முனாபிக் பட்டம் கொடுக்கலாமா?

Tuesday, May 22, 2012 11:41 AM Posted by பொய்யன் டிஜே
முனாபிக் பட்டம் கொடுக்கலாமா?

ஒருவரை முனாபிக் என்று சொல்லலாமா என்ற வாதம் இப்போது பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது. உணர்வு இதழில் பீஜே எழுதிய பதிலில் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்தே இதற்குக் காரணமாக உள்ளது. பீஜே எழுதிய அந்தப் பதிலில் கீழ்க்கண்ட வாசகம் தான் விமர்சனத்தின் மையக் கருத்தாக உள்ளது.

ஆனால் இவர்களுக்கும் தோல்வி தான் கிடைத்து வருகிறது. என்ன தான் மறைக்க முயன்றாலும் அவர்களின் கலரை வெளிப்படுத்தும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆள் பிடிக்கும் போதும், அது போன்ற பிரசுரங்களை வெளியிடும் போதும் இவர்கள் முனாஃபிக்குகள் என்பது வெளிச்சமாகி விடுகிறது. மக்களும் இவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
முழு பதிலையும் வாசிக்க http://onlinepj.com/unarvuweekly/nadunilaivathikal_patri/

பீஜே உணர்வில் என்ன எழுதினாரோ அதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் உண்மைப்படுத்துவதாகவே இந்த விமர்சனங்கள் உள்ளன. பீஜே சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என்பதை இந்த விமர்சனங்கள் மெய்யாக்குகின்றன. பீஜே என்ன எழுதியது சரியா என்பதற்குள் செல்வதற்கு முன்னால் இந்த விமர்சகர்களின் நடுநிலையை நாம் ஆராய வேண்டியுள்ளது.

ஒரு நபரை முனாபிக் என்று சொல்ல இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று இவர்கள் கேட்கிறார்கள். ஒருவரை முனாபிக் என்று சொல்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதாலும் அத்தகைய ஒரு சொல்லை பீஜே பயன்படுத்தியது கண்டு கொதித்து எழுந்ததாலும் இப்படி விமர்சித்தால் அதை ஓரளவுக்கு ஏற்கலாம். (பீஜே ஒரு தனி நபரை முனாபிக் என்று எழுதவில்லை. ஒரு செயலைச் செய்பவனைத் தான் முனாபிக் என்று எழுதினார். இது பற்றி இறுதியில் விளக்குகிறோம்)

ஆனால் குறிப்பிட்ட ஒரு நபரைப் பற்றி முனாபிக் என்று சொல்வது இதை விட பயங்கரமானது. இப்போது நீங்கள் குழுமங்களில் தேடிப் பாருங்கள். கடந்த மாதம் வரை பல வருடங்களாக ”பீஜே என்பவன் முனாபிக்’ என்று பீஜே பெயரைக் குறிப்பிட்டு தமுமுகவின் சார்பு பிளாக்பாஸ்ட்களிலும் பாக்கருக்கு சார்பாக நடத்தப்படும் பிளாக்ஸ்பாட்டுகளிலும் பல ஆக்கங்கள் எழுதப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன. முனாபிக் என்பதை விட கொடிய வார்த்தையான ’பீஜே தஜ்ஜால்’ என்றும் எழுதி பரப்பப்பட்டு வந்துள்ளது. மேலும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் முனாபிக்குகள் என்றும் எழுதப்பட்டு பரப்பப்பட்ட ஆக்கங்களும் உள்ளன.

முனாபிக் என்று ஒருவனைச் சொல்லலாமா என்று இப்போது எழுதும் இவர்கள் இதற்கு முன்னர் பீஜே என்ற தனி நபர் பற்றியும் தவ்ஹீத் ஜமாஅத் முக்கிய பிரமுகர்கள் பற்றியும் தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தினர் பற்றியும் முனாபிக் என்று எழுதப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அப்போது இவர்கள் பிறந்திருக்கவில்லையா?

பித்னா பண்ணுவதையே முழுநேர வேலையாகக் கொண்ட இவர்கள் அதைப் பார்க்கவில்லை என்று சொல்ல முடியுமா?

முனாபிக் என்று சொல்வது தான் பிரச்சனை என்று இவர்கள் கருதியிருந்தால் அப்போது இது போல் வாதப்பிரதி வாதங்களைச் செய்தார்களா? இப்போது கேட்கும் இந்தக் கேள்வியைக் கேட்டார்களா?

அப்போது எந்தச் சலனமும் இல்லாமல் அதைப் பரப்பிக் கொண்டும் பார்த்து ரசித்துக் கொண்டும் இருந்தார்களா இல்லையா?

பீஜே வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். நடுநிலை எனக் கூறுவோர் பெரும்பாலும் வேடதாரிகள் என்று பீஜே சொன்னபடி இவர்களின் நடத்தை அமைந்துள்ளது இவ்வளவு அப்பட்டமாக தெரிகின்றதே?

இப்போது முனாபிக் என்று ஒருவரை சொல்லலாமா என்று எழுதும் இவர்களில் ஒருவராவது இதற்கு முன்னர் ”இதோ பீஜேயை மற்றவர்கள் முனாபிக் என்று சொன்ன போதும் நான் விமர்சித்தேன்’’ என்று சொல்வார்களா? சொல்ல முடியாது.

ஏனெனில் பீஜே சொன்னபடி இவர்கள் நடு நிலையாளர்கள். பீஜேயை எவன் முனாபிக் என்று சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல. இப்போது எடுத்துக் காட்டும் ஹதீஸ்கள் பீஜேயையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் முனாபிக் என்று முழுக்கட்டுரைகள் எழுதும் போது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

பீஜேயை முனாபிக் என்று எழுதியதைப் பார்த்து ரசித்துக் கொண்டும் பரப்பிக் கொண்டும் திரிந்தார்களா? இல்லையா?

எவ்வளவு அழகாக பீஜே இவர்களை மதிப்பிட்டிருக்கிறார்! அவர் எழுதிய மை உலரும் முன்னர் ஆம் நாங்கள் நடிக்கும் நயவஞ்சகர்கள் தான் என்பதை எவ்வளவு அவசரமாக நிரூபிக்கிறார்கள்!

சரி பீஜே எழுதியது என்ன?

ஆனால் இவர்களுக்கும் தோல்வி தான் கிடைத்து வருகிறது. என்ன தான் மறைக்க முயன்றாலும் அவர்களின் கலரை வெளிப்படுத்தும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆள் பிடிக்கும் போதும், அது போன்ற பிரசுரங்களை வெளியிடும் போதும் இவர்கள் முனாஃபிக்குகள் என்பது வெளிச்சமாகி விடுகிறது. மக்களும் இவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

இது போன்ற நடுநிலையான வஞ்சகர்களுக்காக இல்லாவிட்டாலும் இதை நம்பி ஏமாந்து போகும் மக்களுக்காக இதை நாம் தெளிவுபடுத்துகிறோம். முனாபிக் என்ற சொல் உள்ளத்தில் காபிராக இருந்து கொண்டு வெளியில் முஸ்லிமாக நடிப்பவனுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாம் வந்த பின்னர் இந்தச் சொல் இந்தப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்னரும் இச்சொல் வழக்கில் இருந்தது. யாரெல்லாம் நடிக்கிறார்களோ இரட்டை அளவுகோல் கொண்டு அளக்கிறார்களோ அது போல் வேஷம் போடுவோர் முனாபிக் எனப்பட்டனர்.

அந்தச் சொல்லைத் தான் ஈமான் இல்லாமல் முஸ்லிமாக நடிக்கும் நபர்களுக்கும் இஸ்லாம் பயன்படுத்தியது. அந்த அர்த்தத்தில் ஒருவரை முனாபிக் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. ஏனெனில் ஒருவனது உள்ளத்தில் ஈமான் உள்ளதா என்று யாராலும் அறிய முடியாது.

ஆனால் இதே சொல் நடிப்பவன் என்ற பொருளிலும் ஆளுக்கு ஏற்றவாறு நியாயம் பேசுபவன் என்ற அகராதிப் பொருளிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஒருவரது இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வரும் போதும் அம்பலமாகும் போதும் இந்த அகராதி அர்த்தத்தில் அவனை முனாபிக் என்று சொல்லலாமா என்றால் தாரளமாகப் பயன்படுத்தலாம்.

பீஜே எழுத்தில் எழுதி விட்டதால் இதைப் பரவலாக எடுத்துக் காட்டுகிறார்கள். ஆனால் ஒருவரைப் பற்றி பேசும் சபைகளில் இவன் சரியான முனாபிக் என்ற சொல்லை பலரும் இந்தக் கருத்தில் தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பொருளில் ஒருவரை முனாபிக் இரட்டை வேடம் போடுபவன் என்று சொல்ல ஆதாரம் உள்ளது.

صحيح البخاري (2/ 942) ( من يعذرني من رجل بلغني أذاه في أهلي فوالله ما علمت على أهلي إلا خيرا وقد ذكروا رجلا ما علمت عليه إلا خيرا وما كان يدخل على أهلي إلا معي ) . فقام سعد بن معاذ فقال يا رسول الله أنا والله أعذرك منه إن كان من الأوس ضربنا عنقه وإن كان من إخواننا من الخزرج أمرتنا ففعلنا فيه أمرك . فقام سعد ابن عبادة وهو سيد الخزرج وكان قبل ذلك رجلا صالحا ولكن احتملته الحمية فقال كذبت لعمر الله لا تقتله ولا تقدر على ذلك . فقام أسيد بن الحضير فقال كذبت لعمر الله والله لتقتلنه فإنك منافق تجادل عن المنافقين . فثار الحيان الأوس والخزرج حتى هموا ورسول الله صلى الله عليه و سلم على المنبر فنزل فخفضهم حتى سكتوا وسك ச அத் பின் உபாதா ரலி அவர்களை நோக்கி நீர் முனாபிக் ஆவீர். முனாபிக்குகள் சார்பாக பேசுகிறீர் என்று நபிகள் நாயகத்தின் முன்னிலையில் கூறினார். அந்த வாசகத்தைச் சொன்னதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. இது புகாரியில் நீண்ட ஹதீஸில் ஒரு பகுதியாகும்.

பார்க்க புகாரி 4141, 4750

ஒருவர் இரண்டு நிலை எடுப்பதாக இன்னொருவர் கருதும் போது இரட்டை வேடம் போடுபவர் என்ற பொருளில் இவ்வாறு பயன்படுத்தியதால் அந்த வார்த்தைக்காக அல்லாஹ்வின் தூதர் கண்டிக்கவில்லை. ஈமான் இல்லாதவர் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையைச் சொன்ன சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தையைச் சொல்லக் கூடாது என்று தடுத்துள்ளார்கள்.

4274 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும் மிக்தாத் பின் அஸ்வத் அவர்களையும், நீங்கள் ரவ்ளத்து காக்' எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந் தோடின. இறுதியில், நாங்கள் ரவ்ளாஎனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), கடிதத்தை வெளியே எடு என்று கூறினோம். அவள், என்னிடம் கடிதம் எதுவுமில்லை என்று சொன்னாள். நாங்கள், ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம் என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்கா வாசிகளான இணைவைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாத்திபே! என்ன இது?என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டா ரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணைவைப்பவர்கள் கேட்டுக் கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உங்களிடம் உண்மை பேசினார் என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உங்களுக் கென்ன தெரியும்? ஒரு வேளை, அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.அப்போது அல்லாஹ் பின்வரும் (60வது) அத்தியாயத்தை அருளினான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரை நண்பர்களாக எடுத்துக் கொண்டு, நட்பின் காரணத்தினால் (உங்களின் இரகசியங்களை) அவர்களுடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம்! அவர்கள், உங்களிடம் வந்துள்ள சத்திய(வேத)த்தை மறுத்து விட்டவர்கள்......(60:1)

புஹாரி 4274

இந்த ஹதீஸில் ஈமான் உள்ள ஒரு தோழர் தனது சொத்தைப் பாதுகாப்பதற்காக மக்காவின் ரகசியங்களை காபிர்களுக்கு அனுப்பினார். அவர் ஈமான் உள்ளவர் தான். பத்ரு போரில் பங்கெடுத்தவர் தான். ஈமானை இழந்தவர் அல்ல. ஆனாலும் அவரை முனாபிக் (நயவஞ்சகன்) என்று உமர் (ரலி) கூறியது இரண்டு நிலை எடுத்தவர் என்ற பொருளில் தானே தவிர ஈமானே இல்லாதவர் என்ற அர்த்தத்தில் இல்லை.

அவர் செய்த தவறு அல்லாஹ் மன்னிக்கக் கூடிய தவறு தான் என்று நபிகள் நாயகம் விளக்கம் தருகிறார்கள். முனாபிக் என்ற வார்த்தையை எப்படிச் சொல்ல்லாம் என்று கண்டிக்கவில்லை. ஏனெனில் அகராதி பொருளில் சொல்லப்பட்ட வார்த்தை என்பது தான் இதற்குக் காரணம்.

இது போல் எராளமான சான்றுகள் உள்ளன. இப்போது பீஜே எழுதியதை வாசியுங்கள்.

என்ன தான் மறைக்க முயன்றாலும் அவர்களின் கலரை வெளிப்படுத்தும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆள் பிடிக்கும் போதும், அது போன்ற பிரசுரங்களை வெளியிடும் போதும் இவர்கள் முனாஃபிக்குகள் என்பது வெளிச்சமாகி விடுகிறது. மக்களும் இவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர்

இவர்கள் என்ன தான் நடுநிலை வேடம் போட்டாலும் இவர்களது சாயம் வெளுத்து முனாபிக் என்பது மக்களுக்குத் தெரிந்து விடுகிறது என்று கூறுவதில் இருந்து ஈமான் இல்லை என்ற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பது விளங்கவில்லையா?

இவர்கள் நடித்தது தெரிந்து விடுகிறது என்று தான் சொல்லி இருக்கிறார். ஈமானைப் பற்றி அல்ல.

மேலும் குறிப்பிட்ட ஒரு மனிதரைப் பற்றி அவர் சொல்லவில்லை. யாரெல்லாம் இப்படி நடுநிலை வேடம் போட்டு ஒரு பக்கச் சார்பாக நடக்கின்றார்களோ அந்தத் தன்மை உள்ளவர்கள் வேடதாரிகள் அல்லாமல் வேறு என்ன?

இது உள்ளத்தில் உள்ளதை அறிந்து கொள்வது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது அல்ல, மாறாக அவர்கள் நடிப்பது மக்களுக்குத் தெரியும் வகையில் வெளிப்படையாக தெரிந்ததன் அடிப்படையில் தான் மக்கள் அறிந்து கொள்கிறார்கள் என்று எவ்வளவு தெளிவாக எழுதியுள்ளார்.

ஆனால் பீஜேயை முனாபிக் என்றும் தஜ்ஜால் என்றும் எழுதியவர்கள் தனி நபர் குறித்து அப்படி எழுதினார்கள். ஈமான் இல்லாதவர் என்ற பொருளில் அப்படி எழுதினார்கள். அதை இந்த நடுநிலை நடிகர்கள் கண்டு கொள்ளாமல் இப்போது மட்டும் தங்களை இனம் காட்டி முனாபிக் அதாவது வேடதாரிகள் என்று நிரூபித்து விட்டார்கள்.

மேலும் எந்த மனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தில் உள்ளதை அறியமுடியாது என்று பீஜே பேசிய அளவுக்கு சமகாலத்தில் தமிழுலகில் யாரும் பேசியதில்லை. உள்ளத்தில் உள்ளதை அறியலாம் என்ற கருத்தில் உள்ள போலி சு.ஜமாஅத்துக்காரன் இப்படி சொன்னாலாவது அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கலாம்.

இவர்கள் இப்போது எடுத்துக் காட்டுவதை விட பல மடங்கு ஆதாரங்களைச் சென்ற ரமலான் தொடர்உரை வரை அள்ளிப் போட்டு அதை உடைத்து எறிந்த ஒருவர் ஈமான் இல்லாதவர் என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்க மாட்டார் என்று விளங்கத் தடையாக இருந்த்து எது?

அவர் பயன்படுத்திய வார்த்தையே அதன் அர்த்தத்தை தெளிவாகக் காட்டியும் அதைக் காண முடியாமல் மறைத்தது எது? இரட்டை வேட நடிப்பு தானே? அல்லாஹ் இந்த நடுநிலை நடிகர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

0 Response to "முனாபிக் பட்டம் கொடுக்கலாமா?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை