எஸ்.பி. பட்டணம் பள்ளிவாயல் திறப்பு. மீண்டும் கேவலப்பட்ட பொய்யர்கள்.

Tuesday, April 10, 2012 6:08 PM Posted by பொய்யன் டிஜே

“முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விடியும்என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் ஒரு ஆக்கம் அங்கும் இங்கும் அல்லோலகல்லோலப் பட்டது.

எஸ்.பி. பட்டணம் பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக பொய்யன் ட்ரஸ்டினால் தான் அந்த செய்தி பரப்பப் பட்டது. எஸ்.பி. பட்டணத்தில் சுன்னத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளியை டி.என்.டி.ஜெ அபகரித்துவிட்டது என்று மக்கள் மத்தியில் புரளியைக் கிளப்புவதற்காக பொய்யர் கூட்டம் பின்னிய காமடிக் கதைதான் அது.

பொய்யன் சமாத்தின் கேவலமான காரியங்களை அல்லாஹ் மக்கள் மத்தியில் அவசரமாகவே வெளிக்காட்டி அவர்களை மீண்டும், மீண்டும் கேவலப்படுத்திவிடுகின்றான் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

எஸ்.பி. பட்டணத்தில் இருந்த ஒரு பள்ளிவாசலை அதன் உரிமையாளர்களே டி.என்.டி.ஜே க்கு ஒப்படைத்த பின்னால் அதில் சுன்னத் ஜமாத் உரிமை கொண்டாட வந்தது. குர்ஆனையும், சுன்னாவையும் நிலைநாட்ட தவ்ஹீத் ஜமாத் கையில் குறிப்பிட்ட கட்டிடத்தின் உரிமையாளரே கொடுத்ததன் பின்னர் அதை மீண்டும் கையகப்படுத்தி பித்அத்தை நுழைவிப்பதை அனுமதிக்க முடியாது என்ற காரணத்தினால் சுன்னத் ஜமாத்திற்கு எதிராக பள்ளிவாசல் ததஜ வின் கையில் வரவேண்டும் என்பதற்காக சுன்னத் ஜமாத்திற்கு எதிராக வழக்கு பேசப்பட்டது.

குறிப்பிட்ட பள்ளிவாசல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகத்தின் கீழ்த் தான் இருக்க வேண்டும் என்று அதன் உரிமையாளரே சொன்னதன் பின்னர் சுன்னத் ஜமாத்திற்கு அங்கெண்ண வேலை?

பள்ளிவாசலின் சொந்தக்காரர்களின் வாக்கு மூலத்தைப் பாருங்கள்.





மேலுள்ள வீடியோவில் பள்ளிவாசல் யாருக்கு சொந்தமானது என்பது தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தவன் விஷயத்தில் அயோக்கியர்களுக்கு என்ன வேலை?

இந்த வீடியோ வெளியான பின்னரும் பொய்யன் கூட்டம் தனது அயோக்கியத் தனத்தை விடவில்லை.

“டி.என்.டி.ஜெ பள்ளியை அபகரித்துவிட்டது என்று சுன்னத் ஜமாத்தை விட மோசமாக இவர்கள் தாம் நரி ஊளையிடுவதைப் போல் ஊளையிட்டுத் திரிந்தார்கள்.

ஆனால் இவர்கள் அயோக்கியர்கள் என்பதை இன்னும் ஒரு முறை அல்லாஹ் நிரூபித்துக் காட்டினான். அல்ஹம்துலில்லாஹ் எஸ்.பி. பட்டணம் பள்ளிவாசல் ததஜ வுக்குத் தான் சொந்தம் என்று கோர்ட் தீர்பு கொடுத்துவிட்டது.

மூக்குடைபட்ட மூடர்கள்.

எஸ்.பி. பட்டணம் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத்திற்கு உரியது என்றும் அதை தவ்ஹீத் ஜமாத் அபகரித்து விட்டது என்றும் பொய்யர்களின் பொய்யன் சமாத் சார்பாக தமாஸ் செய்யப்பட்டது.

பாவம் “பக்கிகல்“ ! இவ்வளவு சீக்கிரம் மூக்குடைபடும் என்று கணவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

“மங்கிஸ்கானின் மந்திரத்தினால் மாங்காய் காய்க்குமா என்ன?“

பொய்யன் மங்கிக்கு இப்போது புரிந்திருக்கும் முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்தது எப்படி என்று.

பள்ளிவாசல் யாருக்குச் சொந்தம்?

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாட்சியர் உத்தரவின் படி பூட்டி சீல் வைக்கப்பட்ட்து.

இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து நட்த்தி வந்த்து.

இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடாணை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டனர். இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

உத்தரவின் நகலை காண click here

இதன் பின்னர் வட்டாட்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்துச் செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலைத் திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தார்.

இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு இன்று (10-4-2012) செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு காவல் துறையினரின் போதிய பாதுகாப்புடன் பள்ளிவாசல் திறக்கப்படது.

மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று பள்ளிவாசலில் இது குறித்து பொது அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கடைப்பிடித்துக் காட்டிய முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஆர்ப்பாட்டமோ அமர்க்களமோ இல்லாமல் திறப்பு விழா என்ற பெயரில் அதிக மக்களைக் கூட்டி மற்றவர்களைப் புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியான முறையில் பள்ளிவாசல் இன்று திரக்கப்பட்டது.

நீண்டால் பூட்டிக் கிடந்தை பள்ளிவாசலை திறந்து நம் கொள்கைச் சகோதரர்கள் சுத்தம் செய்து தொழுகை நடத்திய காட்சி






0 Response to "எஸ்.பி. பட்டணம் பள்ளிவாயல் திறப்பு. மீண்டும் கேவலப்பட்ட பொய்யர்கள்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை