உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பாக்கர் யாதவ்

Thursday, April 26, 2012 8:44 AM Posted by பொய்யன் டிஜே

உண்ணா விரதங்கள் கூடாது அதில் பங்கேற்க மாட்டோம் என மேடைகளில் முழங்கிய பாக்கர் தற்போது உண்ணாரவிரத்தில் கலந்து கொண்டுள்ள செய்தியை வாசகர் ஒருவர் நமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார்.. அதை இங்கே தருகின்றோனம்.

வணக்கங்கள் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது என இஸ்லாம் மார்க்கம் கட்டளையிடுகின்றது. நோன்பையும் இஸ்லாம் ஒரு வணக்கமாகவே ஆக்கியுள்ளது.அதனால் தான் இஸ்லாமியர்கள் பொதுவாக உண்ணாவிரதப் போராட்டங்களைநடத்துவதும் இல்லை, அதில் கலந்து கொள்வதும் இல்லை. அன்றைக்கு இருந்த ஒருங்கிணைந்த தமுமுகவில் ஒரு முறை இடஒதுக்கீட்டை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மார்க்க அறிஞர்கள்பலரும் விளக்கமளித்ததன் காரணமாக தமுமுகவின் உயர்மட்டக் குழு கூடி, உண்ணாவிரதம் என்பதும் ஒருவகை நோன்பு தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, இஸ்லாமியர்கள் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நோன்பிருக்க வேண்டும்,எனவே இனி உண்ணாவிரதப் போராட்ட்டம் நடத்துவதில்லை எனமுடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு எடுக்கப்பட்ட முடிவை அன்றைக்கு தமுமுகவின் நிர்வாகக் குழுவின் இருந்த ஜவாஹிருல்லா, பாக்கர் போன்றவரகள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இவர்களெல்லாம் என்றைக்கு தங்களின் சுயநலனிற்காகவும்பதவி சுகத்திற்காகவும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்களோ அன்று முதல் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைக்கூடத் தூக்கி எறிந்து விட்டு செயல்பட ஆரம்பித்தார்கள்.

பெண் குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட மாமா பாக்கர், தன்னுடைய பாலியல் சேட்டைகளைத் தொடர்வதற்கும், அதில் மாட்டிக் கொண்டால் தன்னைக் காத்துக் கொள்வதற்கும்ஒரு அமைப்பு தேவை எனக் கருதியும்,இனிமேல் வருங்காலத்தில் தவறு செய்தால் தன்னை யாரும் வெளியேற்றிவிடக்கூடாதுஎன்ற உள்நோக்கத்திலும் தன்னையே நிரந்தரத்தலைவராகக் கொண்டு இந்திய நித்யானந்தா ஜமாத்தை டிரஸ்டாகப்பதிவு செய்தார். ஜமாஅத்தை துவக்கியவுடன் வீரன் அழகு முத்து கோனாரின் சிலையைத் திறந்து வைத்து மிகப்பெரிய தவ்ஹீத் பணியாற்றினார். இதை குறித்து தவ்ஹீத் ஜமாத்தினர் கேள்வி எழுப்ப நான் சிலை திறக்கவே போகவில்லை என்று சத்தியம் செய்தார் இந்த பொய்யன் மாமா.

அதன் பிறகு தன்னுடைய தலைவர் பதவியைப் பயன்படுத்தி பல விதமான லீலைகளில் ஈடுபட்டு மக்கள் மத்தில் கேவலப்பட்டு வரும் இந்த பொய்யன் கூட்டம் கடந்த 25/04/2011 புதன்கிழமை அன்று இன்னும் ஒரு அற்புதமான(?)கடமையை ஆற்றி வந்திருக்கின்றது.

யாதவ மகா சபை சார்பில் யாதவ மகா சபை சார்பில் கடந்த 25/04/2012 புதன் கிழமை அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு இந்திய நித்தி ஜமாத்தின் தலைவர் பாக்கரும், மாமா கட்சியின் மூத்த தலைவர் தானே புயல் புகழ் வாத்தியார் ஜவாஹிருல்லாவும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி விட்டு வந்திருக்கின்றனர்.ஒரு தவறை செய்தாலும் தவறுதான், அதை ஊக்குவித்தாலும்தவறு தான். எப்படியாவது ஒரு பதவியில் இருக்க வேன்டும் என்ற வெறியில் திரியும் பாக்கரும் ஜவாஹிருல்லாவும்எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு வந்திருப்பது அவர்களின் கட்சிக்குள்ளேயேபுயலைக் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே சென்னை டி நகரில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதமிழ் ஈழ அமைப்புக் கூட்டத்தில் மாமா பாக்கரும், தானே புயல் தலைவர் ஜவாஹிருல்லாவும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிவிட்டு வந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு அடிக்கப்பட்ட போஸ்டரில்விடுதலைப்புலி பிரபாகரனின் படத்தைப் போட்டு இவர்களின் பெயரைப் போட்டு போஸ்டரும் அடித்து அது நம் தளத்திலும் வெளியாகி இருந்தது.

இப்போது இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டதன் மூலம் தங்களுக்கு பதவி தான் முக்கியம் என இருவரும் நிரூபித்துள்ளார்கள்.இந்த செய்தியைப் பார்த்து விட்டு மாமா பாக்கர் நான் என்ன உண்ணாவிரதமா இருந்தேன், சும்மா தானே போய் பாத்துட்டு வந்தேன் என சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது.

-வாசகர்

4 Response to "உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட பாக்கர் யாதவ்"

 1. MOHIDEEN Says:

  யாதவ மகா சபை சார்பில் கடந்த 25/06/2012 புதன் கிழமை அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்படி உள்ளது இந்த DATE தவறாகும். 25.4.2012 என்று மாற்றவும். BY ரசூல்.

 2. THOWHEED Says:

  ungal mail id tharavum yousuftirupur@gmail.com

 3. பொய்யன் டிஜே Says:

  தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 4. பொய்யன் டிஜே Says:

  poyyantj@gmail.com

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை