ஐஸ்குச்சி அப்பாசுக்கு பதில்.

Friday, April 13, 2012 4:51 AM Posted by பொய்யன் டிஜே

தனியார் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனங்கள் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துள்ள நிலைபாட்டை விமர்சனம் செய்து அப்துல் முகைமின் என்ற ஐஸ்குச்சி அப்பாஸ் ஒரு ஆக்கத்தை எழுதியுள்ளார். இது தொடர்பான விரிவான விளக்கம் தரும் விதமாக நாம் இந்த ஆக்கத்தை எழுதுகின்றோம்.

ஹஜ் கமிட்டி மூலம் வாய்ப்புக் கிடைக்கும் போது ஹஜ்ஜுக்குச் செல்வேன் என்ற முடிவின் படி சகோதரர் பீ.ஜே அவர்கள் இதுவரைக்கும் ஹஜ் செல்லும் வாய்ப்புக் கிடைக்காமல் இருக்கிறார். இதே நேரம் தனியார் ஹஜ், உம்ரா நிறுவனங்கள் செய்யும் ஏமாற்று, மற்றும் பித்தலாட்டங்கள் காரணமாக அந்நிறுவனங்கள் மூலம் ஹஜ்ஜுக்கு செல்லமாட்டேன் என்று சொல்லியுள்ளார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும், தனியார் ஹஜ் நிறுவனங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியது. தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகத்தில் இருக்கும் யாரும் இது போன்ற நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்றும் ததஜ நிர்வாகம் முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது.

இது தவிர வளைகுடாவில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் உம்ரா சேவையை நடத்திக் கொள்ள முடியும். இதற்கான காரணங்கள் ததஜ வின் ஹஜ் சர்வீஸ் நிலைபாட்டிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள் தொடர்பான ததஜ வின் நிலைபாட்டை முதலில் விரிவாக அறிந்து விட்டு ஐஸ்குச்சி அப்பாஸின் கேள்விக்குறிய பதிலைப் பார்ப்போம்.

ஹஜ் சர்வீஸ்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடும்:

கடந்த சில ஆண்டுகளாக தனியார் நடத்தும் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகிகளே ஹஜ் சர்வீஸ் நடத்தி அது குறித்து பல புகார்களை தவ்ஹீத் ஜமாஅத் சந்திக்க நேர்ந்ததை அனைவரும் அறிவீர்கள். கடந்த காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் சார்பிலோ, அல்லது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பிலோ இது போன்ற சர்வீஸ்கள் நடத்தும் போது, அந்தக் குறைபாடுகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் அறிவீர்கள். மக்கள் மத்தியில் நாம் கட்டிக்காத்து வரும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் இது குறித்து கடந்த 22/09/2011 அன்று மாநில நிர்வாகக் குழு மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அனைத்து சகோதரர்களுக்கும் அறியத் தருகிறோம்.

1) மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், கிளை நிர்வாகம் சார்பிலோ, மற்றும் ஜமாஅத்தில் உள்ள பல்வேறு அணிகள் சார்பிலோ உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஹஜ் சர்வீஸ்கள் நடத்தக் கூடாது.நம் சார்பில் அரசிடம் அனுமதி பெற்றும் நடத்தக் கூடாது. அனுமதி பெற்றவர்களுடன் டை அப் முறையிலும் ஹஜ் சர்வீஸ் நடத்தக் கூடாது.

2) வளைகுடா நாடுகளின் கிளைகள் தவிர மற்ற எந்தக் கிளைகளும் உம்ரா சர்வீஸ்களும் நடத்தக் கூடாது.

வளைகுடா நாடுகளில் உம்ரா சர்வீஸூக்கு விதிவிலக்கு அளிப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:

* வளைகுடாவில் இருந்து உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் போது அதில் ஹஜ்ஜைப் போல அதிகமான நாட்களோ, அதிகப்படியான சர்வீஸ்களோ இல்லை. மினா, அரஃபா, முஸ்தலிபாவிற்கு அழைத்துச் செல்லுதல், அதிக நாட்கள் தங்க ஏற்பாடு செய்தல் போன்றவை இல்லை. உம்ராவுக்கு புறப்பட்ட தினத்திலேயே திரும்பி வந்து விட முடியும். அதிகபட்சம் ஐந்து மணி நேரத்திற்கு மேல் மக்காவில் இருக்கும் அவசியம் ஏற்படாது. அது குறித்து விமர்சனங்கள் வரவும் இல்லை. வருவதற்கு வாய்ப்பும் இல்லை. இதன் காரணமாக வளைகுடா கிளைகள் ஹஜ் சர்வீஸ் நடத்தக் கூடாது என்றும், உம்ரா சர்வீஸ் நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து உம்ரா சர்வீஸ் நடத்துவதற்கும் வளைகுடாவில் இருந்து உம்ரா சர்வீஸ் நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. உதாரணமாக, இந்தியாவில் இருந்து உம்ராவிற்கு அழைத்துச் செல்லும் போது அதிக நாட்கள் தங்க வைத்தல், பராமரித்தல் போன்ற பலவித சர்வீஸ்கள் உள்ளன. இதில் குறைபாடுகள் ஏற்பட்டு ஜமாஅத்தின் பெயர் கெட்டுப்போக வாய்ப்புகள் உள்ளன. வளைகுடாவில் இருந்து உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் போது இந்த நிலை இல்லை என்பதால் இவ்வாறு வேறுபடுத்தி முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு வேளை உம்ரா சம்மந்தமாகவும் ஆதாரத்துடன் விமர்சனம் வரும்பட்சத்தில் அது குறித்தும் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் எனவும், நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம். மாநில, மாவட்ட, கிளை, மற்றும் மண்டல நிர்வாகிகளும் தனிப்பட்ட முறையில் ஹஜ் சர்வீஸ்கள் நடத்தக் கூடாது. ஜமாஅத்தே நேரடியாக நடத்தும் போது ஏற்படும் குறைபாடுகளும் விமர்சனங்களும் நமது நிர்வாகிகள் நடத்தும் போதும் ஏற்பட்டு விடும். கடந்த காலங்களில் இது போல ஏற்பட்டுள்ளது. எனவே உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ உள்ள நிர்வாகிகள் யாரும் ஹஜ் சர்வீஸ்கள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்துவோர் எந்த மட்டத்திலும் நிர்வாகத்திற்கு தேர்வு செய்யப்படக் கூடாது. (இது பாக்கர் தொடர்பான விமர்சனங்கள் வந்த போதே முந்தைய நிர்வாகம் எடுத்த முடிவாகும்.) ஆனால் வளைகுடாவில் உள்ள நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் உம்ரா சர்வீஸ்கள் நடத்தலாம். வளைகுடா கிளைகளுக்குச் சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும் என்பது தான் இதற்குக் காரணம். குறிப்பு: நம் ஜமாஅத்திற்கு எந்த நேரத்தில் களங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக மாநில நிர்வாகம் கடந்த காலங்களில் இது போன்ற பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.. உதாரணமாக,

• மாநில நிர்வாகிகள் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தாங்கள் நடத்துகின்ற அல்லது நடத்த திட்டமிட்டுள்ள தொழிலுக்கு பகிரங்கமாக மக்களிடம் பங்கு சேர்க்கக்கூடாது. பொதுமக்கள் என்ற அடிப்படையில் தங்களது தனிப்பட்ட சொந்தம் மற்றும் தனிப்பட்ட நட்பு அடிப்படையில் தவிர. • மாநில மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பகிரங்கமாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடக்கூடாது.

• மாநில, மேலாண்மைக் குழு, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் குலுக்கல் சீட்டு நடத்தக் கூடாது.

என்ற முடிவுகளைப் போல, ஜமாஅத்தின் நலன் கருதி மேற்கண்ட முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தலைமை நிர்வாகக்குழு, மேலாண்மைக்குழு கூடி எடுக்கப்பட்ட இம்முடிவுக்கு ஏற்ப தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

இப்படிக்கு.., ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச்செயலாளர்.

மேற்கூறப்பட்ட நிலைபாடுகளை தவ்ஹீத் ஜமாஅத் ஹஜ், உம்ரா நிறுவனங்கள் தொடர்பில் எடுத்துள்ளது.

இப்போது ஐஸ்குச்சி அப்பாஸின் கேள்விகளுக்கு செல்வோம்.

ஐஸ்குச்சி யின் முதல் கேள்வி.

உணர்வில் வரும் உம்ரா விளம்பரம். ''தார் அல் முன்தஹா எஸ்டாபிளிஸ்மென்ட்' என்ற நிறுவனத்தின் அந்த விளம்பரத்தில், மக்காமற்றும் மதீனா பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு அரியவாய்ப்பு என்று வருகிறதே! உம்ரா பயணம் என்று போடாமல் மக்கா மதீனா பயணம் என்று மட்டும் போட்டு விட்டால் மக்கள் என்ன இதைக் கூட விளங்காதவர்களா? தனியார் ஹஜ் சர்வீஸ்களை தடை செய்யச் சொல்லும் அண்ணன், தனது இயக்க நிர்வாகிகள் உம்ரா சர்வீஸ் கூட நடத்தக்கூடாது என்று சொல்லும் அண்ணன், இந்த உம்ரா சர்வீஸ் விளம்பரத்தை வெளியிடுவது அவரது ஜமாஅத் முடிவுக்கு முரணில்லையா? அல்லது இந்த நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்படும் உம்ரா பயணம் நூறு சதவிகிதம் நம்பகமானது என்று கூறுவரா? எதில் தவறு நடக்கும் என்று அண்ணன் அஞ்சுவதாக காட்டிக் கொள்கிறாரோ, அதே தவறு நடக்க வாய்ப்புள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்து பரவலாக அறிமுகமாக துணை செய்வது மட்டும் சரியா? அந்த நிறுவனம் ஹஜ் உம்ரா சேவை தான் செய்கிறது. அதை மறைத்து உணர்வில் வேறு விதமாக விளம்பரமும், விடியல் வெள்ளி பத்திரிகையில் வேறு விதமாகவும் கொடுத்துள்ள விளம்பரத்தைக் கவனியுங்கள்.

நமது பதில்.

இயக்க நிர்வாகிகள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் வேலையில் மோசடி இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் விஷயம். மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் நேரடியாக இந்தத் தொழிலில் ஈடுபடும் போது அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு ஜமாஅத்தே பொறுப்பேற்க வேண்டிய இக்கெட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றது. (பாக்கர் விஷயத்தில் ததஜ வுக்கு இதுதான் நடந்தது)

முக்கிய குறிப்பு.

உணர்வு இதழில் இது வரைக்கும் வெளியாகிய “அல்முன்தஹா” ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தின் விளம்பரம் உணர்வில் வெளியிடப்பட்டதற்கான காரணம் அதில் உம்ரா என்று சொல்லப்படவில்லை. மக்காவுக்கோ, மதீனாவுக்கோ செல்ல விரும்புவோர் மக்கா மற்றும் மதீனாவில் தங்குவதற்கான வசதிகள் செய்து தரப்படும் என்பது தான் அந்த விளம்பரம். இதனால் தான் உணர்வு இதழ் அந்த விளம்பரத்தை பல வாரங்களாக வெளியிட்டு வந்தது.

கடந்த வாரம் முதல் அந்த விளம்பரம் உணர்வு இதழில் வெளிவரவில்லை.

உணர்வு இதழில் அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் பின்வருமாறு :

கடந்த ஏப்ரல் முதல் தேதியன்று தம்புச்செட்டி தெருவில் நடத்தப்பட்ட, “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சியில் உம்ரா மோசடி பற்றிய கேள்விக்கு பீஜே பதில் அளித்தார். அதில் “கள்ள மஹ்ரம்” ஏற்பாடு செய்து பெண்களை உம்ராவுக்கு அழைத்துச் செல்கின்றனர். இது மாபெரும் பாவச்செயல் என்று பீஜே கூறினார்.

அதற்குப் பின் இரண்டு நாட்கள் கழித்து ஒரு சகோதரி தலைமையை தொடர்பு கொண்டு உங்கள் பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்படும் அல்முன்தஹா நிறுவனமும், உம்ரா சர்வீஸ் நடத்துகிறது. அவர்களும் “கள்ள மஹ்ரம்” ஏற்பாடு செய்து அனுப்புகின்றனர். நானும் அதில் பணம் கட்டி இருந்தேன். “கள்ள மஹ்ரம்” கூடாது என்பதால் அந்த பணத்தை திரும்ப வாங்கி விட்டேன் என்று அவர் குறிப்பிட்டார்.

அல்முன்தஹா நிறுவனம் உம்ரா சர்வீஸ் நடத்துவதும் “கள்ள மஹ்ரம்” ஏற்பாடு செய்வதும் தெரிந்த உடன் அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டு விட்டது. பொய்யன் கூட்டம் விமர்சிப்பதற்கு முன்னரே அதை உணர்வு நிர்வாகம் நிறுத்தி விட்டது. அயோக்கியர்கள் என்று தெரிந்த பின்னும் அவர்களுக்கு முட்டுக் கொடுப்பதோ, அல்லது அதை வைத்து வாதாடிக் கொண்டிருப்பதோ தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையல்ல என்பதற்கு இதுவொரு சான்றாகும். ஹஜ், உம்ரா நேரங்களில் மக்காவுக்கு அழைத்து செல்லப்படுபவர்களுக்கு மஹ்ரம் தேவை என்பதினால் தொடர்பே இல்லாத ஒருவனை பெண்களுக்கு மஹ்ரம் என்று பொய் சொல்லி “கள்ள மஹ்ரம்” ஏற்படுத்தி காசு பார்க்கும், இந்தத் தொழிலை பலரும் செய்கிறார்கள். “அல் முன்தஹா” என்ற நிறுவனமும் அப்படி செய்ததாக ஒரு பெண் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைக்கு வந்து மனு கொடுத்த காரணத்தினால் அதைப் பற்றி விசாரித்தவுடன் குறிப்பிட்ட விளம்பரம் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஐஸ்குச்சி யின் இரண்டாவது கேள்வி.

இன்னும் தெளிவாக சொல்லப் போனால், அண்ணன் ஜமாஅத் நிர்வாகிகள் பகிரங்கமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்யக் கூடாது என்று ஒரு சட்டம் உள்ளது.

அதனால் உணர்வில் வெளியான தனியார்களின் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் கூட நிறுத்தப்பட்டன. ஆனால் உம்ரா சர்வீஸ் செய்ய இயக்க நிர்வாகிகளுக்கு தடையுள்ளது. மேலும் தனியார் ஹஜ் உம்ரா சர்வீசை தடை செய்யவேண்டும் என்பது அண்ணன் ஜமாஅத்தின் கொள்கை.

இதற்கு மாற்றமாக இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் விளம்பரம் வருவதற்கு காரணம் என்னவோ? அண்ணனின் ரத்தத்தோடு இந்த நிறுவனத்திற்கு ஏதும் தொடர்புள்ளதோ?

நமது பதில்.

விளம்பரம் வந்ததற்கான காரணம் முந்தைய பதிலில் சொல்லப்பட்டு விட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை இரத்த சம்மந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே நிலைபாடு தான் எடுக்கப்படுகிறது. விளம்பரம் போடப்பட்டதற்கும், உடனடியாக நிறுத்தப்பட்டதற்கும், தக்க காரணங்கள் உள்ளன. அண்ணனின் இரத்த சம்மந்தம் எதுவும் இல்லை. ரத்தத்தோடு தொடர்புள்ளதா? என்ற கேள்வி, தேசிய தலைவர் என்ற வேசியத் தலைவரை நோக்கி கேட்கப்பட வேண்டியது. (வேசித் தலைவர் என்று பலரும் சொல்கிறார்களாம்) உதவி செய்கிறேன், ஒத்தாசை செய்கிறேன் என்று வெளிநாட்டில் கணவர் வேலை பார்க்கும் குடும்பப் பெண்களிடம் கடலை போடுவது, அவர்களுக்கு ஒத்தாசை வழங்க ஆவலாய் காத்துக் கொண்டிருப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு கையும் களவுமாக அகப்பட்டு மானமிழந்த அயோக்கினுக்குத் தான் ரத்த தொடர்புகள் நிறையவே இருக்கிறது. (அதில் அதிகமானவை அன் அபீஷியலாம்) இந்த அயோக்கியனை விட்டால் போதும், தனது டுபாக்கூர் ஹஜ் சர்வீஸ் மூலம் எந்தப் பெண்ணுடனும் அவனே மஹரமாகி செல்ல தயாராகிவிடுவான் என்பது தனி விஷயம்.

ஐஸ் குச்சியின் மூன்றாவது கேள்வி.

இவ்வாறு நாம் பிப்ரவரி மாதம் கேட்டோம். இன்றுவரை அண்ணன் பதிலளிக்கவில்லை. இன்றுவரை அந்த தனியார் நிறுவனத்தின் விளம்பரம் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையில்,கடந்தவார அபகரிக்கப்பட்ட வார இதழில், மோசடி செய்த உம்ரா நிறுவனம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ள அண்ணன், அதில் தனது ஹஜ் கமிட்டி நிலைப்பாட்டிற்கு ஏற்ப ஒரு பத்வா வழங்கியுள்ளார். அந்த பத்வா பற்றிய மார்க்க நிலைப்பாடு பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

நமது பதில்

இந்தக் கிறுக்கன்கள் கிறுக்குத்தனமாக கேட்டதற்காக விளம்பரத்தை நிறுத்த முடியாது. விளம்பரத்தில் எது பற்றி போடப்படுகிறதோ அது உணர்வின் பாலிசிக்கு ஏற்றதாக இருந்தால் வெளியிடப்படும். பாலிசிக்கு மாற்றமாக இருந்தால் நிறுத்தப்படும். அது போல் ஆதாரத்துடன் புகார் வந்தால் நிறுத்தப்படும். இந்தப் பொறம்போக்கு பிப்ரவரி மாதம் கேட்டால் என்ன? பத்து வருடத்திற்கு முன்னால் கேட்டால் என்ன? அதற்கெல்லாம் உணர்வு நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்காது. இந்தப் பொறம் போக்குகள் உணர்வு நிர்வாகத்துக்கு ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் தான் உணர்வு நடவடிக்கை எடுக்கும். நான் பிப்ரவரியில் கேட்டேன் நிறுத்தவில்லை; மார்ச்சில் கேட்டேன்; கண்டுகொள்ளவில்லை என்றால் நீ என்ன உணர்வுக்கு எஜமானனா? நீ சொன்னதை கேட்டு நடக்க? ஒரு சகோதரி தக்க ஆதாரத்துடன் சொன்ன மறுகணமே நிறுத்தப்பட்டு விட்டது.

இவர்கள் பிப்ரவரியில் கேட்டார்களாம்; இதுவரைக்கும் பதில் இல்லையாம். நாம் கடந்த பல வருடங்களாக கேட்கிறோமே அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் ஐஸ்குச்சி அவர்களே? ஐஸ் குச்சி அவர்களே! நாம் உம்மிடம் கேட்ட கேள்விப்பட்டியல் தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும், அதை கேட்பார்கள் என்பதற்காக கள்ளப் பெயரில் வந்தால், உங்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் என்று நினைக்கின்றீர்களோ! விட மாட்டோம். பாக்கர் பதில் சொல்ல வேண்டிய கேள்விப்பட்டியல்களையும், செங்கி பதில் சொல்ல வேண்டிய கேள்விப்பட்டியல்களையும், ஐஸ்குச்சி அப்துல் முஹைமின் அப்பாஸ் பதில் அளிக்க வேண்டிய கேள்விகளையும் மீண்டும் வரிசையாக எடுத்துக் காட்டவுள்ளோம். அது தான் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள். நீ கேட்ட கேள்விகள் கிறுக்குத்தனமாக உள்ள்தால் அதை உணர்வு கண்டு கொள்ள அவசியம் இல்லை.

பீ.ஜே உங்களுக்கு பதில் தர வேண்டிய எந்தத் தேவையும் அவருக்கு இல்லை. உணர்வில் வெளியிடப்பட்ட உம்ரா மோசடி தொடர்பான செய்தியைப் பற்றிய உமது கேள்விகளை நீர் வெளியிடும் போது அதன் அயோக்கியத் தனத்தையும் நாம் வெளிக்காட்டுவோம். (உமது ஆக்கத்தை நாம் எதிர்பார்திருக்கிறோம்)

அயோக்கியன் பாக்கர் நடத்திய தக்வா ஹஜ் சர்வீஸ் நிறுவனம் தொடர்பில் ஐஸ் குச்சி கேட்டுள்ள சில கேள்விகளும், பதில்களும்:

ஐஸ்குச்சியின் கேள்வி:

இந்த தொடரில் அண்ணனின் தனியார் ஹஜ் சர்வீஸ் கொள்கை பற்றிய தடுமாற்றம் பற்றிய விஷயங்களை பார்ப்போம். பாக்கர் தக்வா ஹஜ் சர்வீஸ் தொடங்கி சில ஆண்டுகள் நடத்தியதை நாம் அறிவோம். அந்த தக்வா நிறுவனம் தொடக்க விழாவில் பங்கேற்றார் அண்ணன். இதையொட்டி அந்த தக்வா நிறுவனத்தின் முன்னாள் பங்குதாராரும், இயக்குனருமான ஒருவரை அணுகி விவரம் கேட்டோம்; அவரது பேட்டியிலிருந்து, ''நாம் தக்வா ஹஜ் சர்வீசை பாக்கர் உள்ளிட்ட சிலர் இணைந்து தொடங்கினோம். அதன் தொடக்க விழாவிற்கு அண்ணன் உள்ளிட்ட அறிஞர்கள் பலர் வருகை தந்தார்கள். எங்கள் நிறுவனத்தில் முதன் முதலாக ஹஜ்ஜுக்கு பதிவு செய்தவர் அண்ணன். தனது பயணத்திற்காக என்னிடம் பாஸ்போர்ட் தந்தவர், பின்பு எனக்கே தெரியாமல் என்னுடைய பார்ட்னரிடம் பாஸ்போர்ட்டை அண்ணன் திரும்ப வாங்கி விட்டார். வாங்கியவர், இன்று ஹஜ் கமிட்டியை தூக்கிப் பிடிக்கிறாரோ அங்கே போய் கொடுக்கவில்லை. சைபுல்லாஹ் ஹாஜா மூலமாக திருவனந்தபுரம் சாதிக் என்ற தனியாரிடம் தான் கொடுத்தார். நான் அண்ணனிடம் இதுபற்றி கேட்டேன். என்னிடம் பாஸ்போர்ட்டை தந்த நீங்கள், எனக்கே தெரியாமல் வாங்கி இன்னொருவரிடம் கொடுத்தது சரியா? என அண்ணனுடன் வாதம் செய்தேன். அதற்கு அவர், தக்வா நிறுவனம் பீஜேயை விளம்பரத்திற்கு பயன்படுத்துகிறது என்று சிலர் விமர்சிக்கிறார்கள். அதோடு உங்களின் கட்டணம் ஹெவியாக உள்ளது என்று சில காரணங்களை சொன்னார். அப்போது சைபுல்லாஹ் உள்ளிட்ட சிலர் உடனிருந்தனர். அதற்கு நான், நீங்கள் என்ன காரணம் சொல்வதாக இருந்தாலும், அதை எங்களிடம் சொல்லி நிவர்த்தி செய்வதை விடுத்து என்னிடம் கொடுத்த பாஸ்போர்ட்டை எனக்கே தெரியாமல் வாங்கியது சரியில்லை என்றும், மேலும்,கட்டணத்தை பொருத்தவரை நீங்கள் இவ்வளவு தான் தரவேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லையே என்றெல்லாம் நான் பேசினாலும் அவர் தான் செய்த செயலை நியாயப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். இறுதியாக திருவனத்தபுரம் சாதிக் மூலம் கூட இவர் ஹஜ்ஜ்சுக்கு செல்லவில்லை. அவ்வளவு ஏன் இன்றுவரை அவர் ஹஜ் செய்யாமல் தான் இருக்கிறார்.

நமது பதில்:

பாக்கரின் தக்வா ஹஜ் சர்வீஸ் ஆரம்ப நிகழ்வுக்கு பீ.ஜே சென்றாரா? பாஸ் போர்ட் கொடுத்தாரா? தக்வா ஹஜ் சர்வீஸ் என்ற பெயரில் பாக்கர் ஆரம்பித்த நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு பீ.ஜே சென்றதும் அந்த நிறுவனம் மூலம் ஹஜ் பயணம் செல்ல பாஸ்போர்ட் கொடுத்தும் பின் அதை வாங்கி திருவனந்தபுரம் சாதிக்கிடம் கொடுத்ததும் உண்மை தான். இதில் சில விஷயங்கள் விளக்கப்பட வேண்டும். பொய்யன் பாக்கர் ஹஜ் சர்வீஸ் ஆரம்பித்தவுடன் அந்த முதல் நிகழ்வுக்கு பீஜே சென்றது என்ன? தக்வா ஹஜ் சர்வீஸ் மூலம் நடத்தப்பட்ட ஹஜ் விளக்க வகுப்புகளை ததஜ வின் மாநில தலைமையகக் கட்டிடத்தில் வைத்து சகோதரர் பீ.ஜே யே நடத்தியும் உள்ளார். ஆன்லைன் பீ.ஜே இணையதளத்தில் ஹஜ் விளக்கம் தொடர்பாக, வெளியிடப்பட்டிருக்கும் வீடியோக்கள் தக்வா ஹஜ் சர்வீஸில் பயணம் சென்றவர்களுக்காக நடத்தப்பட்ட வகுப்பு வீடியோக்கள் தாம். பொதுவாக தனிபர்கள் நிறுவனங்கள் பற்றிய குறைபாடுகளும், மோசடிகளும் தெரிவதற்கு முன்னால் ஒரு முடிவு எடுப்பதும், மோசடிகள் தெரிந்த பின்னர் அதற்கேற்ப முடிவு எடுப்பதும் தான் நல்ல மனிதர்களின் இயல்பாகும். அந்த அடிப்படையில் பாக்கர் ஹஜ் சர்வீஸ் மூலம் மாபெரும் சேவை செய்கிறார் என்ற எண்ணம் இருந்த போது அதற்கு பீஜே உறுதுணையாக இருந்தார். ஆனால் அவரது ஹஜ் வியாபாரத்தில் பீஜே கலந்து கொண்டு ஹஜ் விளக்க வகுப்புகள் நடத்தியதற்காகவோ வேறு எதற்குமோ பாக்கரிடம் எந்த ஆதாயத்தையும் அவர் பெறவில்லை. பாக்கரின் மோசடி மற்றும் லீலைகள் தெரிய வருவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது. தனியார் ஹஜ் சர்வீஸ்கள் விஷயத்தில் இவ்வளவு கடுமையான நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுப்பதற்கான காரணமே அயோக்கியன் பாக்கர் செய்த மோசடிகளும், தில்லுமுல்லுகளும் தான். பீஜே நிகழ்ச்சியை ஒளிபரப்பி அதனிடையே பாக்கரின் ஹஜ் வியாபார விளம்பரமும், பாக்கரால் வெளியிடப்பட்டது. அப்போது அது தவறு என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுக்கவில்லை. ஐஸ்குச்சி அவர்கள் இது பற்றி எழுதுவதாக சொல்லி இருக்கிறார். அப்போது பாக்கரின் ஹஜ் வியாபாரத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் பேட்டிகளை நாம் வெளியிடும் போது ஐஸ் குச்சியின் கேள்விகளுக்கு அதுவே பதிலாக அமையும்.

இரண்டாவது பீ.ஜே தனது பாஸ்போர்டை தக்வா ஹஜ் சர்வீஸில் இருந்து திரும்பப் பெற்று திருவனந்தபுரம் சாதிக்கிடம் கொடுத்தது உண்மை. அதற்கான காரணம் தக்வா ஹஜ் சர்வீசை விட அவரிடம் விலை குறைவாக இருந்தது தான். பாக்கர் எப்படி ஹஜ் வியாபாரம் செய்ய லைசன்ஸ் இல்லாமல் தீன் ஹஜ் நிறுவனத்திடம் டை அப் செய்து, அதாவது ஆப்பக்காரியிடம் மாவு வாங்குவது மாதிரி தான், திருவனந்தபுரம் சாதிக்கும் நடத்தினார். இருவருக்கும் லைசென்ஸ் இல்லை. இந்த நிலையில் பாக்கரின் கட்டணத்தை விட சாதிக்கின் கட்டணம் சுமார் 25ஆயிரம் குறைவாக இருந்தது.

எனவே 25 ஆயிரம் என்பது பீஜேக்கு பெரிய தொகை. எனவே தான் சாதிக்கிடம் பாஸ்போர்டை பீஜேயும் சைபுல்லாவும் கொடுத்தார்கள்.. அப்போது பாக்கர் சாதிக்கிடம் கொடுக்கும் தொகையை நீங்கள் கொடுத்தால் போதும் என்று கூறினார். உங்கள் கட்டணமே அது என்றால் அனைவருக்கும் அதே கட்டணத்தை வாங்க வேண்டும், எனக்கும் சைபுல்லாவுக்கு மட்டும் 25ஆயிரம் குறைத்து மற்றவர்களிடம் அதிக தொகை வாங்கினால் நீங்கள் எங்களுக்காக ஏதோ உதவி செய்தது போல் வரும். மேலும், இதை ஆரம்பத்திலேயே நீங்கள் சொல்லி இருந்தால் அதில் நேர்மை இருந்திருக்கும். மற்றவர்களின் கட்டணம் உங்களை விட குறைவு என்று சுட்டிக்காட்டியவுடன் தான் குறைக்கிறீர்கள். சாதிக்கிடம் கொடுத்ததை திருப்பி வாங்க விரும்பவில்லை என்று பீஜே கூறினார். இதனால் தான் பீஜே அதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் சாதிக் டைஅப் வைத்திருந்த பம்பாய்க்காரன் சாதிக்குக்கு பேசப்பட்ட ஒதுக்கீட்டை வழங்காத காரணத்தால் அந்த ஆண்டு அவரிடம் பணம் செலுத்திய யாரும் ஹஜ் செய்ய முடியாமல் போனது. பீஜேயும் சைபுல்லாவும் இதனால் தான் அந்த ஆண்டு போகவில்லை. ஹஜ் வியாபாரம் செய்யக் கூடாது என்றை நிலையில் ஜமாஅத் அப்போது இருக்கவில்லை. சாதிக்கும் பாக்கரும் ஒரே மாதிரியான சேவை செயவதாக பீஜே நினைத்ததால் குறைந்த செலவில் நடத்தப்படும் சேவையில் சேர்ந்து கொண்டார். பாக்கரின் நிறுவனத்தை விட சாதிக்கிடம் விலை குறைவாக இருந்த காரணத்தினாலும், பீ.ஜே சாதிக்கிடம் தனது பாஸ்போர்டை கொடுத்து விட்டார். (பாக்கரின் ஹஜ் சர்வீஸ் மூலமாக சிதம்பரத்தில் இருக்கும் பீ.ஜே யின் உறவுக்காரர்கள் ஹஜ் சென்றது குறிப்பிடத்தக்கதாகும். ஹஜ் வியாபாரம் கூடாது என்ற நிலை அப்போது இல்லாத்தால் தான் தனது உறவினர்கள் பாக்கர் மூலம் ஹஜ் செய்யச் சென்றதை பீஜே தடுக்கவில்லை) அத்தோடு பீ.ஜேயை விளம்பரமாக தக்வா நிறுவனத்தார் பாக்கர் வகையராக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றொரு விமர்சனமும் அப்போது பகிரங்கமாகவே சொல்லப்பட்டது. இது பற்றி பொய்யன் பாக்கரை விசாரித்த 4 டிவிடி க்களில் மேலதிக விபரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

ரியல் எஸ்டேட்டுக்கு பீ.ஜே யை வீடியோ எடுத்து அதை விளம்பரமாக்கியது. தக்வா ஹஜ் சர்வீஸுக்கு பீ.ஜே யை விளம்பரமாக பயன்படுத்தியது எல்லாம் கடந்த கால கசப்பான உண்மைகள். ஆனால் பாக்கரின் ஹஜ் மோசடிகளும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்க்கதைகளும் தெரிந்த பின்னர் தான் இது குறித்து கடுமையான நிலைபாடு எடுக்கப்பட்டது. ஐஸ் குச்சி கேட்கும் கேள்விக்கான பதில் மேலே நாம் எடுத்துக் காட்டிய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கையிலேயே உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அப்போது நடந்ததை ஐஸ்குச்சி கண்டுபிடிக்க வேண்டியதில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தே சொன்ன விஷயம் தான்.

ஐஸ் குச்சி அப்பாஸின் கேள்வி

இன்று தனியார் ஹஜ்ஜை தடை செய்யவேண்டும் என்றும் ஹஜ் கமிட்டி மூலம் செல்லவேண்டும் என்று பத்வா வழங்குகிறார். அவரிடம் ஒன்று கேட்கிறோம். தனியார் ஹஜ் நிறுவனங்களை தடை செய்யவேண்டும் என்பது அவரின் கொள்கை முடிவு என்றால்,முதலில் எங்களிடமும்,பிறகு தனியாரான திருவனந்தபுரம் சாதிக்கிடமும் பாஸ்போட்டை கொடுத்து ஏன் என்று சொல்லவேண்டும்.

அதோடு தனியார் ஹஜ் நிறுவங்களில் மோசடி நடக்கிறது எனவே அதை தடை செய்யவேண்டும் என்பது இவரது கொள்கை என்றால், ஹஜ் கமிட்டி மூலமாக செய்யும் பயணிகள் நூறு சதவிகித குறைகளற்ற ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார்கள் என்று அண்ணன் சொல்வாரா? அண்ணன் போற போக்கை பார்த்தால்,இன்று ஹஜ் கமிட்டி மூலம் தான் ஹஜ் செல்லவேண்டும் என்பவர்,நாளை இந்திய முஸ்லிம்களே! ஹஜ் கமிட்டியிலும் மோசடி நடக்கிறது.

எனவே உங்கள் மீது ஹஜ் கடமையில்லை என்று சொன்னாலும் ஆச்சர்யமில்லை. அல்லாஹ் பாதுகாப்பானாக. என்று கூறி முடித்தார்.

ஹஜ் கமிட்டி மூலமே ஹஜ்; இல்லையேல் இந்திய முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமையில்லை என்ற அண்ணனின் அசத்தல் ஃபத்வா குறித்த அலசல் மிக மிக விரைவில் வெளியாகும் ஓரிறைநாடினால்.

நமது பதில்.

தனியார் ஹஜ் சர்வீஸ்களை தடை செய்ய வேண்டும் என்பதுதான் பீ.ஜே யின் கொள்கை என்றால் முதலில் பாக்கரிடமும் பின்னர் திருவனந்தபுரம் சாதிக்கிடமும் பாஸ்போர்டை கொடுத்ததற்கான காரணம் என்னவென்று ஐஸ்குச்சி அற்புதமாக கேட்கிறது. ஹஜ் சர்வீஸ் தொடர்பான இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பதற்கான அடிப்படைக் காரணமே பாக்கர், சாதிக் போன்றவர்களின் ஏமாற்று வேலைகள் தான்.

இந்த அயோக்கியர்களின் மோசடி தெரியாத காரணத்தினால் ஆரம்பத்தில் பீ.ஜே என்ன அனைத்து நிர்வாகிகளும் இப்படித் தான் இருந்தார்கள். ஆனால் ஹஜ் சர்வீஸ்களின் அயோக்கியத் தனம் தெரியவந்ததும் உடனே தனது பாஸ்போர்டையும் வாங்கியது மட்டுமன்றி இது போன்ற அயோக்கியர்களை மக்களுக்கு இனம் காட்ட வேண்டும் என்ற முடிவையும் எடுத்தார். அல்ஹம்துலில்லாஹ். பொய்யர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இறுதியாக..... ஹஜ் கமிட்டி மூலமே ஹஜ்; இல்லையேல் இந்திய முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமையில்லை என்ற அண்ணனின் அசத்தல் ஃபத்வா குறித்த அலசல் மிக மிக விரைவில் வெளியாகும். ஹஜ் கமிட்டி தொடர்பாக ஒரு அலசல் விரைவில் வெளியாகும் என ஐஸ்குச்சி அறிவித்துள்ளது. அந்த அலசலை நாமும் ஆவலாக எதிர்பார்க்கிறோம்.

அந்த ஆக்கம் வெளியிடப்பட்ட பின் பொய்யன் கூட்டம் ஹஜ், உம்ரா சர்வீஸ் என்ற பெயரில் செய்த அயோக்கியத் தனம் மற்றும் பித்தலாட்டங்களை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிடுவதற்கு நாமும் ஆவலாய் காத்திருக்கிறோம். நல்ல வேளை பாக்கரின் ஹஜ் திருவிளையாடல்களை தேவை இல்லை என்று நாம் வெளியிடாமல் இருந்தோம்.

ஐஸ் குச்சி அந்த நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. பாக்கரின் சர்வீசில் நடந்த லீலைகள், பாதிக்கப்படவர்களின் கண்ணீர் பேட்டிகள், பாக்கர் ஹஜ் சர்வீஸ் குறித்து தலைமைக்கு வந்த ஆதாரப்பூர்வமான புகார்கள். பேசிய தொகையை விட அதிக தொகையை கடைசி நேரத்தில் வாங்கி கொள்ளை அடித்தது.

அது குறித்து நடந்த விசாரணைகள், தக்க ஆதாரங்களுடன் வெளியிட வேண்டியுள்ளதால் ஐஸ் குச்சி அப்துல் முஹைமின் தாமதமில்லாமல் வெளியிட உள்ளதை வெளியிட்டால் நல்லது.

அதை ஆவலுடன் எதிர்பார்க்கீறோம்.

அப்துல் ஹக் (துபையிலிருந்து)

0 Response to "ஐஸ்குச்சி அப்பாசுக்கு பதில்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை