தைக் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ததஜவினர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் வினியோகித்த அந்த கார்ட்டூன் இடம்பெற்ற புத்தகத்தை வாபஸ் வாங்குங்கள் எனச் சொல்லி அவர்களுக்கு 2 மாதம் கால அவகாசம் கொடுத்தும் கூட அந்தப்புத்தகத்தை திரும்பப் பெறாமல் இருக்கும் முஸ்தபாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தாமல் அவர்களுடன் இணைந்து விருந்து சாப்பிடச் சொல்கிறதா இந்த அயோக்கிய நாய்களின் கூட்டம்.

நபிகள் நாயகத்தை கார்ட்டூனாக சித்தரித்து விட்டு அதற்கு கடமைக்கு மட்டும் மன்னிப்பு கேட்டு விட்டு அந்தப் புத்தகத்தை வாபஸ் வாங்காமல் இருக்கும் ரஹம்த் பள்ளி நிர்வாகியைக் கண்டித்து ததஜவினர் அந்தப் பகுதி மக்களோடு இணைந்து தன் மார்க்கத்தைக் காப்பதற்காக நடத்திய ஆர்ப்பாட்டத்தை தவறாகச் சித்தரிக்கும் இந்த பொறம்போக்கு பொருக்கிகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா இல்லையா?

ததஜ நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மாவட்ட கலெக்டர் அளவில் பிரசர் கொடுக்கப்பட்டு கல்வி அதிகாரிகளின் முன்னிலையிலேயே அந்தப் புத்தகங்களின் பக்கங்கள் கிழிக்கப்பட்டதே! இதற்கு மேல் என்ன வேண்டும்?

இதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, அண்ணனை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு சாதகமாக பேசும் இவர்களை நான் புரோக்கர் என்று வர்ணிப்பதில் என்ன தவறு? பக்கம் பக்கமாக கேள்வி கேட்கும் சகோதரர்கள் இதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்? இதெற்கெல்லாம் நீங்கள் உக்கார்ந்து பதில் எழுதிக் கொண்டிருக்க தயாரா?

அவர்களின் கேள்விகளுக்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் பதில் அளித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். அப்பறம் எங்கே நீங்கள் மக்களின் மார்க்க சந்தேகங்களுக்கு விடையளிப்பது? தவ்ஹீதை எப்படி பிரச்சாரம் செய்வது? எப்படி நவீன பிரச்சனைகளை ஆய்வு செய்வது? இதை இந்த தளத்தின் மீது புகார் சுமத்திய மக்கள் சிந்திக்கட்டும்.

அதேநேரம் நானும் சில தவறுகளைச் செய்து விட்டேன். அதாவது உங்களுடைய கட்டுப்பாடு அறவே இல்லாததாலும், என்னுடைய கோபத்தினாலும் இந்தத் தளத்தில் சில வெறுக்கத் தக்க விசயங்கள் இருந்தது உண்மை தான். இனிமேல் எழுத்துக்களில் சிறந்த கண்ணியம் இருக்க முயற்சி செய்கிறேன். நான் தொடர்ந்து செயல்படுவதற்காக உங்கள் மற்றும் உங்கள் ஜமாத்தின் ஆதரவு எனக்கு மீண்டும் தேவை.

பொய்யன்டிஜே தளத்தை நீங்கள் தான் நடத்துகிறீர்கள் என்று பொய்யர்கள் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இதெல்லாம் சாத்தியாமா என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துக் கொள்வார்கள். ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும் கூட அது ஒன்றும் தவறு இல்லை என்று தான் நான் சொல்லுவேன். காரணம் அந்த அயோக்கியர்கள் வரம்பு மீறி உங்களை மட்டுமே குறிவைத்து நடத்தும் தாக்குதல்களுக்கு நீங்கள் தான் பதில் கொடுக்க தகுதியான நபர் என்பது தான் என்னுடைய கருத்து.

இருந்தாலும் இதை நீங்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் முடிவுசெய்யட்டும்..

- அபூயூசுஃப்

15 Response to "அண்ணனுக்கு ஓர் கடிதம்"

  1. ilangai Says:

    really superb.................

  2. AYUB KHAN Says:

    உங்கள் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறோம்.இந்த தளம் கண்டிப்பாக தொடர வேண்டும்.இல்லையென்றால் அந்த அயோக்கியர்களுக்காக அண்ணன் பிஜே தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டிருக்கும்.அண்ணன் பிஜே பதிலளிக்க வேண்டிய அளவுக்கு அந்த களிசடைகளுக்கு எந்த தகுதியும் கிடையாது.என்னை கேட்டால் சகோதரர் அபு யூசுப் அவர்கள் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையே அதிகம்தான்.மேலும் அண்ணன் பிஜே அவர்களே இந்ததளத்தை வேண்டாம் என்றாலும் நீங்கள் இன்னும் வீரியத்துடன் இந்த கழிசடைகளுக்கு எதிராக உங்கள் சாட்டையை சுழட்ட வேண்டும் என்பதே அனைவருடைய ஆவலும்.வாழ்த்துக்கள்.

  3. anbudan Says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    நீங்கள் அவர்களை (INTJT) விடாதீர்கள், அவர்களுடைய அவதூறானா எழுத்துக்களால் எங்களுக்கு மிகவும் கோபமாகதான் வருகிறது அதை உங்களுடைய தளத்தில் அந்த அவதூறுக்கு செருப்படி குடுப்பதை படிக்கின்றபோது அந்த கோபமும் அவர்களின் அவதூறினால் ஏற்பட்ட சந்தேகங்களும் விடுபடும். அதே சமயம் ஆபாசமாக எழுதுவதை முற்றிலுமாக தவிர்க்கவும் அதை படிக்கவே சகிக்கவில்லை, ஆபாசம் இல்லாமலும் அதே சமயம் உங்களுடைய செருப்படியையும் தொடரவே எனது விருப்பம்.
    முகமது.

  4. BUGARY Says:

    நண்பரே இந்த விசயத்தில் நாம் இரண்டு வகையில் கையாலலாம்


    1 இவர்களை நாம் கண்டு கொள்ளவே தேவை இல்லை எவ்வாறு எனில் கடந்த சத்டசபை தேர்தலில் வடிவெழுவின் சொந்தப்ாஹைக்கை விஜயகாந்த் கண்டு கொள்ளாதது போல.

    முடிவு என்னவாக மாறியது கடைசியில் வடிவேலு எங்கே என்றே தெரியவில்லை அது போல இருங்காலம் ஏனெனில் இப்பொழுது நமக்குள் கருத்து வேற்பாடு வரும் காரணத்தால் அதனை கவனத்தில் கொண்டு ஏக இறைவன் எல்லாம் அறிந்த அல்லாஹ் இவர்களுக்கு நம் கண்முன்பாகவே இவர்களின் செயலுக்கு கூலியை கொடுக்க வேண்டும் என்று துவா செய்து விட்டு நமது தாவா பணியை செய்து கொண்டு இருக்கலாம்

    அல்லது

    2.மற்றவர்கள் குறை சொல்லாத அளவுக்கு சற்று நீதணத்துடன் இந்த வளைத்தலத்தையே தொடரலாம்

  5. farook Says:

    பொய்யை உன்மையால் வெல்ல வேன்றும்.... ஆதரத்துடன் நீங்கள் செய்யும் பணி தொடரா வேண்டும்.

  6. kaja Says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    உங்கள் தளத்தில் இந்த கழிசடைகளுக்கு எதிராக உங்கள் சாட்டையை சுழட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் .வாழ்த்துக்கள்.

  7. Raseem, The Designer Says:

    மிக கண்ணியமான வகையில் உங்கள் பதிலடி தொடரட்டும். இன்ஷா அல்லா . PJ அவர்கள் இந்த கழிசடைகளுக்கு பதில் சொல்ல தங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்...

  8. இறை அடியான் Says:

    ஆபாச வார்தைகளை தவிர்த்து. பொய்யன் டி.ஜே. தளம் தொடர வேண்டும்

  9. Sultan Sons Says:

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இணைப்பில் சகோ PJ கட்டுரை தாங்களின் செயலுக்கும் பொருந்தும் என்பதால் அறவே தவிர்ப்பது நல்லது.

    http://onlinepj.com/vimarsanangal/mukavariyatrathukal_vimarsnam/mukavariyatrathukal/

    ஹிதாயத்.

  10. Jegabr Says:

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    அன்புள்ள சகோதரர் அபூ யூசுஃப் அவர்களுக்கு, தாங்கள் பதித்திருந்த “அண்ணனுக்கு ஒரு கடிதம்” என்ற தலைப்பிலான செய்தி ஒவ்வொரு தவ்ஹீத் கொள்கை சகோதர்களின் உள்ளக்குமுறலை பிரதிப்பலிப்பதாகவே இருந்தது.
    பொய்யையும், அயோக்கியத்தனத்தையும் பெரும் மூலதனாமக கொண்டு அன்றாடம் ஒவ்வொரு வகையான உளறல்களை செய்தி என்ற பெயரில் சகோதரர் பிஜே அவர்களை கழுவிக்குடிக்கும் நிலைக்கண்டு கொதித்து குமுறிய நம் சகோதர்கள் ஏராளம் ஏராளம், அந்த அயோக்கியர்கள் சகோதரர் பிஜே அவர்களை மட்டும் கழுவிக்குடிக்கவில்லை, நமது தவ்ஹீத் ஜமாஅத் அதன் கொள்கை சகோதர்கள் அனைவர்களையும் கழுவிக்குடிக்கும் நிலைக்கண்டு எண்ணற்ற நம் கொள்கை சகோதர்களுக்கு மத்தியில் நம் தலைமை உள்பட யாருமே இந்த அயோக்கியர்களின் கழுவிக்குடிக்கும் விதத்தை கண்டுகொள்ளாத நிலையில் தாங்கள் பொய்யன் டிஜே என்ற வலைத்தளத்தை துவங்கி அந்த அயோக்கியர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தீர்கள் தாங்கள் குறிபிட்டது போல் பயிற்களை விதைத்து அதற்கு தேவையான சகலதையும் செய்வதோடு மட்டும் நின்று விட்டால் போதாது அப்பயிற்களை தாக்கும் விஷ பூச்சிகளையும் அழிக்கவேண்டும், அந்த விஷப்பூச்சிகளை அகற்றும் வேலையைத்தான் பொய்யன் டிஜே செய்ததே தவிர,நம் கொள்கை சகோதரர்களில் சிலர் தலைமைக்கு புகர் கூறியுள்ளதில் எவ்விதமான நியாயமும் இல்லை, ஆகவே தாங்களது பணி நிற்காது தொடரட்டும், என்றாலும் எடுத்து வைக்கும் வார்தையில் கண்ணியம் வரும்படி தாங்களது பதிலுரை இருக்கவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
    இன்ஷா அல்லாஹ் “அண்ணனுக்கு ஒரு கடிதம்” என்ற தொகுப்பை எங்களுடைய துளசியாப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத்திலும் (www.thulasiapattinamtntj.com) வெளியிடுவோம் என்பதை கூறிக்கொள்கிறோம்.ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
    அன்புடன் அபு ஹாதி துளசியாப்பட்டினம்

  11. MA Says:

    உங்கள் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறோம்.இந்த தளம் கண்டிப்பாக தொடர வேண்டும்.இல்லையென்றால் அந்த அயோக்கியர்களுக்காக அண்ணன் பிஜே தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டிருக்கும்.இந்த கழிசடைகளுக்கு எதிராக உங்கள் சாட்டையை சுழட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதே சமயம் ஆபாசமாக எழுதுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். அதை படிக்கவே சகிக்கவில்லை. மிக கண்ணியமான வகையில் உங்கள் பதிலடி தொடரட்டும். பொய்யன் டி.ஜே. தளம் தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்

  12. அதிரை முஜீப் Says:

    சகோதரர்களே!. கலிமா சொன்ன நாம் எல்லாம் முஸ்லிம்கள். சகோதரர்கள். ஒரு சில நேரம் அல்லது பல இடங்களில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். அல்லது இருக்க வேண்டும்!. அப்போதுதான் இந்த கருத்து வேறுபாடுகள், ஆரோக்கியமான பல நல்ல கருத்துக்களை உருவாக்க ஏதுவாக இருக்கும்.

    ஆனால் இங்கே கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமான விவாதமாக இருக்காமல் சகோதர சண்டைகள் எல்லை மீறி, தடம் புரண்டு செல்கின்றது. முஸ்லிம்கள் மட்டுமில்லாமல் இந்த தளங்களை முஸ்லிம் அல்லாத பிற சகோதரர்கள் படிக்க நேரிடும் போது இது போல அசிங்கமாக இணையத்தில் விவாதம் செய்பவர்கள் எப்படி உண்மையான முஸ்லிமாக அல்லது ஏகத்துவ பிரசாரர்களாக இருக்க முடியும் என்று நினைத்து அவர்கள் நம்மை விட்டு முன்பு இருந்த நிலையை விட தற்போது வெகுதூரம் சென்றுவிடுவார்கள்.

    ஆதலால் இங்கு சண்டை போடும் இரு சாரார்களுக்கும் எந்த அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்கள் முன் கொண்டு செல்ல ஒன்றிணைந்து செயல்பட்டோமோ அதே அல்லாஹ்வை முன் நிறுத்தி நான் உங்களிடம் கேட்கின்றேன். தயவு செய்து இது போல அசிங்கமாக எழுதுவதை இரு சாராரும் நிறுத்துங்கள். ஏன் இந்த இணையத்தையே நிறுத்துங்கள். ஒரு சிலர் தொடர்ந்து நடத்துமாறு ஆதரவு தெரிவித்து உங்களை உசுப்பேத்தி விட்டு விட்டு சென்று விடுவார்கள். ஆனால் தவறுக்கு மேல் தவறை நீங்கள் தான் செய்ய நேரிடுகின்றது.

    இதற்காகவே என் இணையத்தில் முன்பு நான் செங்கிஸ்கான் மூலம் ஒரு உறுதி மொழியை வாங்கி வெளியிட்டேன். அவரும் பொய்யன் டிஜே தளத்தை நிறுத்தினால் நானும் நிறுத்துவேன் என்று கூறி இருந்தார்.

    எனவே இருவரும் நிறுத்திவிட்டு ஏகத்துவ கொள்கையை மக்கள் முன் கொண்டு சென்று மறுமையில் நாம் அனைவரையும் அல்லாஹ் செர்க்கதில் சந்திக்க துணை செய்ய வேண்டும் என்று துவா செய்தவனாக
    அதிரை முஜீப்.

  13. AZIFAIR-SIRKALI Says:

    என்னுடைய கருத்துக்களை உங்கள் பதிவு கருத்துப்பகுதியில் பொடவும். ஏனென்றால் நம் சகோதரர்கள் எப்படி சண்டையிட்டுக்கொள்கிறார்கள். நம் ரஸுலுல்லாஹ் இதையா நமக்கு கற்றுத்தந்தார்கள் என்பதையும் உங்கள் ஸ்டைலில் விளக்கவும் எனக்கு உள்பட...

  14. AZIFAIR-SIRKALI Says:

    ஓவ்வொரு மனிதரும் தவறு செய்தவர்கள்தான். ஆனால் அந்த தவறை மற்றவர்களை செய்யவேண்டாம் என சொல்லும்போது நீதமாக நடந்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்க்காக சமூக, சமுதாய பணியில் இருக்கும் ஒருவருக்கு மற்றவர்களால் கேள்வி கேட்கப்படும்போது அவர்மட்டுமே பதில் தந்தால் அவர் கூறியவை நல்லதாகவோ இல்லை கெட்டதாகவோ இருந்தால் அல்லாஹ் அதற்க்குத்தக்கவாறு கூலி கொடுப்பான். ஆனால் அவருக்கு பதிலாக நீங்கள் பதில் சொன்னால் அதற்குறிய கூலியை மறுமையில் ஆண்டவன் உங்களுக்குத்தான் கொடுப்பான். மறுமையில் சகொதரர் பீ.ஜேவோ அல்லது சகோதரர் பாக்கரோ..ஜவாஹிருல்லாவோ உங்களுக்காக அல்லாவிடம் வாதாட மாட்டார். எனவே..உங்கள் பதிவை நல்ல முறையில்..அல்லாஹ் பாதையில் செலவு செய்யவும். அன்பு சகோதரர் அப்துல் அஜிஸ். சார்ஜா.

  15. NAFIDHAH Says:

    சகோதரர் அபூயூசுஃப் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக.
    "தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும்" நாய் நம்மை துரத்தினால் அதை விரட்ட கல்லையாவது கையில் எடுக்க வேண்டும் இல்லையென்றால் அது நம்மை துரத்திக்கொண்டே இருக்கும் முல்லை முள்ளால் எடுப்பதுபோல தௌஹீத் வாதிகளுக்கும்,அண்ணனுக்கும் எதிராக இவர்கள் பிரட்சாரம் செய்து அல்லாஹிவின் ஒளியை பரவ விடாமல் தடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
    அவர்களின் அப்படிபட்ட இழிசெயலுக்கு நீங்கள் கொடுக்கும் ஒவ்வரு அடிக்கும் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக உங்களது இச்சேவை கண்டிப்பாக எந்நாளும் தேவை.

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை