சீட்டுகாக வேசம் போட்ட குண்டப்பா - தொடர் - 3

Tuesday, May 29, 2012 12:26 AM Posted by பொய்யன் டிஜே


பாக்கரும் ஹைதரும் திருடன்கள். ஜவாஹிருல்லா ஒரு லூசு என்றெல்லாம் சொல்லித் திரிந்து அதன் காரணமாக தமுமுகவில் இருந்து நீக்கப்பட்டவன் தான் குண்டப்பா எனும் ஃபழ்லுல் இலாஹி என்பவன்.

இதை ஆதாரத்தோடு இரண்டாம் தொடரில் நாம் தெளிவுபடுத்தினோம். அடுக்கடுக்கான கேள்விகளையும் கேட்டோம்.

முதல் தொடரில் நாம் வைத்த வாதங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாத குண்டப்பா இரண்டாம் தொடரில் நாம் வைத்த வாதங்ளுக்கும் பதில் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது.

இப்போது மூன்றாம் தொடருக்குள் நுழைவோம்.

தமுமுகவில் இருந்து பண மோசடி காரணமாக நீக்கப்பட்ட இவன் பீஜேயும் தவ்ஹீத் சகோதரர்களும் தமுமுகவில் இருந்து விலகிய உடன் பீஜேயையும் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்களையும் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்ததால் தமுமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

இவனைப் போல் வரைமுறை இல்லாமல் கண்டபடி தவ்ஹீத் ஜமாஅத்தைத் திட்டக்கூடியவர்கள் தமுமுகவுக்கும் தேவையாக இருந்தது. கொள்கை கோட்பாடுகளைக் காற்றில் பறக்க விட்ட தமுமுக பீஜேயைத் திட்டுவதன் மூலம் தவ்ஹீதுக்கு எதிரானவர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்று நினைத்து இவனையும் சேர்த்துக் கொண்டது.

ஒருவருக்கு எதிராக ஒருவர் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்ட இவர்கள் மானமிழந்து ஒன்று சேர்ந்தனர்.

ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யும் வழக்கமில்லாத குண்டப்பா ஆதாயம் அடைவதற்கான சந்தர்ப்பம் பொதுத் தேர்தல் வடிவில் வந்தது.

2006 சட்டமன்றத் தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. தேர்தலில் போட்டியிடாத தமுமுகவும் திமுக கூட்டனியில் இருந்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி முஸ்லிம் லீகுக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கியது. இந்த மூன்றில் ஒரு தொகுதி குண்டப்பாவின் சொந்த ஊரான மேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளையங்கோட்டை தொகுதியாகும்.

இவ்வாறு மூன்று தொகுதிகள் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் குண்டப்பாவின் கிரிமினல் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. உடனே தமுமுக தலைவர்களைத் தொடர்பு கொண்ட இவன் நாம் ஏன் ஆதாயம் இல்லாமல் திமுகவை ஆதரிக்க வேண்டும்? முஸ்லிம் லீகுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் பாளையங்கோட்டையை நாம் கேட்டு வாங்கினால் என்ன என்று ஆசை வார்த்தை காட்டினான். அப்படி வாங்கினால் என்னை வேட்பாளராக போடுங்கள். நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து ஜெயித்துக் காட்டுவேன். இந்தத் தொகுதியில் எனக்கு தனிப்பட்ட செல்வாக்கு வேறு உள்ளது என்றான். (இவனது செல்வாக்கு குறித்து பின்னர் அம்பலப்படுத்தப்படும்) நான் ஜெயித்தால் தமுமுக வுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் எனவும் தூபம் போட்டான்.

இவனது பேச்சைக் கேட்டு நம்பிய தமுமுக திமுக தலைமைக்கு இக்கோரிக்கையை வைத்தது. பாளையங்கோட்டையை எங்களுக்குத் தர வேண்டும் என்று கோரிய போது நீங்கள் அரசியல் கட்சி அல்ல; எனவே உங்களுக்கு தொகுதி கிடையாது என்று திமுக கூறி விட்டது. முஸ்லிம் லீக்கும் தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை தமுமுகவுக்குக் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டது.

இதன் பின்னரும் ஆசை அடங்காத இந்தக் குண்டப்பா வேறு வகையில் காய் நகர்த்தினான். அதாவது பாளையங்கோட்டையில் முஸ்லிம் லீகே போட்டியிடட்டும். ஆனால் முஸ்லிம் லீக் சார்பில் என்னை வேட்பளராக போட்டு தமுமுகவும் ஆதரிக்கட்டும் என்பது தான் இவனது அடுத்த காய் நகர்த்தல். இதையும் சரி கண்ட தமுமுக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திமுகவிடம் பேரம் பேசியது.

இதை திமுக ஏற்றுக் கொண்டது. முஸ்லிம் லீக்கும் பரிசீலிப்பதாக கூறியது.

உடனே இவனுக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு எல்லை இல்லாமல் போனது.

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் தமுமுக ஆதரவுடன் நான் போட்டி இடப்போகிறேன் என்று இவன் தனது பிளாஸ்பாட்டில் எழுதினான்.

அவன் எழுதியதை அப்படியே கீழே தருகிறோம்.

பாளையங்கோட்டைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
கண்ணியத்திற்குரியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நலம், நலம் பல சூழ்க.

சிறு வயதில் தி.மு.. தொண்டனாகவும் பிறகு .தி.மு.. பிரமுகனாகவும் இருந்தேன். மீனாட்சிபுரம் ரஹ்மத் நகராக மாறியது. அப்பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அதை விமர்சித்தார். அதனால் முஸ்லிம் லீக்கில் இணைந்தேன். 1987இல் மு.லீக்கின் அன்றைய தலைவர் .கா.. அப்துஸ்ஸமது துபை வந்தார். அப்பொழுது அடுத்து வரும் தேர்தலில் பாளையங்கோட்டைத் தொகுதியில் மு.லீக் சார்பில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். 1988இல் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் என்னை வேட்பாளராக முடிவு செய்து வலியுறுத்தினார்.

அப்பொழுது பி.ஜெ. அவர்களிடமும் ஷம்சுல் லுஹா அவர்களிடமும் இது பற்றி ஆலோசனை கேட்டேன். தேர்தலில் ஓட்டுப் போடுவதே ஹராம். எனவே போட்டி போடாதீர்கள் என்றார்கள். எனவே அரசியலை விட்டு முற்றிலுமாக விலகினேன். பிறகு பி.ஜெ. அவர்களே 1995க்குப் பிறகு அரசியலுக்கு வந்தார்கள். 1996 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் களப்பணி ஆற்றினார்கள். ஓட்டுக் கேட்டார்கள், ஓட்டுப் போட்டார்கள்.

2004 ஏப்ரல் ஏகத்துவத்தில் தேர்தலில் களப்பணி ஆற்றுவது ஹராம் என்பது போல் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் காட்டினார். தேர்தலில் களப்பணியாற்றினால் ஈமான் போய் விடும். எனவே பி.ஜெ.பிக்கு எதிராக உள்ள அணிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய போகக் கூடாது என்று எழுதினார்கள். இப்படி எழுதி ஈராண்டுகள் முடியவில்லை. இப்பொழுது தேர்தலில் களப்பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளார்கள். அதுவும் யாருக்கு?

டான்ஸ் ஆட என்ற பெயரால் வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்புவதை தொழிலாகக் கொண்டவருக்கு. (டான்ஸ் ஆட என்ற பெயரால் வரும் பெண்கள் விபச்சாரத்தில்தான் ஈடுபடுகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே) இவரது இந்த தொழிலை அடையாளம் காட்டி இவனெல்லாம் சமுதாயத் தலைவன் என்று பல முறை விமர்சித்தவர்தான் பி.ஜெ. இந்த தொழில் அதிபருக்குத்தான் சீட்டு வாங்கிக் கொடுத்து ஓட்டும் கேட்கப் போகிறார் பி.ஜெ. எனவே ஓட்டுப் போடுவது ஹராம்.. தேர்தலில் களப்பணியாற்றினால் ஈமான் போய் விடும். என்று மார்க்கத்தின் தீர்ப்பாக பி.ஜெ. சொன்னதெல்லாம் மார்க்கம் அல்ல. சந்தர்ப்ப வாதம் என்று விளங்கி விட்டோம்.

உமர்(ரலி) அவர்கள் ஆட்சியாளராக இருந்த போது கிறிஸ்தவ ஆலயம் சென்றார்கள். அங்குள்ள பாதிரிகளுடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் புநப்பட்டார்கள். பாதிரிகளோ அவர்கள் இடத்திலேயே தொழும்படி சொன்னார்கள். நான் இன்று தொழுது விடுவேன். நாளை எங்கள் சமுதாயம் இது உமர் தொழுத இடம் என்று உரிமை கொண்டாட வந்து விடக் கூடும் என அஞ்சுகிறேன் என்றார்கள். இந்த சம்பவத்தின் மூலம் ஒரு ஆட்சியாளன் என்ற முறையில் உமர்(ரலி) கிறிஸ்தவ ஆலயம் சென்றதை அறிகிறோம்.

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சி புரிந்தார்கள். அப்பொழுது அவர்களது ஆட்சியின் கீழ் யூதர்களும் கிறிஸ்துவர்களும் இருந்துள்ளார்கள். ஹரம் எல்கைக்குள் வர மட்டும்தான் அவர்களுக்கு தடை விதித்தார்களே தவிர அவர்களின் உரிமைகளை மறுக்கவில்லை. இஸ்லாத்தை பிரச்சாரத்தின் மூலம்தான் அவர்களுக்கு எத்தி வைத்தார்கள். எனவே மார்க்கத்தில் உள்ளதுதான் அரசியல். இஸ்லாத்தின் ஒரு அங்கமே அரசியல் என்று தெளிவு பெற்று விட்டோம். அரசியல் சாக்கடை என எல்லாரும் ஒதுங்கினால் அதை என்றுதான் துப்புரவு செய்வது.

இஸ்லாமிய பிரச்சாரங்களில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் என கூறுகிறார்கள். இதன் மூலம் இஸ்லாம் களங்கப்பட்டுள்ளது என்றுதான் கூறுகிறார்கள். இஸ்லாத்தில் நுழைந்து விட்ட சடங்கு சம்பிரதாயங்களை களையத்தான் பாடுபடுகிறோமே தவிர இஸ்லாத்தை விட்டே ஒதுங்கவில்லை. அது போல்தான் அரசியலும். அரசியலை விட்டே ஒதுங்கியதால்தான் நம் சமுதாயம் உரிமை இழந்ததாக ஆகி விட்டது. இதை கருத்தில் கொண்டு வரக்கூடிய சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளேன்.

தி.மு.. கூட்டணியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக .மு.மு..வின் பேராதரவுடன் பாளையங்கோட்டைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன். எனது முயற்சி வெற்றி பெற துஆச் செய்யுங்கள். பாளைத் தொகுதியில் உள்ள உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க கூறுங்கள். வஸ்ஸலாம்.

அன்புடன்:
கா.. முஹம்மது பழுலுல் இலாஹி.

55. சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம்,திருநெல்வேலி. 627005.
fazlulilahi@gmail.com, mdfazlulilahi@hotmail.com, fazlulelahee@yahoo.com

http://mdfazlulilahi.blogspot.in/search?updated-min=2006-01-01T00:00:00-08:00&updated-max=2007-01-01T00:00:00-08:00&max-results=5

நன்றாக இதை வாசியுங்கள். குறிப்பாக கடைசி பாராவை வாசியுங்கள்

தி.மு.. கூட்டணியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக .மு.மு..வின் பேராதரவுடன் பாளையங்கோட்டைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன். எனது முயற்சி வெற்றி பெற துஆச் செய்யுங்கள். பாளைத் தொகுதியில் உள்ள உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க கூறுங்கள். வஸ்ஸலாம்.

என்ற பாரா ஒன்று போதும் இவனது அயோக்கியத்தனத்தை அறிந்து கொள்ள.

இவன் முஸ்லிம் லீக்கில் உறுப்பினர் இல்லை. அதன் ஆதரவாளனும் இல்லை. அப்படி இருந்தும் சீட் கிடைக்கும் என்றால் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடத் தாயார் என்று கூறுகிறான். அடுத்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் இவன் கூறுகிறான்.

இவன் இப்படி பரப்பியதும் முஸ்லிம் லீக் கடும் கோபம் கொண்டது. நாம் பரிசீலிபிப்பதாகத் தானே சொன்னோம். அதற்குள் இவன் தன்னை முஸ்லிம் லீக் வேட்பாளராக அறிவித்துக் கொண்டானே என்று கருதி இவனை முஸ்லிம் லீக் சார்பில் நிறுத்த முடியாது என்று சொல்லி இவன் முகத்திலும் தமுமுக முகத்திலும் கரியைப் பூசியது.

இதன் பின்னர் இவன் முஸ்லிம் லீக் பற்றியும் உதய சூரியன் சின்னத்தில் போட்டி இடுவது பற்றியும் இந்த அயோக்கியன் சந்தர்ப்பவாதி எழுதியதைக் காணுங்கள். இதில் இருந்து இவனுக்கு நிகரான ஒரு அயோக்கியன் உலகில் இருக்க முடியாது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

இதோ அவன் சீட் கிடைக்கவில்லை என்ற உடன் எழுதியதைப் பாருங்கள்

நாட்டிலே எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ பதவிகளும் காத்து இருக்கின்றன. அவற்றையெல்லாம் உதறி தள்ளி விட்டு ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பில் ஒருவர் உறுப்பினாராக இருக்கிறார் என்றால் என்ன காரணம். லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்ன முஸ்லிம் நாம். எனவே நாம் தலைவராக ஏற்கக் கூடியவரும் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமா சொன்ன முஸ்லிமாக இருக்க வேண்டும். இந்த உயரிய எண்ணத்திலும் ஆயத்து ஹதீஸ்களின்படியும்தான் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பில் போய் உறுப்பினாராக இருக்கிறார்.

அந்த முஸ்லிம் அமைப்பின் தலைவர் வேறு ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டி இடுவதாக இருந்தால் அவர் செய்ய வேண்டிய முதல் பணியே அவரது தரத்தை தாழ்த்துவதுதான். முஸ்லிம் அமைப்பின் தலைவராக இருப்பவர் சின்னம் தரும் கட்சியில் சாதாரண உறுப்பினராக ஆக வேண்டும். இது தரம் தாழ்ந்த செயலா இல்லையா? இது சின்ன விஷயமா?

இரட்டை இலையில் நிற்பதாக இருந்தால் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்னவர் காஞ்சித் தலைவனின் புகழ்பாடி புரட்சித் தலைவர் வழி நடப்போம் என்றும், அல்லாஹு அக்பர் என்றவர் அண்ணா நாமம் வாழ்க என்றும், இஸ்லாமிய(யிஸம்)கொள்கை ஓங்குக என்றவர் அண்ணாயிஸம் ஓங்குக என்றும், எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) என்றவர் எங்கள் தலைவர் புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்றுள்ள .தி.மு.. கட்சியின் உறுப்பினர் பாரத்தில் கையெழுத்திட வேண்டும். சின்னப் பிரச்சனையா?இது சின்ன விஷயமா?

உதய சூரியன் சின்னத்தில் நிற்பதாக இருந்தால் வங்கக் கடலோரம் துகில் கொள்ளும் அண்ணாவை தொழுதிடுவோம். கலைஞர் இல்லம் இருக்கும் கேபாபலாபுரத்தை நோக்கி வணங்கிடுவோம் என்றுள்ள தி.மு.. கட்சியின் உறுப்பினர் பாரத்தில் கையெழுத்திட வேண்டும். இது சின்னப் பிரச்சனையா? இது சின்ன விஷயமா?

உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று தீர்ப்பு பெற்றது எப்படி?

மு.லீக் தலைவர் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று ஹை கோர்ட் தீர்ப்புதான் உள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போன வழக்கு நிலுவையில்தான் உள்ளது. மு.லீக் தலைவர் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று ஹை கோர்ட் தீர்ப்பு பெற்றது எப்படி?

தமிழகத்தில் .யூ.முஸ்லிம் லீக் என்பது சமுதாய தொண்டு நிறுவனம்தான். தமிழகத்தில் .யூ.முஸ்லிம் லீக் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி அல்ல. காதர் மைதீன் .யூ.முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சிக்கு தலைவர் அல்ல. .யூ.முஸ்லிம் லீக் என்ற சமுதாய தொண்டு நிறுவனத்தின் தலைவர்தான்.

மு.கருணாநிதியை தலைவராகக் கொண்ட தி.மு.. என்ற அரசியல் கட்சிதான் காதர் மைதீன் உறுப்பினராக இருக்கும் அரசில் கட்சி. இவ்வாறு கூறிதான் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று கோர்ட் தீர்ப்பு வாங்கி உள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் என்ற புகழ் கூறி உரையை துவங்க வேண்டிய காதர் மைதீன் கோபலாபுரத்திலிருக்கும் கலைஞர் புகழ் பாடி பாராளுமன்ற உரையை துவங்கினார். இதை சி.எம்.என். சலீம் வெளியிட்ட காதர் மைதீன் பாராளுமன்ற உரை சி.டி.யில் பார்க்கலாம்.

தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற அரசியல் அமைப்பாக முஸ்லிம் சமுதாய அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். இந்த நோக்கில்தான் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் ரத்த வியர்வையில் துவங்கப்பட்டது .மு.மு..வின் மனித நேய மக்கள் கட்சி. தேர்தல் ஆணைய அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. இரட்டை இலையிலோ கருணாநிதியின் எச்சி இலையிலோ நின்றிருந்தால் ஜவாஹிருல்லாஹ்வும் ஹைதர் அலியும் எம்.பி. ஆகி விடலாம் சமுதாயம் எம்பியாக முடியாது. எனவே சின்னம் ஒரு சின்னப் பிரச்சனையா? சின்ன விஷயமா? சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

fromA
இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?
////
இரட்டை இலையில் நிற்பதாக இருந்தால் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்னவர் காஞ்சித் தலைவனின் புகழ்பாடி புரட்சித் தலைவர் வழி நடப்போம் என்றும், அல்லாஹு அக்பர் என்றவர் அண்ணா நாமம் வாழ்க என்றும், இஸ்லாமிய(யிஸம்)கொள்கை ஓங்குக என்றவர் அண்ணாயிஸம் ஓங்குக என்றும், எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) என்றவர் எங்கள் தலைவர் புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்றுள்ள .தி.மு.. கட்சியின் உறுப்பினர் பாரத்தில் கையெழுத்திட வேண்டும். சின்னப் பிரச்சனையா?இது சின்ன விஷயமா?

//////
தாங்கள் சொல்வது சரி தான். இன்னொன்று தெரியுமா ? தனி சின்னத்தில் போட்டியிட்டாலும் முஸ்லீம் அமைப்பின் சார்பாக வென்றாலும் பாராளுமன்றத்தில் எம்.பி யாக பதவியேற்கும் போது அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு நடப்பேன் என்று தான் பைஅத் (உறுதிமொழி) கொடுக்க முடியுமே தவிர குரான் - ஹதீஸ் படி நடப்பேன் என கூற முடியாது? இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?

!fromAsu நியாயமான நச் கேள்வி

http://mdfazlulilahi.blogspot.in/search?updated-min=2009-01-01T00:00:00-08:00&updated-max=2010-01-01T00:00:00-08:00&max-results=39

இவன் சீட் கிடைக்கும் என்றால் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவானாம். சீட் கிடைக்காவிட்டால் அது ஈமனை இழக்கும் செயல் என்பானாம். காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றதன் மூலம் கருணாநிதியைக் கடவுளாக்கிவிட்டாராம். ஆனால் இவனுக்கு சீட் கிடைத்தால் இவனும் காதார் மைதீன் செய்த அதே வேலையைச் செய்வானாம்.

ஏண்டா மானம் கெட்டவனே இந்தப் பொழைப்பு பொழைப்பதற்கு மாமா வேலை பார்க்கலாம் என்று இவனைப் பார்த்து காரித்துப்ப தோன்றுகிறதா?

இவனது மேற்கண்ட இரண்டு ஆக்கங்களை(?)யும் மீண்டும் ஒரு முறை கருத்து ஊன்றிப் படியுங்கள். இவனுக்கு நிகரான ஒரு யோக்கியனை நீங்கள் பார்த்தே இருக்க முடியாது என்று உங்களுக்கு தோன்றும்

தேர்தல் கூத்து இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

0 Response to "சீட்டுகாக வேசம் போட்ட குண்டப்பா - தொடர் - 3"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை