மானங்கெட்ட ஜாக்கை விலைக்கு வாங்கிய குண்டப்பா

Saturday, June 2, 2012 11:41 AM Posted by பொய்யன் டிஜே
மானங்கெட்ட ஜாக்கை விலைக்கு வாங்கிய குண்டப்பா

குண்டப்பா தொடர் 4

தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவன் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல. முஸ்லிம் லீக் வேட்பாளராகவும் நான் நிற்கத் தயார். உதய சூரியன் சின்னத்திலும் நான் நிற்பேன் என்றெல்லாம் கேவலப்பட்ட இவனுக்கு முஸ்லிம் லீக் கதவைச் சாத்திய பின்னர் முஸ்லிம் லீக்கை இவன் விமர்சித்த அளவுக்கு உலகில் யாரும் விமர்சிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு ஆத்திரத்தில் இரத்தம் கொப்புளிக்க முஸ்லிம் லீக்கை இவன் வறுத்து எடுத்தான். அந்தக் கதையை விரிவாக பின்னர் விளக்குவோம். தேர்தலில் முஸ்லிம் லீக் சார்பில் இவனை நிறுத்த முடியாது என்று முடிவு செய்யப்பட்டு திமுகவே அந்த தொகுதியைப் பிடுங்கிக் கொண்டது.

இதற்காக இவன் ஜாக் என்ற இயக்கத்தை பிடித்தான். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து இவனுக்கு சீட் கொடுக்க திமுகவை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த வைத்தான். ஒரு கட்சியில் யாரை வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்யும். கட்சிக்காரர்களுக்கு அதிருப்தி இருந்தால் அவர்கள் போராட்டம் நடத்துவார்கள். ஜாக்குக்கு தலைவராக காதர் மைதீனை நியமிக்க வேண்உ என்று முஸ்லிம் லீக் போராட்டம் நடத்தினால் எப்படி இருக்கும்? அது போன்ற கிறுக்குத் தனத்தைத் தான் கூறுகெட்ட ஜாக் இஅய்க்கம் செய்தது. இவனை வேட்பாளராக நிறுத்தச் சொல்லி ஜாக் அதிசயப் போராட்டம் நடத்தியது.
இதோ அந்த ஆர்ப்பாட்டத்தின் கண்கொள்ளாக் காட்சி


இந்தக் காட்சியை விட அசிங்கமான மானங்கெட்ட கேவலமான செயலையும் ஜாக் செய்தது.
தனி நபர் துதியை ஒழிக்க பாடுவடுவதாக சொல்லிக் கொள்ளும் ஜாக் இயக்கம் இவனுக்கு ஆதரவாக அளித்த அறிக்கையை மானமுள்ள எவனும் ஜீரணிக்க மாட்டான், தவ்ஹீத் பற்றி கடுகளவு நம்பிக்கை உள்ளவனும் ஏற்க மாட்டான். அந்த அளவுக்கு இவனைப் புகழ்ந்து அறிக்கை விட அதை இவன் தனது பெருமையைப் பறைசாற்ற ஆரம்பித்த தளத்தில் போட்டு பெருமை அடித்துக் கொண்டான்.

இவனையும் மானம் கெட்ட ஜாக்கையும் ஒரு சேர அறிந்து கொள்ள உதவும் அந்த ஜால்ரா இது தான்


இந்த முழு அறிக்கையை பாருங்கள். இந்த அளவுக்கு கேடு கெட்ட தனமாக ஒரு தவ்ஹீத் இயக்கம் ஒருவனை புகழுமா? தன்னைப் பற்றி தானே இந்த அளவுக்கு புகழ்ந்து கொள்வானா என்று வியக்கும் அந்த மானம் கெட்ட அறிக்கை இது தான்

எந்த அரசியல் கட்சிக்காவும் எந்த கூட்டணிக்காகவும் ஜாக் குரல் கொடுக்காது. கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி அவர்களை பாளையங்கோட்டை வேட்பாளராக அறிவிக்குமாறு தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை வலிறுத்தியும் வாக்குறுதி மீறிய மு.லீக் தலைவர் காதர் மைதீனை கண்டித்தும் அரசியலில் ஈடுபடாத ஜாக் மேலப்பாளையம் கிளை சார்பில் 05-04-2006 புதன் அன்று மாலை 4.30மணிக்கு மேலப்பாளையம் சந்தை முக்கில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜாக் கிளை தலைவர் சிபகதுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக் செயலாளர் மவுலவி ஆ.யு.ளு. செய்யது அஹ்மது ஸலபி, தமிழ் மாநில இந்திய தேசிய லீக் மாவட்டச் செயலாளர் நிஜாம், தவ்பா பள்ளித் தலைவர் அப்துல்லாஹ் ஆகியவர்கள் உரையாற்றினார்கள். ஜாக் செயலாளர் மவுலவி ஆ.யு.ளு. செய்யது அஹ்மது ஸலபி அவர்கள் விரிவான விளக்கத்துடன் உரையாற்றினார்கள். எனவே அந்த விளக்கமான உரையைத் தருகிறோம்.

டாக்டர் செய்யது சத்தார் மு.லீக்கிலிருந்து ராஜினாமா செய்து விட்டார்.
பாளைத் தொகுதி வாக்காளப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும். மு.லீக் கேட்ட தொகுதிகளில் பாளையங்கோட்டை இருக்கவில்லை. அதற்கு கொடுக்கப்பட்ட தொகுதி ராமநாதபுரமும் அரவாக்குறிச்சியும்தான். இதை பத்திரிக்கை படிக்கும் ஒவ்வொருவரும் அறிவீர்கள். தேர்தலில் போட்டியிடாத த.மு.மு.க.வின் தனிப்பட்ட செல்வாக்கில்தான் இந்த தொகுதி வாங்கப்பட்டது.

பாளையங்கோட்டை தொகுதியை சகோதரர் பஸ்லுல் இலாஹி அவர்களுக்கென்று பேசிதான் கலைஞர் அவர்களிடம் வாங்கப்பட்டது. கலைஞர் அவர்களும் த.மு.மு.க. கூறும் வேட்பாளர்தான் பாளையங்கோட்டைக்கு என்று கூறித்தான் காதர் மைதீனிடம் கொடுத்தார். இதற்கு மு.லீக் மாநில பொதுச் செயலாளராக இருந்த டாக்டர் செய்யது சத்தார் சாட்சியாக உள்ளார். இப்பொழுது காதர் மைதீன் போக்கை கண்டித்து டாக்டர் செய்யது சத்தார் மு.லீக்கிலிருந்து ராஜினாமா செய்து விட்டார்.

உண்மையை காதர் மைதீன் மறைத்து விட்டார்.

மு.லீக், த.மு.மு.க. பேச்சு வார்த்தைகள் யாவும் யு.ஏ.இ. காயிதே மில்லத் பேரவை முன்னாள் தலைவரும் ராஜகிரி கல்லூரி தாளாளருமான தாவூத் பாட்சா அவர்கள் வீட்டில் வைத்துதான் நடந்துள்ளது. அந்த பேச்சு வார்த்தைகளின் போதே பாளைத் தொகுதி வேட்பாளர் பஸ்லுல் இலாஹி என்பதை த.மு.மு.க. தரப்பில் கூறி விட்டனர். மு.லீக்கும் ஏற்றுக் கொண்டுள்ளது. பாளைத் தொகுதி பஸ்லுல் இலாஹிக்கு என்ற உண்மையை காதர் மைதீன் மறைத்து விட்டார். கட்சியிலுள்ள மற்றவர்களுக்கு சொல்லாமல் காதர் மைதீன் மறைத்து மு.லீக் தொகுதியை இலாஹி உரிமை கொண்டாடுவது போன்ற மாயை ஏற்படுத்தி விட்டார்.

(இந்த உண்மையை 9443151267 என்ற தாவூத் பாட்சாவின் நம்பரில் கேட்டுக் கொள்ளவும்)

பஸ்லுல் இலாஹி திருமணம் மு.லீக் திருமணமாக நடந்தது.

பஸ்லுல் இலாஹி யார்? 1983ல் அவரது திருமணம் எவ்வளவு பரபரப்புடன் நடந்தது. ஓட்டு மொத்த மேலப்பாளையமே கலந்து கொண்டு கண்டு களித்த திருமணம் என்றால் அது அவர் திருமணம் மட்டுமே. ஊரே திரண்ட அந்த பிரபலமான திருமணத்தில் அப்பொழுது அமைச்சர்களாக இருந்த செ. அரங்கநாயகம், ளு. இராகவானந்தம், ளு.ளு.சு.சு. ராஜேந்திரன் ஆகிய 3 அமைச்சர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. அப்பொழுது ஏற்பட்ட சமுதாய பிரச்சனையால் சமுதாய உணர்வுடன் முஸ்லிம் லீக்கில் இணைந்தார். எனவே சகோதரர் பஸ்லுல் இலாஹி திருமணம் மு.லீக் திருமணமாக நடந்தது. தாயிரா குழு நிகழ்ச்சி, அபுல் பரகாத் நிகழ்ச்சி, பாராட்டு நிகழ்ச்சி என தொடராக 7 நாட்கள் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் முஸ்லிம் லீக் சார்பில்தான் நடந்தது.

மு.லீக் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

திருமணம் முடிந்ததும் முஸ்லிம் லீக் இளைஞர் அணி தலைவராகவும், முஸ்லிம் லீக் மேலப்பாளையம் நகர பிரைமரி செயல்பாட்டுக் குழு தலைவராகவும் ஆனார். இந்த பொறுப்பை ஏற்றதும் மு.லீக் பிரச்சார பணிகளை முடுக்கி விட்டார். 1983 டிசம்பர் 29 முதல் 1984 ஜனவரி 4 வரை முஸ்லிம் லீக் பிரச்சார வாரம் நடத்தினார். 7 நாட்கள் நடத்திய தொடர் நிகழ்ச்சியில் மஜ்லிஸுல் உலமா சபையைச் சார்ந்த உலமாக்கள், காயல் மஹ்பூப். நெல்லை மஜீத், மதுரை ஆதீனம், ஏ.எம். யூசுப் ஸாஹிப், லத்தீப் சாஹிப். சாந்து காஜா மைதீன் ஸாஹிப், சமது ஸாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர். இது மு.லீக் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

பாலைவனப் பசுஞ் சோலை பஸ்லுல் இலாஹி.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மேலப்பாளையத்தில் ஜெயலலிதா ஏற்றிய 63 அடி உயர அ.தி.மு.க. கொடிக் கம்பம் மானப் பிரச்சனையாக ஆனது. ஏனவே அதை விஞ்சும் வண்ணம் மிகவும் உயரமான முஸ்லிம் லீக் கொடிக் கம்பத்தை சொந்த செலவில் நிறுவியவர் சகோதரர் பஸ்லுல் இலாஹி. கொடியை ஏற்றி வைத்த சமது ஸாஹிப் அவர்கள் இதுதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய முஸ்லிம் லீக் கொடிக் கம்பம் என்று வியந்து பாராட்டினார். பாலைவனப் பசுஞ் சோலை பஸ்லுல் இலாஹி என புகழாரம் சூட்டி அவருக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாடை பஸ்லுல் இலாஹிக்கு போர்த்தி கவுரவித்தார்.

காசுக்காக கொடியை வெட்டியவர்களுக்கு சீட்டு கொடுக்கலாமா?

ஜெயலலிதா ஏற்றிய கொடியை விட மு.லீக் கொடி உயரமாக இருப்பதை தங்களது மானப் பிரச்சனை என கருதினர் அ.தி.மு.க.வினர். எனவே பஸ்லுல் இலாஹி துபை சென்றதும் மு.லீக்கினருக்கு காசு கொடுத்து உயரத்தை குறைக்கச் செய்தனர். இப்படி காசுக்காக மு.லீக் கொடிக் கம்பத்தை குறைத்தவர்கள் தான் சகோதரர் பஸ்லுல் இலாஹிக்கென்று கொடுக்கப்பட்ட பாளைத் தொகுதியை கேட்டு உரிமை கொண்டாடுகின்றனர். காசுக்காக கொடியை வெட்டியவர்களுக்கு சீட்டு கொடுக்கலாமா?

பாளைத் தொகுதி மீண்டும் மு.லீக்குக்கு கிடைத்தது.

டெல்லி சென்று ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்க்க முடியாதவர்கள் மேலப்பாளையத்திலேயே பார்க்கும் வண்ணம் மேலப்பாளையத்தில் தாஜ் மஹால் செட்டிங் அமைத்தவர் பஸ்லுல் இலாஹி. அந்த தாஜ் மஹாலுக்குள் ஸமது ஸாஹிபு அவர்களை அமர வைத்து 1983லேயே இட ஒதுக்கீடு கோரிக்கையை முழங்க வைத்தவர் பஸ்லுல் இலாஹி. வரக்கூடிய சட்ட மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக்தான் இந்த தொகுதியில் போட்டியிடும் என உறுதிபட உரையாற்றிய பஸ்லுல் இலாஹி 1983லேயே சுவர் விளம்பரமும் செய்தார். பஸ்லுல் இலாஹியின் வேகமான விவேகமான செயல்பாடுகளின் பலனாகத்தான் 15 வருடங்களுக்குப் பிறகு பாளைத் தொகுதி மீண்டும் மு.லீக்குக்கு கிடைத்தது.

10 நாள் தொடர் நோன்பு வைத்தார்.

இந்திராகாந்தி அம்மையார் சுடப்பட்ட அனுதாப அலை, எம்.ஜி;.ஆர். சுகவீனம் அடைந்து அமெரிக்காவிலிருந்த அனுதாப அலை என இரண்டு அலைகளில் பல தலைவர்கள் தேர்தல் கடலில் கரையேறாது மூழ்கி விட்டனர். மேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளைத் தொகுதியில் சம்சுல் ஆலம் அவர்களும், மேலப்பாளையம் மக்கள் நிறைந்து வாழும் சின்ன மேலப்பாளையமான திருவல்லிக்கேணி தொகுதியில் ஸமது ஸாஹிபு அவர்களும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றார்கள். அவர்கள் வெற்றிக்காக 10 நாள் தொடர் நோன்பு வைத்தார் பஸ்லுல் இலாஹி.

சொந்த மச்சானை தோற்கடித்தார்.

1986 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது இரண்டு வார்டுகளின் முழுப் பொறுப்பையும் ஏற்றார். இரண்டு வார்டுகளுக்குமாகச் சேர்த்து பணம் செலவு செய்தார். அது மட்டுமா? அப்பொழுது ஜனதா தளத்தில் இருந்த மணியாச்சி காஜா அவர்களை முஸ்லிம் லீக்கில் சேர்த்து 50ஆயிரம் ரூபாய் செலவு செய்து எம்.சி.யாக ஆக்கினார் அவரது வார்டில் மணியாச்சி காஜாவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சொந்த மச்சானை தோற்கடித்தார். தி.மு.க.வில் இருந்த அப்துல் ஹமீது, மைதீன் பிள்ளை, டப்பா சாகுல் ஹமீது, ஆகியவர்களை மு.லீக்கில் இணைத்து தேர்தலில் மு.லீக் சார்பில் போட்டியிடச் செய்தார்.

மு.லீக்குக்கு மானப் பிரச்சனை ஏற்பட்டது.

நகர சபை தலைவர் பொறுப்புக்கு மு.லீக் சார்பில் போட்டியிட ஒப்புக் கொண்டிருந்தவர் எல்.கே.எஸ். மீரான் மைதீன். கடைசி நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்யாமல் ஒதுங்கி விட்டார். மு.லீக் இளைஞர் அணியினரை திரட்டிக் கொண்டு போய் எல்.கே.எஸ். மீரான் மைதீன் வீட்டு வாசலில் மணிக் கணக்கில் காத்து கிடந்து ஆர்ப்பாட்டம் செய்தார் பஸ்லுல் இலாஹி.

கதவை பூட்டிக் கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. இவர்தான் இன்று பஸ்லுல் இலாஹிக்கென்று வாங்கப்பட்ட பாளைத் தொகுதியை கேட்டு உரிமை கொண்டாடுகின்றார். கொடுக்கலாமா இவருக்கு? எல்.கே.எஸ். மீரான் மைதீன் பின் வாங்கியதால் மு.லீக்குக்கு மானப் பிரச்சனை ஏற்பட்டது. மானத்தைக் காக்க வேறு ஒருவரை வேட்பாளராக ஆக்கினார் பஸ்லுல் இலாஹி. அப்பொழுது எம்.எல்.ஏ.வாக இருந்த சம்சுல் ஆலம் அவர்கள் போட்டியிட முன் வந்ததால் அவசரத்தில் வேட்பாளராக ஆக்கியவரை பஸ்லுல் இலாஹி திரும்பப் பெற்றார். பஸ்லுல் இலாஹி போட்ட வேட்பாளரை நிறுத்தி இருந்தால் வெற்றி பெற்று இருப்பார்.

தனிப்பட்ட சேவையை செயல்பாட்டை உணர்ந்துள்ளதால்தான் ஜாக் குரல் கொடுக்கிறது.

1987இல் துபை சென்ற ஸமது ஸாஹிபு அவர்களுக்கு சிறந்த வரவேற்பு செய்தார் பஸ்லுல் இலாஹி. வரவேற்பைக் கண்ட ஸமது சாஹிப் இது துபையா மேலப்பாளையமா என்று கேட்டுள்ளார். வரக் கூடிய தேர்தலில் மு.லீக் சார்பில் பாளைத் தொகுதியில் பஸ்லுல் இலாஹி போட்டியிட வேண்டும் என்றார். இரவு 3 மணியாக ஆனாலும் பஸ்லுல் இலாஹி அழைப்பை ஏற்று அவர் பணி புரியும் இடத்திற்கு ஸமது சாஹிப் அவர்கள் சென்று விடுவார். இப்படிப்பட்ட பஸ்லுல் இலாஹியைத்தான் முஸ்லிம் லீக் இல்லை என்கின்றனர். முஸ்லிம் லீக்குக்கு அவர் செய்துள்ள சேவையை பட்டியலிட்டால் நேரம் போதாது. அரசியலில் ஈடுபடாத ஜாக் பஸ்லுல் இலாஹிக்காக குரல் கொடுக்கிறது என்றால் அவரது தனிப்பட்ட சேவையை செயல்பாட்டை உணர்ந்துள்ளதால்தான் ஜாக் குரல் கொடுக்கிறது.

உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தார் தர்மலிங்கம்.

கட்சி பாகுபாடின்றி அனைவருடனும் நட்பாய் பழுகும் பண்பு உடையவர்தான் பஸ்லுல் இலாஹி. 1994 ஆம் ஆண்டு துபை சென்ற பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை அளித்தார். வரவேற்பில் மகிழ்ந்த தர்மலிங்கம் அவர்கள் தாங்களுக்கு என்ன தேவையானாலும் கேளுங்கள் என்றார். உடனே அம்பை வீதியிலிருந்து குறுக்குத் துறை வரை ரோடு சரி செய்யப்பட வேண்டும் என்றார். பஸ்லுல் இலாஹியின் இந்த வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தார் தர்மலிங்கம்.

உண்மைக்காக தனித்து நிற்பார் துணிந்து நிற்பார்.

1992 டிசம்பர் 7 அன்று மேலப்பாளையம் கலவரத்தில் சுடப்பட்டு 2 பேர் இறந்து விட்டார்கள். பலர் காயம் அடைந்தனர். வெறியூட்டி தூண்டி விட்டு பேசியவர்கள் ஒதுங்கி விட்டார்கள். துபையிலிருந்த போதிலும் தனது சார்பாக பிரதிநிதிகளை அனுப்பி பாதிக்கப்பட்டவர்கள் ஜெயிலில் இருந்த போதும் ஜாமீன் பெற்று ராஜபாளையத்தில் இருந்த போதும் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகள் செய்யச் செய்தார். இறுதியில் 2,25,000 (இரண்டே கால் லட்சம்) ரூபாய் அனுப்பி ஜமாஅத் மூலம் உதவினார். ஊரே திரண்டு நின்று எதிர்த்தாலும், எதிர்ப்பது அரசாங்கமாக இருந்தாலும் உண்மைக்காக தனித்து நிற்பார் துணிந்து நிற்பார். இது ஜாக் அறிந்துள்ள பஸ்லுல் இலாஹியின் வரலாறு.

போராட முன் வராதவர்கள் குரல் கொடுக்க பயந்தவர்கள் சீட் கேட்பது நியாயமா?

முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹ்பூப் குண்டாஸில் இருந்த போது பல முறை சிறை சென்று பார்த்து ஆறுதல் கூறியவர் பஸ்லுல் இலாஹி. வெளிநாட்டில் இருக்கிறீர்களே அரசு கண்காணிக்குமே என்று பலர் அச்சம் ஊட்டினர். பாதிக்கப்பட்டவரை பார்ப்பதால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதை சந்திக்கத் தயார் என்று காயல் மஹ்பூப் அவர்களையும் அவருடன் சிறையில் இருந்தவர்களையும் அடிக்கடி போய் பார்த்தார். காயல் மஹ்பூக்காக போராட்டம் நடத்த மு.லீக் தலைமையே பயந்தது. ஆனால் காயல் மஹ்பூப் விடுதலைக்காக பேரணி நடத்தி போராடியவர் பஸ்லுல் இலாஹி. அந்த பஸ்லுல் இலாஹிக்காக வாங்கிய சீட்டை காயல் மஹ்பூக்காக போராட முன் வராதவர்கள் குரல் கொடுக்க பயந்தவர்கள் கேட்பது நியாயமா?

இந்த லீக்கர்கள்தான் சீட்டுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

தடா என்றால் தயங்காதவர்கள் கிடையாது. தடாவை எதிர்த்தவர்களெல்லாம் தடாவில் தள்ளப்பட்டார்கள். இதனால் தடா எதிர்ப்பு பேரணியை எங்குமே வெற்றிகரமாக நடத்த முடிந்ததில்லை. இந்தியாவிலேயே தடாவை எதிர்த்து வெற்றிகரமாக நடந்த ஒரே பேரணி 1995ஆம் ஜனவரி 22 அன்று மேலப்பாளையத்தில் நடந்த பேரணிதான். ஜாக் சார்பாக நடந்த அந்த பேரணியை நடத்தியவர், அது வெற்றியடைய அறிவுப்பூர்வமாக செயல்பட்டவர் பஸ்லுல் இலாஹி தான். இந்த துணிச்சல் மிக்க பஸ்லுல் இலாஹியைத்தான் பாளைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோருகிறோம். காயல் மஹ்பூப் விடுதலைக்காகவும் தடாவை எதிர்த்தும் நடந்த பேரணியில் எல்லாக் கட்சியினரும் கலந்து கொண்டார்கள். எல்.கே.எஸ். மீரான் மைதீன் உட்பட முஸ்லிம் லீக்கர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த லீக்கர்கள்தான் சீட்டுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

நியாயத்திற்காக எதிர்த்து நிற்கும் துணிச்சல் உள்ளவர்.

2000 செப்டம்பரில் நெல்லை டவுண் இன்ஸ்பெக்டர் மீரான் அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அவரை எதிர்த்து நின்றவர் சக்திமிக்க அரசில்வாதியான ஆளுங்கட்சிக்காரர். இருந்தாலும் இன்ஸ்பெக்டர் மீரான் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக பேரணி நடத்தி நியாயம் பெற்றுக் கொடுத்தவர்தான் பஸ்லுல் இலாஹி. அரசில்வாதியாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்காராக இருந்தாலும் அரசாக இருந்தாலும் நியாயத்திற்காக எதிர்த்து நிற்கும் துணிச்சல் உள்ளவர் பஸ்லுல் இலாஹி.

2 வாட்டர் டேங்குகளும் பஸ்லுல் இலாஹி வைத்த நிபந்தனையில் வந்ததுதான்.

இந்த விவகாரத்தை ஒட்டி பஸ்லுல் இலாஹியை தனிப்பட்ட முறையில் சந்திக்க வீடு தேடி வந்தார் வீ கருப்பசாமி பாண்டியன். அவருடன் டி.பி.எம். மைதீன் கானும் வந்தார். பிரச்சனையை அப்படியே விடுங்கள். இன்ஸ்பெக்டர் மீரான் மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று கூறிய அவர்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் தேவை என்ன என்று கூறுங்கள் நிறைவேற்றித் தருகிNறோம் என்றார்கள். உடனே பஸ்லுல் இலாஹி தனது தனிப்பட்ட தேவையைக் கேட்டாரா? என்ன கேட்டார். நிறைவேற்றப்படாமல் இருக்கும் 2 வாட்டர் டேங்குகளை உடனே கட்டித் தர வேண்டும் என்றார். ஓன்று கீழப்பாளையம் ஜின்னா திடலில் உள்ளது. இன்னொரு மேலக் கொந்து கடைசி தெருவில் உள்ளது. இந்த 2 வாட்டர் டேங்குகளும் பஸ்லுல் இலாஹி வைத்த நிபந்தனையில் வந்ததுதான்.

மு.லீக்குக்கு பஸ்லுல் இலாஹி 25,000(இருபத்தைந்தாயிரம்) ரூபாய் அனுப்பிக் கொடுத்தார்.

ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டபொழுது அவருக்காக துணிச்சலாக குரல் கொடுத்தது பஸ்லுல் இலாஹிதான். வெளிநாட்டில் இருந்தாலும் பயப்படாமல் பிரசுரங்கள் வெளியிட்டார். கூட்டங்கள் போட ஏற்பாடு செய்தார். வெளியில் முஸ்லிம் லீக் செய்தது மாதிரியான தோற்றம் ஏற்பட்டது. மேலப்பாளையத்தில் கூட்டம் போட 5,000(ஐயாயிரம்) ரூபாய் வாங்கிய மேலப்பாளையம் மு.லீக் கூட்டம் போட்டது. ஹாமித் பக்ரி வழக்கு வகைக்கு என்று மு.லீக்குக்கு பஸ்லுல் இலாஹி 25,000(இருபத்தைந்தாயிரம்) ரூபாய் அனுப்பிக் கொடுத்தார். பக்ரியிடம் கேட்டதற்கு அந்த பணம் தங்கள் வகைக்கு செலவு செய்யப்படவே இல்லை என்கிறார்.

சிறைவாசிகளின் பணத்தைத் தின்ற இந்த கூட்டத்திற்கு சீட்டு கொடுக்கலாமா?

காதர் மைதீன் காதர் மைதீனிடம் கேட்டதற்கு ஒழுங்கான பதில் இல்லை. சிறைவாசிகளின் பணத்தைத் தின்ற இந்த கூட்டத்திற்கு சீட்டு கொடுக்கலாமா? இப்படிப்பட்ட காதர் மைதீன் தான் பஸ்லுல் இலாஹிக்கு கொடுத்த பாளையங்கோட்டை சீட்டைக் காட்டி நேர் காணல் எனும் பெயரால் அப்பாவி மு.லீக்கர்களின் பணத்தையும் கரந்து விட்டார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஸா அனுப்பி இருக்கிறார்.

பஸ்லுல் இலாஹி மேலப்பாளையத்திலுள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் வளர்ச்சிக்கு உதவி உள்ளார். ஏராளமான ஏழைக் குமர்களுக்கு உதவியுள்ளார். தனது திருமணத்தின் போது ஏழைக் குமருக்கும் திருமணம் நடத்தினார். உஸ்மானிய்யா கல்லூரி கட்டிடம் கட்ட உண்டியக்கார மீரான் மைதீன் ஹாஜியார் அவர்களுக்கும் நண்டு முஹம்மது உசேன் அவர்களுக்கும் உதவியாக இருந்து ஏராளமான பொருளுதவி செய்துள்ளார். இன்றும் சிறைவாசிகளுக்கு உதவி வருகிறார். சிறை சென்று பாதிக்கப்பட்டவர்களை கண்டு ஆறுதல் சொல்லக் கூடியவராக இருக்கிறார். 500க்கும் மேற்பட்ட மேலப்பாளையவாசிகளுக்கு விஸா உதவி செய்து இருக்கிறார். தமிழக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஸா அனுப்பி இருக்கிறார்.
]
சொந்த செலவில் விஸா, சொந்த செலவில் டிகட்.

மற்றவர்களெல்லாம் விஸாவுக்கு முன் பணமாக ஆயிரக் கணக்கில் வாங்கி விட்டு இழுத்தடிப்பார்கள். பஸ்லுல் இலாஹி அவர்களோ சொந்த செலவில் விஸாவும் டிகட்டும் அனுப்பி விட்டு சம்பளத்தில் கழிப்பார். சிறைவாசிகள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற திட்டத்தில் விஸாவுடன் டிகட்டும் அனுப்பி உதவி வருகிறார். மதுரை சதக்கதுல்லாஹ் குடும்பம் கஷ;டப்படுகிறது என்ற செய்தியை நக்கீரனில் படித்தார். உடனே அந்த குடும்பத்தை தொடர்பு கொண்டு சதக்கதுல்லாஹ் தம்பி நூர் முஹம்மதுக்கு விஸா அனுப்பி கொடுத்தார். அத்துடன் டிகட்டும் ஏற்பாடு செய்து கொடுத்தார். சொந்த செலவில் விஸா, சொந்த செலவில் டிகட் அனுப்பி உதவி வந்த பஸ்லுல் இலாஹி பாளையங்கோட்டை சீட்டை நம்பி விஸா கோட்டையை விட்டு விட்டார்.

மறுமையில் மகத்தான வேதனை உண்டு என்பதை எச்சரிக்கிறோம்.

இந்த இழப்புகளுக்கு காரணம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன்தான். எனவே இவரை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாளையங்கோட்டைத் தொகுதியை சகோதரர் பஸ்லுல் இலாஹி அவர்களுக்கென்றுதான் வாங்கப்பட்டது. இந்த உண்மையை முஸ்லிம் லீக்கர்கள் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும். மறுத்தால் அந்த முஸ்லிம் லீக்கர்களுக்கு மறுமையில் மகத்தான வேதனை உண்டு என்பதை எச்சரிக்கிறோம். சீட் வாங்கும் வரை வாக்குறுதி அளித்து விட்டு, வாங்கிய பின் வாக்குறுதி மீறியதால் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் முனாபிக் லீக் தலைவராக ஆகி விட்டார்.

ஜாக் பஸ்லுல் இலாஹி என்ற தனி நபருக்காகத்தான் குரல் கொடுக்கிறது

மாணவப் பருவம் முதல் 35 ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருந்து வரும் சமுதாயப் பணியாளர் சகோதரர் பஸ்லுல் இலாஹி விஷயத்தில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நீதி வழங்க வேண்டும் என்று கோருகிறோம். டாக்டர் கலைஞர் கருணாநிதி நீதி வழங்குவார் என்று நம்புகிறோம்.

மீண்டும் சொல்கிறேன் அரசியலில் ஈடுபடாத ஜாக், தேர்தலில் போட்டியிடல், ஓட்டுக் கேட்டல் போன்றவற்றுக்கலெ;லாம் அப்பாற்பட்ட ஜாக் பஸ்லுல் இலாஹி என்ற தனி நபருக்காகத்தான் குரல் கொடுக்கிறது. எந்த அரசியல் கட்சிக்காவும் எந்த கூட்டணிக்காகவும் ஜாக் குரல் கொடுக்காது. ஜாக் குரல் கொடுக்கவில்லை. ஜாக்கின் முதல் நெல்லை மாவட்ட தலைவரான பஸ்லுல் இலாஹி என்ற தனி நபரின் தனிப்பட்ட சேவையை செயல்பாட்டை உணர்ந்துள்ளதால்தான் ஜாக் குரல் கொடுக்கிறது.
இவ்வாறு ஜாக் செயலாளர் மவுலவி M.A.S. செய்யது அஹ்மது ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

குண்டப்பாவுக்கு பயங்க்ர செல்வாக்கு என்று புருடா விடும் ஜாக்கும் குண்டப்பாவும் சென்ற தேர்தலில் சுயேட்சையாக நின்ற கதையை எழுதும் போது குண்டப்பாவின் பயங்கர செல்வாக்கை அறிந்து கொள்ளலாம்
தொடரும்

0 Response to "மானங்கெட்ட ஜாக்கை விலைக்கு வாங்கிய குண்டப்பா"

Post a Comment

அதிகம் பார்த்தது..