இரும்பு மங்கையாம் அம்மா ஜெயலலிதா ! சொல்கிறார் ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லா.

Thursday, May 17, 2012 1:55 AM Posted by பொய்யன் டிஜே

இரும்பு மங்கையாம் அம்மா ஜெயலலிதா ! சொல்கிறார் ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லா.

தமிழக அரசியலில் அன்று முதல் இன்று வரை மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல்வாதிகள் உருவானார்களோ இல்லையோ தலைவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் அரசியல்வாதிகள் நிறையவே உருவாகியிருக்கிறார்கள்.

இந்த அரசியல் சாக்கடையில் சென்று சாக்கடைப் பன்றிகளாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத் தான் எந்தக் காரணம் கொண்டும் நேரடி அரசியலில் இறங்கக் கூடாது. இறங்கவும் மாட்டோம் என்ற ஒரு நிலைபாட்டை ததஜ வின் இன்னால் நிர்வாகிகளும் தமுமுக வை உருவாக்கிய நிறுவன கர்த்தாக்களும் அன்றே எடுத்தார்கள்.

மக்கள் கூட்டத்தைக் கண்டு மயங்கிய தமுமுகவின் இன்னால் மமாக்களோ நேரடி அரசியலில் நாங்கள் இறங்கி சாக்கடையை துப்பரவு செய்யப் போகிறோம் என்றார்கள். மாற்றம் காணப் போகிறோம் என்று சொன்னவர்கள் மாறியே போனார்கள் என்பதுதான் உண்மை நிலை.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தைத் தாக்கிய தானே புயல் தொடர்பாக இவர் அம்மாவைப் பாராட்டி அடித்த ஜால்ராதான் இந்த வருடத்தின் மிக உயர்ந்த ஜால்ரா விருதைப் பெற்றுக் கொண்டது. தானே புயலுக்கு அம்மா செய்யும் உதவிகளைப் பார்க்கும் போது மற்ற மாவட்டங்களில் வாழும் மக்கள் தங்கள் மாவட்டத்திற்கும் புயல் வராதா என்று கவலைப்படுமளவுக்கு இருந்ததாம் அம்மா செய்த உதவிகள்.

இப்படிப் பேசியவரின் ஜால்ராவை உணர்வுப் பத்திரிக்கை பொது மக்களுக்குப் படம்பிடித்துக் காட்டிவிட்டது. அதைப் பற்றி இவர் ஓரிடத்தில் பேசும் போது தவறுதலாக சட்டமன்றத்தில் இப்படி பேசிவிட்டேன் அதைப் பிடித்துக் கொண்டார்கள். என்றார்.


ஜால்ரா மன்னன் ஜவாஹிருல்லாஹ்வின் தானே புயல் ஜால்ராவைப் பார்க்க இந்த லிங்கை சொடுக்கவும்.

http://onlinepj.com/unarvuweekly/thanepuyal_tmmk/

தவறுதலாகப் பேசுபவன் ஜால்ரா அடிக்க மாட்டான். ஆனால் இவரோ கீழ்ப்பாக்கத்தில் இருப்பவன் போலல்லவா பேசினார்?

பாவம் அம்மாவின் பிள்ளை. அம்மாவை ஆராட்டிப் பார்த்து தேரேற்றலாம் என்று நினைக்கிறது.

ஆனால் எந்த நேரத்தில் இந்த அம்மா புளிய மரம் ஏறும் என்பது பிள்ளைக்குத் தெரியாது போல.

ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லாஹ்வின் தற்போதைய ஜால்ரா இதுதான்.

அதிமுக அரசு அமைக்கப்பட்டு ஒரு வருடம் முழுமையடைந்ததற்காக அனைத்துக் கட்சியினரும் சட்டசபையில் அம்மாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாலை அணிவித்தார்களாம்.

இதில் மானமிழந்த மமகட்சியின் சார்பாக ஜால்ரா மன்னர் பேசினார். அவர் பேசும் போது அடித்த ஜால்ராவைப் பார்க்கும் போது அதிமுக காரர்களையே மிஞ்சும் அளவுக்கு சட்டசபையில் ஜால்ரா அடிக்கும் ஒருவர் உண்டென்றால் அந்த அனாமதேய பெருமையும், பேரும், புகழும் ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லா வைத்தான் சேரும்.

இதோ அம்மாவைப் பற்றியும் அம்மாவின் ஆட்சியைப் பற்றியும் மமகவின் ஜால்ராவைப் பாருங்கள்.

டி.என்.பி.எஸ்.சி., சாதனை ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி: கடந்த தி.மு.க., ஆட்சியில் மக்கள் பல சங்கடங்களை அனுபவித்து வந்தனர். இப்போது நல்லாட்சி நடக்கிறது. அரசின் சாதனைகள் மேலும் நான்கு ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு சிறந்த நிர்வாகியை நியமித்து, தேர்வுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப் படுகின்றன. நேர்முகத் தேர்வு கூட கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன் பணி நியமனங்கள் நடப்பது, அரசின் மிகப் பெரிய சாதனை.

இரும்பு மங்கை: வக்பு நிதிக்கு, மூன்று கோடி ரூபாய் அளித்ததைப் பாராட்டுகிறேன். இந்துக்களுக்கும் புனித யாத்திரை செல்ல மானியம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மதச்சார்பற்ற அரசாக, இந்தியாவுக்கும் வழிகாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் இரும்பு மங்கையாக முதல்வர் திகழ்கிறார். 15 ஆயிரம் கோடி வருவாய் வரும் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும். (தினமலர் 16.05.2012)

புயல் விஷயத்தில் அம்மா, அம்மா என்று ஜால்ரா அடித்த பிள்ளை இப்போது இரும்பு மங்கை முழு இந்திய அரசுக்கே வழிகாட்டும் அரசு என்றெல்லாம் புகழ ஆரம்பித்து விட்டது.

சென்ற திமுக கூட்டணியில் முழு இந்தியாவுக்கும் வழிகாட்டும் மிகப்பெரிய வழிகாட்டியாக அய்யா கருணாநிதி இருந்தார். இந்த தடவை அதிமுக கூட்டணி என்பதினால் அய்யாவின் இடத்தை அம்மாவுக்குக் கொடுத்து விட்டார்கள் அம்மாவின் பிள்ளைகளான மம கட்சியினர்.

அது மட்டுமல்லாமல் இந்துக்களுக்கும் புனித யாத்திரை (?) செல்வதற்கு இந்த அரசு மானியம் வழங்கியதாம். இந்துக்களுக்கு புனித யாத்திரைக்கு மானியம் வழங்கிய உங்கள் அன்பு அம்மா முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பற்றி வாய் திறக்கவில்லையே?

இதைப் பற்றி நீங்களாவது அம்மாவின் ஆட்சிக்காக ஜால்ரா அடித்த நேரத்தில் அம்மாவிடம் வின்னப்பித்தீர்களா?

தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் இரும்பு மங்கையாக முதல்வர் திகழ்கிறார் என்கிறீர்களே? தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் எந்த உரிமையை உங்கள் அம்மா காத்தார். கொஞ்சம் பட்டியலிட முடியுமா?

முஸ்லிம்களிடம் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு அதில் இருந்து இருபதாயிரம் ரூபாய் உணவுக்காக தருகிறதே தவிர மானியமாக அரசு கஜானாவில் இருந்து தரவில்லை. இதை உணர்வு இதழ் அம்பலமாக்கியுள்ளது.

பார்க்க http://onlinepj.com/unarvuweekly/haj_maniyathi_niruthuvathu_sariya/

அப்படி இருக்கும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் மானியம் கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு இல்லாமல் இருந்தது போலவும் ஜெயலலிதா நடத்தும் நாடகததை அறிவும் மானமும் உள்ள முஸ்லிம் எப்படி வரவேற்பான்? எங்களுக்கு மானியமே தராமல் இருக்கும் போது மற்ற இரு சமுதாயத்துக்கு மட்டும் மானியம் வழங்குவது பாரபட்சம் என்று சுட்டிக்காட்ட வேண்டாமா? மத்திய அரசின் மோசடி மானிய்மாக இல்லாமல் நிஜமாகவே மாநில அரசின் நிதியில் இருந்து ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கூறியிருக்க வேண்டாமா? இதை மமகட்சி உறுப்பினர் பாராட்டியதன் மூலம் மத்திய அரசு ஹஜ் பயுணிகளுக்கு மானியம் வழங்குவதாகச் சொல்லும் பொய்யை நியாயப்படுத்தி சமுதாயத்துக்கு மிகப் பெரும் துரோகம் செய்ததுடன் சங்பரிவாரத்துக்கு பாயிண்ட் எடுத்து கொடுக்கிறார்.

முஸ்லிம்களின் உயிர் வாழும் உரிமையாக நாம் நினைக்கின்ற இட ஒதுக்கீடு தொடர்பாக வாய் திறக்கவில்லையே அது ஏன்?

முழு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும் உங்கள் அம்மா பாபர் மஸ்ஜித் விஷயத்தில் என்ன செய்தார்? வாய் திறந்தாரா? அவர் வாய் திறக்கிறாறோ இல்லையோ நீங்கள் நன்றாக வாயில் வடை சுடுகிறீர்கள் வாத்தியாரே!

பாபர் பள்ளியை உடைத்த நர மோடியுடன் கூட்டனி வைத்துக் கொண்டது மாத்திரமா? இந்தியாவுக்கே வழிகாட்டும் அம்மாவுக்கு இப்போது வழிகாட்டுபவர் இந்த நர மோடியும், துக்ளக் சோ வும் தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?

ஆடிய ஆட்டம் என்ன? ஓடிய ஓட்டம் என்ன?

மாற்றம் காணப் போகிறோம். அரசியல் சாக்கடையைத் தூய்மைப்படுத்தப் போகிறோம் என்றெல்லாம் கூக்குரலிட்டீர்களே சட்டசபையில் அம்மாவுக்கு ஜால்ரா அடிப்பதற்குத் தானா?

பொது மக்களே!

இனியும் இந்த அயோக்கியர்களை நம்பி ஏமாறப் போகிறீர்களா?

இவர்கள் பாராட்டவோ கண்டிக்கவோ செய்தால் அதை இயக்கத்தின் சார்பில் செய்கிறார்களா? கண்டபடி செய்கிறார்களா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மமகவில் வாத்தியார் முன்னால் நிர்வாகி ஆகிவிட்டார். இப்போது நிர்வாகியாக இருப்பவ்ர் சொல்வது தான் மமகவின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும்.

கீழே மமகட்சியின் பொதுச்செயலாளராக உள்ள அன்சாரி பேசும் பேசும் வீடியோ உள்ளது அதில் இரண்டாவது பாகத்தில் 06வது நிமிடம் 15வது செக்கன்டில் இருந்து 30 செக்கன்ட் வரை அதிமுக, திமுக தவிர்த்த 03வதுஅணியின் சிறப்பான ஆட்சி வேண்டும் என்றும் அதிமுக வேண்டாம் என்றும் சொல்கிறார்.

ஆனால் ஜவாஹிருல்லாவோ அதிமுக தான் சிறந்த ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சி என்று ஜால்ரா அடித்துள்ளார் இதில் எது மமகட்சியின் கருத்து என்பதை மமக தான் சொல்ல வேண்டும். அதிகாரத்தில் இல்லாதவர் தனது சுயநலனுக்காக இப்படிப் பேசி இருந்தால் அதிகாரப்பூர்வமாக இது குறித்து விளக்கம் அளிக்கும் கடமை மமகட்சிக்கு உண்டு

http://tmmk.info/index.php?option=com_content&view=article&id=1980:2012-04-23-12-37-36&catid=71:politcal-video&Itemid=167

0 Response to "இரும்பு மங்கையாம் அம்மா ஜெயலலிதா ! சொல்கிறார் ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லா."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை