வட்டிக்கு வக்காலத்து வாங்கினாரா அண்ணன் பி.ஜெ?

Friday, April 6, 2012 11:57 PM Posted by பொய்யன் டிஜே

இந்த செய்தியைப் படித்தவுடன் கண்டிப்பாக அனைவரும் ஒரு முடிவுக்கு வருவீர்கள். அது என்ன தெரியுமோ? செங்கி இருக்க வேண்டிய இடம் சேப்பாக்கம் அல்ல கீழ்ப்பாக்கம் என்று.

LIC யில் பணம் கட்டி வட்டித் தொழிலில் செங்கி ஈடுபடுகிறார் என்பதை நாம் ஆதாரத்துடன் வெளியிட்டோம். அந்த ஆதாரங்களை மறுக்க முடியாமலும், நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியாமலும் வயிற்று வலி வந்து தடுமாறிப் போய் வாய்க்கு வந்தபடி உளரிக் கொட்ட ஆரம்பித்துவிட்டார் செங்கி.

ஆம் அண்ணன் பி.ஜெ வட்டிக்கு வஸீலாவாக இருந்தார் என்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

முதலில் நாம் வெளியிட்ட செங்கியின் வட்டிக் கலாச்சாரம் தொடர்பான செய்திக்கும் மறுப்பு சொல்வதுடன் நாம் கேட்ட பல கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயக் கடமை செங்கிக்கு உள்ளது.

இரண்டாவது உண்மையில் அண்ணன் பி.ஜெ வட்டிக்குத் துணை போனாரா? என்பதைப் பற்றி ஆராய வேண்டும். இப்போது விஷயத்திற்கு வருவோம்.

செங்கியின் தளத்தில் பி.ஜெ வட்டிக்குத் துணை போனார் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள செய்தி இது தான்.

அல் உம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை? என்ற கேள்விக்கு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிலளித்த அண்ணன் அதில் ஒரு விசயத்தை சொல்கிறார். அல் உம்மாவின் தலைவர் பாஷா அவர்கள் பீஜெயிடம், 'நான் அடிக்கடி கைது செய்யப்படக் கூடிய நிலையில் இருக்கிறேன். அதனால் என் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது. எனவே நான் இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன்; அதை உங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபரிடம் கொடுத்து மாதமாதம் லாபம் வரும் வகையில் முதலீடு செய்து உதவுங்கள் என்று சொல்லி அண்ணனிடம் இரண்டு லட்சம் கொடுக்க, அண்ணனும் இப்போதும் அவரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் அண்ணனின் ரப்பர் ஸ்டாம்ப் அன்வர் பாஷா என்ற தொழிலதிபரிடம் கொடுத்து, பாஷாவுக்கு மாதமாதம் லாபம் வரும் வகையில் அவருக்கு உதவினேன் என்று அண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணனின் இந்த கருத்தின்படி, பாஷா அவர்கள் பீஜெயிடம் பணம் கொடுக்கும்போது, மாதமாதம் லாபம் வருமாறு செய்யுங்கள் என்கிறார்.

அண்ணனும் அன்வர் பாஷாவிடம் முதலீடு செய்து மாதமாதம் பாஷாவுக்கு லாபம் பெற்றுத் தருகிறார்.

நாம் கேட்பது, பாஷா அவர்கள் பணம் கொடுக்கும் போதும் லாபம் வேண்டும் என்ற கண்டிஷன் போடுகிறார். அப்போது அண்ணன் என்ன செய்யவேண்டும்? பாஷா பாய்! இங்கபாருங்க! வியாபாரம்னா லாபமும் வரும் நஷ்டமும் வரும். ஒரு வியாபாரத்தில் லாபத்திலும் நஷ்டத்திலும் பங்கு கொள்வதுதான் இஸ்லாமிய வழிமுறை. ஆனால் நீங்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணம் தருகிறீர்கள். அது போல் நீங்கள் தரும் தொகைக்கு மாதம்மாதம் லாபம் மட்டும் பெற்றுத் தந்தால் அதற்கு பெயர் வட்டியாகிவிடும். அந்த பாவத்தில் நானும் பங்காளி ஆகிவிடுவேன் என்று சொன்னாரா? இல்லை. மாறாக அண்ணனும் அன்வர்பாஷா மூலமாக பாஷா பாய்க்கு மாதமாதம் லாபம் வாங்கி அல்ல அல்ல. வட்டி வாங்கி கொடுத்துள்ளார். இதுபற்றி மார்க்கத் தீர்ப்பு என்ன? இதோ அண்ணனே சொல்கிறார்.

http://onlinepj.com/porulatharam/uzaikamal_partnar/

இதுதான் செங்கி வெளியிட்டுள்ள தகவல்.

இதில் அல்உம்மா பாஷா அவர்களின் தொழில் உதவியாக பி.ஜெ அவர்கள் பாஷா கொடுத்த 2 லட்ச ரூபாயை சகோதரர் அன்வர் பாஷாவிடம் கொடுக்கச் சொன்னாராம். அதன் மூலம் மாதா மாதம் ஒரு தொகையை லாபமாக கொடுக்கும் படி அன்வர் பாஷாவிடம் பி.ஜெயும் சொன்னாராம். இதுதான் செய்தியின் சுருக்கம்.

சரி இதை வைத்து செங்கி சொல்ல வருவது என்ன?

மாதா மாதம் லாபம் மாத்திரம் தான் கிடைக்கும் என்றால் பாஷா அவர்களின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அதில் அவருக்கு பங்கில்லை. அதனால் லாபத்தில் மாத்திரம் பங்கெடுத்து நஷ்டத்தில் அல்உம்மா பாஷா பங்கெடுக்கவில்லை என்றால் இது வட்டியாகும்.

அன்வர் பாஷாவிடம் பணம் கொடுத்து அல்உம்மா பாஷாவுக்கு உதவும்படி அண்ணன் சொன்னதில் இருந்தும் மாதா மாதம் லாபம் கொடுக்கச் சொன்னதில் இருந்தும் அன்வர் மற்றும் அல்உம்மா பாஷா ஆகியோரின் வட்டித் தொழிலுக்கு அண்ணன் பி.ஜெ தான் வழிகாட்டியுள்ளார் என்கிறார் அறிவுத் தந்தை (?) செங்கிஸ்கான்.

சாதாரண மனிதன் கூட விளங்கிக் கொள்ளும் அளவுக்கு மிகவும் இலகு தமிழில் தான் பி.ஜெ யின் குறிப்பிட்ட ஆக்கம் இருக்கிறது.

ஆனால் இனி பி.ஜெ அவர்களிடம் அனைவரும் சேர்ந்து ஒரு வேண்டுகோள் விடுக்க வேண்டும் இனிமேல் கட்டுரை எழுதும் போது அனைவருக்கும் பொதுவாக ஒரு ஆக்கமும் செங்கி போன்ற அரை குறைகளுக்கு என்று தனியாக ஒரு ஆக்கமும் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற கிறுக்கர்கள் உளருவார்களே?

பி.ஜெ சொன்னதை அவருடைய இணையதளத்திலிருந்து அப்படியோ எடுத்து போடுகின்றோம் பாருங்கள்.

பாஷா ஜாமீனில் வெளியே வந்து தமுமுக அலுவலகத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் நான் அடிக்கடி கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறேன். அப்படி கைது செய்யப்பட்டால் என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. எனவே இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன். அதை உங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபரிடம் கொடுத்து மாதாமாதம் இலாபம் வரும் வகையில் முதலீடு செய்து உதவுங்கள்’’ என்று கூறி பாஷா இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். அதைத் தொழில் அதிபர் அன்வர் பாஷா அவர்களிடம் கொடுத்து வைத்து மாதாமாதம் லாபம் வரும் வகையில் அவருக்கு உதவினேன். திடீரென ஒரு நாள் அந்தப் பணம் உடனே வேண்டும் என்று பாஷா கேட்டு அனுப்பினார். உடனே நான் அன்வர் பாஷாவிடம் நிலைமையை விளக்கி பணத்தைத் திருப்பிக் கேட்ட போது நாளை தருவதாகச் சொன்னார். அதன் படி மறுநாள் புஹாரியை (அல்லது முஹம்மது அலியை) வரச் செய்து அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டேன்.

இதுதான் பி.ஜெ சொல்லியுள்ள செய்தி.

இதில் சிகப்பு நிறத்தில் தரப்பட்டுள்ள வாசகத்தை கவணியுங்கள். இதுதான் செங்கியின் வாதத்திற்கு ஆதாரமாம்.

ஒருவர் வந்து தொழில் விஷயத்தில் உதவி கேட்க்கிறார் அவருக்கு பி.ஜெ வழிகாட்டுகின்றார். அப்போது 2 லட்சத்தில் வரும் லாபத்தை மாதா மாதம் கொடுத்துவிடுங்கள் என்கிறார். இதில் நஷ்டத்தில் பங்கெடுக்கும் படி சொல்லவில்லையாம்.

ஏன் இது மட்டுமா அதில் உள்ள கேள்வி?

செங்கிக்கு விளங்கும் வகையில் பி.ஜெ அதை இப்படி சொல்லியிருக்களாம்.

பாஷா என்றொருவர் இருந்தார் அவர் இந்த ஊர் இந்த இடம் அவருடைய தந்தை பேர், தாய் பெயர், மனைவி பெயர் எல்லாம் குறிப்பிட்டு அவர் இருக்கும் இடத்திலிருந்து தமுமுக வுக்கு அவர் ட்ரைனில் வந்தார் வரும் போது கைலியும், புல் கை சேர்ட்டும் போட்டு 100 ரூபா பெருமதியான செருப்பொன்றும் போட்டிருந்தார்.

அவருடைய கைலியின் கலர், சேர்ட்டின் நிறம், தாடியின் அளவு, தொப்பி போட்டிருந்தால் அதைப் பற்றிய விபரம், அவருக்கு தொப்பை போட்டிருந்ததா இல்லையா?

நடக்கும் போது எப்படி நடப்பார்? எப்படி சாப்பிடுவார்? என்பதையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு அப்படிப் பட்ட பாஷா என்னிடம் இப்படி சொன்னார் அப்போது நான் இன்ன கலர் சேர்ட்டும், லுங்கியும் அணிந்து அமர்ந்து கொண்டு அல்லது நின்று கொண்டிருந்தேன். அவர் என்னிடம் சொல்லும் போது நான் தலையாட்டிக் கேட்டுக் கொண்டேன் தலையாட்டும் போது வலது இடது பக்கமாக ஆட்டினே பின் நான் பேசும் போது அவர் தலையாட்டினார் அவர் இடது வலதாக ஆட்டினார்.

இப்படியெல்லாம் சொன்னால் தான் இந்த மர மண்டைக்கு விளங்கும் போல?

லூசுப் பயலே உன்னை சங்கி மங்கி என்று சொல்வதில் தவரே இல்லை. மங்கியை விட கேவலமாக உளருகிறாய். கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவன் சேப்பாக்கத்தில் இருக்கிறியேடா?

சகோதரர் பி.ஜெ அவர்கள் மார்க்கப்படி பாஷா அவர்களுக்கு தீர்ப்பு வழங்கும் போது இதை சொல்லாமலா தீர்ப்பு சொல்லுவார்? செய்தியை எழுதும் போது இதுதான் நடந்தது என்பதை தெரிவிப்பதற்காக செய்தியின் மூலக் கருத்தை மாத்திரம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தில் உள்ள அனைவருக்கும் இது புரியும் போது உனக்கு மட்டும் புரியவில்லை என்றால் அது பி.ஜெயின் கட்டுரையின் குறையல்ல. உன் மூலையின் குறை.

மாதாமாதம் லாபம் தருவதாக சொன்னால் அதற்கு என்ன அர்த்தம். லாபம் கிடைத்தால் தரவேண்டும் என்று தானே அர்த்தம். லாபம் கிடைக்காவிட்டால் ஒன்றுமே கிடைக்காது என்பது லாபம் என்ற வாசகத்தில் இருந்து தெரியவில்லையா?

வட்டி என்றால் மாதாமாதம் ஐயாயிரம் தருகிறேன் என்றால் தான் வட்டியாகும். என்ன கிடைக்கிறதோ அதைத் தான் தருவோம் என்றால் எப்படி வட்டியாகும்.

பொய்யன் தலைவன் பாக்கர் விண்டிவுக்கு ஷேர் பிடிக்கப்போன போது துபையில் என்ன சொன்னான். லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டித்தானே மக்களிடம் பணம் திரட்டி வந்தான்.

உனது கொள்கைப்படி அனவர் பாஷாவிடம் லாபம் தாருங்கள் என்ற அடிப்ப்டையில் பங்கு சேர்ந்த்து வட்டி என்றால் உனது சக மாநில நிர்வாகி ஒருவர் பல காலம் அன்வர் பாஷாவிடம் பணம் கொடுத்து மாதாமாதம் லாபம் தர வேண்டும் என்ற அடிப்படையில் பங்கு சேர்ந்தாரே அப்படியானால் அவர் வட்டி வாங்கித் தின்னத்தான் பணம் கொடுத்தாரா? லாபம் இன்னும் சொல்லப்போனால் சில மாதங்கள் லாபம் இல்லை என்ற உடன் அவர் நடந்து கொண்ட விபரங்களை நாங்கள் வெளியிட வேண்டும் என்பது தான் உனது எண்ணமா? இது போல் உளறினால் சுவீட் மாஸ்டர் முதல் பைனான்சில் வாகனம் வாங்கும் உங்கள் நிர்வாகிகள் பலரின் வண்டவாலங்களை எழுத எங்களைத் தூண்டுவது தான் உனது எண்ணமா?

ஒருவர் எந்த தொழிலில் பங்கு சேர்வதாக இருந்தாலும் மாதாமாதம் லாபம் தாருங்கள் என்று தான் சொல்வார்கள். ஆனால் நட்டம் ஏற்பட்டாலும் அடஹிப் பொருந்திக் கொள்வார்கள். அது பேசப்படாவிட்டாலும் அது தான் அதன் கருத்து என்பது முதலீடு செய்பவருக்கும் வாங்குபவருக்கும் உதவியாக இருப்பவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போது கட்ந்த ஆறுமாதங்களாக அன்வர் பாஷா அவர்களின் தொழில் நலிவடைந்து யாருக்கும் எந்த லாபமும் கொடுக்கவில்லை. பங்கு சேர்ந்த அனைவருமே வியாபாரம் என்ரால் லாபமும் நட்டமும் தான் என்று புரிந்து நட்ந்து கொண்டனர்.

இறுதியாக...

உண்மையில் நீ உத்தமனாக இருந்தால் வட்டிக்கும் உனக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபணம் செய்து காட்டு பார்க்களாம்.

ஆதாரம் கேட்டாய் ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்டுள்ளோம் திராணியிருந்தால் அதை மறுத்துப் பார் கிறுக்குப் பயலே?

0 Response to "வட்டிக்கு வக்காலத்து வாங்கினாரா அண்ணன் பி.ஜெ?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை